அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம் தள அன்பர்களுக்கும், நம்மோடு சேவையில் தொடர்ந்து இணைந்துள்ள அருளாளர்களுக்கும் TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
இறை அன்பர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் "அகத்தியப் பெருமானின் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழுவின் " தீபாவளி நல் வாழ்த்துக்கள்! எல்லா நலமும் பெற்று இனிதே வாழ்க! இறையருள் துணை நிற்கட்டும்! என இந்நாளில் பிரார்த்தனை செய்கின்றோம்.
திருவிழாக்கள்
என்றாலே அன்பின் பரிமாற்றம் தானே. ஒவ்வோராண்டும் தீபாவளி
திருநாள் சிறுவயது முதல் பெறுவதாக இருந்தது.ஆனால் TUT - தேடல் உள்ள
தேனீக்களாய் குழு மலர்ந்த பின்னர், நம்மால் முயன்ற அளவில் கொடுக்க
ஆரம்பித்தோம். அன்பின் வெளிப்பாடு தான் கொடுப்பது, பெறுவது இன்பம் என்றால்
கொடுப்பது பேரின்பம் ஆகும்.
எம்மொழியிலும் இல்லா சிறப்பு நம் தமிழ் மொழியில் உள்ளது. திருவிழா என்று
பிரித்து பாருங்கள். திரு விழா..நம்மிடம் உள்ள திரு விழாது இருத்தல் என்று
கொள்ளலாம். திரு என்றால் உயர்ந்த, மேன்மை பொருந்திய,ஒப்பற்ற என்று பொருள்
கொள்ளலாம். நம்மிடம் உள்ள திரு என்றால் அந்த இறையே ஆகும். இறை நம்மிடம்
இருந்து விழாது இருக்க நாம் கொண்டாடுவதே திருவிழா ஆகும். இறை என்றால் என்ன?
அன்பே சிவம் ஆகும். அந்த உயர்ந்த, மேன்மை பொருந்திய,ஒப்பற்ற இறைக்கு அன்பு
என்றும் சொல்லலாம். நம்மிடம் உள்ள அன்பு விழாது இருக்கவே திருவிழா
ஆகும்.இது தான் தமிழின் சிறப்பு. இந்த வகையில் தான் நம் TUT - தேடல் உள்ள
தேனீக்களாய் குழு திருவிழாவை கொண்டாடி வருகின்றது.
2017 ஆம் ஆண்டில் நாம் தொடங்கிய தீபாவளி சேவை குருவருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 2021 ஆம் ஆண்டு தீபாவளி சேவை மிக மிக சிறப்பாக குருவருளால் நடைபெற்றுள்ளது. நவம்பர் மாத சேவைகளுடன் தீபாவளி தொண்டும் நம் தளம் சார்பில் குருவருளால் செய்துள்ளோம். தங்களின் பார்வைக்கு இம்மாத சேவைகளை சமர்பித்துள்ளோம்.
1. தஞ்சாவூர் சித்தர் அருட்குடில்
2. திருஅண்ணாமலை அன்னதானம்
3. தயவு ஆஸ்ரமம் திருஅண்ணாமலை - சிறப்பு அன்னதானம்
4. எத்திராஜ் சுவாமிகள் முதியோர் இல்ல அன்னசேவை
5. தர்ம சிறகுகள் குழு சிறு காணிக்கை
6. குன்றத்தூர் கோயில் - மாத காணிக்கை
7. எண்ணெய் - 1 டின் உபயம்
8. வள்ளலார் மருத்துவ உதவி - சிறு உபயம்
தீபாவளி சேவைகள்:
1. கூடுவாஞ்சேரி விநாயகர் கோயில் - குருக்கள் மரியாதை
2. எத்திராஜ் சுவாமிகள்
3. கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் நந்தீஸ்வரர் டிரஸ்ட் - சிறு தொகை
4. எட்டயபுரம்சித்தர் ஸ்ரீ கீரை மசித்தான் ஜீவசமாதிபீடம் மனநலகாப்பகம் ஆடைகள்,இனிப்பு
5. சிவசைலம் ஔவைஆச்ரமத்தில் ஆடைகள்,இனிப்பு
6. நித்ய அன்னசேவையில் உள்ள அன்பர்களுக்கு துண்டு , கைலி,வேட்டி வழங்கல்
7. சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஆசிரம அன்பர்களுக்கு புத்தாடை
1. கூடுவாஞ்சேரி விநாயகர் கோயில் - குருக்கள் மரியாதை
2. எத்திராஜ் சுவாமிகள்
3. கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் நந்தீஸ்வரர் டிரஸ்ட் - சிறு தொகை
நம் தளம் சார்பில் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் நந்தீஸ்வரர் டிரஸ்டிற்கு ரூ.6000/ கொடுத்துள்ளோம். அவர்கள் அரிசி வாங்கி அருகில் உள்ள குடும்பத்திற்கு கொடுத்துள்ளனர்.
நேற்றைய அனுபவங்கள் I was really feel like I'm blessed to meet the pure soul persons like this, felt very happy by seeing the kids, the smile in their face it's the real happiness I have ever faced for that I should thank my husband to take me there... And you guys TUT team doing a great job best wishes to all...
தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழுவின் மூலம் அன்னதானம், அமாவாசை லோக ஷேம தீபம், சித்தர் வழிபாடாக ஆயில்ய ஆராதனை,ஆலய கைங்கர்யம், சமூக அறப்பணிகள் செய்து வருவது மிகப்பெரிய சிவ பணியாகும். இந்த பணியில் அன்பர்கள் இணைந்து அனைத்து உயிர்களுக்குள் இருக்கும் ஈசனுக்கு உணவளிக்கும் வாய்ப்பு போன்ற சேவைகளை எம்பெருமான் ஒரு சிலருக்கே கொடுத்துள்ளார். ஏனெனில் சிவத்தொண்டில் கலந்துகொள்ளவும் எம்பெருமான் கருணை இருந்தால் மட்டுமே இயலும்.
அவர்களின் கர்மவினை முடிச்சுகளை அவர் அவிழ்ப்பார்.எனவே நமது நோக்கத்தை புரிந்து உதவி செய்து வரும் அன்பர்கள் அனைவரையும் நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பில் வாழ்த்தி மகிழ்கின்றோம்.
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்
இன்னும் அடுத்த பதிவில் நம் தீபாவளி சேவைகள் தொடரும்.மீண்டும் அனைவருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீள்பதிவாக:-
TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழு - தீபாவளி நல்வாழ்த்துக்கள் - 2020 - https://tut-temples.blogspot.com/2020/11/tut-2020.html
TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் தீபாவளி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/10/tut_26.html
பொங்கலோ பொங்கல் - https://tut-temples.blogspot.com/2019/10/tut_26.html
No comments:
Post a Comment