"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, October 29, 2021

பாக்கம் பாளையம், அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் தற்போது பல ஆலயங்களின் திருப்பணி குறித்து உரைத்து வருகின்றார். இவை அனைத்தும் பழமை வாய்ந்த ஆலயங்கள். இந்த ஆலயங்களின் திருப்பணிக்காக நம் தளம் சார்பில் சிறுதொகை குருவருளால் அளித்துள்ளோம். ஆலய திருப்பணியில் நாம் கொடுத்துள்ள தொகை கடலில் கரைத்த பெருங்காயம் போன்று தான் இருக்கும். எனவே இன்றைய பதிவின் மூலம் பாக்கம் பாளையம், அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலய திருப்பணிக்கு உதவி கோரி விண்ணப்பம் வைக்கின்றோம்.

சித்தன் அருள் அருளிய மூன்று கோயில்களின் திருப்பணிக்காக நம் தளம் சார்பில் சிறு தொகை குருவருளால் வழங்கியுள்ளோம்.

1. வணக்கம்பாடி அகிலாண்டேஸ்வரி சமேத ஆபத்சகாயேஸ்வரர்!

2. அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் திருக்கோயில். பாக்கம், வேலூர் 

3. ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

இந்த ஆலயங்களின் திருப்பணிக்கு அன்பர்கள் அனைவரும் பொருளுதவி செய்யும்படி வேண்டுகிறோம். 

பதிவின் உள்ளே செல்லும் முன்னர் அனைவரும் இந்த செய்தியை நன்கு உள்வாங்கிக் கொள்ள வேண்டுகின்றோம். ஆதி காலம் முதல் கோவில் என்றால் சிவாலயம் மட்டுமே குறிக்கப்படும். பராகிரம பாண்டியன் என்ற மாமன்னன் சொன்னது:பழுதுபட்ட புராதன சிவாலயங்களை புதுப்பிக்கும் பணியில் எப்படி ஒருவர் ஈடுபட்டாலும், அவர்களது திருவடிகளை இப்போதே வீழ்ந்து வணங்குகின்றேன் என்று


"ஆராரயினும் இந்த தென்காசி மேவு பொன்னாலயத்து
வாராததோர்  குற்றம் வந்தால் அப்போது அங்கு வந்ததனை
நேராகவே ஒழித்துப் புறப்பார்களை நீதியுடன்
பாரார் ஆரியப் பணிந்தேன் பிரகிரம பாண்டியனே"


சிவாலய பணிகளில் ஈடுபட்டால் நம தீவினைகள் முற்றிலுமாய் நீங்கப்பெறும்
கூடவே நல்வினைகள் சேரும் ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடல், உடலுழைப்பு  தரல், இடம் அல்லது மனை தரல்,குளம் தூர்வாரல்,கல்,மண் அளித்தல் ஆகிய எல்லாம் மிகமிக சிவபுண்ணிய செயல்களாம்.

நம்பழம் பாடல் பகரும் இப்படி:

"புல்லினால் கோடியாண்டு,புதுமண்ணால் பத்துகோடி
செல்லுமா ஞாலந்தன்னில்  செங்கல்லால் நூறு கோடி 
அல்லியங்கோதைமின்னே ஆலயம்  மடங்கள் தம்மை 
கல்லினால் புதுக்கினோர்கள் கயிலை விட்டு அகலாரன்றே" 

"சிவன் கோவிலுக்கு ஒரு செங்கல் வழங்குதல், அந்த செங்கல் எத்தனை நாட்கள் கோவிலில் இருக்குமோ அத்தனை நாட்கள் நீங்கள் கைலாயத்திலோ அல்லது வைகுண்டத்திலோ வாசம் செய்யும் புண்ணியம்"!

-காஞ்சி மஹா பெரியவர்




குருநாதர் அகத்தியர் பாக்கம் சிவன் கோயில் பற்றிய பொது வாக்கு.

வாக்குரைத்த இடம். பாக்கம் பாளையம். சிவன் கோயில், அணைகட்டு தாலுகா. வேலூர் மாவட்டம்.

