"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, September 15, 2023

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகன் அருள் முன்னிற்க, நம் குழு சார்பில் தினசரி கூட்டுப் பிரார்த்தனை (திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 7 மணி முதல் 8 மணி வரை) 500 நாட்களைத் தாண்டி  நடைபெற்று வருகின்றது. நாம் ஒரு கருவியாக மட்டுமே இருந்து செயல்படுத்தி வருகின்றோம். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று நித்தமும் முருகப் பெருமானிடம் வேண்டி வருகின்றோம்.

முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!

என்று வேண்டுவதை தவிர நாமொன்றும் அறியோம் முருகப் பெருமானே!

தினம் ஒரு முருகன் ஆலயம் தொடர் பதிவில் தினம் ஒரு முருகன் ஆலய தரிசனம் கண்டு, திருப்புகழ் படித்து வருகின்றோம். தற்போது வரை 4 திருப்புகழ் திருக்கோயில்  தரிசனம் கண்டு வந்துள்ளோம்.

 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  

2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - 3 திருப்புகழ் 

3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - 4 திருப்புகழ் 

4. திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - 1 திருப்புகழ்

5. சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் 

6. விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் 

7. சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 

இதற்கு முந்தைய பதிவில் சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தரிசனம் பெற்று மகிழ்ந்தோம். இன்று குருவருளால் மீண்டும் முருகப் பெருமான் தரிசனம் பெற்று திருப்புகழ் படித்து மகிழ உள்ளோம்.

திருப்புகழ் 698 குசமாகி யாருமலை  (திருவான்மியூர்)


தனதான தானதன தனதான தானதன
     தனதான தானதன ...... தனதான

......... பாடல் .........

குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை
     குடிலான ஆல்வயிறு ...... குழையூடே

குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்
     குழல்கார தானகுண ...... மிலிமாதர்

புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி
     புலையேனு லாவிமிகு ...... புணர்வாகிப்

புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை
     பொலிவான பாதமல ...... ரருள்வாயே

நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு
     நிகழ்போத மானபர ...... முருகோனே

நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு
     நிபுணாநி சாசரர்கள் ...... குலகாலா

திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி
     சிவநாத ராலமயில் ...... அமுதேசர்

திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர்
     திருவான்மி யூர்மருவு ...... பெருமாளே.


மாசி சனி மகா பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி நன்னாளில் திருப்புகழ் தெய்வம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்



அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில்

திருவான்மியூர்

சென்னை-600041

இருப்பிடம்: சென்ட்ரல் 11 கிமீ, கோயம்பேடு 18 கிமீ

மூலவர்: மருந்தீஸ்வரர், பால்வண்ணநாதர், அமுதீசர், வேதபுரீஸ்வரர்

உற்சவர்: தியாகராஜர்

அம்மன்: திரிபுரசுந்தரி

திருப்புகழ் நாயகன்: முத்துக்குமாரர்

தேவியர்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்: வன்னி மரம்

புராணப்பெயர்: திருவான்மிகீயூர்

தீர்த்தம்: பஞ்ச தீர்த்தம், அப்பர்

பாடிய அருளாளர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர். சேக்கிழார், பாம்பன் சுவாமிகள்

தலமகிமை:

தருமமிகு சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் புராண பெருமை, திருமுறைப் பெருமை, திருப்புகழ் பெருமை, வரலாற்றுப் பெருமை ஆகியவற்றை தன்னகத்தே பெற்றுள்ளது. சென்னை மாநகரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவிலும், கோயம்பேட்டிலிருந்து 18 கிமீ தொலைவிலும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அகத்தியர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், வால்மிகீநாதர் முதலான மகான்கள் இங்கு வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் தினமும் கோ பூஜை செய்த பின்னரே சுவாமிக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது.

சென்னையில் சிறந்துவிளங்கும் சிவத்தலங்களில் முக்கியமானவை, வடக்கில் திருவொற்றியூர், மத்தியில் திருமயிலை, தெற்கில் திருவான்மியூர் ஆகியன. திருவான்மியூர் தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும், இத்தலத்தைக் கண்டாலும் நினைத்தாலும் முக்தி என்கிறது தலபுராணம். 1,300 ஆண்டுகள் பழைமையைக் கொண்டு திகழும் இந்தத் திருத்தலம் அப்பர், சம்பந்தர் ஆகிய சமயக்குரவர்களும் சேக்கிழார், அருணகிரிநாதர் போன்ற மகான்களும் போற்றிப் பாடிய சிறப்பை உடையது. தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற 274 சிவன் கோவில்களில், 258-வது தேவாரத் தலமாக இத்தலம் விளங்குகிறது.

