அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழு கடந்த 3 ஆண்டுகளாக குருவருளால் "உலக பக்தர்கள் தினம்" அமைப்போடு சேர்ந்து சேவையாற்றி வருவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். இதனை நாம் இங்கே குறிப்பிட்டு சொல்ல ஒரு காரணம் இருக்கின்றது. புரட்டாசி ஆயில்ய வழிபாடு குருவருளால் மிக மிக சிறப்பாக மூன்று தலங்களில் நடைபெற்றது. இது நாம் திட்டமிட்டு செய்யவில்லை. குருநாதர் அருளால் இந்த புரட்டாசி ஆயில்ய வழிபாடு நடைபெற்றது. ஒவ்வொன்றையும் நினைத்து பார்க்கும் போது குருவின் அருளிற்கு எல்லையேது? என்பது தெளிவாக புரிகின்றது. இதனை விரைவில் தனிப்பதிவில் சிந்தித்து பேசுவோம்.
இன்று நாம் நெஞ்சார நினைப்பவருக்கு நிழல் போன்று இருந்து வழிகாட்டி வரும் பொதிகை வேந்தனாம், சித்தருக்கெல்லாம் தலைமை சித்தராம் ஸ்ரீ அகத்திய பெருமான் - பொதிகை மலை தரிசனம் காண இருக்கின்றோம். பொதிகை மலை தரிசனம் பெறுவதற்கு முன்னர் நாம் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் பற்றி சில துளிகளை இங்கே முதலில் காண உள்ளோம்.
நெஞ்சார நினைப்பவர்களுக்கு நிழல் போன்று தொடர்ந்து வருபவர் நம் அகத்தியர். குலம் தழைக்க உதவுபவர். இதற்கு தேவையான அருட்செல்வத்தை அள்ளித்தருபவர் இவர்.
நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!
நெஞ்சார மனதில் நினைப்பவருக்கு நிழல் போன்று இருப்பவர்.அதாவது நிழல் என்றால் பகலில் மட்டும் தெரியும்.இங்கே இரவு பகல் பாராது, நம்முடனே இருந்து வழி காட்டும் அருட்குரு அகத்தியர்.நம் குலம் தழைக்க, செல்வம் மட்டும் தராமல், அதனோடு சேர்த்து மிக மிக முக்கியமான செல்வமான ஆரோக்கியமும் தருகின்ற அக குரு ஆவார்.இதனை நாம் தற்போது கண்கூடாக உணர்ந்து அனுபவித்து வருகின்றோம்.அகத்தியரின் நாமம் சொல்ல,சொல்ல நம் அகம் ஒளி பெறுகின்றது.அகம் ஒளிர,ஒளிர புற செயல்கள் மிளிரும் என்பதே ஆன்றோர் வாக்கு. அகத்தில் உள்ள ஈசனை உயிர்ப்பிக்க செய்தால் அகத்தியம் மிளிரும்.அகத்தியம் மிளிர அகத்தியர் அருள் காட்டுவார்.
இது ஒரு சில துளியே. நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் பற்றி பேச வேண்டும் என்றால் பேசிக்கொண்டே போகலாம். ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவர், அயனம் இரண்டும் அறிந்தவர், இன்மை மறுமை கடந்தவர், ஈருலக சஞ்சாரியாக இருப்பவர், இரு கலையின் சூட்சம அறிந்தவர், சௌக்கியம் இரண்டும் அறிந்தவர், சுடர் இரண்டும் அறிந்தவர், இரு ஞானம் உணர்ந்தவர், புடம் இரண்டும் அறிந்தவர், வினை இரண்டும் அழிப்பவர், மூவரசரின் குருவானவர்,மூவிசையும் அறிந்த வித்தகர், மூவிலக்கணம் அறிந்தவர், இனமோனை மூன்றும் அறிந்தவர், ஈஸ்வர குணம் மூன்றும் அறிந்தவர், உயிர்த்தீ மூன்றும் அறிந்தவர், மூவுலகம் சென்றவர்,திருகடுகம் உரைத்தவர், குணம் மூன்றும் கடந்தவர், முச்சக்தியை அறிந்தவர், முத்தமிழ் வித்தகர், முத்தீயை உணர்ந்தவர், முத்தேகமும் கண்டவர், முப்பலையைத் தந்தவர், முப்பிணித் தீர்ப்பவர், பேதம் மூன்றையும் அகற்றியவர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி நாம் நோக்கும்போது உலகிலேயே ஒப்பற்ற மகானை நாம் குருவாக பெற்றுள்ளோம் என்பது கண்கூடு.