உலகத்தின் முதல் சித்தனை பணிந்து வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்

அப்பனே நல்அருள்கள் இருக்க அனைத்தும் நிறைவேறும் என்பேன் அதி விரைவிலே.

அப்பனே சொல்லியவாறே நிச்சயம் நிறைவேறும் என்பேன் என்பேன் காகபுஜண்டர் முனியும் நல் முறைகள் ஆகவே தங்கி நிற்க அனைத்தும் நிறைவேறும் என்பேன் நிறைவேறும் என்பேன் பின் ஈசனே அனைத்தும் நல் முறையாக அவனே செய்து கொள்வான் என்பேன் இதனால்தான் பின் சொல்லிக்கொண்டே போகலாம் என்பேன். மனிதர்களை இனி ஈசன் நம்ப போவதுமில்லை என்பேன் ஏனென்றால் திருடர்களே அதிகம் என்பேன்

எவை என்று கூற அவன் ஸ்தலத்தை அவனே தேர்ந்தெடுத்து எதன் மூலம் பின் எவற்றின் மூலம் பின் நன்றாக மனிதர்களை தேர்ந்தெடுத்தால் அனைத்தும் நலம் ஆகும் என்று ஈசனுக்கே தெரியும்

அதனால் அவனே தேர்ந்தெடுத்துக் கொள்வான் என்பேன் நல் முறைகள் ஆகவே.

நல் முறைகள் ஆகவே பின்னாளில் யோக காலங்கள் என்றாலும் எதனையும் தீர ஆராய்ந்து ஈசனும் எவ்வாறு நின்று பார்க்கும் பொழுது ஒடுக்கத்தூர் சுவாமிகள்(சித்தர்) என்கின்றார்களே அவரிடம் நிலையானதாக அனைத்தையும் முடித்துவிட்டு வா என்று உத்தரவு விட்டுவிட்டான்.

இதனால் நிச்சயம் இப்பொழுதுகூட இங்கேய தான் அமர்ந்து கொண்டிருக்கின்றான் என்பேன்.

அதனால் தோல்விகள் இல்லை என்பேன் வெற்றிகளே பின் நினைத்த மாதிரியே உறுதி செய்யப்படும் பொழுது ஈசனே நல் முறையாய் மனதை வைத்து கும்பாபிஷேகம் என்கிறார்களே அதையும் குடமுழுக்கும் என்கின்றார்களே இதையும் மாறுபட்டு இருக்கின்றது இவ் விஷயத்திலும் இரண்டு இரண்டு இதனையும் கழித்தால் ஒன்றுமில்லை வாழ்க்கையில் இதிலும் அர்த்தம் உள்ளது போல் நின்றிருந்தால் ஈசன் நிச்சயம் வருவான் என்பேன் அதே முறையில் நல் முறைகளாக வைத்துக் கொள்க.

நல் முறைகள் ஆகவே அதன் முன்னே ஈசனும் பலமாக மனிதன் மனதில் நுழைந்து பின் பலமாக பலமாகவே அனைத்தும் நிறைவேற வைப்பான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே எதை எதை என்று கூற எதனையும் முன் படுத்தும் பொழுது பின் நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்பதையும் கூறும் பொழுது கூறி விளக்கும் அளவிற்கு பல கோடி சித்தர்கள் எவ்வாறு நின்ற போதும் கூட தெரிவிக்கும் அளவிற்கு கூட பல புண்ணியங்கள் பல புண்ணியங்கள் நின்ற அதனாலே எவ்வாறு முன் நின்று பார்க்கும் பொழுது ஒன்றுமில்லை அப்பா உலகில்.

