"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, June 22, 2022

பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - அகத்தியரின் அருள் பொழியும் இடம். ஈர்த்தெம்மை ஆட்கொண்ட இடம். நம் சிந்தையை மாற்றும் இடம். தாமிரபரணி தாயின் அருள் நிறைந்த இடம் என கூறலாம். நாம் முதன் முதலில் வெளியூருக்கு சென்று பூசை பார்த்த இடம். அகத்தியம் படிக்க உகந்த இடம். அகத்திய அடியார்களை ஒன்று சேர்க்கும் இடம். வருடத்திற்கு ஒரு முறை எனும் நாம் தாமிரபரணி தாயை வணங்குவதை வழியாக வைத்துள்ளோம். முதன் முதலாக சுமார் 7 பேர் சந்தித்தோம். சென்ற ஆண்டு நம் TUT நண்பர்களோடு சென்று தரிசித்தோம். இம்முறை அகத்தியரின் அருள் பெற காத்திருக்கின்றோம்.

ஓம்  அகத்தீசப்  பெருமானே  போற்றி 
ஓம்  அகிலம் போற்றும்  அறிவுக்கடலே போற்றி
ஓம்  அட்டமா  சித்துகள்  பெற்றவரே  போற்றி 
ஓம்  அகத்தியர்  மலை மீது  அமர்ந்தவரே  போற்றி 

என்றும் நம் குருநாதரை போற்றிக் கொண்டே இருக்கலாம். ஏனென்றால் போற்றினால் நமது வினை அகலுமப்பா! 



இன்றைய பதிவிற்கு உள்ளே செல்லும் முன்னர் நாளை 23.06.2022 நடைபெற உள்ள பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழை பகிர விரும்புகின்றோம்.


திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மலையிலுள்ள கொட்டந்தளம் எனும் இடத்தில் இருக்கிறது, கல்யாண தீர்த்தம்! இதைப் பார்த்தாலே திருமணம் நடந்து விடும் என்பது, தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.சிவன் - பார்வதி திருமணத்திற்கு, உலகிலுள்ள அனைவரும் இமயமலைக்கு சென்றதால், வடக்கு தாழ்ந்து, தெற்கு திசை உயர்ந்தது. இதைச் சமன்படுத்த, அகத்தியரை, தெற்கிலுள்ள பொதிகை மலைக்கு அனுப்பினார், சிவன்.

தன் மனைவி, லோபமுத்திரையால் அவ்வளவு துாரம் நடக்க முடியாதே என கரிசனப்பட்டு, அவளை தண்ணீராக மாற்றி, கமண்டலத்தில் அடைத்து, அதை துாக்கியபடி, பொதிகை மலைக்கு புறப்பட்டார், அகத்தியர். தெய்வ சங்கல்பமும் அவ்வாறே இருந்தது; லோபமுத்திரையின் மூலம் உலகுக்கே நலம் வழங்க, முடிவு செய்திருந்தார், விநாயகப் பெருமான்.

வரும் வழியில், குடகு மலை உச்சியில் கமண்டலத்தை வைத்து, சிவ பூஜையில் ஆழ்ந்தார், அகத்தியர். அப்போது, காகம் ஒன்று, கமண்டலத்தை தட்டி விட, தண்ணீர் கொட்டி, ஆறாகப் பெருகியது. சத்தம் கேட்டு கண் விழித்த அகத்தியர், தன் மனைவியை காப்பாற்றியாக வேண்டுமே என்ற வேகத்துடன் கமண்டலத்தை நிமிர்த்தி வைத்தார். பாதி நீர் கொட்டிவிட, ஒரு பகுதியே மிஞ்சியது.

அச்சமயம், காகம் உருவில் இருந்த விநாயகர் அவருக்கு காட்சியளித்து, 'அகத்தியரே... ஒற்றுமையாக வாழ்ந்து வரும் உங்கள் இருவரின் புகழ், உலகில் என்றென்றும் நிலைக்கவே, இவ்வாறு செய்தேன்; இனி, இவள், 'காவிரி' எனும் பெயரில் உலகம் உள்ளளவும், நதியாக ஓடுவாள்; இதிலுள்ள மீதி தீர்த்தத்தை தெற்கிலுள்ள பொதிகையில் விடு...' என, அருள்பாலித்தார்.