அடுத்து மலை தரிசனம், மலை யாத்திரை பற்றி காண உள்ளோம். பொதுவாகவே மலை ஏற்றம் என்பது மன ஏற்றத்திற்கான ஒரு வழிமுறை ஆகும்.
சித்தர் பெருமக்கள் மலைகளில் தான் இன்றும் அருள்பாலித்து வருகின்றார்கள். தமிழகம் முழுதும் பல்வேறு மலைகள் உள்ளன. இன்று வரை பல மலையாத்திரைகள் தரிசனமும் நடைபெற்று வருகின்றது. உதாரணத்திற்கு சில மலை யாத்திரைகளை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.
1. பர்வத மலை
2. ஓதி மலை
3. சதுரகிரி
4. அத்திரி மலை
5 .வெள்ளியங்கிரி
6. வள்ளிமலை
7. திருஅண்ணாமலை
8. நம்பி மலை
9. சபரி மலை
10. பொதிகை மலை
11. தேனி சண்முகநாதன் மலை
12. தேவதானப்பட்டி மிருகண்ட மகரிஷி மலை
13. கோவில்பட்டி அருகே குருமலை
14. சதாசிவ கோனா மலை
15.தோரண மலை
16. மருத மலை
17. மங்கலதேவி கண்ணகி கோவில்
18.பழநி மலை
ஒரு முறை மலை யாத்திரை சென்று பாருங்கள். உங்கள் மனநிலை மாறும். மனம் புத்துணர்ச்சி பெறுவதுடன் உடலும் உறுதி பெறும். அப்படி என்ன தான் இருக்கின்றது மலை யாத்திரையில் என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது. இயற்கையான காற்று, குளிர்ந்த, மாசற்ற நீர், மன மகிழ்ச்சி, உடலுறுதி என அனைத்தும் ஒருங்கே கிடைப்பதால் இது நம்மை ஆன்மிகத்தில் அடுத்த நிலை நோக்கி நகர வைக்கின்றது. ஸ்ரீ அகத்தியர் பெருமான் வழிபாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பொதிகை மலை தரிசனம் என்பது மிக மிக இன்றியமையாத ஒன்று. இனி நாம் பொதிகை மலை தரிசனம் பெற இருக்கின்றோம்.
தலையாய சித்தர் அகத்திய பெருமானின் தனிப் பெருங்கருணையினால் தேடல் உள்ள தேனீக்களாய் -TUT குழுவின் பொதிகை மலை பயண அனுபவமும்; அகத்திய பெருமானின் தரிசன அனுபவமும் 2021 ஆம் ஆண்டில் ஏப்ரல் 2.3.4 அன்று அமைந்தது. பொதிகை மலை யாத்திரைக்கு நாம் இம்முறை பல முன்னேற்பாடுகள் செய்ய குருவருளால் பணிக்கப்பட்டோம். முதலில் அன்பர்கள் அனைவரும் ஒரு வார காலம் விரதம் இருந்தோம்.
அடுத்து நாம் சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் சென்று வழிபாடு செய்து, அங்கிருந்து குருநாதருக்கு அலங்கரிக்க வஸ்திரம் பெற்றுக் கொண்டோம்.பின்னர் சின்னாளப்பட்டி ஸ்ரீ ஆஞ்சநேயர் தரிசனம் பெற்றோம். அடுத்து சின்னாளப்பட்டி ஸ்ரீ சதுர்முக முருகப்பெருமான் தரிசனம் பெற்றுக்கொண்டோம். மீண்டும் சின்னாளப்பட்டி எல்லை கருப்பசாமி தரிசனம் பெற்று யாத்திரை சிறப்பாக அமையவும், லோக ஷேமத்திற்காகமும் வேண்டிக்கொண்டோம்.
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
No comments:
Post a Comment