வாழ்வே இவ்வாறு என்பதற்கு இணங்க முன்னொரு காலத்திலே இவன்(சிவன்) தன் நல் முறைகள் ஆகவே இங்கு இருக்க

பின் எவை எவை என்று கூற பின் மனிதர்கள் பொருளுக்கும் செல்வங்களுக்கும் ஆசைப்பட்டு ஆசைப்பட்டு இவ் ஈசனை மறைத்து வைத்து விட்டனர் என்பேன் அப்பனே அதனால் தான் அப்பனே இங்கு இருக்கும் நல் முறைகளாக அருள்பாலித்து வந்திருந்தான் ஈசன் ஆனாலும் சில சில மனிதர்கள் பொறுத்துக் கொள்ளவில்லை பின் நாங்கள் தான் வாழ்வோம் பின் சிலசில மனிதர்களை வாழ வைக்காமல் வாழ வைத்து விடக்கூடாது என்பதற்கு இணங்க சிவனை அடியோடு எவ்வாறு என்பதையும் கூட பெயர்த்து விட்டார்கள் பின்பு நீரினால் சிறிது அழிந்தது.

ஆனாலும் ஈசன் நின்றான் அதனையும் விட்டு வைக்க கூடாது என்று பின் மனிதர்கள் கம்பிகளால் இடித்து இங்கே புதைத்துவிட்டனர் இப்பொழுதும் கூட அந்தத் தழும்புகள் தெரிகின்றது என்பேன்.

ஆனாலும் இன்றைய அளவில் அக்கிரமங்கள் அநியாயங்கள் இவ்வட்டாரத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது உலகத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது உண்மை.

இதனால் ஈசன் அங்கங்கு எழுவான் யார் மூலம் எவர் மூலம் எதன் மூலம் தேர்ந்தெடுத்தால் நல்லது என்று நினைத்து தேர்ந்தெடுத்து விட்டான். இதனால் கவலைப்பட தேவையில்லை.

ஈசனே இத்தலத்தை மீண்டும் உருவாக்குவான் என்பதே மெய்.

நல் முறைகளாக மனிதர்கள் எத்தனை எத்தனையோ நினைத்து குழம்பிக் கொண்டு அவர்கள் அவ் மனிதர்கள் இன்னும் இங்கு வாழ்ந்து கொண்டுதான் வருகிறார்கள் எப்படி இது நடக்கும் என்று எண்ணியபடியே இருக்கின்றார்கள்.

ஆனாலும் அவர்களுக்கு உண்மையான பொருள் எது என்பது தெரியவில்லை அப்பனே சக்திகள் எதன் இடத்தில் இருந்து வருகின்றது என்பது தெரியாமல் போய்விட்டது முட்டாள் மனிதர்களுக்கு.

ஆனாலும் இதனைப் பற்றியும் கவலை கொள்ளாத இருங்கள் நல்ல முறையாக இங்கு வருபவர்களுக்கு ஒரு சூட்சுமத்தை உரைக்கின்றேன்.விரிவாக விவரிக்கின்றேன்.

அனைத்தும் நல்கும் என்பேன்

அனைத்தும் கொடுக்கும் ஈசன். அப்பனே இதனால் முன் ஜென்மதிலே வாழ்ந்த மனிதர்கள் இதனை அழித்துவிட வேண்டுமென்றே இதனையும் அழித்து விட்டார்கள் .

ஆனால் மீண்டும் எழுந்தான்.

தேர்ந்தெடுப்பவன் மிகப்பெரியவன் என்பேன் ஆனால் கீழ்தரமானவர்கள் மனிதர்கள்.

அப்பனே நல் முறையாக இன்பம் துன்பம் எதன் இடத்தில் இருந்து வருகின்றது என்று பார்த்தால் அனைத்தும் மனிதர்கள் இடத்தில் இருந்துதான் வருகின்றது என்பதை யான் சொல்வேன்.

இன்பம் வரும் பொழுது ஆடி விட்டு துன்பம் வரும் பொழுது துன்பம் வரும் பொழுது தான் இறைவனிடத்தில் நாடிச் செல்கின்றார்கள் அதனால்தான் முதலில் இன்பம் கொடுப்பான் இறைவன் அப்பொழுது நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பேன்.

அத் இன்பத்திலும்தாழ்வான மனது இல்லாமல் நல்ல எண்ணங்களுடன் புண்ணியங்களை செய்தால் துன்ப காலத்தில் இன்பமாகவே மாறிவிடும் என்பேன்.

