"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, October 21, 2021

வள்ளலாரை (சு)வாசிப்போம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளம் சார்பில் குருவருளால் மகாளய பட்ச அன்னசேவை மிக சிறப்பாக கூடுவாஞ்சேரியிலும், சின்னாளபட்டியிலும் நடைபெற்றது. நம் தளம் சார்பில் பொருளுதவி செய்கின்ற அனைவருக்கும் இங்கே நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் நவராத்திரி வழிபாடும், அன்னாபிஷேக வழிபாடும் குருவருளால் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. இவை அனைத்தையும் வெகு விரைவில் தனிப்பதிவுகளில் கூடுமானவரை தர குருவிடம் வேண்டுகின்றோம். அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் அந்த நாள் இந்த வருடம் கோடகநல்லூர் வழிபாடும் சிறப்பாக குருவருளால் நடைபெற்றது. அனைத்தும் உங்களின் உதவியாலே அன்றி நம்மால் இங்கு ஆவது ஒன்றும் இல்லை. இந்த அனைத்து வழிபாட்டிலும் உள்ள சிறப்பை கண்டு விட்டு, வள்ளலாரை வாசிக்க உள்ளோம்.


மகாளய பட்ச சேவை:-

இந்த ஆண்டில் கூடுவாஞ்சேரி, சின்னாளப்பட்டி என இரு இடங்களில் மகாளய பட்ச அன்னசேவை நடைபெற்றது.






மகாளயபட்ச சேவை விநாயகர் வழிபாட்டுடன், துளசி மாடத்தில் தீபமேற்றி, கோமாதாக்களுக்கு வாழைப்பழம் கொடுத்து ஆரம்பித்துள்ளோம்.

மகாளய பட்சம் - 1ம் நாள்

15 பேருக்கு 5 பார்சல் பொங்கல், மீதம் 10 பார்சலில் 4 இட்லி என  கொடுத்தோம்

மகாளய பட்சம் - 2ம் நாள்

விநாயகர் வழிபாட்டுடன் துளசி மாடத்தில் விளக்கேற்றி, 13 அன்பர்களுக்கு சாம்பார் சாதம் இன்று காலை வழங்கப்பட்டது.

இன்று இனிப்பு பூந்தி, பாதுஷா சேர்த்து வழங்கினோம்.

மகாளய பட்சம் - 3ம் நாள்

விநாயகர் வழிபாட்டுடன் துளசி மாடத்தில் விளக்கேற்றி, கோமாத்தாக்களுக்கு வாழைப்பழம் கொடுத்து துவக்கியுள்ளோம். 

12 அன்பர்களுக்கு இரு தோசை, முள்ளங்கி சாம்பார் என கொடுத்தோம். 3 துப்புரவு தொழிலாளர்களுக்கு சிறு தொகை வழங்கப்பட்டது

மகாளய பட்சம் - 4 ம் நாள்

11 அன்பர்களுக்கு பிரிஞ்சி சாதம், வெங்காய தயிர்  பச்சடி என கொடுத்தோம். பூக்கடை அன்பருக்கு அரிசி, இனிப்பு என கொடுத்தோம்.

மகாளய பட்சம் - 5ம் நாள்

விநாயகர் வழிபாட்டுடன் துளசி மாடத்தில் விளக்கேற்றி, கோமாத்தாக்களுக்கு வாழைப்பழம் , பைரவர் உணவு கொடுத்து துவக்கியுள்ளோம். 

12 அன்பர்களுக்கு தயிர் சாதம், இனிப்பு (மோதி லட்டு, ரவா லட்டு) வழங்கப்பட்டது. 

மகாளய பட்சம் - 6 ம் நாள்

இன்றைய தீப வழிபாட்டில் அருட்பெருஞ்ஜோதி் அகவல் பாராயணம் செய்தோம்
10 அன்பர்களுக்கு எலுமிச்சை  சாதம், இனிப்பு (நாட்டுச் சர்க்கரை) , உருளைக்கிழங்கு கூட்டு சேர்த்து வழங்கப்பட்டது. 

