"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, August 1, 2022

ஆடிப்பூரம் - சிறப்பு தரிசனப் பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய ஆடிப்பூரத் திருநாளில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இன்னும் நம்மை ஆளுகின்ற  ஸ்ரீ ஆண்டாள் பற்றி அறிய விழைகின்றோம். இத்துடன் மேலும் நாம் பெற்ற தரிசனத்தை இங்கே தர விரும்புகின்றோம். ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும்.

இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள்  உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.



அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு,  குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை  உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள்  திருவாடிப்பூரம். சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த  வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக  எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக  நடைபெறுகின்றது. இவ்வாறு பத்துநாள் பிரம்மோற்சவம் நடைபெறும் சில தலங்கள், திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில்  நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு  அலங்காரம், இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். மேல் மருவத்தூரில்  ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.  ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.

கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர விநாயகர் கோயிலில் இருந்து இன்றைய தரிசனம் பெற இருக்கின்றோம்.




அடுத்து திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டி கோயிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் தரிசனம் பெற உள்ளோம் 


அடுத்து சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் வளையல் மாலை ஆடி பூரத்திற்கு சாற்றப்பட்டது


அடுத்து திருச்சி லால்குடி ஆம்ரவனேஸ்வரர் கோயில் மங்களாம்பிகை ஆடிப்பூரம் வளையல் காப்பு அலங்காரம்


அடுத்து அருள் தரும் தையல் நாயகி உடனுறை அருள்மிகு வைத்தீஸ்வரர் திருக்கோவில் வழுதரெட்டி விழுப்புரம் ஆடிப்பூரம் பூஜையில்


ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் 
பரமபதநாதன் சந்நிதி- திருஆடிப்பூரம் இன்று மூலவர் சிறப்பு அலங்காரத்தில், உற்சவர் நாச்சியார் திருக்கோலத்தில். 
 




ஸ்ரீரங்கம் வெளிஆண்டாள் சந்நிதி ஆடிப் பூரம் இன்று  பத்தாம் திருநாள்சிறப்பு அலங்காரத்தில் 




திருமயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வர சுவாமி திருக்கோவில் அருள்பாலிக்கும் அன்னை கற்பகாம்பாள் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் திருக்கோவில் குளக்கரைக்கு எழுந்தருளுதல் பின் குளக்கரை மண்டபத்தில் அபிஷேகமும் பின் அம்பாள் வளைகாப்பு அலங்காரத்தில் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி வீதி புறப்பாடு நடைபெற்றது 


அடுத்து திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் ஆண்டாள் தரிசனம் பெற உள்ளோம் 


அடுத்து மேலும் சில அருள் தரிசனம் பெற உள்ளோம்.


மேலும் இன்றைய நாளின் சிறப்பாக சித்தர் சமாதியில் சிறப்பான குருபூஜை நடைபெற்றது. மகான் பாடகச்சேரி ஸ்ரீ ராமலிங்க சுவாமிகளின் 73 வது குருபூஜை தரிசனம் இங்கே காண உள்ளோம். சென்னை கிண்டி இரயில் நிலையத்தில் உள்ள பாடலீஸ்வரர் தரிசனம் உங்களுக்காக தருகின்றோம். அடுத்த முறை கிண்டி செல்லும் போது, நேரில் சென்று தரிசிக்கவும்.












நேற்றைய நாளில் நமக்கு உணர்த்தப்பட்டதை இங்கே பகிர்கின்றோம். மீண்டும் வருகின்ற பதிவுகளில் ஆழ்ந்து சிந்திப்போம்.


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

-மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஆடிப்பூரம் - ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்! - https://tut-temples.blogspot.com/2022/07/blog-post_31.html

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_10.html

ஆடிப்பூரம் - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_11.html

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே - திருஆடிப்பூரம் வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_23.html

 கூடுவாஞ்சேரி திருஆடிப்பூரம் திருவிளக்கு பூஜை, ஆடித்திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_92.html

நம்மை ஆண்டாள் - ஆண்டாள் திருவடிகளே சரணம் ! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_78.html

பிறந்தது ஆடி...பணிவோம் தாயை நாடி.. - 2020 - https://tut-temples.blogspot.com/2020/07/2020.html

 மார்கழி சிறப்பு பதிவு : திருப்பாவையும், திருவெம்பாவையும் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_17.html

 ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html

No comments:

Post a Comment