நல் முறைகள் ஆகவே அப்பனே ஒன்றை உரைக்கின்றேன்

இங்கு நல் முறையாகக் கட்டி முடித்து கட்டிடங்கள் எழுந்து நினைத்த நாளில்  நடைபெறும் மாணிக்கவாசகனும் இங்கு தங்கிச் செல்வான் மனிதர்களைப் போலவே சுற்றித் திரிவான்.

நல் முறைகள் ஆகவே எவை எவை வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அவற்றை நிச்சயம் நிறைவேற்றித் தருவான் இவ் ஈசன்.

அப்பனே அம்மையே யான் அனுப்புகின்றேன் மனிதர்களை நல் முறையாக நல் முறைகள் ஆகவே இனிமேலும் புண்ணியங்கள் செய்தால்தான் மனிதனால் பிழைக்க முடியும் என்பேன்.

அதனை விட்டு எதனை எதனையோ நாடிச் சென்றால் அதன் மூலமே அழிவு ஏற்படும் என்பேன்

ஒன்றை கூறுகின்றேன் குறிப்பாக குறிப்பாக மனிதர்கள் கர்மத்தை தேடிக் கொள்வதில் வல்லவர்கள் என்பேன் ஏனென்றால் கர்மா அதிவிரைவில் அழைத்து  சென்றுவிடும் ஆனாலும் புண்ணியங்கள் செய்வதற்கும் மனம் வராது என்பேன்.

இறைவனும் நல் முறையாக மனிதனை படைக்கின்றான் இப்புவி உலகத்திற்கும் அனுப்புகின்றான் ஆனாலும் மனிதன் மாயையில் சிக்கிக் கொண்டு எதனையோ எதனையோ நினைத்துக்கொண்டு வருந்திக் கொண்டு பின் கர்மாக்களை எதன் மூலம் தேர்ந்தெடுக்கிறான் என்றால் கர்மாக்களை உருவாக்குபவன் மனிதன் தான் என்பேன்.

அப்போது இறைவன் மீது எவ்வாறு குற்றம் சொல்ல இயலும்?

ஏன் இறைவன் மீது நீங்கள் குற்றம் சொல்லலாம்

ஆனாலும் யான் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்

மனிதர்கள் தங்கள் மனதை தொட்டு மனசாட்சிக்கு விரோதமாக இல்லாமல் இறைவா எந்தனக்கு ஏன் கொடுக்கவில்லை?? என்று கேளுங்கள்.

இந்த நிலைமையிலேயே இருந்தால் பின் கஷ்டங்கள் சோதனைகள் சோதனைகளும் மனிதர்களால் உருவாகின்றது என்பேன்.

சோதனை சோதனை என்று மனிதன் திரிந்து கொண்டே இருக்கின்றான் ஆனால் முட்டாள் மனிதன் சோதனை எதிலிருந்து வந்தது என்பதை உணர வில்லையே

அதனால்தான் சிவவாக்கியன்  பாடிவிட்டு சென்றான் கோடி கோடி மனிதர் பிறந்தும் ஒன்றுமில்லாமல் போய் விட்டார்கள் இறைவனையும் அறியாமல் போய் விட்டார்களே ஆனாலும் கலியுகத்தில் தெரிந்துகொள்ளுங்கள் என்பேன்.

சிவ வாக்கியனும் நல் முறைகளாக பின் பல உயரத்திலும் எண்ணத்திலும் வித்தைகளை செய்வான் அதனால் வாக்கியனின் வாக்கியபடியே இங்கு பல உண்மைகள் பொதிந்து இருக்கின்றன என்பேன் அப்பனே அம்மையே நல் முறைகளாக கவலைப்பட தேவையில்லை என்பேன்.

ஈசனே நாடகத்தை நடத்துவான் இங்கு பார்த்துக் கொள்ளுங்கள் நீங்கள்.

உண்மை நிலை என்னவென்று மனிதர்களுக்குத் தெரிவதில்லை என்பேன் அன்பே கடவுள் கடவுள் மீது அன்பை வைத்து விட்டால் இறைவனும் அதைவிட பன்மடங்கு திரும்ப அன்பு செலுத்துவான் என்பேன் என்பேன் ஆனால் இதனையும் மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை.

