அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய குரு நாளில் வைகாசி பரணி நட்சத்திரம் அன்று நமக்கு அருள் வழங்கிய ஸ்ரீமத் போகர் ஜெயந்தி வழிபாடு தரிசனம் காண இருக்கின்றோம். ஏற்கனவே நாம் தனிப்பதிவில் ஸ்ரீமத் போகர் ஜெயந்தி விழா - 28.05.2022 பற்றி கூறி இருந்தோம். பழனியில் உள்ள ஸ்ரீமத் போகர் உயிர்நிலைக்கோயிலில் அன்று காலை விழா சிறப்பாக நடைபெற்று உள்ளது. அன்று மாலையில் குரு போகர் அலங்கார ரதம் பழனி கிரிவல வீதியில் கைலாய வாத்தியத்துடன் வலம் வந்தது. தினம் தினம் நாம் ஸ்ரீ போகர் பெருமானை துதிப்போம்.
இன்றைய
நன்னாளில் ஸ்ரீ போகர் திருவடிகள் பணிந்து ஸ்ரீ போகர் துதியை இங்கே
பகிர்கின்றோம். அன்பர்கள் தங்கள் நித்திய வழிபாட்டில் இதனை சேர்த்துக்
கொள்ள வேண்டுகின்றோம்.
அடுத்து நமக்கு குருவருளால் ஸ்ரீமத் போகர் ஜெயந்தி அன்று ஸ்ரீ போகர் தரிசனம் கிடைத்தது. அதனை இங்கே பகிர விரும்புகின்றோம். நம் குழு
சார்பில் அன்றைய அன்னசேவை குருவருளால் சிறப்பாக நடைபெற்றது, மேலும் அன்று காலை பழனியில் நடைபெற்ற ஸ்ரீமத் போகர் ஜெயந்தி விழாவிற்கு நம் தளம்
சார்பில் சிறு தொகை குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டோம். மேலும் அன்று மாலை 5 மணி அளவில் திண்டுக்கல் அருகே உள்ள செட்டியபட்டியில் உள்ள சாய்பாபா
கோயிலில் உள்ள சித்தர்கள் பீடத்தில் இன்று போக மகரிஷிக்கு வழிபாடு நம்
தளம் சார்பில் நடைபெற்றது. அதனை இனி காண உள்ளோம்.
செட்டியபட்டியில் உள்ள சாய்பாபா கோயிலில் உள்ள ஸ்ரீ போகர்
முதலில் அன்று மாலை கோயிலுக்கு மாலை 5:30 மணி அளவில் சென்றோம். அன்று அனைத்து சித்தர் பெருமக்களுக்கும் பூ வைத்து வழிபட ஆசை ஏற்பட, பூச்சரங்கள் வாங்கி அங்கே கொடுத்தோம். இங்கிருந்து பார்க்கும் போது சித்தர் பெருமக்களை ஒரு சேர தரிசிக்கலாம். ஒவ்வொரு நட்சத்திரம் அன்று அன்றைய சித்தரை தரிசிக்க ஆசை கொண்டு இங்கே அதனை இன்றைய நாளில் சமர்ப்பிக்கின்றோம். குருவருள் நம்மை தொடர்ந்து வழி நடத்தட்டும்.
எண்ணெய் காப்பு சாற்றி ஸ்ரீ போகர்
மஞ்சள் அபிஷேகம் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.
தீப தரிசனம் கண்டோம்.
இப்படி தான் ஓளி ரூபமாக சித்தர்கள் காட்சி கொடுப்பார்கள் என்று நம்புகின்றோம். அடுத்து பால் அபிஷேகம் நடைபெறுகின்றது.
ஸ்ரீ போகர் சித்தரின் சில குறிப்புகள் இங்கே பகிர்கின்றோம்.
அடுத்து அலங்கார தரிசனம் காண உள்ளோம்.
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ போகர் சித்தரே போற்றி என்று போற்றிக் கொண்டே இருந்தோம்.
அலங்கார தரிசனத்தில் தீப தரிசனம் பெற்றோம்.
ஓம் ஆம் ஊம் ஸ்ரீ போகர் சித்தரே போற்றி
அன்றைய தினம் நம் தளம் சார்பில் மாலை வாங்கி ஸ்ரீ போகர் பெருமானுக்கு சாற்றினோம்.
ஸ்ரீ போகர் திருவடிகள் சரணம்!
ஸ்ரீ போகர் திருவடிகள் சரணம்!!
ஸ்ரீ போகர் திருவடிகள் சரணம்!!!
இங்கு ஒரு
விசேஷமான முறையில் வழிபாடு செய்வது கண்டும், நம் சித்தர் பெருமக்களின்
ஞானம் கண்டு மெய் சிலிர்த்தோம். அது என்ன என்று கீழே உள்ள ஸ்ரீ போக மகரிஷி
அருளில் பாருங்கள். இதைப் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் சிந்திப்போம்.
அன்று கொண்டாடிய ஸ்ரீ போகர் ஜெயந்தி விழா பற்றியும் இனிவரும் பதிவில்
காண்போம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
சித்தர் காப்பு - சித்தர்கள் திருவடி போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2022/06/blog-post_2.html
ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_23.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html
சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html
திரும்பிப் பார்க்கின்றோம்: அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - புரட்டாசி -2017 - https://tut-temples.blogspot.com/2019/08/2017.html
கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html
யாத்திரையாம் யாத்திரை பருவதமலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_42.html
இன்றைய குரு பூஜையில் நால்வரின் பதம் பணிவோமாக! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post_13.html
சித்தர்கள் அறிவோம்! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_13.html
No comments:
Post a Comment