அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இறை அன்பர்கள், தள வாசகர்கள் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள் நம் TUT தளம் மூலம் சொல்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம்.இன்றைய தீபத்திருநாளில் அனைவரின் வாழ்விலும் இன்பமே சூழ பொதிகை வேந்தனிடம் பிரார்த்தனை செய்கின்றோம். இன்றைய திருநாளில் உலக பக்தர்கள் தினம் 12 ஆம் ஆண்டு நூலை நம் தளத்தில் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இம்முறை PDF இணைப்பு பதிவின் இறுதியில் கொடுத்துள்ளோம். பொதிகை வேந்தரின் அருளாசிகள் உலக பக்தர்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
எங்கெங்கு காணினும் சிவமாய் தெரிகிறதே. அன்பே சிவமாய் கொள்ளும் போது, தற்போது நடைபெற்று வரும் திருக்கார்த்திகை விழாவும் நம்மோடு சேர்ந்து துள்ளலை கொடுத்துக் கொண்டு வருகின்றது. அறுசுவையும் அளவிற்கு மீறினால் துன்பம் தரும். ஆனால் இறையின் சுவை இந்த அறுசுவை தாண்டியது. ஐம்புலனும் இறை சுவை அறியவே படைக்கப்பட்டது. காதால் அந்த இறையின் நாமம் கேட்க வேண்டும், கண்ணால் அந்த இறையின் சொரூபத்தை காண வேண்டும். மூக்கால் இறையின் வாசம் நுகர வேண்டும். வாயால் அந்த இறையை போற்ற வேண்டும். மொத்தத்தில் அந்த இறையை நம் மெய் கொண்டு பற்ற வேண்டும்.
எப்போதாவது சில உருவங்கள் போல திருவண்ணாமலை மலை மீது பார்க்க
நேரிடும்.அவைகள் பல்வேறு வடிவங்களில் நம் கண்களுக்கு தெரியும்.இதெல்லாம்
ஏதேச்சையாக அமைவதா அல்லது சூட்சம ரீதியாக சித்தர்களின் வழிபாடுகளா யாருக்கு
தெரியும்.பல தடவை பார்க்கும் போது யாரோ ஒளி வடிவில் மலையை வணங்குவது போல
தெரிகிறது.இதெல்லாம் நமக்கு மட்டும் தெரிகிறதா?அல்லது பிரமையா?எதுவும்
புரியாமல் கடந்து செல்வோம்.ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்த மலை இந்த அண்ணாமலை.
திருவண்ணாமலை அன்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் திருஅண்ணாமலை என்று அழைப்பது
நமக்கும் நன்று, நம் தமிழ் மொழிக்கும் நன்றாகும். அண்ணமுடியாத அதாவது
நெருங்க முடியாத மலை என்று பொருள் கொள்ள வேண்டும்.திருஅண்ணாமலை பற்றி
பேசிக்கொண்டே இருக்கலாம். பார்த்துக் கொண்டே இருக்கலாம். திருஅண்ணாமலையார்
கோயில், அஷ்ட லிங்கங்கள், சித்தர்களின் அருள், மகானகள், கிரிவலம் சொல்ல
இனிக்கின்றது அல்லவா?
இன்றைய பதிவில் திருஅண்ணாமலை தீபத்திருநாள் பற்றிய சில முத்துகளை தருகின்றோம். படித்து பாருங்கள்.
1. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்கள்,21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.
2. திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து நமசிவாய சொன்னால்,அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.
3. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும்,பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர்,சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.
4. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால்,அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.
5. தீபத் திருநாளில் 5 தடவை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால்,அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும்,அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
6. மலை மீது தீபம் ஏற்றப்படும் போது,“தீப மங்கள ஜோதி நமோ!!நம”என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.
7. கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும்.
8. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை.அப்படி வரும் சித்தர்கள்,மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை சேர்த்து விடுவதாகச் சொல்கிறார்கள்.இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை,தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது.
9. திருவண்ணாமலை மலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது.கீழ் இருந்து மலை உச்சி வரை செல்ல சுமார் 8 கி.மீ. பாதை உள்ளது.மலை ஏற சுமார் 4 மணி நேரமாகும்.
10. கார்த்திகை தீபத்துக்கு சர்வாலய தீபம், கார்த்திகை விளக்கீடு, ஞானதீபம், சிவஜோதி, பரஞ்சுடர் என்றும் பெயர்கள் உண்டு.கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
11. கார்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால்,அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.
12. கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு, சகல தானம் கொடுப்பதால்,கிடைக்கும் புண்ணியங்கள் கிடைக்கும்.
13. கார்த்திகை மாதம்,கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
14. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரை சுமார் 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது.மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும்.இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
15. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பரணி தீபம்,அண்ணாமலையார் தீபம்,விஷ்ணு தீபம்,நாட்டுக் கார்த்திகை தீபம்,
தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகையான தீபங்கள் ஏற்றப்படும்.
16. சிவபெருமான் கார்த்திகை தீபநாளில் அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகம்.இந்த நடனத்துக்கு முக்தி நடனம் என்று பெயர்.
17. கார்த்திகை தீபம் தினத்தன்று ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவார்கள். ஆனால் திருவண்ணாமலையில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் இல்லை.
18. தீப நாளில் மலை மேல் தீபம் காண முடியாதவர்கள், தீப தரிசன நேரத்தில் அதை நினைத்தாலே,அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.
19. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக இது வரை எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.
20. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம்,அண்டசராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது. உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை “இறைவன் ஒருவனே”என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.
21. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நட்சத்திர நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள சொர்ண பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள்.பிறகு மாலையில் அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.
22. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால் பாவம் நீங்கி பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாகும்.
23. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், “அண்ணாமலையாருக்கு அரோகரா”என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?“இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து,மனதை ஆன்மாவில் அழித்து,உள்முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்”.இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.
24. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம்.இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.
25. திருவண்ணாமலை ஆலயத்தில் மிகப் பிரமாண்டமான 3மணிகள் உள்ளன.அதில் 2 மணிகள் அண்ணாமலையார் சன்னதி மண்டபத்தில் உள்ளது.மற்றொரு மணி உண்ணாமுலை அம்மன் சன்னதியில் கட்டப்பட்டுள்ளது.இந்த மூன்று மணிகளையும் அடிக்கும் போது அதன் சத்தம் நீண்ட தொலைவுக்கு கேட்குமாம்.இந்த மூன்று மணிகளும் நூற்றாண்டை கடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
26. சக்தியும் சிவமும் ஒன்றே என்ற உண்மையை பிருங்கி முனிவருக்கு உணரவைத்து,சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்த பெருமையை உடைய தலம் இது.
27. பிரம்மாவும், விஷ்ணுவும் நெருப்பாக நின்ற சிவபெருமானின் அடிமுடி காண முயன்றனர்.அந்த நெருப்பு மலையாக மாறியது.அதுவே கோவிலின் பின்னணியிலுள்ள திருவண்ணாமலையாகும்.
சரி ..இன்றைய நன்னாளில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இந்தப்பதிவை
படிக்கும் அன்பர்கள் அனைவரும் வாழ்வில் திருவருள் பெறும்படி எல்லாம்வல்ல
பரம்பொருளிடம் விண்ணப்பிக்கின்றோம். நம் தளம் சார்பில் இன்று
திருஅண்ணாமலையில் நடைபெறும் அன்னதான சேவைக்கு நம்மால் முடிந்த அளவில் சிறு
தொகை சேர்த்துள்ளோம்.
மேலும் நாம் செல்லும் திருத்தலங்களில் எல்லாம் நம்மால் முடிந்த வரை தூய பசு நெய் கொண்டு நம் தளம் சார்பில் தீபமேற்றி வருகின்றோம். இப்போதெல்லாம் கோயிலுக்கு என்று சொன்னாலே, தீபமும், நெய்யும் கைப்பையில் தயாராகி விடுகின்றது. நம்மால் முடிந்த அளவில் அக்னியின் மூலம் உணவு தரவும் செய்கின்றோம். இருளகற்றி ஒளியேற்ற தீபமேற்றியும் வருகின்றோம்.
நம்பி மலையில் தீபமேற்றி வழிபாடு செய்த போது
ஸ்ரீ திருவாலீஸ்வரர் கோயிலுக்கு இலுப்பை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ,இதர பூசைப் பொருட்கள் கொடுத்த போது
கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேக தரிசனத்தில் தீபமேற்றி வழிபாடு செய்தோம்.
தெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4) - https://tut-temples.blogspot.com/2019/12/4.html
தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html
மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html
மேலும் நாம் செல்லும் திருத்தலங்களில் எல்லாம் நம்மால் முடிந்த வரை தூய பசு நெய் கொண்டு நம் தளம் சார்பில் தீபமேற்றி வருகின்றோம். இப்போதெல்லாம் கோயிலுக்கு என்று சொன்னாலே, தீபமும், நெய்யும் கைப்பையில் தயாராகி விடுகின்றது. நம்மால் முடிந்த அளவில் அக்னியின் மூலம் உணவு தரவும் செய்கின்றோம். இருளகற்றி ஒளியேற்ற தீபமேற்றியும் வருகின்றோம்.
நம்பி மலையில் தீபமேற்றி வழிபாடு செய்த போது
ஸ்ரீ திருவாலீஸ்வரர் கோயிலுக்கு இலுப்பை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ,இதர பூசைப் பொருட்கள் கொடுத்த போது
கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேக தரிசனத்தில் தீபமேற்றி வழிபாடு செய்தோம்.
அருள்மிகு திரிபுர சுந்தரி உடனுறை குணம் தந்த நாதர் திருக்கோயிலில்
தீபமேற்றி நம் தளம் சார்பில் வழிபாடு செய்தோம். விரைவில் இந்தக்கோயில்
பற்றி நம் தலத்தில் பேசுவோம்.
திருஆலங்காட்டில் உள்ள வடாரண்யேசுவரர் கோயிலில் தீபமேற்றி வழிபாடு செய்தோம்.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாம் கண்ட கார்த்திகை தீப தரிசனம் மேலே.
பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோவிலில் தீபமேற்றி வழிபாடு செய்த காட்சி
இந்த தீபமேற்றும் நிகழ்விற்கு தாங்கள் விரும்பி நமக்கு உதவி செய்யலாம். கீழே உள்ள அறிவிப்பை பாருங்களேன்.
12 ஆம் ஆண்டு உலக பக்தர்கள் தின நூலை இங்கே காணலாம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீள்பதிவாக:-
திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! அரோகரா!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_27.html
தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html
தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html
மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html
கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - https://tut-temples.blogspot.com/2019/12/1.html
பொக்கிஷமாக உலக பக்தர்கள் தினம் 12 ஆம் ஆண்டு மலர்! - https://tut-temples.blogspot.com/2021/11/12.html
10 ஆம் ஆண்டில்...உலக பக்தர்கள் தினம்! கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்!! - https://tut-temples.blogspot.com/2019/11/10_16.html
வருடமொருமுறை பூக்கும் பூந்தோட்டம் - உலக பக்தர்கள் தினம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_17.html
No comments:
Post a Comment