மாயை மாயையே கண்ணை அடைத்து விடுகின்றது பின் கர்மாக்கள் இன்னும் ஒரு முறை உரைக்கின்றேன் இதைப்பற்றி. யோசியுங்கள் பலமாக கர்மம் யார்? உருவாக்குகின்றான்? என்று.

 நிச்சயமாய் சொல்வேன் மனிதனே. மனிதர்கள் மாறாதவரை இந்த உலகம் மாறுவதாக இல்லை

அப்பனே நல் முறைகள் ஆகவே யானும் இத்தலத்தில் தங்கி சென்று கொண்டுதான் இருக்கின்றேன் நிச்சயமாய் நடத்தி வைப்பேன் யானும்.

நல் முறைகள் ஆகவே ஆனாலும் மனிதர்கள் ஏமாற்றுவார்கள் எதை எதையோ எண்ணிக் கொண்டு.

ஈசனை மட்டும் நம்புங்கள்.

இவ்வுலகத்தில் ஈசனை விட பெரிய சக்தி எதுவும் இல்லை என்பேன்.

அனைத்திற்கும் காரணமானவன் ஈசன் இருக்கும்பொழுது ஆனாலும் மனிதர்கள் எதையோ எண்ணிக் கொண்டு அதைச் செய்தால் இது நடக்கும் எதைச் செய்தால் அது நடக்கும் என்று எண்ணிக் கொண்டு அலைந்து அலைந்து திரிந்துகொண்டு பொய்யான உலகத்தில் மெய்ப்பொருள் என்ன என்பதுகூட தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர் ஆனாலும் அனைத்தும் வீணே.

ஈசனை விட சக்திகள் இவ்வுலகத்தில் ஏதும் இல்லை என்பேன்.

நம்பினால் நம்பி பாருங்கள் தெரியும் சக்திகள் எதில் இருந்து வருகின்றது என்பது.

அதனால்தான் நாங்கள் நம்பிக்கை நம்பிக்கை என்று எடுத்து சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

எதன் மீது நம்பிக்கை வைத்தாலும் அது வீணாக போய்விடும் இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் எப்போதும் வீணாகாது என்பேன்.

சோதனைகள் சோதனைகள் தந்து தான் மீட்டு  கொள்வான் ஈசன்.

நிச்சயம் இவ்வாலயத்தில் திருநாள் நடக்கும் என்பேன் ஈசனும் கலந்து கொள்வான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே சந்தோசம் நிச்சயம் அவன் கொடுப்பான் என்பேன் ஆனால் அதை பெற்றுக் கொள்ள தகுதியானவன் மனிதன் இல்லையேப்பா.

ஈசனும் நல் முறைகள் ஆகவே இங்கு வந்து வந்து தான் செல்கின்றான். அதனால் அம்மையே அப்பனே ஏது குறை?

ஈசனே என் கதி என்று நினைத்துக் கொண்டு வாழுங்கள் நல் முறைகள் ஆகவே உங்களுக்கு அனைத்தும் செய்வான் என்பேன்.

அப்பனே வாழ்க்கையே பொய்யடா இதில் மெய்யானது நிலையானது என்று எண்ணிக்கொண்டு மனிதர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அப்பனே மெய் என்பது என்னவென்றால் இறைவனே மெய் அவ் மெய்யை  பிடித்து விட்டால் பின் அனைத்தும் நலமே. ஆனால் அப்பனே முட்டாள் மனிதன் இதை உணர்வதும்  இல்லை அப்பனே.

மனக்குழப்பம் கொள்ளாதீர்கள் அப்பனே மனக்குழப்பம் கொண்டால் அப்பனே மனிதனின் நோய்க்கு மூலாதாரமே மனக்குழப்பம் தான் நல் முறையாக இறை பக்தியை பின் கடைப்பிடித்து நல்ல கதி அடையலாம் என்பேன்.