அதன்படியே, பொதிகை மலை உச்சியில் தீர்த்தத்தை விட்டார், அகத்தியர். அது, தாமிரபரணி எனும் பெயரில், நதியாக ஓடியது. மலை உச்சியில் இருந்து புறப்பட்ட அந்த நதி, ஓரிடத்தில் அம்பிலிருந்து புறப்பட்ட பாணம் போல, சீறிப் பாய்ந்து, அருவியாகக் கொட்டியது. அது, 'பாண தீர்த்தம்' என, பெயர் பெற்றது. மற்றுமொரு இடத்தில் பேரிரைச்சலுடன் அருவியாகக் கொட்டியது. அந்த இடத்தில், அகத்தியருக்கும், நதியாக ஓடிய லோபமுத்திரைக்கும் திருமண காட்சி தந்தனர், சிவனும் - பார்வதியும்! இதனால் அத்தீர்த்தம், 'கல்யாண தீர்த்தம்' என, பெயர் பெற்றது.

கல்யாணப்பெண்ணை, 'கல்யாணி' என்பர்; அம்பாளுக்கு கல்யாணி என்ற பெயர் உண்டு. இதனால், 'கல்யாணி தீர்த்தம்' என, பெயர் மருவியது.

கல்யாணி தீர்த்த அருவியில் குளிக்கும் வசதி கிடையாது; அதனால், கருணையுடன் தன் குள்ள உருவத்துக்கு தகுந்தாற் போல, சிறிய அருவியாக மாறி, விழச்செய்தார், அகத்தியர். அதுவே, அகத்தியர் அருவி. இதில், பக்தர்கள் நீராடி, அருகிலுள்ள நுாறு படிக்கட்டுகளில் ஏறினால், தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் அகத்தியரையும், லோபமுத்திரையையும் தரிசிக்கலாம்.

அகத்தியர் அருவி கரையில் அகத்தியர் கோவில் உள்ளது. இங்கு, அவருக்கு காட்சியளித்துள்ளார், முருகப்பெருமான்.ஜாதக ரீதியாகவோ, பிற காரணங்களாலோ திருமணத்தடை உள்ளோர், கல்யாணி தீர்த்த அருவியைப் பார்த்தாலே போதும்; திருமணம் கைக்கூடும். இந்த அருவி விழும் தடாகம் மிகவும் ஆழமானது; இதில், இறங்க முயற்சிக்கக் கூடாது. மங்கள நிகழ்ச்சி நடக்க, இங்கே ஒருமுறை போய் வாருங்கள்.

2016 ஆண்டில் நமக்கு கிடைத்த அகத்தியர் தரிசனத்தை இங்கே தொகுத்து தர விரும்புகின்றோம். 2016 ஆண்டில் தான் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவிற்கு விதை போடப்பட்டது. அப்போது நம்முடன் சில அகத்திய சொந்தங்கள் ஒன்றிணைந்தார்கள். இன்று வரை அந்த உறவு தொடர்ந்து கொண்டு வருகின்றது. 2016 ஆண்டில் தமிழக முழுதும் உள்ள அகத்திய அடியார்களை ஒன்றிணைக்க விரும்பி திட்டம் தீட்டினோம். ஆனால் இறையின் திட்டம் வேறாக இருந்தது. அந்த திட்டத்திற்காக சில அகத்திய சொந்தங்களுடன் நாம் பேசி வந்தோம். சரி. நாம் கட்டாயம் அத்திரி,கல்யாண தீர்த்தம், பாபநாசம் சென்று வரலாம் என விரும்பினோம். பெரம்பலூர் சதீஸ் ஐயா , திருச்சி செல்லப்பன் அண்ணா  , சென்னை விஜயலட்சுமி அம்மா என ஒன்றிணைந்து நாம் மேற்கொண்ட யாத்திரை இது.

அன்றைய தினம் நாம் பெற்ற தரிசனம் இங்கே காண உள்ளோம்.


