அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. இந்த பெருந்தொற்று காலத்தில் நம் தளம் சார்பில் குருநாதரின் அருளால் பல இடங்களில் சேவை செய்து வருகின்றோம். வழக்கமான இம்மாத சேவைகளுடன் மகாளயபட்ச சேவையும் சேர்ந்து உள்ளது. அனைத்தும் குருவருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
1. கூடுவாஞ்சேரி பௌர்ணமி வழிபாடு, மூலிகை கசாயம் வழங்குதல்
2. மாத அன்னசேவை - எத்திராஜ் சுவாமிகள் மூலம் முதியோர்களுக்கு
2. தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் மாத சேவை
3. கும்பகோணம் சுரேஷ் ஐயா அவர்களின் மகன் கல்வி உதவி
4.தர்ம சிறகுகள் குழு மாத சேவை
5. ஆடி அமாவாசை அன்னதானம் - சேலம் சபரி ஐயா அவர்கள்
6. திண்டுக்கல் செல்வம் - அரிசி மூடை - நித்ய அன்ன சேவை
7. சித்தன் அருள் அருளிய மூன்று கோயில்களின் திருப்பணிக்காக நம் தளம் சார்பில் சிறு தொகை இன்று குருவருளால் வழங்கியுள்ளோம்.
1. வணக்கம்பாடி அகிலாண்டேஸ்வரி சமேத ஆபத்சகாயேஸ்வரர்!
2. அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் திருக்கோயில். பாக்கம், வேலூர்
3. ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.
சித்தர்கள் ஆசியாலும் முருகப் பெருமானின் கருணையாலும், நமது ஞானஸ்கந்தர் ஜீவநாடியில் தோன்றும் எழுத்துக்களை வந்து அமர்கின்ற உண்மையான பக்தர்களின் கண்களுக்கு காட்டி அவர்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துள்ளது. வெறும் ஓலைச்சுவடியில் தூய தமிழிலேயே எழுத்துக்கள் தோன்றி எனது கண்களுக்கு மட்டுமன்றி உண்மையான பக்தியுடனும் உள்ளன்புடனும் உறுதியான நம்பிக்கையுடனும் வருபவர்களுக்கு இந்த எழுத்துக்களை அவனிடம் காட்டு என்று முருகப் பெருமான் உத்தரவிடுவார்.
இதுவரை சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த எழுத்துக்களை பார்த்து படித்துள்ளனர். வருவோர், போவோருக்கெல்லாம் சுவடியை காட்டாதே என்றும் எனது பக்தர்களுக்கும் எனது சீடர் அகத்தியர் பக்தர்களுக்கும் மட்டுமே எழுத்து வடிவில் காட்சியளிப்பேன் என்றும் முருகப் பெருமான் உரைத்திருக்கிறார்.நாடியை ஆராயச்சி செய்யும் நோக்கில் வருபவர்களுக்கும், சோதிக்கும் நோக்கில் வருபவர்களுக்கும், அவதூறு பேசுபவர்களுக்கும், அவச்சொல் சொல்பவர்களுக்கும், நமது ஞானஸ்கந்தர் நாடி ஒரு புரியாத புதிராகவும், வீணர்களுக்கு தக்க தண்டனையைக் கொடுத்து வருவதை கண்கூடாக காணலாம்.
இதை என்னைச் சுற்றி உள்ளவர்கள் நன்கு அறிவார்கள். எனவே நம்பிக்கை இல்லாதவர்கள் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம் அல்லது இந்த தொடரையே படிக்க வேண்டாம் என்று அன்புடனும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன். அடுத்ததாக, என்னைச் சந்திப்பது பற்றி பகிர்ந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன். நாடி படிக்க அவ்வளவு எளிதில் பிடி கொடுப்பதில்லை என்று பலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் நான் வேண்டுமென்றே தர மாட்டேன் என்கிறேன் என நினைக்கிறார்கள்.
அதில் எனது தவறு எதுவும் கிடையாது. அவரவர் கர்மவினை அடிப்படையிலேயே நாடி படிக்க முடியும். என்வே உங்கள் கர்மாவைத்தான் நொந்துக் கொள்ள வேண்டுமே தவிர என்னை நொந்துக் கொள்வதில் அர்த்தமில்லை என்பதை முதலில் நீங்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
தேவையில்லாமல் வேண்டுமென்று இழுத்தடிப்பதாக நினைக்க வேண்டாம்.
10 ஆண்டுகளுக்கு மேலும் முயற்சி செய்து இன்னும் நாடி கேட்டுக்கொள்ள முடியாதவர்கள் இருக்கிறார்கள். வியாபாரத்திற்கோ, பண நோக்கத்திற்கோ வேறு எந்த எதிர்பார்ப்பிற்கோ நான் நாடி படிப்பதில்லை. எனவே அமாவாசை பூஜையில் தவறாமல் கலந்துக் கொண்டு ஆலயத்தை 27 முறை வலம் வந்து உங்கள் கோரிக்கையை வையுங்கள். நிச்சயம் முருகன் செவி சாய்ப்பான். உங்களுக்கு அனுகிரகம் புரிவார்.
