அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
ஜீவ
நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில்
மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று
நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று
வருகின்றது. இந்த பெருந்தொற்று காலத்தில் நம் தளம் சார்பில் குருநாதரின்
அருளால் பல இடங்களில் சேவை செய்து வருகின்றோம். வழக்கமான இம்மாத
சேவைகளுடன் மகாளயபட்ச சேவையும் சேர்ந்து உள்ளது. அனைத்தும் குருவருளால்
சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
1. கூடுவாஞ்சேரி வழிபாடு
2. மாத அன்னசேவை - எத்திராஜ் சுவாமிகள் மூலம் முதியோர்களுக்கு
2. தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் மாத சேவை
3.தர்ம சிறகுகள் குழு மாத சேவை
4. திண்டுக்கல் செல்வம் - அரிசி மூடை - நித்ய அன்ன சேவை
5. மகாளயபட்ச நித்திய அன்னசேவை - இதில் இன்று வரை 11 ஆம் நாள் சேவையாக அன்னசேவையுடன் (இனிப்பு சேர்த்து), ஆடை தானம், குடை தானம், அரிசி தானம்,கூழ் தானம் என குருவருளால் பணிக்கப்பட்டு செய்து வருகின்றோம்.
இவை அனைத்தும் தங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம். இங்கு நாம் சில
சேவைகளை மட்டுமே சொல்லி இருக்கின்றோம். சிவத் தொண்டுகள்
புரிவதற்கு நன்கொடை கொடுத்து உதவும் நல் உள்ளங்களின் கர்ம வினை
முடிச்சுகளை நிச்சயம் அவிழ்ப்பார் ஈசன். கருணை உள்ளதோடு நிதி உதவி
அளித்துவரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT
குழுவின் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்.
அடுத்து, ஜீவ நாடி அற்புதங்கள் தொடரில் மதுரை - பசுமலை ஸ்ரீ அகத்தியர் கோயிலில் நம் குருநாதர் அருளிய வாக்கினை சில துளிகளாக இங்கே தருகின்றோம். மதுரையில்
திருப்பரங்குன்றத்துக்கு அருகில் பசுமலை என்கிற இடத்தில் உள்ள "சக்தி
மாரியம்மன் கோவிலில்" நம் குருநாதர் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்
பெருமானுக்கு ஆலயம் அமைத்து கும்பாபிஷேகம் 07/02/2020 அன்று காலை 9
மணிமுதல் 10.30 மணிக்குள் சுபமுகூர்த்தத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
விரைவில் தனிப்பதிவில் இந்த ஆலய தரிசனப் பதிவை தருகின்றோம். இனி குருநாதர் அருளிய ஞானத்தை இங்கே அறிய உள்ளோம்.
( மதுரை பசுமலையில் அமைந்துள்ள அகத்திய மஹரிஷி ஆலயத்தில் வாசிக்கப்பட்ட அகத்திய மஹரிஷி நாடி வாக்கு)
நல்முறைகளாக வினையை தீர்த்துக்கொள்ளலாம் என்பேன்.கந்தனிடத்தில் இங்கு வந்து கந்தர் அனுபூதியும் , கந்த சஷ்டி கவசத்தையும் ஓதி வந்தால் அதி சிறப்பை ( பலன்களை) பெறலாம் என்பேன்.
மீனாட்சி தாயே இங்குவருவாள் என்பேன்.
கன்னித்திங்களில் 4 சனிக்கிழமை ( புரட்டாசி மாதத்தில்) அண்ணதானம் செய்ய மிகு சிறப்பு என்பேன்.நிச்சயமாய் பெருமாள் இங்கு வந்து ஆசி தந்து செல்வான் என்பேன்.நல்முறைகளாக (அன்னதானம் ) நடக்க அவன்தனும் உண்ணிச்செல்வான் என்பேன்
( நல்ல முறையில் அண்ணதானம் நடக்க பெருமாள் அங்கு வந்து கலந்து உணவு உண்டு செல்வார் என குருநாதர் அகத்திய மஹரிஷி வாக்கு)
( கடந்த ) ஆடி கிருத்திகை அன்று இங்கு ( பசுமலை சக்தி மாரியம்மன் ஆலயம்) முருகப்பெருமான் வந்துதான் சென்றான் என்பேன்.
அனைத்து தெய்வங்களும் இந்து வந்துதான் செல்கின்றனர் என்பேன்.
யான் இங்கு இருப்பதால் நாள் ( பார்க்க ) தேவை இல்லை .
நிலையானது இறைவன் மட்டுமே.மற்றவை எல்லாம் நிலையற்றது.ஆனால் முட்டாள் மனிதன் நிலையற்றதையே தேடிக்கொண்டு இருக்கின்றான்
பிறருக்காக வாழ வேண்டும் என்ற கொள்கையை பிடித்தால், உந்தனுக்காக இறைவன் வாழ்வான்






அகத்திய மஹரிஷி பொது நாடி வாக்கு:
வாசிக்கப்பட்ட இறை தலம் :- மதுரை பசுமலையில் சக்தி மாரியம்மன் தளத்தில் அமைந்துள்ள அன்னை லோபாமுத்திரை உடன் உறை அகத்திய மஹரிஷி ஆலயம்
நாடி அருளாளர்:- திரு.ஜானகிராமன் ஐயா அவர்கள்.