முதலில் நாம் நம்  குருநாதரை வணங்கினோம். அடுத்து அபிஷேக காட்சிகள் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.










                                                    அடுத்து பால் அபிஷேகம் செய்தோம்.




















அடுத்து பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தோம்.






அடுத்து விபூதி அபிஷேகம் செய்ய்யப்பட்டது.


அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அலங்கார தரிசனம் பெற  இருக்கின்றோம்.ஒவ்வொரு விதமாக பல அருள்நிலைகளை இங்கே  தருகின்றோம்.கண்ணில் ஒற்றி, மனதில் இருத்திக் கொள்வோம்.




























 புற வழிபாட்டின் புனிதம் உணர்த்தப்பட்டோம். அட..என்ன ஒரு ஆனந்தம். பரவசம். இன்னும் அந்த பேரானந்த உணர்வு நம்மை உயிர்ப்பிக்க செய்கின்றது.

ஓம்  தமிழ்  முனியே  போற்றி 
ஓம்  இறைவனிடம்  தமிழ்  கற்றவரே  போற்றி 
ஓம்  தமிழின்  முதல் தொண்டரே  போற்றி 
ஓம்  தமிழின் முதல்  முனைவரே  போற்றி  
ஓம்  பொதிகைமலை  மாமுனியே  போற்றி 
ஓம்  தவ சீலரே  போற்றி 
ஓம்  சிவ சீடரே  போற்றி 
ஓம்  கும்ப சம்பவரே  போற்றி 
ஓம்  நந்தீஸ்வரரின் சீடரே போற்றி 
ஓம்  தன்வந்திரியிடம்  மருத்துவம்  பயின்றவரே  போற்றி 
ஓம்  தேரையருக்கு  மருத்துவம்  பயிற்றுவித்தவரே  போற்றி
ஓம் காமேஸ்வரி  மந்திர  உபதேசம்  பெற்றவரே  போற்றி 
ஓம்  வயதில் எல்லையில்லா  சித்தரே போற்றி 
ஓம் குருவுக்கெல்லாம்  மகா குருவே  போற்றி 
ஓம் சித்தருக்கெல்லாம் மகா சித்தரே  போற்றி 
ஓம் பஞ்சேஷ்டி தலம் உறைபவரே போற்றி 
ஓம் அகத்தியம்  தந்த  அருளாளரே  போற்றி 
ஓம் அகத்தியர்  காவியம்  தந்தவரே  போற்றி
ஓம்  அகத்தியர்  வெண்பா அருளியவரே  போற்றி 
ஓம் அகத்திய  நாடி அருளியவரே  போற்றி   
ஓம் அகத்திய சம்ஹிதை  அருளியவரே  போற்றி 
ஓம் ஐந்து சாஸ்திரம்  தந்தவரே  போற்றி 
ஓம் கிரியை யோகம்  படைத்தவரே போற்றி 
ஓம்  ஆறெழுத்து  அந்தாதி  அருளியவரே  போற்றி                       
ஓம்  வாகட  வெண்பா  அருளியவரே  போற்றி 
ஓம்  சிவா சாலம்  தந்தவரே போற்றி 
ஓம்  சக்தி  சாலம்  தந்தவரே  போற்றி 
ஓம்  சண்முக சாலம்  தந்தவரே  போற்றி        
ஓம் சமரசநிலை  ஞானம்  போதிதவரே  போற்றி 
ஓம்  சக்தி  சூத்திரம்  சமைத்தவரே  போற்றி 
ஓம்  இராமனுக்கு சிவகீதை  அருளியவரே  போற்றி 
ஓம்  ஆதித்ய ஹிருதயம் அருளியவரே  போற்றி                   
ஓம்  வாதாபியை  வதம்  செய்தவரே  போற்றி
ஓம்   சுவேதனின்   சாபம்  தீர்த்தவரே  போற்றி 
ஓம்  இடும்பனை  காவடி  எடுக்க  வைத்தவரே  போற்றி 
ஓம்  தொல் காப்பியரின்  குருவே  போற்றி
ஓம் கடல் நீரைக் குடித்து  வற்றச் செய்தவரே போற்றி 
ஓம் நீரின் மேலே  தவமிருந்தவரே  போற்றி 
ஓம் விந்திய மலையின்  அகந்தையடக்கியவரே போற்றி 
ஓம்  அசுராசுரர்களை  அழித்தவரே போற்றி                                        
ஓம்  காவிரியைப்  பெருக்கியவரே  போற்றி 
ஓம்  தாமிரபரணியை  உருவாக்கியவரே  போற்றி 
ஓம்  ராவணனை  இசையால்  வென்றவரே  போற்றி 
ஓம் அகஸ்தீஸ்வரம்  அமைத்தவரே  போற்றி 
ஓம்  தேவாதி தேவர்களை  காத்தவரே  போற்றி 
ஓம்  சிவசக்தி  திருமண  தரிசனம்  கண்டவரே போற்றி 
ஓம்  சித்த வைத்திய  சிகரமே  போற்றி 
ஓம் அகத்திய  பூஜாவிதி  தொகுத்தவரே போற்றி                     
ஓம்  நான்கு யுகங்களையும்  கடந்தவரே  போற்றி 
ஓம்  முத்தமிழால்  உலகை  ஆண்டவரே  போற்றி 
ஓம்  தமிழ்ச்  சங்கங்களின்   தலைவனே  போற்றி 
ஓம்  சிவசூரிய  வழிபாட்டைத்  துவக்கியவரே  போற்றி
ஓம்  கும்பத்தி லுதித்த  குறுமுனியே  போற்றி 
ஓம்  வடதென் திசையை  சமப்படுத்தியவரே  போற்றி 
ஓம்  உலோபமுத்திரையின்  மணாளா  போற்றி 
ஓம்  அம்பையில்  கோயில்  கொண்டவரே  போற்றி               
ஓம்  அரும் மருந்துகள்  அறிந்தவரே  போற்றி 
ஓம் அனைத்தும் கற்றுத்  தெளிந்தவரே  போற்றி 
ஓம்  முக்காலமும்  உணர்ந்தவரே  போற்றி 
ஓம்  முத்தமிழும்  வளர்த்தவரே  போற்றி                                         
ஓம்  ஆஷா சுவாஸினி மைந்தரே  போற்றி 
ஓம்  நெல்மணிகளின்  தலைவனே  போற்றி 
ஓம்  சிவன்  அம்சமே  போற்றி 
ஓம் திருமால் விசுவரூப தரிசனம் கண்டவரே போற்றி       
ஓம்  சர்வ  சக்திகளும்  தருபவரே  போற்றி 
ஓம் சகல கலைகளும்  சித்தியாக  அருள்பவரே போற்றி 
ஓம்  பிறவா வரம்  தரும்   பெருமானே  போற்றி 
ஓம்  தேவி  உபாசகரே  போற்றி                                                              
ஓம்  இசையிலும்  கவிதையிலும் மேன்மை தருபவரே  போற்றி 
ஓம்  கல்வித் தடை  நீக்குபவரே  போற்றி 
ஓம்  புத பகவானின்  தோஷம்  நீக்குபவரே  போற்றி 
ஓம்  முன் தீவினைப்  பாவங்கள்  தீர்ப்பவரே  போற்றி           
ஓம்  பேரும் புகழும் மதிப்பும் உண்டாக  அருள்பவரே போற்றி 
ஓம்  பூர்விக சொத்துக்கள் கிடைக்க  அருள்பவரே  போற்றி 
ஓம்  சகலவித  நோய்களையும்   தீர்ப்பவரே  போற்றி 
ஓம்  குடும்பத்தில்  ஒற்றுமை  நிலவச்  செய்பவரே  போற்றி 
ஓம்  பித்ரு சாபம்  நீக்கி    ஆசி பெற  அருள்பவரே  போற்றி 
ஓம்  சத்ருக்களின்  மனம்  மாற்றி  அன்புரச் செய்பவரே  போற்றி 
ஓம்  சித்திகள்  பெற்று  உயரச்  செய்பவரே  போற்றி 
ஓம்  நல் குருவாகி  மனதார  வாழ்த்து பவரே   போற்றி          
ஓம்  அண்டம் பிண்டம் நிறைந்த அயன்மால்  போற்றி 
ஓம்  அகண்டம் பரி பூரணத்தின் அருளே   போற்றி 
ஓம்  மண்டலஞ் சூழ்  இரவிமதி  சுடரே  போற்றி 
ஓம்  மதுரத்   தமிழோதும்   அகத்தீசரே  போற்றி                        
ஓம்  எண்திசையும்  புகழும்  என் குருவே  போற்றி
ஓம் இடைகலையின்  சுழுமுனையின்  கமலம்  போற்றி 
ஓம்  குண்டலியில்  அமர்ந்தருளும்  குகனே  போற்றி 
ஓம்  மேன்மை கொள் சைவநீதி  விளங்க  செய்பவரே  போற்றி
ஓம்  கும்பேஸ்வரன் கோயில் முக்தி  அடைந்தவரே  போற்றி 
ஓம்  குருவாய்  நின்று  இன்றும்  ஆசிகள்  அளிப்பவரே  போற்றி 
ஓம்  குருமுனியின்  திருவடிகள்  எப்போதும்  போற்றி 
ஓம் இன்னல்கள்  நீக்கி இன்பம்  தரும்  அகத்தீசப்  பெருமானே 
உமது  திருவடிகள்  சரணம்  போற்றி.... போற்றியே .....    

