"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, July 17, 2023

பிரார்த்தனை எனும் மகா சக்தி!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவரையும் இன்றைய பதிவில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். TUT தளத்தின் மூலமாக கொரோனா தொற்றுக்காலத்தில் தினசரி கூட்டுப் பிரார்த்தனை ஜூம் செயலியில் ஆரம்பித்தோம். குருவருளால் தற்போது டெலிகிராம் செயலியில் வார நாட்களில் தினசரி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று வருகின்றது. சுமார் 460 நாட்களை தாண்டி தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகின்றோம் என்றால் இது குருவருளால் தான் என்பது திண்ணம்.

ஆரம்ப காலங்களில் விநாயகர் வழிபாடுதான் கூட்டுப் பிரார்த்தனை தொடங்கியது.  முதல் நாளில் ஒளவையார் அருளிய விநாயகர் அகவலுடன் , நக்கீரர் அருளிய விநாயகர் அகவல் பாடி பிரார்த்தனை செய்தோம். பொதுவாக விநாயகர் அகவல் என்றாலே ஒளவையார் என்று தான் நமக்குத் தெரியும். ஆனால் நக்கீரரும் விநாயகர் அகவல் அருளியுள்ளார் என்பது பின்னர் தான் தெரிந்தது. நாளொரு மேனியாக அப்படியே திருவாசகம் படிக்க ஆரம்பித்தோம். அடுத்து கரு முதல் திரு வரை நூல் என ஒவ்வொரு நாளாக தமிழ் மொழியில் திளைக்க ஆரம்பித்தோம். சில நூட்களை இங்கே தொட்டுக்க காட்ட விரும்புகின்றோம்.

1. விநாயகர் அகவல் - ஒளவையார் & நக்கீரர் 

2. கணபதி கவசம் 

3. விநாயகர் அட்டகம் 

4. திருவாசகம் 

5. கரு முதல் திரு வரை 

6. ஸ்ரீ அகத்தியர் தேவாரத் திரட்டு 

7. கந்த ஷஷ்டிகவசங்கள் - 6

8. கந்தர் அனுபூதி 

9.கந்தர் அலங்காரம் 

10. கந்தர் அந்தாதி 

11. அபிராமி அந்தாதி 

12. முருகவேள் பன்னிரு திருமுறை - 1

13. முருகவேள் பன்னிரு திருமுறை - 2

14. முருகவேள் பன்னிரு திருமுறை - 3

15. முருகவேள் பன்னிரு திருமுறை - 4

16. சித்தர் வழிபாடு தொகுப்பு 

17. ஸ்ரீ ரமண கீதம் 

என பட்டியல் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. இந்த தினசரி கூட்டுப் பிரார்த்தனைகளுக்கு சில அன்பர்கள் கோரிக்கை அனுப்புவது உண்டு. இவற்றையும் குருவின் பாதத்தில் சிரத்தையோடு சமர்ப்பித்து வருகின்றோம். குருநாதர் அருளால் நிறைவேறிய  கோரிக்கைகளுக்கு நன்றி சொல்லியும் வருகின்றோம். மிக விரைவில் மேலே நாம் படித்த நூற்களை தனி தனி பதிவாக தர விரும்புகின்றோம். 



அண்மையில் நமக்கு பிரார்த்தனை பற்றிய அருமையான செய்தி கிடைத்தது,அதனை அப்படியே இங்கு பகிர்கின்றோம்.

உலகம் தழுவிய Medical Association நடத்திய பெரும் விழாவில் தன் ஆராய்ச்சி கட்டுரையை பெருமையுடன் சமர்ப்பித்து விட்டு, காரில் தன் ஊரை நோக்கி புறப்பட்டார் அந்த டாக்டர்.
வழியில் பெரும் பனிப்புயல். அவரால் காரை ஓட்ட முடியவில்லை.
ஒரு கிராமத்தை தாண்டியபொழுது, சாலை  பல பிரிவுகளாக பிரிந்தது.வழிகாட்டிபலகையும் அந்த பனிப்புயலால்  தூர வீசப்பட்டிருந்தது.

டாக்டருக்கு எந்த வழியில் செல்வது என்று புரியவில்லை.
இதுவாகத்தான் இருக்கும் என்று அவராகவே முடிவு செய்து கொண்டு, ஒரு வழியில் காரை பயணித்தார்.ஆனால் அந்த வழி ஆள் அரவமற்ற காட்டின் வழியே சென்றது. புயலும் அதிகமாக வீசியது. டாக்டருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை ஒதுங்க எந்த இடமும் இல்லை.
தூரத்தில் ஒரு சிறு வீடு தெரிந்தது. டாக்டர் அங்கே சென்று கதவை தட்டினார்.
ஒரு இளம் பெண் கதவை திறந்தார். அவர் இருந்த நிலையை பார்த்து உள்ளே அழைத்து அமரச் சொன்னார்.

