அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் நம் தளம் சார்பில் அனைத்து அறப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆவணி மாத ஆயில்ய பூஜை நேற்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. அந்த நாள் இந்த வருடம் ஓதிமலை தரிசன வழிபாடாக சின்னாளப்பட்டி ஸ்ரீ முருகப்பெருமான் கோயிலில் குருவருளால் பால் அபிஷேகம், மலர் அலங்காரம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல் அனைவருக்கும் பிரார்த்தனை செய்யப்பட்டது. நேற்றைய குருநாள் அன்னசேவையாக 20 அன்பர்களுக்கு காலை உணவு குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டோம். இன்றைய பதிவில் மீண்டும் அகத்தியம் பற்றி சில துளிகளை பேச உள்ளோம்.
குரு பக்தியே கோடி நன்மை தரும். குருவின் பாதம் பிடித்து குருவின் பதம் படிப்போம். போற்றி போற்றி நம் வினைகளை களைந்திடுவோம். பக்தி செலுத்த செலுத்த பாவங்கள் குறையும். பாவங்கள் குறைய குறைய பண்புகள் ஓங்கும். பண்புகள் ஒங்க ஒங்க பரவசம் கிடைக்கும்.இவ்வாறு பக்தியினால் பரிவு உண்டாகும். நம் அகம் மிளிரும். சத்தியம் உணர்த்தப்படும். அகத்தியம் பேசும் நிலை உண்டாகும். இவற்றுக்கு எல்லாம் மூலம் குரு பக்தியே ஆகும்.
மகான் சட்டைமுனிநாதர் அவர்கள் இயற்றிய ஞானவிளக்கம் 51-ல் 21-ஆம் பாடல்
போடுவது திலதமடா மூலர் மைந்தர்
போகர் கருவூராரைத் தியானம் பண்ணு
நாடுநகர தனிலுள்ள ஜீவசெந்து
நாதாக்கள் சித்தருக்கும் தோணாதையா
ஏடுதனில் எழுதினதோர் பாடல் என்று
எண்ணாதே ஒருநாளும் தப்போ இல்லை
தேடினபேர் பொருள்கோடி தனமீந்தாலும்
செப்பாதே இக்கருவை(ரகசியத்தை) உலகத்தோர்க்கே.
இவ்வாறு சித்தர் பெருமக்கள் பல பாடல்களில் நமக்கு அருளி செய்துள்ளார்கள்.இவை அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது குரு பக்தியே ஆகும். குரு பக்திக்கு அடிப்படையாக இருப்பது நம் அகம் ஆகும். அகம் என்றால் அன்பு தானே! எனவே நம்முள் உள்ள அன்பை கொண்டு குரு பக்தி செய்து வாழ்வில் வளம் பெறுவோமாக!
குரு பக்தி செய்வோம். குறைவின்றி வாழ குருவருள் நம்மை வழிநடத்திட வேண்டி பிரார்த்திக்கின்றோம்.எண்ணும் எண்ணம் யாவிலும் அன்பை நிறைப்போம். இது ஒன்றே நம்மை அடுத்த நிலைக்கு இட்டு செல்லும். அன்பே அகத்துள் கொண்டால் சத்தியம் பிறக்கும். சத்தியம் பிறந்து விட்டால் அகத்தியம் மிளிரும். அகத்தியம் மிளிர்ந்தால் ஜெயம் தானே! பதிவின் தலைப்பும் இதனைத் தானே சொல்கின்றது.
நேற்றைய சின்னாளப்பட்டி பிரசாதம் இங்கே பகிர்கின்றோம். அனைவரும் கண்களில் ஒற்றிக் கொள்ளுங்கள்.
ஓம் ஸ்ரீ ஓதிமலை ஆண்டவருக்கு அரோகரா!
ஓம் ஸ்ரீ ஓதிமலை ஆண்டவரே சரணம் !!
ஓம் ஸ்ரீ ஓதிமலை ஆண்டவர் திருத்தாள் போற்றி! போற்றி!!
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
இறைவா...அனைத்தும் உன் செயலே! - அனைவருக்கும் நன்றி - https://tut-temples.blogspot.com/2022/04/blog-post_14.html
No comments:
Post a Comment