6-September-2021, திங்கள் கிழமை
குருநாதர் நாடி வாக்கு ஆரம்பம்:-
ஆதி ஈசன் பொற்ப்பாதத்தை தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்.
நலன்களே என் அருள்களால் நலமே மிஞ்சும் என்பேன். மிஞ்சும் என்பேன் யான் வாரத்திற்க்கு ஒரு முறை இங்கு தங்கித் தங்கி செல்கின்றேன்.பின் அவ்நாளும் ( அந்த நாளை ) பின் நல்முறைகளாக உரைக்கின்றேன். பின் குரு வாரம் என்கின்றார்களே அவ்வாரத்தில் ( ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் ) யான் தங்கித்தங்கி சென்றிருக்கையில் பின் அப்பொழுது கூட நல்முறைகளாக வந்தார்கள் பலர். பல என்பேன் அதனால் பல பல பேர்களுக்கும் ஆசிகள் தந்து கொண்டேதான் இருக்கின்றேன். மேன்மைகள் பெறும்.
ஆனாலும் சில கட்டங்கள் வந்து வாட்டுவதறக்கும் எவ்வாறு எனபதையும் புரியுதல் நிலை ஏற்றவாறு அன்றொரு தினத்தில் ( வியாழன் ) நல்முறைகளாக இங்கு அமர்ந்து வந்து துவில் வந்து சென்றுவிட்டால் ஆனாலும் சென்றுவிட்டு நல்முறையாய் பின் ஓர் மாதத்திற்க்கு (30 நாட்கள்) இயலாதவருக்கு அண்ணம் அளித்து வந்தால் என்னுடைய அருள் ஆசிகள் பலம்.அனைத்தும் (கெட்ட கர்மா) விலகிப்போகும். ஆனாலும் இவை அன்றி இப்படியே செய்ய பின் மதுரை நல்முறைகளாக வாழும் மீனாட்சி தாயும் பின் அதன்உள்ளே ( மதுரை மீனாட்சி ஆலயத்தின் உள்ளே) ஓர் மாதம் அங்கும் தங்கி இருக்க பின் நல் முறைகளாகவே திருப்பரங்குன்றம் நல்முறைகளாகவே அங்கும் ஓர் மண்டலம் (48 நாள்) தரிசிக்க பின் பழமுதிர்ச்சோலையும் (48 நாள்) தரிசிக்க , இவை ( கட்டங்கள்/கர்மா ) அனைத்தும் ஒவ்வொன்றும் நீங்கி நல் முறைகளாக நினைத்ததை நிச்சயமாய் நடை பெறும் என்பேன். யான் சொல்வதை சரிமுறையாக கேட்க்க ஒரு துன்பம் இல்லை என்பேன். துன்பமில்லை என்பேன் இவ்வாலயத்தின் சிறப்பு கூட இது.
நல்முறைகளாகவே திருமூலனும் நல்முறைகளாகவே அருணகிரியும் வந்து வந்து செல்கின்றார் என்பேன். ( இவ்வாலயத்தில் சித்தர் திருமூலர் , அருணகிரிநாதர் இருவருக்கும் நுழைவு மேல் தளத்தில் உருவசிலை இறை அருளால் அமையப்பெற்றது.இங்கு வருபவர்கள் அவசியம் அவர்களை வணங்கி ஆசி பெறுங்கள்). என்பேன் எதனால் என்பதைவிட யான் இருக்கும் இடத்தில் அனைத்து சித்தர்களும் வருவார்கள் என்பது மெய். அதனால் யான் சொன்னேன்
பின் நல் முறைகளாக அன்போடு ஏற்படுத்தியது இத்தலம். அவ்வாறு ஏற்படுத்தினால் நிச்சயமாய் அன்போடு நல்முறைகளாகவே எவை வேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டே என்னை வணங்கினால் போதும். யான் கொடுப்பேன் அனைத்தும். இதனையன்றி பின் அதைவேண்டும் இதைவேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தால் நிச்சயம் அதனை யான் ஏற்க்க மாட்டேன் இத்தலத்தில். அதனால் தான் அன்போடு வாருங்கள் ஏனென்றால் என்னை அன்போடே உருவாக்கியவர்கள் நல் முறைகளாக என் பகத்தர்கள். அதனால் அன்போடுதான் வணங்கவேண்டும்.