        
அடுத்து சிவபுராணம் போன்ற பதிகம் பாடி, தீப ஆராத்தி செய்து வழிபாடு நடந்தது. பின்னர் அனைவரும் தனித்தனியாக தரிசித்தோம்.அடுத்து குழுவாக தருணத்தை காட்சிப்படமாக மாற்றினோம். பிரசாதம் விநியோகித்து அகத்தியரிடம் நன்றி கூறி மகிழ்ந்தோம்.




இந்த அருவியின் உயரம் 100 மீட்டர். பாபனாசர் கோயிலில் இருந்து இந்த அருவியை நடந்தே வந்தடையலாம். இந்த அருவியில் நீராடுவது நம் பாவத்தை கழுவுவதற்கு மட்டுமின்றி பல மூலிகைச் செடிகளை கடந்து வருவதால் நோய்களை குணப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
இந்த அருவியின் வழியாக மலை மேல் நடந்து சென்றால், இதன் தொடக்க நிலையை அடையலாம். கல்யாண தீர்த்தம் என்றழைக்கப்படும் அந்த இடம், ஒரு பெரிய சுவற்றின் பின்னால் ஒழித்து வைக்கப்பட்டதை போல் அமைந்திருக்கும்.இதற்கு புராணம் சொல்லும் காரணம், சிவபெருமானின் திருமணத்தை காண வந்த எண்ணிலடங்கா கூட்டத்தினால் ஏற்பட போகும் அசம்பாவிதத்தை தடுக்க, பூமியை சமநிலைப்படுத்த அகஸ்தியர் செய்த அமைப்பு இதுவென்று.             


திருநெல்வேலியில் இருந்து, 50 கி.மீ., தொலைவில் உள்ளது, பாபநாசம். இங்கிருந்து, 4 கி.மீ., துாரத்திலுள்ள அகத்தியர் அருவிக்கு ஆட்டோ, கார்களில் சென்று, படிக்கட்டுகளில் ஏறினால், கல்யாணி தீர்த்தத்தை தரிசிக்கலாம். காலை, 7:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு; வெள்ள காலத்தில் யாரையும் அனுமதிப்பதில்லை.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 கல்யாண தீர்த்தம் அகத்தியர் தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_7.html

 ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - மாதாந்திர பௌர்ணமி பூசை - 38 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/09/38.html


அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html

எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html


2 comments:

  1. ஓம் அகத்திய உலோபாமுத்ரா தேவியே போற்றி 🙏🦚

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி 🙏 🙏 🙏
      ஓம் ஸ்ரீ குருவே சரணம்

      Delete