"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, November 3, 2021

தேடல் உள்ள தேனீக்களாய் குழு (TUT) - தீபாவளி பரிசு - 04.11.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தள அன்பர்களுக்கும், நம்மோடு சேவையில் தொடர்ந்து இணைந்துள்ள அருளாளர்களுக்கும் TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின்  தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். 

அனைவருக்கும் தீபாவளி பரிசு ஒன்றையும் நம் தளம் சார்பில் குருவருள் துணை கொண்டு, பதிவின் நிறைவில் தர உள்ளோம். 



ஸ்ரீ அகத்தியப் பெருமானின்  ஆசியால் "தேடல் உள்ள தேனீக்களாய் - TUT  குழுவின் மூலம் " உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். என்றும், இனிதே நடக்கட்டும் என குருவிடம் வேண்டிக் கொள்கிறோம்! அகத்தியப் பெருமானின், அருள், வழிநடத்தல், துணை என்றும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினருக்கும், நண்பர்களுக்கும் கிடைக்கட்டும் என்று பிரார்த்தித்து, அகத்தியர் பாதத்தில் சமர்ப்பிக்கிறோம்.

இங்கே குருநாதர் அருளிய கோடகநல்லூர் இறை பிரசாதமாக ஓதியப்பர் தரிசனம் மேலே கொடுத்துள்ளோம். அன்றைய தின இறை அருளை, குருவருளை மீண்டும் இங்கே தருகின்றோம்.


இன்றைய தீபாவளித் திருநாளில் ஸ்ரீ அகத்திய பெருமான் வாக்கினை இங்கே சமர்ப்பிக்கின்றோம். வாக்கினை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். நாம் நம் தளத்தின் மூலம் செய்து வரும் அறப்பணிகள் அனைத்தும் எப்படி, எதனால் நடைபெற்று வருகின்றது என்பது அனைவருக்கும் நன்கு புலப்படும்.


அகத்தியப் பெருமானின் அருள்வாக்கு!

"இங்கு கொண்டாடப்படுகிற பண்டிகைகள் எல்லாம், ஒரே எண்ணத்தில் உருவானவை. வாழ்க்கையில் உள்ள ஏற்ற தாழ்வுகளை உணர்த்தி, இருப்பவன், இல்லாதவர்களுக்கு கொடுப்பதின் மூலம், ஒரு சமூகத்தில் தர்மம் வளர்ந்தால், அங்கு இறையருள் நிறைந்து நிற்கும். அவன் குடும்பம் நிம்மதியில் வாழும். இன்னும் மேலான தர்மங்கள் ஏதென உரைக்க இறைவன் எங்களுக்கு கட்டளையிடுவார்."


TUT தீபாவளி பரிசு என்ன என்று தேடுகின்றீர்களா? இதோ. ஸ்ரீ அகத்தியர் பெருமான் 1008 சகஸ்ர நாமாவளி தொகுப்பை ஒலிக்கோப்பாக உங்களுக்கு தர உள்ளோம். இது தான் நம் குருநாதர் நமக்கு அருளும் தீபாவளி பரிசும் ஆகும்.








ஓம் தமிழ் தமிழ் தமிழ் அமிழ்தே போற்றி..போற்றி...என்று போற்றி..நம் குருநாதரின் தாள் பணிகின்றோம்.

PDF வடிவில் தரவிறக்க :- https://drive.google.com/file/d/1WovWZhSsD8odUUEILTcm6kWZLYw5Rr5u/view?usp=sharing

ஒலி வடிவில் தரவிறக்க :-


இந்த ஒலி வடிவ கோப்பை உருவாக்கிய அகத்தியர் அடியார் ஊரப்பாக்கத்தை சேர்ந்த திரு.சரவணன் ஐயா அவர்களுக்கு நம் நெஞ்சார நன்றிகளை இங்கே சொல்லி மகிழ்கின்றோம். 

இந்தப்பதிவை மனதில் இறுத்தி, தம் அகத்தில் உள்ள ஈசன் ஸ்ரீ அகத்தீசர் அருள் பெற்றிட பிரார்த்திக்கின்றோம்.

இன்னும் அடுத்த பதிவில் நம் தீபாவளி சேவைகள் தொடரும்.மீண்டும் அனைவருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

மீள்பதிவாக:-

TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழு - தீபாவளி நல்வாழ்த்துக்கள் - 2021 - https://tut-temples.blogspot.com/2021/11/tut-2021.html

TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழு - தீபாவளி நல்வாழ்த்துக்கள் - 2020 - https://tut-temples.blogspot.com/2020/11/tut-2020.html

TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் தீபாவளி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/10/tut_26.html

பொங்கலோ பொங்கல் - https://tut-temples.blogspot.com/2019/10/tut_26.html

No comments:

Post a Comment