"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 18, 2021

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - வரலட்சுமி நோன்பு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குரு வழிபாடு என்பது நம்மை உணர்த்தும் வழிபாடு ஆகும். மானிடப் பிறப்பின் நோக்கமே குருவினை அடைவது ஆகும். மெய்ஞ்ஞான குரு ஒருவருக்கு கிடைத்து விட்டாலே போதும். குரு வழிபாடு என்பது தானாக நிகழ்வது அல்ல. ஏதோ இந்த பிறப்பில் நடந்தது என்றும் கூற முடியாது. பல ஜென்ம தேடல், பூர்வ புண்ணியங்களின் குவியல்கள் மூட்டை மூட்டையாக இருந்தவருக்கே அது வாய்க்கும். இந்த சிந்தனையில் பார்க்கும் போது நாமெல்லாம் கொடுத்து வைத்து இருக்கின்றோம். நம் பெற்றோருக்கும் நன்றி சொல்லுவோம். ஏனென்றால் அவர்களின் புண்ணியபலனும் நமக்கு குருவை காட்டியுள்ளது. மிக எளிதாக குருவின் நாமத்தை சொல்ல இயலாது. நாம் ஒவ்வொருவரும் குருவின் நாமம் சொல்லி வருகின்றோம் என்றால் குருவின் கருணைக்கு எல்லையேது?

குருவின் திருமேனி கண்டு, குருவின் திருநாமம் சொல்லி, குருவின் திருவார்த்தை கேட்டு, குருவின் திருவுருவை சிந்தித்து, சிந்தித்து தெளிவு பெறுவோம். இன்றைய பதிவில் குருவின் திருவார்த்தை கேட்போமா? சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடிலில் அமாவாசை ஹோமம் செய்து, குருவிடம் ஆசி கேட்ட போது, அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. இம்முறை அனைவரும் வரலட்சுமி நோன்பு இருக்கும்படி குருவின் ஆணை நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உடனே இதை யொட்டி சிந்தனையில் ஆழ்ந்த போது, சென்ற ஆண்டில் வரலட்சுமி நோன்பு பற்றி ஒரு பொதுவான பதிவு தந்தோம். இந்த ஆண்டில் நாளை நாம் வரலட்சுமி நோன்பு இருக்க நம்மை நம் குருநாதர் வழி நடத்துவதை அறியும் போது, குருவின் தாளை என்றும் பணிகின்றோம். இது போல் தான் நம் குழுவின் மூலம் நடைபெற்று வரும் அனைத்து சேவைகளுக்கும் நம் குருநாதர் ஆசி தருவதை நன்கு உணர முடிகின்றது.

கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர்

இந்த ஆண்டு வரலட்சுமி நோன்பு நாளை கொண்டாடப் பட உள்ளது. நாளை நாம் அனைவரும் வரலட்சுமி நோன்பு இருந்து வரங்களை நம் அன்னையிடம் பெறலாமா? இதோ..இன்றைய பதிவில் வரலட்சுமி நோன்பு பற்றியும், விரதம் இருக்கும் முறை என சில செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்களின் நோன்பாகும். வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்துக்களின் நோன்பாகும்.  ஆவணி மாத முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்கின்றனர்.


மகாலட்சுமியே நேரில் வந்து தன் பக்தர்களுக்கு உபதேசம் செய்த மிகச்சிறந்த ஒரு விரதமுறை ‘வரலட்சுமி விரதம்’ ஆகும். இதனை காலம் காலமாக கடைப்பிடித்து வருபவர்களும், ஒவ்வொரு வருடமும் புதிதாக ஆரம்பிப்பவர்களும் உண்டு. இந்த விரதம் சுமங்கலி பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கவும், கன்னிப் பெண்கள் நல்ல வரன் அமையவும், மற்றவர்கள் குடும்பத்தின் நலன் கருதியும், செல்வ செழிப்பு ஓங்கவும் கடைபிடிக்கும் ஒரு எளிய நோன்பு முறையாகும். மகாலட்சுமியை வீட்டிற்கு அழைப்பது முதல், கலசம் அமைத்து வழிபட்டு, பூஜை செய்து விரதத்தை முடிவு செய்யும் வரை எளிமையாக என்ன செய்ய வேண்டும்? என்பதை நீங்கள் அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.



லட்சுமிதேவியை குறித்து வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும். தமிழகத்தில் தற்போது பல நகரங்களிலும் வரலட்சுமி விரதம் விசேஷமாக உள்ளது. ஆடி மாதம் வளர்பிறை கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள்.லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும். சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.




விரத முறை:

இந்த விரதம் இருக்க வீடு அல்லது கோயில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். கும்ப பூஜை முடிந்தபிறகு கணேச பூஜை செய்ய வேண்டும்.

அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.


விரத பலன்கள்:

1. உயர்ந்த ஞானம் கிடைக்கும்.