கடந்த 5 ஆண்டுகளாகத் தனக்கு திருமணம் ஆக வேண்டுமென்று அமாவாசை பூஜை தவறாமல் கலந்துக் கொண்டு பணிவிடை செய்து வந்தார் ஒருவர்.
அவர் வந்து கலந்துக் கொண்ட முதல் அமாவாசையில் அவருக்கு ஜீவநாடி பின்வருமாறு உரைத்தது.
“காலங்கள் கடந்தாலும்
கந்தனது ஆசி! ஆசி!
கச்சிதமாய் வந்து சேர்ந்தாய்
காலமது கனியும்
காரியமும் நடக்கும்
கால தாமதம் ஆனாலும்
ஆரும் அவசியம் பொறு
ஆனந்தமே ஆனந்தமே ஆசி! ஆசி!”
என்று உரைத்தார். கந்தனது ஆசி என்று வந்ததுமே அவருக்கு மிகுந்த சந்தோஷம். சிலருக்கு என்ன பெரிய ஆசி என்கின்ற எண்ணம் வருகின்றது.
பக்தி இல்லாதவர்களுக்கு ஆசி என்றால் சாதாரண விஷயம் தான். ஆனால் இவர் மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் உள்ளவர் என்பதால் ஆசி என்றதுமே அடிபணிந்து வணங்கினார். ஒன்று என்ற அந்த இறைவனின் ஆசி மட்டும் கிடைத்துவிட்டால் அதற்கு அப்புறம் எந்தனை சைபர் போட்டாலும் அதற்குபலன் உண்டு. நமது வாழ்வு முழுதும் சைபராகவே இருந்தாலும் ஒன்று என்று சொல்லக்கூடிய இறைவனின் ஆசி கிட்டிவிட்டால் அது பத்தாகிறது,ஆயிரம் என்று மதிப்புடையதாகிறது. எனவேதான் மற்றவர்களை விட இவர் விஷய ஞானம் உடையவர் என்பதால் ஆசியே போதும் என்றார்.
அடுத்து கச்சிதமாய் வந்து சேர்ந்தாய் என்றார் முருகப் பெருமான். அதற்கு அர்த்தம் என்ன? எப்படி இருந்தாலும் ஒரு நாள் நீ என்னிடம் வரப்போகிறாய் என்று முருகனே எண்ணி இருந்ததால் கச்சிதமாய் வந்து சேர்ந்தாய் என்றார்.
அதாவது சரியான இடத்திற்கு நீ வந்துவிட்டாய் இனி உன் வாழ்வை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற சரணாகதி தத்துவத்தை வலியுறுத்துவது போல் கந்த மூர்த்தி உரைத்தார். காலமது கனியும் என்றார் கந்தன். அப்படிப் பார்த்தால் இப்போது நீ எண்ணி வந்த காரியம் கனிய வில்லை அது காயாக இருக்கலாம் ஏன் பிஞ்சாகக் கூட இருக்கலாம் அல்லது விதையே போடப்படாமல் கூட இருக்கலாம். விதை போட்டு அது செடியாகி மரமாகி பிஞ்சாகி, காயாகி, கனியாகி, அப்பப்பா எவ்வளவு காலம்? அது தெரியாது.
மொத்தத்தில் இது உகந்த காலமல்ல என்று மட்டும் தெரிகிறது. அடுத்து காரியமும் நடக்கும் என்றார். விடை கொடுத்தார் வேலன்.
நீ நினைத்து வந்த காரியம் நடக்கும் என்பதில் மாற்றமில்லை. அதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக வந்து விட்டது. அடுத்த வரியில் கால தாமதம் ஆனாலும் ஆகும் அவசியம் பொறு! ஆனந்தமே! ஆனந்தமே! ஆசி! ஆசி! என்றார்.
இப்போது நிச்சயமாகத் தெரிந்து விட்டது. இவர் காரியம் உடனடியாக நடக்காது சற்று காலதாமதம் ஆகும். அப்படி ஆனாலும் ஆனந்தம் உண்டு.
இறைவனது ஆசியும் உண்டு. அதில் ஏதும் மாற்றமில்லை என்பது நிதர்ஸனமாகிறது. இந்த விளக்கங்களையெல்லாம் கேட்டுவிட்டு கந்தனது ஆசியே போதும் அவர் நினைத்தப்படி எனது காரியம் எப்போது வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று சொல்லிவிட்டு, சரியான இடத்திற்கு வந்துவிட்டேன் அதை கந்தனும் உறுதி செய்து விட்டார்.
என்வே எது எப்படியானாலும் இந்த கணம் முதல் கந்தனையே சரணடைகிறேன் என்று வணங்கிவிட்டு சென்று விட்டார்.
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 47 - ஓம் அகிலத்தின் அருளே போற்றி - https://tut-temples.blogspot.com/2021/08/47.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 46 - https://tut-temples.blogspot.com/2021/08/46.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 45- அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - மகேஸ்வர பூசை - https://tut-temples.blogspot.com/2021/07/45.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 44 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/06/44.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 43 - அந்தநாள் >> இந்த வருடம் - [2021-22] - https://tut-temples.blogspot.com/2021/04/43-2021-22.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 42 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/01/42.html
No comments:
Post a Comment