இன்று நம் தளம் சார்பில் சின்னாளபட்டி வள்ளலார் சபைக்கு 1 சிப்பம் அரிசி குருவருளால் வழங்கப்பட்டது. நன்றி

மகாளய பட்சம் - 7 ம் நாள்

இன்று 10 அன்பர்களுக்கு தயிர் சாதம், இனிப்பு பூந்தி வழங்கப்பட்டது.  மேலும் இன்று ஆடை தானமாக இரு அன்பர்களுக்கு கைலியும், துண்டும் வழங்கப்பட்டது. 

மகாளய பட்சம் - 8 ம் நாள்

இன்று 12 அன்பர்களுக்கு தக்காளி  சாதம், நெய் மைசூர்பா  வழங்கப்பட்டது.  மேலும் இன்று கம்பங்கூழ் தானம் கொடுக்கும்படி நம் தளம் சார்பில் சிறு தொகை கொடுத்தோம். அன்பர்கள் கூழ் வாங்கி குடித்தது கண்டு நம் மனம் குளிர்ந்தது

மகாளய பட்சம் - 9 ம் நாள்

இன்று 11 அன்பர்களுக்கு காய்கறி   சாதம்(வெஜிடபிள் சாதம்) , இனிப்பும் வழங்கப்பட்டது. கோமாதாவிற்கு வாழைப்பழங்களும் கொடுத்தோம். 

சின்னாளபட்டி வள்ளலார் சபையில் அறத்தொண்டு செய்பவர்களுக்கு நம் தளம் சார்பில் இன்று மரியாதை செய்து, அவர்களிடம் ஆசி பெற்றோம்

மகாளய பட்சம் - 10 ம் நாள்

இன்று 11 அன்பர்களுக்கு பருப்பு சாதம், ஊறுகாய், இனிப்பு் வழங்கப்பட்டது.

மகாளய பட்சம் - 11 ம் நாள்

இன்று 10 அன்பர்களுக்கு ( 5 இட்லி, 5 பொங்கல்) இனிப்பு வழங்கப்பட்டது. இன்று கடையில் வாங்கி உணவு கொடுக்கப்பட்டது.

மகாளய பட்சம் - 12 ம் நாள்

இன்று 11 அன்பர்களுக்கு தயிர் சாதம், உறுகாய், இனிப்பு (பேரீச்சம் பழம்) என குருவருளால் வழங்கியுள்ளோம். 

மகாளய பட்சம் - 13 ம் நாள்

இன்று 12 அன்பர்களுக்கு சாம்பார்  சாதம், உறுகாய், இனிப்பு ( அல்வா லட்டு ) என குருவருளால் வழங்கியுள்ளோம். 

மகாளய பட்சம் - 14 ம் நாள்

இன்று 10 அன்பர்களுக்கு 5 பொங்கல், 5 இட்லி பொட்டலம் ( 5இட்லி) என குருவருளால் வழங்கியுள்ளோம். 

பழநி அடிவாரத்தில் பிரதோஷ பூஜை கண்டு, புலிப்பாணி ஆஸ்ரமத்தில் 1 சிப்பம் அரிசி நம் தளம் சார்பில் குருவருளால் வழங்கினோம்

மாதந்தோறும் நாம் ஸ்ரீ எத்திராஜ் சுவாமிகள் பேரன் திரு. துரைராஜ் அவர்களிடம் முதியோர் இல்ல அன்னசேவைக்கு சிறு தொகை நம் தளம் சார்பில் கொடுத்து வருகின்றோம். இதில் ஒரு நாள் முழுதும் சுமார் 10 அன்பர்களுக்கு காலை, மதியம், இரவு என  உணவு கொடுக்கப்படும். இதில் நாம் எந்த தேதியும் நிர்ணயம் செய்வதில்லை. ஆனால் இம்மாதம் குருவருளால் அக்டோபர் 3 & 4 என இரண்டு நாட்கள் அன்னசேவை செய்துள்ளார்கள். இது இயல்பாக அமைந்த ஒன்று. இதில் மகாளய பட்ச அன்னசேவையும் இணைந்து விட்டது. இது போன்று ஒவ்வொரு நிகழ்விலும் குருவின் அருளை நாம் கண்கூடாக கண்டு வருகின்றோம்.

நன்றி திரு. துரைராஜ் ஐயா !

