"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, November 13, 2021

கூடுவாஞ்சேரி குகனே சரணம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம்முடைய வழிபாட்டில் தற்போது சஷ்டி விரதம் முடித்து, கார்த்திகை தீப வழிபாடு நோக்கி சென்று கொண்டு இருக்கின்றோம். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வழிபாடு நமக்கு நம் குருநாதர் ஸ்ரீஅகத்திய பெருமானால் உணர்த்தப்பட்டு அருளப்பட்டு வருகின்றது. ஒவ்வோராண்டும் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நாம் ஷஷ்டி வழிபாடு செய்வது வழக்கம். இம்முறை இதனை தவற விட்டு விட்டோம் என்றே கருதுகின்றோம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டில் நவராத்திரி வழிபாடும், காவேரி துலா ஸ்நானம் மிக மிக சிறப்பாக குருவருளால் நமக்கு கிடைத்தது.இப்படி தான் ஒவ்வொரு வழிபாடும் நம் குருநாதர் அருளால் நம் தளத்திற்கு கிடைத்து வருகின்றது. காவேரி துலா ஸ்நானத்துடன் நம் தளம் சார்பில் சுமார் 30 அன்பர்களுக்கு துண்டும், தீபாவளி அன்று இனிப்பும், காரமும் கொடுத்துள்ளோம். இவை அனைத்தும் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் அருளால் நடைபெற்று வருகின்றது.

இந்த ஆண்டு கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் ஷஷ்டி வழிபாடு மிக சிறப்பாக நடைபெற்றது. இன்றைய பதிவில் சென்ற ஆண்டில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் சஷ்டி வழிபாடு தரிசனம் பெற இருக்கின்றோம்.


சென்ற ஆண்டில் சஷ்டி வழிபாட்டில் வேல் வழிபாடு தரிசனம் மேலே நீங்கள் பெறலாம்.



துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம், நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்துஓங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள்கந்தர்
சஷ்டிக் கவசந் தனை.

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே என்று மனமுருக பாடினோம் 








 துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்,
 நெஞ்சில் பதிப்போர்க்குக் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்,
 நிஷ்டையுங் கைகூடும்,
 நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.

 செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா என்று துதித்தோம்.






துப்போருக்கு வல்வினை போம்துன்பம் போம் நெஞ்சில் 
பதிப்போருக்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்
நிஷ்டையுங் கூகூடும் நிமலர் அருள் கந்தர் 
சஷ்டி கவசந்தனை

 திருவா வினன்குடி சிறக்கும் முருகா என்று நம் சிரம் தாழ்ந்து வேண்டினோம் 


துப்போருக்கு வல்வினை போம்துன்பம் போம் நெஞ்சில் 
பதிப்போருக்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்
நிஷ்டையுங் கூகூடும் நிமலர் அருள் கந்தர் 
சஷ்டி கவசந்தனை

 திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! என்று போற்றினோம் 






துப்போருக்கு வல்வினை போம்துன்பம் போம் நெஞ்சில் 
பதிப்போருக்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்
நிஷ்டையுங் கூகூடும் நிமலர் அருள் கந்தர் 
சஷ்டி கவசந்தனை

 குன்றுதோறாடும் குமரா போற்றி என்று குகனிடம் வேண்டினோம் 





துப்போருக்கு வல்வினை போம்துன்பம் போம் நெஞ்சில் 
பதிப்போருக்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்
நிஷ்டையுங் கூகூடும் நிமலர் அருள் கந்தர் 
சஷ்டி கவசந்தனை

 பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! என்று பதம் பற்றினோம் 








இதோ..சூரஸம்ஹரத்திற்கான படை ஆயுதங்கள் தயார் நிலையில்.








இங்குள்ள அருள்நிலைகளை காணும் போது 

விழிக்குத்துணை திருமென்மலர்ப்பாதங்கள்
மெய்மைகுன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்
முருகா...
அழகா 
குமரா
கந்தா
கடம்பா
கதிர்வேலா
ஞான பண்டிதா
தமிழ்க்கடவுளே
சற்குருநாதா 
சரணம்...சரணம்

என்று உள்ளம் உருகுகின்றது முருகா!


சென்ற ஆண்டு ஸ்கந்த சஷ்டி ஆறாம் நாள் மகா சஷ்டி காலை 9 மணி முதல் முருகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேக பூஜைகளும் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை நடைபெற்றது. மதியம் ஒரு மணிக்கு சூரனுக்கு காப்புக்கட்டி, மாலை 5 மணிக்கு வேல் வாங்குதல் அம்மன் சன்னதியில் ஆலயத்தில் அருகிலேயே சூரசம்ஹார நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.  சுவாமி வசந்த மண்டபம் எழுந்தருளி பிராயச்சித்த அபிஷேகம் கண்டு அனைவருக்கும் ஆசி வழங்கினார்.  இரவு 8 மணிக்கு அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது .வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா













28.11.2020  சனிக்கிழமை பரணி தீபம் ஏற்றியும்,29.11.2020 ஞாயிற்றுக்கிழமை அண்ணாமலையார் தீபம் சர்வ சிவாலயம் தீப வழிபாடு  செய்யப்பட்டது. கார்த்திகை தீபத் திருநாளில் கார்த்திகை மைந்தனின் அருளினால் கொரோனா என்ற இருள் நீங்கி ஒளி பெற பிரார்த்திக்கிறோம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. இருளை நீக்கி ஒளியை பெறுவோம் ஓம் சிவாய நம

மீண்டும் முருகன் அருள் பெறுவோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

மீள்பதிவாக:-

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

No comments:

Post a Comment