"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, October 25, 2021

TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

2019 ஆம் ஆண்டில் நாம் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பில் கோடகநல்லூர் யாத்திரை சென்றோம். ஏற்கனவே நாம் சென்ற ஆண்டில் ஒரு பதிவில் பேசினோம். இன்றைய பதிவில் மீண்டும் 2019 ஆண்டில் நமக்கு கிடைத்த கோடகநல்லூர் தரிசனத்தை இங்கே தொடர இருக்கின்றோம். நாம் ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில் இணைந்த பிறகு, சித்தன் அருள் வாசிக்க தொடங்கினோம். இந்த வாசிப்பு நம்மை அகத்தியத்தை நோக்கி நம்மை நேசிக்க செய்தது. சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம்  தொகுப்பில் சில கோயில்களுக்கு சென்று வர தொடங்கினோம்.சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பு நம்மை பொறுத்த வரை ஜீவ நாடி அற்புதங்களே ஆகும்.

இந்த அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பின் மூலம் நாம் ஓதிமலை, பாபநாசம் ஸ்நானம், அகத்தியர் மார்கழி குரு பூசை, கோடகநல்லூர் தரிசனம்  என தொடர்ந்து வருகின்றோம். இதில் நம்பிமலை தரிசனம் இன்னும் நாம் பெறாது இருந்தோம். அப்போது தான் 2019 ஆண்டில் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பில் பின்வரும் செய்தி கிடைத்தது.

கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்)

10/11/2019 - ஞாயிற்று கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - ரேவதி நட்சத்திரம். 


                     

சரி. நம் TUT அன்பர்களோடு இரண்டு நாள் யாத்திரையாக கோடகநல்லூர் யாத்திரை மேற்கொள்ள வேண்டி குருவிடம் விண்ணப்பம் வைத்தோம். இதோ. நாம் 2019 ஆம்  ஆண்டில் சென்று தரிசனம் செய்த கோடகநல்லூர் யாத்திரை அனுபவத்தை இங்கே தொடர்கின்றோம்.

முதலில் அன்றைய யாத்திரையில்  நம்பிமலை தரிசனம் பற்றி பேசி இருந்தோம். அடுத்து அங்கிருந்து திருப்பரிவட்டப்பாறை சென்று தரிசனம் செய்தோம். திருப்பரிவட்டப்பாறை தரிசனம் குருவருள் பெற்றுத் தந்தது. இன்னும் அந்த தரிசனத்தை நெஞ்சில் இருத்திக்கொண்டு அடுத்த திருத்தலம் நோக்கி புறப்பட்டோம்.  திருமங்கை ஆழ்வார் திருக்கோயில் தரிசனம் பெற்றோம்.


திருக்குறுங்குடி செல்பவர்கள் கண்டிப்பாக இங்கே ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தரிசனமும் பெறுங்கள். கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா? என்பது போன்றது தான் இந்தக் கோயில். எந்த ஒரு ஆரவாரம் இல்லாது ஆற்றலை அள்ளி அள்ளி இங்கே வழங்குகின்றார் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார். 82 பெருமாள் கோயில் சென்று மங்களாசாசனம் செய்தவர் எனும் போது நாம் இங்கே நலம் தரும் சொல்லான நாராயணா ..நாராயணா என இங்கே ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். 

சுமார் அரை மணி நேரம் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தரிசனம் பெற்று அங்கிருந்து கோடகநல்லூர் நோக்கி புறப்பட்டோம். இரவு 6:00 மணி அளவில் நாம் கோடகநல்லூர் சென்று சேர்ந்தோம்.


நேரே சென்று நம் தாயான தாமிரபரணி தரிசனம் பெற்றோம். கோடகநல்லூரில் மூன்று கோயில்கள் உள்ளது. இங்கே நாம் தரிசனம் பெற குறைந்தது 1 நாளாவது வேண்டும்.

1. ஸ்ரீ சௌந்தர்யநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ அவிமுக்தீஸ்வரர் கோயில் 

2. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் 

3. ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் திருக்கோயில்

அன்று பிரதோஷ தரிசனம் இரண்டு கோயில்களிலும் கண்டோம். பின்னர் அங்கிருந்து நாம் பெருமாள் கோயிலுக்கு சென்றோம்.




அடுத்த நாள் 10/11/2019 கோடகநல்லூர் பூசை. வழக்கம் போல் எந்த ஒரு ஆரவாரமும் இன்றி அமைதி நிலை கண்டோம். நாளைய வழிபாடு அகத்தியர் அடியார்கள் புடை சூழ பெருமாள் தரிசனம் நாங்கள் பெற வேண்டும் என்று அன்று பிரார்த்தனை செய்தோம். ஏனென்றால் 10/11/2019 அன்று வழக்கமான கோடகநல்லூர் பூசை இருக்குமா என்று தெரியவில்லை. அடுத்த வாரம் கும்பாபிஷேகம் என்று என கோயில் நிர்வாகத்தினர் கூறியிருந்தனர். கும்பாபிஷேகத்திற்கு கோயில் தயாராகும் போது , வழக்கமான பூசை,வழிபாடுகள் நடைபெறும் என்று நாம் சொல்ல இயலாது. இருப்பினும் குருநாதரின் பாதத்தில் நம் பிரார்த்தனையை சமர்ப்பித்து விட்டு மீண்டும் நாம் வி.கே புரம் திரு.செல்லப்பா வீட்டிற்கு சென்றோம்.

அடுத்து திரு.செல்லப்பா ஐயா வீட்டில் இரவு உணவு அருந்தினோம். சப்பாத்தி, குருமா என்று அன்றைய உணவு அருமையாக இருந்தது. சுமார் 15 பேருக்கு உணவு தயாரித்து கொடுத்து தங்கு இடம் ஏற்பாடு செய்து கொடுத்த திரு.செல்லப்பா ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவின் மூலம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். உணவு உண்ட பின்பு சற்று குழு நண்பர்களோடு அறிமுக அனுபவ உரை என்று பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது தான் மீண்டும் ஒரு முறை காரணமின்றி காரியமில்லை என்று உணர்த்தப்பட்டோம். கல்யாண தீர்த்தம் ஸ்ரீ அகத்தியர் கோயிலில் பௌர்ணமி தோறும் வழிபாடு செய்து வருகின்றார்கள் என்று கேள்விப்பட்டு, திரு.பாலச்சந்திரன்  ஐயா தொடர்பு ஏற்பட்டது. நம் தளம் சார்பில் அவ்வவ்போது சிறு தொகை பௌர்ணமி வழிபாட்டிற்கு கொடுத்து வந்தோம். திரு.பாலச்சந்திரன் ஐயா  அவர்கள் நேரில் கண்டிப்பாக வரவும் என்று நம்மை அழைப்பார்கள். நாமும் சந்திப்போம் ஐயா என்று கூறுவது வழக்கம். திரு.பாலச்சந்திரன் ஐயா அவர்களும் வி.கே. புரத்தில் தான் இருக்கின்றார்கள். ஆனால் நாம் இந்த யாத்திரையில் சந்திக்க எண்ணி பேசி இருந்தோம். ஆனால் குருவருளால் அன்றைய தினம் திரு.செல்லப்பா ஐயா வீட்டிற்கே திரு.பாலச்சந்திரன் ஐயாவும் வருகை தந்தார்கள்.

நமக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. நம் பையில் மரியாதை செய்ய துண்டும் , ஸ்ரீ அகத்தியர் பிரசாதமும் இருந்தது.







திரு.பாலச்சந்திரன் ஐயாவிற்கு  நம் தளம் சார்வில் சிறு மரியாதை செய்து பிரசாதம் கொடுத்தோம். இது தான் யாரை எங்கே எதற்காக நாம் சந்திப்போம்  நமக்குத் தெரியாது. இந்தக் கணக்கு நம் கையில் இல்லை. இது நம் குருநாதரின் அருளால் தான் நடந்தது.


பின்னர் அன்றைய தினம் அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து பேசி விட்டு, உறங்க சென்றோம். அடுத்த தாள் கோடகநல்லூர் வழிபாட்டிற்கு செல்ல வேண்டும். மனதுள் அடுத்த நாள் யாத்திரை எப்படி இருக்கும் என்று பலவித கேள்விகளோடு மனதுள் குருநாதர் ஸ்ரீ அகத்தியரை வேண்டிக்கொண்டோம்.

2018 ஆண்டில் கோடகநல்லூர் உழவாரப் பணி செய்த அனுபவமும் நம் கண் முன்னே வந்து செல்கின்றது.  அடுத்த நாள் காலை 10.11.2019 அன்று அனைவரும் கோடகநல்லூர் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தோம். 

இந்தப் பதிவின் ஆக்கத்தில் தற்போது குருவின் நினைவாக ஒரு செய்தி கிடைக்க, அதனை அடுத்த பதிவில் தருகின்றோம். குழு அன்பர்கள் சுமார் 15 பேர் யாத்திரையாக இது அமைய, அன்பர்கள் மேலும் சில தலங்களை பார்த்துவிட்டு கோடகநல்லூர் செல்லலாம் என்று கூறவே, நாமும் சில தலங்களை தரிசனம் செய்தோம்.

மன்னார் கோவில் பெருமாள் சென்று பெருமாள் தரிசனம் பெற்றோம்.





அடுத்து நாம் பிரம்ம தேசம் சென்றோம். கோயிலின் கோபுரம் பார்க்கவே ரம்மியமாக இருந்தது. எத்தனை யுகங்களாக இந்த கோயில் இருக்கின்றது என்று கோபுர தரிசனம் காணும் போது உணர்ந்தோம்.










 அடுத்து நாம் சென்றது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோயில். வாலீசுவரர் கோயில் தான் இது. 












அடுத்து அனைவரையும் வேகமாக கிளம்ப சொல்லி கோடகநல்லூர் நோக்கி புறப்பட்டோம். 

கோடகநல்லூர் தரிசனமும், இன்றைய குரு நாள் சிறப்பும் மீண்டும் தொடர்வோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

4 comments:

  1. Eumaxindia - Bus Shelters Advertising in Chennai, Bus Shelter Advertisement in Chennai, Bus Back Panel Advertising Agency in Chennai, and Advertising Agencies For Bus Stop in Chennai at Eumaxindia.

    Bus Shelter Advertisement in Chennai

    ReplyDelete
  2. In a city like Chennai, where thousands of commuters take the bus every day, advertising various products and services on bus shelters is extremely effective. Bus shelter advertising in Chennai or bus stops help to increase a brand's visibility by reaching every nook and cranny of the city in the most cost effective and economical way possible, thus reaching the Target Group on the go.

    ReplyDelete