இத்தலத்திற்கு நல் மனிதர்கள் வந்து புண்ணியம் சேர்த்துக் கொள்வார்கள் இங்கு.

அப்பனே கலியுகத்தில் மனிதர்கள் ஏமாற்றுவார்கள் ஏமாற்றி தான் பிழைப்பார்கள் என்பேன்.

அம்மையே நல் முறையாக ஒடுக்கத்தூர் சுவாமிகள் இங்குதான் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே என்னுடைய( அகத்தியர்)  பக்தர்கள் அனைத்தும் செய்விப்பார்கள் .

யானே நல் முறையாக அவர்கள் மனதை மாற்றுவேன் அப்பனே கவலை இல்லை உண்மையான சிவனடியார்களும் இவ்வுலகத்தில் இருக்கின்றார்கள்.

அவர்களும் வருவார்கள் நாடிவந்து நல் முறைகள் ஆகவே வரங்களைப் பெற்று செல்வார்கள் என்பேன்.

ஒரு ஈசனின் தளம் அமைப்பது சாதாரண காரியமல்ல பல புண்ணியங்கள் பெற்று இருந்தால் மட்டுமே நல் முறையாக அமைக்க முடியும் அப்பனே அம்மையே நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்.

அப்பனே நடக்க வேண்டியது சரியான நேரத்தில் நடக்கும் கவலை விடுங்கள்.

நல் முறைகள் ஆகவே பல உலக அதிசயங்கள் இவ்வுலகில் நடக்கப் போகின்றது கலியுகத்தில் முறையாகவே ஆங்காங்கே இன்னும் சிவ ஸ்தலங்கள் எழும் என்பேன்.

ஈசனே அமைத்துக் கொள்வான் என்பேன் பல தேவர்களும் நல் மனிதர்களும் இனிமேலும் நடமாடுவார்கள் என்பேன் நாட்டிலே. ஆனாலும் யாங்களும் சித்தர்களும் மனிதர்களை நம்பி நம்பி ஏமாந்து கொண்டு போய்க்கொண்டே இருக்கிறோம் . பின் இவன் பக்தியாக இருந்து நல்லது செய்வான் என்று எண்ணினால் ஆனால் அவனோ பணத்திற்கு ஆசைப்பட்டு ஏதேதோ தொழிலில் இறங்கி அவன் கர்மத்தை சேர்த்துக் கொண்டே இருக்கின்றான்.

ஆனாலும் தேவர்களும் ஞானிகளும் நல் மனிதர்களை ஆங்காங்கே தேர்ந்தெடுத்து பல திருத்தலங்களை திரும்பவும் அமைப்பார்கள் என்பேன்.

கலியுகத்தில் கெட்டது நடந்தாலும் இருக்கின்றார்கள் சித்தர்கள்.

நல் முறைகளாக யாங்களும் பல பல ஞானியர் களும் பலப்பல விளையாட்டுகள் விளையாடி பின் நல் முறையாக நல் முறையாகவே இவ் உலகத்தை திருத்துவோம்.

அப்பனே கவலை வேண்டாம் அனைத்தும் நிறைவேறும் என்பேன்.

இத்தலத்திற்கு ஓர் சிறப்பு

அப்பனே நினைத்ததை நினைத்த முறையே கொடுக்கும் திறன் இவ்வாலயத்திற்கு உண்டு என்பேன் இது சத்தியம்.

அப்பனே அம்மையே நல் முறைகளாக அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு இத்தலத்தின் சிறப்பை பற்றி இன்னும் விரிவாக விவரிக்கின்றேன் கும்பாபிஷேகம் முடிந்த பின்.

அனைத்து சித்தர்களும் வருவார்கள் இங்கே நல் முறையாக வந்து செல்வார்கள்  நல் முறையாக வந்து செல்வார்கள்.

நல் முறையாக ஒடுக்கத்தூர் சுவாமிகள் நட்டு வழிபட்ட ஈசன் இவன்.

