அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்,
இன்றைய தினம் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய பூசை வழிபாட்டிற்கு அழைக்க வேண்டி இன்றைய பதிவை தொடர்கின்றோம். இத்துடன் மேலும் இன்று கூடுவாஞ்சேரியில் ஸ்ரீ தெய்வானை,ஸ்ரீ வள்ளி- ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழும் பகிர விரும்புகின்றோம். இன்றைய தினம் கூடுவாஞ்சேரியில் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்பது போல் அமைந்து உள்ளது.
இன்றைய ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாணம் அழைப்பிதழை இனி பகிர்கின்றோம். இந்த திருக்கல்யாண அழைப்பிதழ் கண்டு நாம் மகிழ்ச்சியுற்றோம். ஏன் என்று பின்வரும் பதிவுகளின் மூலம் அறிய தருகின்றோம்.
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்;
பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்-பன்னிரு கைக்
கோலப்பா! வானோர் கொடிய வினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தி வாழ்வே!
அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்;
வெஞ் சமரில்,'அஞ்சல்' என வேல் தோன்றும்; - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும்
'முருகா!' என்று ஓதுவார் முன்.
முருகனே! செந்தி முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! - ஒரு கை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன், நான்.
திருக்கல்யாணம் பார்ப்பது, அதில் பங்கு கொள்வது திருமணத் தடை விலக்கும் என்று பெரியோர்கள் சொல்ல கேட்டதுண்டு. நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் இதனை பலமுறை தன் அருள்வாக்கில் கூறி உள்ளார்கள். எனவே திருமணத் தடை உள்ள அன்பர்கள் இன்றைய திருக்கல்யாண வழிபாட்டில் கலந்து கொண்டு அருள் பெற வேண்டுகின்றோம்.
குருவருளால் மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திர வழிபாடு கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. பலமுறை நாம் நம் குருநாதர் தரிசனம் பெற்றாலும் இன்னும் இன்னும் என நம்மை ஏங்க வைப்பது இன்னும் உண்மையே. ஒவ்வொரு முறை தரிசனத்தில் நமக்கு ஒவ்வொன்றை உணர்த்துவார். இன்றைய ஆயில்ய நட்சத்திர வழிபாடு திருமணத் தடை உள்ள அன்பர்களுக்கு பிரார்த்தனை செய்ய உள்ளோம். இன்றைய ஆயில்ய வழிபாட்டில் திருஅண்ணாமலையில் அன்னசேவை செய்ய ஏற்பாடு செய்து வருகின்றோம்.
சித்திரை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய நட்சத்திர தரிசனம் இங்கே நாம் பெற உள்ளோம்.
No comments:
Post a Comment