அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய ஆடி பெருக்கு நன்னாளில் மீண்டும் அனைவரையும் இந்தப் பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இன்றைய நாளில் நதி வழிபாடு மிக மிக சிறந்த வழிபாடாக அமைகின்றது. இதனை உணர்த்தவே ஆடிப் பெருக்கு நாளில் அனைத்து நதிகள்,ஆறுகளில் மிக சிறப்பாக வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது. காவேரி ஆறு பாயும் அனைத்து ஊர்களிலும், இதே போன்று தாமிரபரணி பாயும் அனைத்து ஊர்களிலும் இன்றைய நாளில் வழிபாடு நடைபெற்று வருகின்றது. இதற்கு முந்தைய பதிவில் காவிரித் தாய் தரிசனம், பாபநாசம்,கோடகநல்லூர் போன்ற ஊர்களில் தாமிரபரணித் தாய் தரிசனம் பெற்றோம். இன்றைய பதிவில் மீண்டும் அன்னையின் தரிசனம் தொடர உள்ளோம்.
நதியை நாம் அன்னையாக போற்றுகின்றோம் . எனவே இந்த ஆடி மாதத்தில் சக்தி வழிபாடாக இந்த நதி வழிபாடு இன்னும் உயிர்ப்பு பெறுகின்றது. அன்னையை ஸ்ரீ மகாலட்சுமி தாயாக இன்று போற்றி வழிபடுவோம்.
இந்த ஆண்டு மாசி மக கும்ப ஹோம பௌர்ணமி திருவிழாவிற்கு பாபநாசம் சென்றோம். அப்போது அங்கே இது போன்று வண்ணவிளக்கு அலங்காரத்தில் தாமிரபரணி தாயை கண்டு தரிசித்து மகிழ்ந்தோம். குருநாதரின் பெயரை இது போல் கண்டோம். இது பற்றி மேலும் பாபநாசத்தில் காணலாம் என்றார்கள். அடுத்து அன்று காலை ஹோமம் முடித்து , வீட்டிற்கு கிளம்பும்போது தாமிரபரணி அன்னை காண சென்றபோது,வண்ண விளக்கு அலங்காரத்தில். அடடா..சொல்ல வார்த்தைகள் இல்லை. நீங்களே பாருங்கள்.
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
-மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருக! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_3.html
ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html
சித்தன் அருள் - 1052 - அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை! - https://tut-temples.blogspot.com/2021/12/1052.html
ஆடிப்பூரம் - ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்! - https://tut-temples.blogspot.com/2022/07/blog-post_31.html
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_10.html
ஆடிப்பூரம் - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_11.html
No comments:
Post a Comment