காசிபமுனிவரால் சாபம் பெற்ற காமதேனு, மருந்தீஸ்வரர் திருமேனியில் பால் தினம் சொரிந்து பாவம் நீங்கப் பெற்றது. காமதேனு கால்குளம்பு பட்டதால் உண்டான வடுவை லிங்க சிரசில் இன்றும் நாம் காணலாம். காமதேனு பால் சொரிந்ததால் வெண்மையாகக் காட்சியருளும் இந்த ஈசனை பால்வண்ணநாதர் என்கின்றனர். திருப்பாற்கடலில் தேவர்கள் கடைந்தெடுத்த அமுதத்தால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் மூலவருக்கு அமுதீசர் எனவும், நான்கு வேதங்களும் வணங்கி பூஜித்ததால் `வேதபுரீஸ்வரர்' என்றும் அழைக்கின்றனர்.

மகா சிவராத்திரி 4 கால அபிஷேகங்கள், பங்குனி பிரம்மோற்சவம் 11 நாட்கள், வைகாசி வசந்தோற்சவம் 11 நாட்கள் இங்கு சிறப்பாக நடைபெறும். பிரதோஷம், கிருத்திகை, பௌர்ணமி, ஐப்பசி அன்னாபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி, நவராத்திரி, கார்த்திகை தீபம், ஆருத்ரா விழா, ஆடிப்பூரம், கார்த்திகை சோமவார 108 சங்காபிஷேகம், திருக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. .

மருந்தீஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து, சுவாமியை மனமுருகி தொழுது விபூதி பிரசாதம் உண்டால் தீராத நோய்கள் தீரும். பாவங்கள் அகலும், சிவபெருமான் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வந்து வணங்கினால், முக்தி கிடைக்கும். வருடம் 365 நாட்களும் இக்கோவிலில் சமய சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.

தல வரலாறு:

மார்க்கண்டேயர் சொன்னதன்படி தென்திசை பயணித்த கொடியவனாக இருந்து திருந்திய வான்மீகி (வால்மீகி) முனிவருக்கு, கிழக்குக் கடற்கரையோரத்தில், `நான் இங்கே இருக்கிறேன்' என அசரீரி மூலம் ஒலித்து வன்னிமரத்தடியில் ஈசன் உமையம்மையோடு திருக்காட்சி அருளிய தலம் என்பதால் திருவான்மியூர் என்று பெயர்பெற்றது. வேத ஆகம விதிமுறைகளின்படி வான்மீகி மூலம் பிரம்மனால் அமைக்கப்பெற்றது, இத்தலம். மாடவீதி, திருத்தேர், உற்சவ விக்கிரகங்கள் ஆகியவற்றை உருவாக்கிய பிரம்மனே இத்தலத்துக்கான 11 நாள் பங்குனி பிரம்மோற்சவத்தையும் ஏற்படுத்தி இறைவனை வழிபட்டார் என்கிறது வரலாறு.

கயிலாயத்திலிருந்து தென்திசை வந்த அகத்தியருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. அவர் இத்தலத்தில் சிவபெருமானை நோக்கி வழிபாடு செய்ய வன்னிமரத்தடியில் உமையோடு இறைவன் தோன்றி அவரது நோய் நீக்கியதோடு உடலில் உண்டாகும் நோய்கள் குறித்தும் அதற்கான மருந்துகளாகும் மூலிகைகள் குறித்தும் உபதேசம் செய்தார். பிறவிப்பிணி தீர்க்கும் ஈசன் உடல்பிணிக்கும் மருந்துரைத்த தலம் ஆதலால் இத்தல இறைவன் மருந்தீஸ்வரர் என அழைக்கப்பட்டார். 1979, 2004, 2020-ல் கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டன.

தல அமைப்பு:

ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. பிரம்மாண்ட கோவிலுக்குள் நுழைந்தவுடன் முதல் சந்நிதியில் திருப்புகழ் தெய்வமான முருகப்பெருமான், இங்கு முத்துக்குமாரராக ஒரு திருமுகம், நான்கு திருக்கரங்களுடன் கிழக்கி நோக்கி வள்ளி, தெய்வானை சமேதராக காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அருணகிரிநாதப்பெருமான் இத்திருத்தலத்தில் முத்துக்குமாரரை போற்றி ஒரு திருப்புகழ் பாடல் பாடியுள்ளார். விஜய கணபதி தனி சந்நிதியில் அருள்கின்றார்.