மகாளய பட்சம் - 15 ம் நாள்

இன்று 10 அன்பர்களுக்கு  வெஜ் பிரியாணி, வெங்காய பச்சடி கொடுத்தோம். 

3 பொங்கல் 
4 இட்லி பொட்டலம் ( 5இட்லி) 
7 பூரி செட் 

என குருவருளால் வழங்கியுள்ளோம். இன்று வள்ளலார் வருகையுற்ற தினத்தை முன்னிட்டு 24 அன்பர்களுக்கு பசியாற்றுவித்துள்ளோம்.

மகாளயபட்ச அமாவாசை அன்னசேவைக்கு கீழ்க்கண்ட அன்பர்களிடம் நம் தளம் சார்பில் குருவருளால் சிறு தொகை வழங்கியுள்ளோம்.  

1. ஆனந்த் - பொள்ளாச்சி

2. ராமானந்த சுவாமிகள் - ராமேஸ்வரம்

3. தயவு ஆஸ்ரமம் - திருஅண்ணாமலை

4. சிவராமன் - திருஅண்ணாமலை கிரிவலப் பாதை - சாதுக்களுக்கு வடை, பாயாசத்துடன் முழு உணவாக!

5.  ஆதி சிவன் டிரஸ்ட் - திருவள்ளூர் - பழங்குடி கிராம மக்கள்

6. பாண்டிச்சேரி PST முதியோர் இல்லம் - மதிய உணவு

7. சிவகஜபதி - திருஒற்றியூர்

இந்த சிறப்பு அன்னதானத் தொண்டில் இணைந்த அனைவருக்கும் நம் தளம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  

மகாளய பட்சம் - 16 ம் நாள்

இன்று 12 அன்பர்களுக்கு  தக்காளி சாதம், இனிப்பு (கேசரி) என குருவருளால் வழங்கியுள்ளோம்.


ஸ்ரீ மாமர சித்திவிநாயகர் ஆலயத்தில் லோக க்ஷேமத்துக்காகவும்  முன்னோர்களுக்கும் அனைத்து ஆத்மா களுக்காகவும் தீபமேற்றி வழிபட்டோம். கூடுவாஞ்சேரியில் இந்த மகாளயபட்ச சேவையில் தினமும் சுமார் 10 அன்பர்களுக்கும் உணவும், குடை தானமும், கோமாதாக்களுக்கு உணவும் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் குருவருளால் மட்டுமே சாத்தியம் ஆகும்.

புரட்டாசி ஆயில்யம் வழிபாடு:-

இன்றைய TUT குழு வழிபாடு 3 கோவில்களில் குருவருளால் சிறப்பாக நடைபெற்றது
1. கூடுவாஞ்சேரி ஶ்ரீ அகத்தியர் வழிபாடு. நன்றி திரு.சத்யராஜ்  
2. தென்காசி இளஞ்சி முருகர் ஶ்ரீ அகத்தியர் பாதம் வழிபாடு . நன்றி திரு.மாதவன்  
3. மதுரை பசுமலை ஶ்ரீ அகத்தியர் வழிபாடு

அனைத்து வழிபாட்டிலும் லோக ஷேமத்திற்காக பிரார்த்தனை செய்தோம்

புரட்டாசி ஆயில்யம் நமக்கு பல அருள்நிலைகளை அள்ளித் தந்துள்ளது. 


1. தேடல் உள்ள தேனீக்கள் குழு சார்பில் புரட்டாசி 5 சனிக்கிழமை இனிப்பு தருதல்

2. மூன்றாம் சனிக்கிழமை நம் தளம் சார்பில் குருவருளால் அன்னதானம்

3. அன்றைய தினம் புரட்டாசி ஆயில்ய வழிபாடு. பெருமாள் ஆசியாக உணர்த்தப்பட்டோம்

4. குருநாதர் அருளிய வாக்கை மேற்கொண்டோம். ஆலயத்தில் 30 நிமிட தியானம்

5. ஆலய தல விருட்சம் 108 முறை சுற்றுனோம்

6. ஆயில்ய வழிபாடாக ஶ்ரீ அகத்தியர் வழிபாடு, சனிக்கிழமை பெருமாள் வழிபாடு. துவாதசி அன்னதானமாக அமைந்தது.

7. மிக நீண்ட மாதங்கள் கழித்து, ஆயில்ய வழிபாட்டில் , சித்தர்கள் போற்றி படித்து வழிபாடு

8. மதுரை பரமசிவன் ஐயாவுடன் சந்திப்பு, அவரிடமிருந்து நம் தளத்திற்கு பொருளுதவி பெற்றோம். 

9. இந்தக் கோயில் திருப்பணி முதல் தொலைபேசியில் அகத்தியம் ஊட்டும் வடிவு அம்மாவை முதன்முதலாக அன்று நேரில் சந்தித்தோம்

10. நம் தளம் சிறப்பான தரிசனம், பூசை, அன்னதானம், தீப எண்ணெய் தானம், ஆலய திருப்பணி அன்பர்கள் மரியாதை என அனைத்தும் குருவருளால் மிகச்சிறப்பாக அமைந்தது

இது போல் ஏராளமான சிறப்புகளை, ஆசிகளை நம் குழு அன்று பெற்றது. 


அடுத்து பதிவின் நீளம் கருதி நவராத்திரி வழிபாட்டில் நம் தளம் சார்பில் மூலிகை கஷாயம் வழங்கினோம்.குருநாதர் ஸ்ரீ அகஸ்தியரும், இன்னும் பல குருமார்களும் நம்மை வழிநடத்துவது கண்டு பணிகின்றோம்.தற்போது கூடுவாஞ்சேரி குருக்கள் நம்மிடம் பேசினார். நோய் எதிர்ப்பு சக்தி கசாயதிற்கு நல்ல வரவேற்பு உள்ளதாக கூறினார். இதன் மூலம் நாம் மருத்துவ சேவை ஆற்ற குருவிடம் வேண்டுகின்றோம்.



என்னப்பா? தலைப்பிற்கும் பதிவிற்கும் சம்பந்தம் இல்லையே என்று நீங்கள் நினைப்பது நமக்கு தெரிகின்றது. நன்கு உற்று கவனித்துப் பாருங்கள். இது வரை பேசிய அனைத்தும் தானத்தில் அடங்கும். அன்னதானம், அரிசி தானம்,குடை தானம் என பல்வேறு நிலைகளின் நாம் இம்முறை சேவை செய்திருக்கின்றோம் என்றால் இது  ஸ்ரீ முருகப்பெருமான், ஸ்ரீ அகத்தியர், வள்ளலார் போன்ற மகான்களின் ஆசியால் தான் நடைபெற்று வருகின்றது.

அடுத்து நமக்கு கிடைத்த செய்தியை , வள்ளலார் அமைப்பில் இருந்து அப்படியே பகிர்கின்றோம்.

தேடல் உள்ள தேனீக்களாய் - TUT 

ஆன்மிக அமைப்பு ஆன்மிக இளைஞர்களால் வழிநடத்தப்படுகிறது.

சென்னையை சுற்றி பல இடங்களில் செயல்பட்டு வந்த அமைப்பின் மையமான ராகேஷ் ஐயா தற்போது திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் மையம் கொண்டுள்ளார். 

மிகவும் சத்திய உணர்வுடன் அமைப்பு நடத்துபவர்களின் சிறு தொகையையும் அந்த சிவனே நமக்கு அளித்ததாக ஏற்றுக் கொள்கிறோம். 

எப்பேர்ப்பட்ட கருத்து நமக்கு கிடைத்துள்ளது.இது வள்ளல் பெருமான் நமக்கு அளித்த செய்தியாக கருதுகின்றோம். இனி வள்ளலாரை நேசித்து, வாசித்து, சுவாசிக்க இருக்கின்றோம். காட்சிப் பதிவுகளாக மட்டுமே இனி தொடர உள்ளோம். மீண்டும் மீண்டும் படித்து கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.










அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

- மீண்டும் அடுத்த பதிவில் பேசுவோம்.

மீள்பதிவாக:-

 திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தின சிறப்பு பதிவு - 2 - https://tut-temples.blogspot.com/2021/10/2.html

திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தின சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_49.html

உலகம் தழைக்க வந்துஉதித்த உருவே வருக! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_4.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_5.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_25.html

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

No comments:

Post a Comment