இடையில் மனிதர்கள் செய்த தீவினைகள் பின் ஈசன் மீண்டும் இயல ஒடுக்கத்தூர் சுவாமிகள் இங்கு முன்னிருந்து அனைத்தும் செய்விப்பான் ஈசனின் கட்டளைப்படியே. நல் முறையாக அவனும் இங்கேயேதான் அமர்ந்து கொண்டு இருக்கின்றான்.

அப்பனே இத்தலம் ரம்பையும் ஊர்வசியும் சாபம் பெற்றபோதுஇங்கே வந்து சென்ற  சென்ற ஸ்தலம் இது அப்பனே.

இந்தக் கோயிலின் அடியிலேயே பல கோடி சித்தர்கள் தியானத்தில் இருக்கின்றனர் நல் முறையாக யான் இப்பொழுது உரைப்பதையும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இத்தலத்தின் அடியிலேயே ஜீவ சமாதியும் உள்ளது அப்பனே அவன் பெயர் ராமலிங்கன் சாமிகள் என்று நல் முறையாகவே இதனை முன் நின்று பார்க்கும் பொழுது திவ்ய முனி என்பவனும் இங்கே அமர்ந்து இருக்கின்றான். நல் முறைகள் ஆகவே இவ்வாறு என்பதை கூட நினைத்துப் பார்க்கும் அளவிற்குக்கூட பின் பின்

தோன்றாமைக்கு காரணம் கூட இன்னும் உண்டு என்பேன் பல சித்தர்கள் இங்கு உறங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பேன்.

அதனால் அப்பனே நல் முறைகள் ஆகவே அவர்களே உருவாக்குவார்கள் இத்தலத்தை.

இத்தலத்தை நல் மனிதர்கள் தேடிவந்த வரம் பெற்று செல்வார்கள் என்பேன் வரும் காலங்களில்.

அப்பனே  நல் முறைகளாக நாம் என்று சொன்னால் தான் அனைத்தும் நடக்கும் என்பேன்.

நான் என்ற வார்த்தைகள் ஈசன் அடியில் இருக்கக் கூடாது என்பேன்.

நல் முறைகளாக ஈசனை வணங்குபவர்கள் நான் என்னுடையது நான்தான் என்றெல்லாம் சொல்லக்கூடாது என்பேன்.

அப்பனே ஈசன் மனிதர்களுக்கு ஓர் அறிவு அதிகமாக படைத்துவிட்டான் ஆனால் அந்த அறிவை இதுவரை மனிதர்கள் பயன்படுத்தியதாக சரித்திரமே இல்லை என்பேன்.

ஆனாலும் அதனைப் பயன்படுத்திக் கொண்டால் பின் இறைவனையே காணலாம் என்பேன்.

அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள் அப்பனே ஒன்றென்று இருங்கள் தெய்வம் நன்றென்று இருங்கள் அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள் மீண்டுமொரு திருத்தலத்தில் வாக்குகள் உரைக்கின்றேன் இன்னும் பலமாக.

அடுத்து திருப்பணி காட்சிப்பதிவுகளை இங்கே தருகின்றோம்.










அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் திருக்கோயில்

கடன் வாங்கி சிவதிருப்பணி செய்து வருகிறோம் தயவுசெய்து உதவுங்கள்..     

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சிவாலயம் சிதிலமடைந்த நிலையில் எம்பெருமானே கனவில் தோன்றி உத்தரவிட்டதின்படி கடந்த ஆறு ஆண்டுகளாக சிவதிருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. 

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற பிப்ரவரி மாதம் 14/02/2022 அன்று குடமுழுக்கு நடைபெறவுள்ளது. எனவே அதற்குள் எஞ்சியுள்ள திருப்பணி வேலைகள் முடிக்க வேண்டும். 

தற்போது அவசரமாக ஆலயத்திற்கு 35000 செங்கல்கள் தேவைப்படுகிறது. ஒரு செங்கல் விலை 5.5 ரூபாய் வீதம் மொத்தமாக 192500 ரூபாய் ஆகிறது. இதுவரை 23000செங்கல்கள் ஆலயத்தில் வந்து இறங்கியுள்ளது. எனவே செங்கல் உரிமையாளரிடம் தலா 125000 ரூபாய் கொடுத்துள்ளது. மேலும் செங்கல் உரிமையாளருக்கு மட்டும் தலா 67500 ரூபாய் கொடுக்க வேண்டும். 