2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.

3. மங்கல வாழ்வு அமையும்.

4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.

5. கல்யாணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

அம்மனை பூஜை செய்ய பூஜாவிதானம் புத்தகங்களில் கூறப்பட்டுள்ள வழியையே பின்பற்றவும். அப்படிப் பின்பற்ற இயலாதவர்களுக்குச் சில எளிய பூஜா மந்திரங்கள் இதோ :

திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ

வருமகளே உலகெல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்

ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம்பெரிது

தருமகளே தமியேன் தலைமீது நின்தாளை வையே

(வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)

மகாலட்சுமி காயத்ரீ :

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே

விஷ்ணு பத்னீ ச தீமஹி

தன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்

அர்ச்சனை நாமாக்கள் :

ஓம் லக்ஷ்மிதேவியே நமோ நம :

ஓம் தாமரைப் பூவில் அமர்ந்தவளே நமோ நம:

ஓம் பாற்கடல் உதித்தோய் நமோ நம :

ஓம் செந்தூரத் திலகம் அணிந்தாய் நமோ நம :

ஓம் நாரணன் நெஞ்சில் நிறைந்தவளே நமோ நம :

ஓம் கருணையில் சிறந்தவளே நமோ நம :

ஓம் அலை கடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே நமோ நம :

ஓம் அமரர்கள் துதிபாடும் அமுதமும் நீயே நமோ நம :

ஓம் அன்பர்களைக் காத்திடும் அலைமகளே நமோ நம :

ஓம் ஐஸ்வர்ய லக்ஷ்மியே நமோ நம :

ஓம் விஜயலக்ஷ்மியே நமோ நம :

ஓம் ராஜ்ய லக்ஷ்மியே நமோ நம :

ஓம் ஜயலக்ஷ்மியே நமோ நம :

ஓம் தான்ய லக்ஷ்மியே நமோ நம :

ஓம் தனலக்ஷ்மியே நமோ நம :

ஓம் தைர்ய லக்ஷ்மியே நமோ நம :

ஓம் மஹாலக்ஷ்மியே நமோ நம :

ஓம் உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே நமோ நம :



மன சுத்தியுடன் செய்யப்படும் இந்த பூஜையானது தேவியை மகிழச் செய்து, நம் இல்லத்தைத் திருமகள் குடியிருக்கும் கோவிலாக மாற்றும்.

இப்படியெல்லாம் செய்ய முடியவில்லை என்றாலும் பிழையில்லை. மனதை நல்லெண்ணங்கள் மற்றும் நேர்மறை எண்ணங்கள் சூழ வைத்துக் கொள்ளுங்கள். உண்மையில் அது தான் இறைவன் குடியிருக்கும் இடம்.

சக்தியின் வடிவமாகப் போற்றப்படும் பெண்கள் வரலட்சுமி விரதம் மேற்கொண்டு மகாலட்சுமியைப் பூஜித்து வழிபட்டால் இல்லத்தில் மகாலட்சுமியின் கடாட்சம் பெருகும். வரங்கள் அனைத்தையும் அருளும் ஸ்ரீ மகாலட்சுமியை நம் இல்லத்துக்கு வரவேற்றுப் போற்றி வழிபடுவோம்... அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெற்று இன்பமாகவும், வளமாகவும் வாழ்வோம்...


ஈசனின் ஆலோசனைப்படி, திருமகளைப் போற்றி அன்னை சக்தி விரதம் இருந்த நன்னாளே வரலட்சுமி விரதம்; அன்னை சக்தி இந்த விரதம் இருந்ததாலேயே கந்தன் அவதாரம் நிகழ்ந்தது என்கின்றன ஞான நூல்கள்.

விரிவான முறையில் வழிபாடுகள் செய்ய இயலாவிடினும், நெய் தீபங்கள் ஏற்றிவைத்து, கீழ்க்காணும் துதியைப் படித்து, வில்வத்தால் மகாலட்சுமி படத்துக்கு அர்ச்சனை செய்து, ஆராதியுங்கள் அவளருள் கிடைக்கும். வீட்டில் லட்சுமிகடாட்சம் பெருகும்.

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்

பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்

காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை

சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே

உலகிடைப் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
நலமெலாம் உயிர்க்கு நல்குக போற்றி
எங்களுக்குக் கின்னருள் ஈந்தருள் போற்றி
மங்கலத் திருநின் மலரடி போற்றி போற்றி!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

வரம் பல அருளும் வரலட்சுமி நோன்பு இருக்கலாமே - 31.07.2020 - https://tut-temples.blogspot.com/2020/07/31072020.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

நீள நினைந்து அடியேன் - ஸ்ரீ சுந்தரர் குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_28.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

அகத்தியர் தேவாரத் திரட்டு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_10.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html

இந்திரகீழ ஷேத்திர இறைவா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5
நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

No comments:

Post a Comment