வன்னி மரத்தடியில் வான்மீகி முனிவர் கண்டெடுத்த சுயம்புலிங்கமே இக்கோவில் கருவறையில் மூலவராக மேற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். அம்பாள் திரிபுர சுந்தரி, நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்புரிகின்றார். வெள்ளிக்கிழமை சுக்கிரவார அம்மன் புறப்பாடு விசேஷம். தியாகராசர் உற்சவராக விளங்குகிறார். பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் இங்கு நடைபெறும் தியாகராஜர் திருவீதியுலாவும் அவரது 18 திருநடனக் காட்சிகளும் சிறப்பம்சமாகும்.

மேலும், ஆஞ்சநேயர், கமல விநாயகர், தண்டாயுதபாணி, மண்டபத்தில் நாயன்மார் திருவுருவங்கள், 108 சிவலிங்கங்கள், சபா மண்டபத்தினுள் தியாகேசர், அம்மன், தனியம்மன் உற்சவமூர்த்திகள் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். சூலம், உடுக்கை, சர்ப்பம் ஏந்திய காலபைரவர், பஞ்சலிங்கங்கள் (இதில் பெரிய லிங்கம், கேதாரீஸ்வரர். இவரை கேதார கௌரி விரதம் இருக்கும் பெண்கள் வழிபடச் சிறப்பு.) திருமால், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், அண்ணாமலையார், துர்கா தேவி ஆகியோர் தனி சந்நிதிகளில் அருள்கின்றனர்.

திருவிழா:

மகா சிவராத்திரி, பங்குனி பிரம்மோற்சவம், ஐப்பசி அன்னாபிஷேகம், வைகாசி வசந்தோற்சவம், திருக்கார்த்திகை, அரூத்ரா தரிசனம், கந்த சஷ்டி, தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, ஆடிப்பூரம், நாவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி, கிருத்திகை

பிரார்த்தனை:

முக்தி கிடைக்க, தீராத நோய்கள் தீர, பிரச்னைகள் அகல, நல்லது நடக்க, எண்ணியது நிறைவேற

நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்

திறக்கும் நேரம்:

காலை 6-12, மாலை 4-9

மருந்தீஸ்வரர் ஆலயம் பற்றிய சில முக்கிய  தகவல்களை அறிந்து கொள்ளலாம். 

1. திருவான்மியூர் விநாயகரின் திருநாமம் விக்னேஸ்வரர். 

2. ராஜகோபுரம் 5 நிலை உடையது. 

3. மருந்தீஸ்வரருக்கு தினமும் நைவேத்தியமாக பொங்கல் படைக்கப்படுகிறது. 

4. வால்மீகி இறைவனிடம் வேண்டியதற்கேற்ப அவரது பெயரிலேயே தலம் விளங்குகிறது. 

5 திருவான்மியூர் தலத்தில் சிவன் மட்டும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். 

6. பிரகாரத்தில் அகத்தியர், வால்மீகிக்கு சிவன் காட்சி தந்த வன்னிமரம் உள்ளது. இத்தலத்தில் பங்குனி பிரம்மோற்சவத்தின்போது, அகத்தியருக்கு காட்சி தந்த வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. 

7. நடராஜர் அருணகிரியாரால் பாடல் பெற்ற முத்துக்குமார், மூன்று சக்தி விநாயகர்கள், 108 சிவலிங்கங்கள், பஞ்சலிங்கங்கள் தனித்தனி சன்னதியில் உள்ளனர்.  

8. தினசரி அதிகாலையில் கோபூஜை செய்யப்பட்ட பின்பே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. 

9. அம்பாள், சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். 

10. திருநாவுக்கரசர் தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 25வது தலம். 

11. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. 

12. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 258வது தேவாரத்தலம் ஆகும். 

13. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திருவான்மியூர் ஆலயம் திறந்திருக்கும். 

14. சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாரதம் உண்டால் தீராத நோய்கள், பாவங்கள் தீரும். 

15. சிவன் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வணங்கிட முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

16. சிவனுக்கும் அம்மனுக்கும் புது வஸ்திரம் அணிவித்து வணங்குவதை பக்தர்கள் நேர்த்திக்கடனாக மேற்கொள்கிறார்கள். 

17. சுவாமிக்கு வான்மீகிநாதர், வேதபுரீஸ்வரர், அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர் என்ற பெயர்களும் உள்ளது. 

