அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் நம் குழு சார்பில் அனைத்து சேவைகளும் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றது. அந்த நாள் >> இந்த வருடம் தொகுப்பில் ஓதிமலை தரிசனம் நேரில் நமக்கு கிடைக்கவில்லை. அன்றைய தினம் காலையில் சின்னாளப்பட்டி முருகர் வழிபாட்டில் பூமாலைகள் வாங்கிக் கொடுத்ததும், மதியம் சுமார் 10 அன்பர்களுக்கு பசியாற்றுவிக்கவும் பணிக்கப்பட்டோம். பின்னர் அன்றைய தினம் மாலை கூட்டுப் பிரார்த்தனையில் முருகப் பெருமானுக்கு பாமாலை சாற்றி வழிபாடு செய்தோம். இவை அனைத்தும் குருவருளால் மட்டுமே நடைபெற்று வருகின்றது.
அன்று நமக்கு கிடைத்த பிரசாதம்
வெளிச்சுற்று பிரகாரத்தில் நம் குருநாதர் தரிசனம்
அன்றைய தினம் அனைத்து இறை மூர்த்தங்களுக்கு மாலை
அன்றைய தினம் நமக்கு முருக வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்தோம். இது போன்று ஒவ்வொரு நாளும் கிடைக்காதா என்று நாம் ஏங்கினோம் என்று சொல்ல வேண்டும். இது தான் அந்த நாள் >> இந்த வருடம் உணர்த்தும் இறை வழிபாட்டின் தத்துவம் ஆகும். இந்த தொகுப்பில் நாம் கோடகநல்லூர் வழிபாட்டிற்கு அனைவரையும் இன்றைய பதிவில் அழைத்து மகிழ்கின்றோம்.

அந்த நாள் இந்த வருடம் - கோடகநல்லூரில் பெருமாளுக்கு அகத்தியப்பெருமான் செய்கிற அபிஷேக ஆராதனை, சோபகிருது வருடம், ஐப்பசி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரமும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகிற நாளில், (26/10/2023) வியாழக்கிழமை அன்று செய்திட உத்தரவாகியுள்ளது.
அன்றைய தினம் ஆராதனை செய்தாலும், கோவிலுக்கு வெளியே நின்றாலும், ஆத்மார்த்தமாக இருந்தால் அனைவருக்கும், அகத்தியப்பெருமானும், பெருமாளும், அருள் புரிவார்கள் என தெரிவித்துள்ளார்.
அனைவரும் சென்று பூசையில் கலந்து கொண்டு அவர் அருள் பெறுக!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment