"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, October 26, 2021

குருவே சரணம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று  எம் குருநாதர் அகத்தியர் மைந்தன் ஹனுமத்தாஸன் ஐயா இறை ஐக்கியம் பெற்ற நாள்.

தனக்குக் கிடைத்த அகத்தியர் ஜீவ நாடியின் மூலம் லட்சக் கணக்கானோருக்கு ஏடு படித்து, அவர்கள் வாழ்க்கை முன்னேற்றக் காரணமாக இருந்தவர் ஹநுமத்தாஸன். சாதாரண மனிதர் முதல், அன்றைய, இன்றைய பிரபல அரசியல்வாதிகள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் ஹநுமத்தாஸனின் ஜீவநாடி மூலம் பலன் பெற்றவர்களாகவர்.

சென்னை துறைமுகத்தில் பணியாற்றிய ஹநுமத்தாஸன் (இயற்பெயர் த.கி.இராமசாமி) ஆரம்பத்தில் கலைமகள் இதழில் அகத்தியர் ஜீவ நாடி மூலம் நடந்த விஷயங்களைத் தொடராக எழுதி வந்தார். அது பின்னர் அம்மன் பதிப்பகத்தாரால் ‘நாடி சொல்லும் கதைகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக (இரு பாகங்கள்) வெளி வந்தது. அதில் ஸ்ரீ ஹனுமனின் தரிசனம், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் செய்த லீலைகள், நரசிம்மரின் அகோபிலத்தில் நள்ளிரவில் நடந்த சம்பவங்கள் என பல ஆச்சரியமான விஷயங்களை மிகச் சுவையாக எழுதியிருந்தார். தொடர்ந்து பிரபல நாளிதழின் மூலம் ’அகத்தியர் அருள் வாக்கு’ என்ற தொடரை எழுதினார். அது அவரை நாடெங்கும் பிரபலப்படுத்தியதுடன், பத்திரிகை விற்பனையையும் பெருக்கியது.

தமிழ்நாடு முழுவதிலிருந்தும் ஏன், உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்து அவரிடம் ஜீவ நாடி படித்துப் பலன் பெற்றோர் பலர். பழகுவதற்கு மிகவும் இனிய ஹநுமத்தாஸன் தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாதவர். பெயர், பணம், புகழ் இவற்றில் ஆசையில்லாதவர்.




 குரு என்பது வெறும் சொல் அல்ல. இது ஒரு பற்றற்ற நிலை. நம்மை வழிநடத்தும் இறை. ஒருவருக்கு ஒரு குரு என்பது இந்த காலகட்டத்தில் சாத்தியமில்லை. இந்த காலம் என்றில்லாது எக்காலத்திலும் சாத்தியமில்லை. சுமார் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் நம் தேடல் ஜீவ நாடி பக்கம் சென்றது. அப்போது நமக்கு சித்தன் அருள் வலைத்தளம் அறிமுகமானது.பின்னர் நாடி சொல்லும் கதைகள் என்ற நூலும் கிடைத்தது. அப்போது தான் நமக்கு பரிட்சயம் ஹனுமத்தாஸன் என்ற பெயர். நேரில் சந்திக்க வாய்ப்பில்லை. ஆனால் இன்றும் நமக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றார்.

 அந்த நாள் இந்த வருடம் தொகுப்பு நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். இன்னும் ஓதிமலை அனுபவம் நம்மை இறையை ஓத வைக்கின்றது. உழவாரப் பணி செய்த அனுபவமும், பேசும் முருகன் தரிசனமும் ஓதியப்பர் நமக்கு அருளினார். இந்த ஆண்டு ஓதியப்பர் பிறந்த நாளை வள்ளிமலையில் கொண்டாடினோம். அடுத்த யாத்திரையாக பாபநாச ஸ்நானம் மற்றும் தரிசனம். நாங்கள் எல்லாம் செய்த பாவத்தை வருடம் ஒருமுறையேனும் போக்க தான் இந்த அருள்நிலையா என்று ஏங்க வைக்கும் பாபநாச ஸ்நானம் மற்றும் தரிசனம் வருடத்திற்கு ஒரு முறை வாய்க்கிறது.  பெயரளவில் கேட்ட தாமிரபரணியை ,எம் உள்ளத்தில் பாய செய்கின்றது பாபநாச ஸ்நானம் மற்றும் தரிசனம்.

அடுத்து கோடகநல்லூர் தரிசனம். இங்கும் நமக்கு சென்ற ஆண்டு உழவாரப் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அனைத்தும் குருவருளால் தான் என்பது நமக்கு கண்கூடாக தெரிகின்றது. இது போல் அந்த நாள் இந்த வருடம் தொகுப்பு நம்மை அகத்தியத்தில் மூழ்கி முத்தெடுக்க வைக்கின்றது. மாத மாதம் நாம் யாத்திரை செல்வதில்லை. குறிப்பிட்ட சில நாட்களாக அந்த நாள் இந்த வருடம் மட்டும் தவறாது யாத்திரையில் சித்தன் அருளால் செய்து வருகின்றோம். அனைத்தும் ஹனுமத்தாஸன் அருளாலே என்று நமக்கு தோன்றுகின்றது. இந்த உயிர் உய்ய இன்றும் ஆசிகளும், வழிகாட்டலும் தருகின்ற தெய்வத்திரு.ஹனுமத்தாஸன் பாதம் சரணம் அடைகின்றோம். மேலும் அவரின் ஆசி  வேண்டி நிற்கின்றோம்.



இன்றைய சிறப்பு நாளில் மீண்டும் நாம் சென்ற பதிவில் இருந்து 2019 ஆம் ஆண்டில் கோடகநல்லூர் தரிசனம் தொடர இருக்கின்றோம். 10.11.2019 காலை மேலும் சில திருத்தலங்களை தரிசனம் செய்து விட்டு, நாம் கோடகநல்லூர் நோக்கி புறப்பட்டோம்.

சரியாக 11 மணி அளவில் கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் திருக்கோயில் சென்று அடைந்தோம். பெருமாள் தரிசனம் கண்டோம். அன்றைய தினம் பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞான இல்ல திரு.சுவாமிநாதன் ஐயா அவர்கள் அங்கிருந்து வழிகாட்டினார். அனைத்து அடியார் பெருமக்களையும் ஒன்று சேர்ந்து, ஒருங்கே அமர செய்து அன்றைய தினத்தின் மகத்துவத்தை எடுத்து உரைத்தார்கள்.








அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பில் கோடகநல்லூர் தரிசனம் பற்றி நாம் கேட்க கேட்க தித்திப்பாக இருந்தது. கண்கள் பெருமாள் தரிசனம் பெற்று குளிர்ந்தது என்றால் காதுகள் சுவாமிநாதன் ஐயாவின் அருளுரையால் குளிர்ந்து. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


















இறை  பிரசாதம் பெற்ற பின்னர் அடுத்து இரை பிரசாதமும் அங்கேயே உள்ள சிவன் கோயிலில் வழங்கப்பட்டது. மிக மிக அருமையான அறுசுவை உணவு உண்டு களிப்புற்றோம்.





மதிய உணவு முடித்து சுமார் 3 மணிக்கு மேல் அங்கிருந்து சுத்தமல்லி அருகே உள்ள தளத்திற்கு சென்றோம். ஆனால் அங்கு நமக்கு தரிசனம் கிடைக்கவில்லை. செல்லும் வழியில் மயில் தரிசனம் கண்டோம்.





மீண்டும் அங்கே குருநாதர் அகத்திய பெருமான் தரிசனமாக மலை தரிசனம் பெற்றோம். பொதிகை மலை தொடர்ச்சி, குளிர் காற்று, சித்தர்கள் தரிசனம், குருநாதரின் அன்பு, தாமிரபரணி  என இன்னும் ஒவ்வொன்றும் நம்முள் உயிர்ப்பாக இருக்கின்றது.

TUT கோடகநல்லூர் யாத்திரை மிக மிக சிறப்பாக நடைபெற்றது.

1. புதிய அன்பர்கள் இம்முறை யாத்திரையில் இணைந்தார்கள்.

2. கோடகநல்லூர் ஸ்ரீ பெருமாள் ஆசி..முதல் முறை நாம் தரிசனம் 2019 ல் பெற்றோம்.

3. நம்பிமலை யாத்திரை அமைந்தது.

4. இரண்டு நாட்களில் 6 திருக்கோயில்கள் தரிசனம் 

5. அகத்தியர் அடியார் செல்லப்பா ஐயா அவர்களின் அறிமுகம் மற்றும் அவரின் சேவை பாரட்டுதலுக்குரியது 

6. 4 அன்பர்கள் குடும்பங்களாக யாத்திரையில் கலந்து கொண்டார்கள். பொதுவாக TUT குடும்பம். இம்முறை 4 4 அன்பர்கள் குடும்பமாக சேர்ந்தது. ( நாகராஜன் ஐயா, சிவசங்கர், ராதா அம்மா, நம்மையும் சேர்த்து)

7. திரு.சுவாமிநாதன் ஐயா அவர்களின் வழிகாட்டல் 

8. சிறப்பான மதிய உணவு 

9. கல்யாண தீர்த்தம் ஸ்ரீ அகத்தியர் கோயிலில் பௌர்ணமி தோறும் வழிபாடு செய்து சேவையாற்றி வரும்  திரு.பாலச்சந்திரன்  ஐயா அவர்களை நேரில் சந்தித்தது.

ஒன்றே ஒன்று உழவாரப்பணி செய்யும் வாய்ப்பு நாம் தவறவிட்டு விட்டோம். அடுத்த முறை உழவாரப்பணி செய்து மீண்டும், மீண்டும் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் அருள் பெற நாம் பிரார்த்தனை செய்கின்றோம்.

2021 ஆம் ஆண்டு தரிசனம் பற்றி தனிப்பதிவில் காண்போம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html


No comments:

Post a Comment