18. திருவான்மியூர் கோவில் சன்னதி விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டு, கிழக்கு ஏழுநிலை ராஜகோபுரம், ஐந்துநிலை கிழக்கு ரிஷிகோபுரம், மேற்கு ஐந்துநிலை மேற்கு கோபுரம் ஆகிய கோபுரங்களில் பராமரிப்புத் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.  

19. மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.! 

20. சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் உண்டால் தீராத நோய்கள், பாவங்கள் தீரும், 

21. சிவன் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வணங்கிட முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

22. சென்னையின் மற்ற பகுதிகளில் இருந்து திருவான்மியூருக்கு பேருந்து வசதிகள் அடிக்கடி இருக்கின்றன. 

23. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 

24. சூரசம்ஹாரம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்தரம் ஆகியவை இத்தலத்தில் நடக்கும் முக்கிய விழாக்கள். 

25. வருடம் 365 நாட்களும் இக்கோயிலில் சமய சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. நிறைய பசுக்களை கொண்ட ஒரு பசுமடமும் உள்ளது. ஆன்மிக நூலகம் உள்ளது. 

26. கிழக்கு ராஜகோபுரம். ஐந்து நிலைகளையுடையது. மேற்கில் 5 நிலை கோபுரம் அமைந்துள்ளது. சுயம்பு லிங்க உருவில் தீண்டாத் திருமேனி, பால்போன்று வெண்மையாக உள்ளது.  (பால் வண்ண நாதர்) சுவாமிக்குப் பால் அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகிறது. 

27.பஞ்சாமிர்தம் முதலான பிற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன. வடமேற்கு மூலையில் உள்ள வன்னி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும். இந்த வன்னி மரத்தினடியில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி கொடுத்ததாக ஐதீகம். 

28. வான்மீகி முனிவருக்குத் தனிக்கோவில் உள்ளது.பங்குனி உத்திரத்தில் பெருவிழா நடைபெறுகிறது. பங்குனிப் பெருவிழாவில் மூன்றாம், நான்காம் நாள் உற்சவம் - பவனி உற்சவம் சிறப்பாகச் சொல்லப்படுகிறது. ஒன்பதாம் நாள் விழாவில் வன்னி மர சேவை விசேஷம். பத்தாம் நாளில்தான் வான்மீகி முனிவருக்குத் தியாகராஜா, திருக்கல்யாண நடனத்தைக் காட்டியருளும் ஐதீகம் விசேஷமாக நடைபெறுகிறது. பதினோராம் நாளில் நடைபெறும் வெள்ளியங்கிரி விமான சேவை காணத்தக்கது.

29. சூரியன் இத்தலத்தில் பெருமானை அர்த்தசாமத்தில் வழிபட்டதாக வரலாறு உள்ளதால் பெருவிழாவில் கொடியேற்றம் அர்த்தசாமத்தில் தான் நடைபெறுகிறது.விழாக்காலங்களில் சுவாமி புறப்பாடு காலை மாலைகளில் சந்திரசேகரரும் பஞ்சமூர்த்திகளும் மட்டுமே, 'தியாகராஜா' புறப்பாடு பகலில் கிடையாது. இரவில் மட்டுமே நிகழ்கிறது.

30.சோழர் கால கல்வெட்டுகள் 16 உள்ளது. இதில் ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.இராஜேந்திரசோழனுடைய கல்வெட்டுக்கள் ஐந்தும், இராஜாதிராஜனுடைய கல்வெட்டுக்கள் ஐந்தும், இராஜாதி ராஜனுடைய கல்வெட்டுக்கள் மூன்றும் இராஜேந்திரதேவனுடைய கல்வெட்டு மூன்றும் இருக்கின்றன. இவைகளின்படி நுந்தா விளக்கு வைப்பதற்கு ஆடுகள் தானம், கோயில் வழிபாட்டுற்கு நிலதானம், பூமாலை இடுவதற்குப் பொன் தானம், வழிபாட்டிற்குப் பணமும் நெல்லும் தானம்செய்யப் பட்டன.






தீராத நோய்களைத் தீர்க்கும் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் முத்துக்குமாரர் தேவியருடன் 

தீராத நோய்களை தீர்க்கும் திருவான்மியூர் மருந்தீஸ்வரருடன் திருப்புகழ் தெய்வம் முத்துகுமாரரையும் ஒரு சேர வணங்கி நற்பலன் பெற்றிடுவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html


No comments:

Post a Comment