அதுமட்டுமின்றி ஆலயத்திற்கு 240 சிமெண்ட் மூட்டை தேவைப்படுகிறது ஒரு சிமெண்ட் மூட்டை விலை தலா 380 ரூபாய் ஆகிறது.  எனவே சிமெண்டிற்க்கு மட்டும் தலா 91200 ரூபாய் ஆகிறது. 

அதுமட்டுமின்றி ஒரு மேஸ்திரி கூலி 550 ரூபாய் ஆகிறது சித்தால் கூலி 250 ரூபாய் ஆகிறது. மொத்தமாக 4 மேஸ்திரி, 6 சித்தால் வேலை செய்கின்றனர். இவர்களின் ஒரு நாள் கூலி மட்டுமே தலா 3700 ரூபாய் ஆகிறது எனவே இப்பணிகள் விரைவில் முடித்த பின்னர் Electric work, வர்ணம் பூசுதல் போன்ற பணிகளும் முடிக்க வேண்டும்... 

குடமுழுக்கிற்க்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன அதற்குள் தலா 10 இலட்சம் ரூபாய் பணிகள் முடிக்க வேண்டும்.. தற்பொழுது போதிய நிதியின்மையின் காரணமாக ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பாக்கம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவத்திரு ரங்கன் ஐயா அவர்களிடம் தலா 100000 /- ரூபாய் (ஒருஇலட்சம்) கடனாக வாங்கி திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது....

குடமுழுக்கிற்க்கு மூன்று மாதங்களே உள்ளன. சிவத்திருப்பணிக்கு தயவுசெய்து உதவுங்கள்... சிவத்திருப்பணிக்கு தயவுசெய்து தர்மம் செய்யுங்கள்... நாம் தெரிந்தும் தெரியாமலும் எவ்வளவோ செலவுகள் செய்கின்றோம் தயவுசெய்து ஒவ்வொருவரும் இல்லை என்று கூறாமல் சிவத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற குறைந்த பட்சம் 100 ரூபாயாவது கொடுத்து உதவுங்கள்..தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்....
சிவத்தொண்டே பூர்வஜென்ம புண்ணியம்.....

வங்கி விவரங்கள்:

அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் திருக்கோயில்.
Account No.6655846738, IFSC Code:IDIB000O001,
 Indian Bank-odugathur Branch
Bank Account Name: ARULMIGU UMAMAHESWARI UDANURAI KAILAYANATHAR TEMPLE TRUST

கவனிக்க : IFSC code-ல்  மூன்றாவது சைபர் அடுத்து உள்ளது ஆங்கில எழுத்து o வாகும் ...

Phone pay and Google pay number - 8695875868.

அஞ்சல் கணக்கு எண் : 3935204147.

தொடர்புக்கு,
8695875868, 9345883326.

முகவரி:
பாக்கம் கிராமம்,
பாக்கம் பாளையம் அஞ்சல் ,
அணைக்கட்டு தாலுகா,
வேலூர் மாவட்டம் 632107.
திருச்சிற்றம்பலம்...

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 49 - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 48 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/09/48.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 47 - ஓம் அகிலத்தின் அருளே போற்றி - https://tut-temples.blogspot.com/2021/08/47.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 46 - https://tut-temples.blogspot.com/2021/08/46.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 45- அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - மகேஸ்வர பூசை - https://tut-temples.blogspot.com/2021/07/45.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 44 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/06/44.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 43 - அந்தநாள் >> இந்த வருடம் - [2021-22] - https://tut-temples.blogspot.com/2021/04/43-2021-22.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 42 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/01/42.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 41 - ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடி சரணம்!  - https://tut-temples.blogspot.com/2020/12/41.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 40 - குருவே சரணம்... திருவே சரணம்.... - https://tut-temples.blogspot.com/2020/11/40.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 39 - https://tut-temples.blogspot.com/2020/09/39.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment