"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, September 28, 2023

தீப மங்கள சோதி நமோ நம - 108 தீப வழிபாடு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் தீப வழிபாடு பற்றி காண இருக்கின்றோம். நம் தளத்திற்கும் , தீப வழிபாட்டிற்கும் பல வழிகளில் தொடர்பு உண்டு. நம் குருநாதர் குருபூஜை அன்று 2017 ஆம் ஆண்டில் 108 தீபமேற்றி வழிபாடு செய்தோம். அதன் தொடர்ச்சியாக சுமார் 3 ஆண்டுகளாக மோட்ச தீப வழிபாடு செய்தோம். இந்த தீப வழிபாட்டில் ஆண்டுதோறும் 108 தீப வழிபாடு செய்து வருகின்றோம். தற்போதைய தொற்றுக்கிருமி கட்டுப்பாட்டால் தற்போது கடந்த ஓராண்டுக்கும் மேலாக தீப எண்ணெய் ஆலயங்களுக்கு கொடுத்து வருகின்றோம். சென்ற ஆண்டில் 108 தீப வழிபாடு மிக சிறப்பாக ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில் சின்னாளபட்டியில் நடைபெற்றது.  இந்த ஆண்டில் 108 தீப வழிபாடு செய்வதற்கு குருவிடம்  பணிந்து  வேண்டுகின்றோம். 

சில தீப வழிபாட்டு அருள்நிலைகளை இங்கே தருகின்றோம்.



கூடுவாஞ்சேரியில் குருநாதர் வழிபாட்டில் 


சின்னாளபட்டி விநாயகர் முன்பு ( முருகன் கோயிலில் )


முதன் முதலாக 108 தீபம் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் 


பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் 108 தீப வழிபாடு 


 108 தீபம் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் 






 கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் தீப வழிபாடு 

இந்த தீப வழிபாடு கடந்த 6 ஆண்டுகளாக நம் தளம் சார்பில் நடைபெற்று வருகின்றது. இது இந்த வழிபாடு அகத்தியர் வனம் மலேஷியா குழுவினரால் நமக்கு கிடைத்து, குருவருளால் ஆண்டுதோறும் தொடர்ந்து வருகின்றோம். கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் 4 முறையும், பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் 1 முறையும், சின்னாளபட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலில் 1 முறையும் என தொடர்ந்து வருகின்றோம். TUT குழு தொடங்கி இந்த ஆண்டில் 7 ஆம் ஆண்டில் பயணித்து வருகின்றோம். இந்த ஆண்டிலும் 108 தீப வழிபாடு தொடர வேண்டி பணிகின்றோம்.

சென்ற ஆண்டில் வழக்கம் போல் நம் தளத்தின் சேவைகளை தொடர்ந்து கொண்டிருந்த போது, தமிழ்ப் புத்தாண்டு வழிபாட்டில் 108 தீப வழிபாடு சேர்க்க எண்ணம் பிறந்தது. குருவிடம் வேண்டியபோது, நமக்கு சின்னாளபட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில் உணர்த்தப்பட்டது. பின்னர் வழக்கம் போல் தீப வழிபாட்டிற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்றது. தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.



அன்றைய தினம் அகல் விளக்குகள் வாங்கி, சுத்தம் செய்த நிலையில்.



பின்னர் சின்னாளபட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலிக்கு சென்று இம்முறை வெற்றலைகளை நட்சத்திர வடிவில் அடுக்கி, அதன் மேலே அகல் விளக்குகளை வைத்தோம்.




பின்னர் தீபத்திற்கு எண்ணெய், திரி போட்டு தயார் செய்த போது 


அனைத்தும் தயாரானதும், மகா மந்திரம் கூறி, முதல் தீபம் ஏற்றிய நிலையில் 




பின்னர் ஆதி ஜோதியான மைய ஜோதியில் இருந்து அருகே இருந்த விளக்குகளுக்கு ஒளியை ஏற்ற ஒவ்வொருவரும் பணிக்கப்பட்டோம்.



சற்று நேரத்தில் இருள் நீங்கி, ஒளி பெருகியது. மனதுள் மகாமந்திரம் உச்சரித்துக் கொண்டே இருந்தோம்.



இதோ ..108 தீபமும் சுடர்விட்டுப் பிரகாசிக்க, நம் அகத்தில் உள்ள இருளும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுவதை கண்டோம்.





மாசற்ற ஜோதி..மலர்ந்த மலர்ச்சுடரே என்று மனதில் போற்றிக் கொண்டே இருந்தோம்.


பின்னர் கொஞ்ச நேரத்தில் குருநாதர் தரிசனம் பெற்றோம்.






ஜோதி வழிபாடு நம் அக இருளை நீக்கும் வழிபாடு ஆகும். இது பஞ்ச பூத வழிபாட்டின் தத்துவமும் ஆகும். எப்பொழுதெல்லாம் கோயிலுக்கு செல்கின்றீர்களோ, அப்பொழுது தீபமேற்றி வழிபாடு செய்யுங்கள். ஒரு தீபம் ஏற்றினாலும் தூய பசு நெய் கொண்டு உள்ளன்போடு ஏற்றி மகிழுங்கள். இதற்கு வாய்ப்பு இல்லையென்றால் குறைந்த பட்சம் உள்ளத்திலாவது தீப மேற்றி வழிபாடு செய்யுங்கள்.





குருநாதர் தரிசனம் பெற்று,  தீப தரிசனம் கண்டு, பின்னர் பாராயணம் செய்தோம். குழு அன்பர்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து வழிபட்டோம்.

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
அப்பர் தேவாரம் 4-11-8

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியுடன் பிதற்றும் பெருமையை
உண்டவெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்டகுறியைக் குலைத்ததுதானே
–திருமூலரின் திருமந்திரம் 1975

நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
ஞான பண்டித சுவாமி நமோ நம - வெகுகோடி

நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூர நமோ நம - பரசூரர்

சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்பிரம வீரா நமோ நம - கிரிராஜ

தீப மங்கள சோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம - அருள்தாராய்

    ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
    ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
    ஜோதி ஜோதி ஜோதி யருட்
    ஜோதி ஜோதி ஜோதி சிவம்.

    வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
    மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
    ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
    ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.

    ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
    வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 

என்று பாடி, உணர்ந்து வருகின்றோம். இந்த ஆண்டில் 108 தீப வழிபாட்டிற்கு நம் குருவிடம் வேண்டி பணிந்து உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகவும் பிரார்த்தனை செய்வோம்!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் ஜீவ வாக்கு - தீப வழிபாடு - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post.html

சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் 108 தீப வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/11/108.html

காரணமின்றி காரியமில்லை- ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_19.html

தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html

தெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4) - https://tut-temples.blogspot.com/2019/12/4.html

தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html

மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - https://tut-temples.blogspot.com/2019/12/1.html


No comments:

Post a Comment