ஒழுக்கம் நல் முறைகளாக இருந்துவிட்டால் அவனைத்தன் தேடி அனைத்தும் வந்துவிடும். ஒழுக்கம் இல்லை என்றால் அப்பனே எது வந்தாலும் நிறக்காது என்பேன். அப்பனே இதனால்தான் எவ்வாறு என்பதைக்கூட வள்ளுவன் சிறப்பாக கூறி இருக்கின்றான். அப்பனே ஒழுக்கம் நல்முறைகளாக இருந்து விட்டால் அவனிடம் நற்ப்பண்புகள் பெருகும். பெருகும் அவனிடத்தில் ஆசைகள் இருக்காது என்பேன். இதனால் அன்புடன் இறைவனை வணங்குவான். அனைத்தும் இறைவன் கொடுப்பான் என்பேன்.
அப்பனே நலமாக நலமாக எவை வேண்டுமோ அதை என்னிடமே கேள். யான் யாராவது மூலமாக நல்முறைகளாக பெற்றுத்தருகின்றேன் அப்பனே. என்னிடத்தில் இருக்கும் போது என்னையே கேள் நீ. அப்பனே நல்முறைகளாக வயதும் கடந்து விட்டது. அப்பனே இன்னும் என்னென்ன தேவை கூறு உந்தனுக்கு.
( இங்கு நாடி அருளாளர் எவை வேண்டும் என்று அந்த வாக்கு கேட்பவரிடம கேட்க்க அதற்க்கு அவர் எல்லோரும் நல்லா இருக்கனும் என்று கேட்க்க உடனே பின்வருமாறு உரைத்தார் மகத்தான அகத்திய மஹரிஷி)
அப்பனே இவை என்றுகூற இதைத்தான் கேட்க வேண்டுமே தவிர தன்பிள்ளைகள் , தன் இல்லங்கள், தன் சொந்த பந்தங்கள் இவை எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம் பின் கேட்க்க்கூடாது என்பேன். அவ்வாறு கேட்டாலும் இறைவன் செய்ய மாட்டான். அப்பனே இறைவனே நீ என்று நீ என்று கூட இறைவனே அனைத்தும் உந்தனுக்கே தெரியும் என்று பின் நல்முறைகளாக கேட்டு விட்டால் அனைத்தும் தருவான். ஆனாலும் அறியாத முட்டாள்கள் எதை எதையோ கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.












குருநாதர் அருளிய வாக்குகளை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். இந்த தொகுப்பில் அற்புதம் இல்லையே என்று தேடுகின்றீர்களா? இதோ. குருநாதர் வாக்கிற்கிணங்க, நாளைய புரட்டாசி அன்னசேவை நம் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழு சார்பில் நடைபெற உள்ளது. இது எப்படி நமக்கு சாத்தியமாகின்றது? குருநாதர் அருளாலே தான். மேலும் ஒரு அற்புதத்தை இங்கே கூறுகின்றோம். நாளை அன்னசேவை செய்யலாமா என்று யோசித்து கொண்டிருந்த வேளையில்,
( 6.9.2021 மதுரை பசுமலையில் அமைந்துள்ள அகத்திய மஹரிஷி ஆலயத்தில் வாசிக்கப்பட்ட அகத்திய மஹரிஷி நாடி வாக்கு)
யான் இங்கு இருப்பதால் நாள் ( பார்க்க ) தேவை இல்லை .
- அகத்திய மஹரிஷி
( இங்கு குருநாதர் பரிபூரணமாக நிறைந்து உள்ளதால், இங்கு பூசை, அண்ணதானம் செய்ய எந்த நாள், நட்சத்திரம், ஜாதகம் எதுவும் பார்க தேவை இல்லை. இங்கு 365 நாளும் சுப நாள் இங்கு. குரு இருக்கும் இடமே கயிலாயம், மகாமேரு, வைகுண்டம், பிரம்ம லோகம். இங்கு வருபவருக்கு விதியே விலகித்தான் நிற்க்கும். கலி புருஷன் உள்பட. )
அனைத்து அடியவர்களுக்கும் பகிர வேண்டுகின்றோம்.
அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக
இந்த வாக்கு நமக்காக சொன்னது போன்று இருக்கின்றது அல்லவா? நமக்கு அன்னசேவை சொல்ல வாய்ப்பு ஏற்படுத்தி, நாள் பார்க்கும் எண்ணத்தின் மூலம் குருநாதர் வாக்கு உரைக்கின்றார் என்றால் நம்மைப் பொறுத்தவரை இது ஜீவ நாடி அற்புதம் தான். நாளைய புரட்டாசி ஆயில்ய வழிபாடும் நம் தளம் சார்பில் நடைபெற உள்ளது. இது மட்டுமின்றி வேறொரு உத்தரவும் நம் தளத்திற்கு கிடைத்துள்ளது.
பெருமாளும் அடியேனும் தாராளமாக செய்யுங்கள்.
மீண்டும் ஒரு முறை பசுமலை ஸ்ரீ அகத்தியர் தரிசனம் பெறலாம்
அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் சந்திப்போம்
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment