"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, August 10, 2021

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நேற்று மதியம் முதல் இன்று காலை 11 மணி வரை ஆடிப் பூரம் ஆகும். ஆடிப்பூரம் என்றாலே நமக்கு நம்மை ஆளும் ஆண்டாள் தான் எண்ணத்தில் இருக்கின்றார். இதனையொட்டியே இன்றைய பதிவில் நாம் சிந்திக்க இருக்கின்றோம். இன்றைய பதிவில் மேலும் சிறப்பாக ஸ்ரீ ஆண்டாள் தரிசனம் பெற இருக்கின்றோம்.

சுமார் 1 மாதம் முன்பு நாம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோவில் சென்று தரிசனம் செய்தோம். அன்றைய தரிசனத்தில் நாம் ஸ்ரீ ராமானுஜர் உலக உயிர்களுக்காக நாராயண மந்திரத்தை வெளிப்படுத்திய இடம் சென்று தரிசனம் செய்தோம். பின்னர் சற்று விரைவில் தரிசனம் செய்யும் பொருட்டு ஸ்ரீ ஆண்டாள் சன்னிதி சென்று தரிசனம் செய்யாமல் விட்டு விட்டோம். இது மனதுள் ஒருவித சஞ்சலத்தை தந்தது. அடுத்து அன்று கோயிலில் பட்டாச்சாரியார் நீங்கள் ஒரு நாள் சேவை செய்யலாம் என்று கூறியது நினைவிற்கு வர, இன்றைய ஆடிப் பூரத் திருநாளில் நம் தளம் சார்பில் லோக ஷேமத்திற்காக வழிபாடும். ஸ்ரீ ஆண்டாள் வழிபாடும் இன்று குருவருளால் நடைபெற்று வருகின்றது.

என்னே! குருவின் அருள்! ஸ்ரீ ஆண்டாள் தரிசனம் பெற இயலவில்லையே என்ற ஏக்கம் இன்றைய பதிவில் மூலம் சரி செய்ய உள்ளது. ஆம். ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர உற்சவம் தரிசனம் நமக்கு நேற்று கிடைத்தது. ஒரு நாள் தரிசனம் பெறவில்லையே என்ற ஏக்கம் இன்று தீர்ந்தது. நீங்களும் தரிசனம் செய்து அன்னையிடம் வேண்டுங்கள்.

இன்றைய நன்னாளில் அன்னையை தொழுது அன்னையின் அன்பை பெறுவோம்.

இன்றோ திருவாடிப்பூரம்- எமக்காக
வன்றோ இங்காண்டாளவதரித்தாள் - குன்றாத
வாழ்வான வைகுந்தவான்போகந்தன்னையிகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்.

ஆம். இன்று ஆண்டாள் அவதாரம் நிகழ்ந்த நாள். இந்நாளில் நம் மனதை திறப்போம். ஆண்டாள் நம்மை கொஞ்சம் ஆளட்டும். நம்மை ஆண்ட ஆண்டாள் படைத்த திருப்பாவை தொகுப்பை முழுதும் தருகின்றோம்.





ஆண்டாள் தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாக கருதப்படுகிறார்.

மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் ஒரு குழந்தையாக துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சமேத அரங்கநாதர் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், கண்டெடுத்த குழந்தையை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை என்பதாகும்.









ஆண்டாள், "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.

ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமை, தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக அனைவராலும் போற்றப்படுகின்றது. இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.

மீண்டும் பல முறை ஸ்ரீ ஆண்டாள் தரிசனம் பெற இருக்கின்றோம்.




















இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது. இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது. 


திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே


     திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

     பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே

     பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

     ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே

     உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே

     மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே

     வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

மீள்பதிவாக:-

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே - திருஆடிப்பூரம் வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_23.html

 கூடுவாஞ்சேரி திருஆடிப்பூரம் திருவிளக்கு பூஜை, ஆடித்திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_92.html

நம்மை ஆண்டாள் - ஆண்டாள் திருவடிகளே சரணம் ! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_78.html

பிறந்தது ஆடி...பணிவோம் தாயை நாடி.. - 2020 - https://tut-temples.blogspot.com/2020/07/2020.html

 மார்கழி சிறப்பு பதிவு : திருப்பாவையும், திருவெம்பாவையும் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_17.html

 ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html

No comments:

Post a Comment