ஏழ்மையான வீடு. வீட்டில் யாரும் இல்லை. இரண்டு வயது குழந்தை ஒன்று தொட்டிலில் தூங்கி கொண்டிருந்தது.அந்த பெண் அன்போடு சூடான தேநீர் ஒன்றை கொடுத்து அருந்த சொன்னார்.
பின் விசாரித்ததில் அவர் தவறான பாதையில் வந்ததை புரிந்து கொண்டு, இன்னும் சிறிது தூரம் சென்றால் ஒரு பிரிவு வரும். அங்கே வலது பக்கம் திரும்பி சிறிது தூரம் சென்றால், நீங்கள் செல்ல வேண்டிய ஊரின் பிரதான சாலை வரும் என்று விளக்கினார்.

பனிப்புயல் குறையும் வரை ஓய்வெடுங்கள். நான் prayer செய்து விட்டு வருகிறேன் என்று கூறி, அறையின் மறுபக்கத்தில் அமர்ந்து இறைவனை நோக்கி கண்ணீர் மல்க முணுமுணுத்தவாறு வெகு நேரம் பிரார்த்தி விட்டு, மீண்டும் டாக்டர் அருகில் வந்து அமர்ந்தார்.





என்ன பிரார்த்தனை செய்தீர்கள்? என்று டாக்டர் வினவினார்.

அப்பெண் கண்ணீர் மல்க, தன் குழந்தையை காட்டி, அவனுக்கு தலையில் ஒரு பெரும் பிரச்னை.Brain nerves சரியாக வேலை செய்யவில்லை. இதை சரி செய்வதென்றால் ஒரே ஒருவரால்தான் முடியும். பெரும் செலவாகும். என் ஏழ்மை நிலையில் கடவுளிடம் பிரார்த்திருப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறி அழுதார்.யார் அந்த டாக்டர்? என்று கேட்டார்.புகழ் பெற்ற Neurosurgeon டாக்டர் ஜான்சன் என்று அந்த பெண் சொன்னவுடன், டாக்டர் அதிர்ந்துவிட்டார்.

அவர் தான் அந்த டாக்டர் ஜான்சன்.

அந்த எளிய பெண்ணின் பிரார்த்தனையே இறைவன் தன்னை அங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் என்று உணர்ந்தார்.பின் நடந்தது காவியம். அந்த பெண்ணையும், குழந்தையையும் தன் காரிலேயே அழைத்து சென்று சரியான மருத்துவம் செய்து குழந்தையை காப்பாற்றினர்.





பிரார்த்தனை வலிமை வாய்ந்தது.

நேர்மையான எண்ணங்கள், பிரபஞ்சத்தில் கலந்து, அந்த செயல் செய்வதற்கான சூழ்நிலையையும், தகுதியான நபரையும் தேர்ந்தெடுத்து, அந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும்.
அலை இயக்க தத்துவம் புரிந்தவர்களுக்கு, எண்ணத்தின் வலிமையும், செயலாற்றும் தன்மையும் எளிதில் புரியும்.எண்ணம் எழும் இடமோ சிறு புள்ளி. விரிந்து முடியும் இடமோ அகண்டாகரம்.இதனை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் உண்ணும் உணவு உடல் முழுதும் பாயும்.
எண்ணும் எண்ணம் எங்கும் பாயும் என்று சொல்லி "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்த சொல்கின்றார்.




இந்த பதிவை படிக்கும் அன்பர்கள் அனைவரும் "வாழ்க வளமுடன்" என வாழ்த்தி மகிழ்கின்றோம்.
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.


மீள்பதிவாக:-


இறைப்பணியாக குருவருளால் நீர் மோர் சேவை! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_9.html

சத்தியத்தைப் பேசு, தர்மத்தை கடைப்பிடி! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post.html

மயிலேறி விளையாடு குகனே...புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே... - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_29.html

 பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_27.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023  -  https://tut-temples.blogspot.com/2023/06/22062023.html

 அருள்மிகு ஸ்ரீ சற்குரு சுவாமிகள் - 113 ஆம் ஆண்டு குருபூஜை விழா (19.06.2023 முதல் 21.06.2023 வரை) - https://tut-temples.blogspot.com/2023/06/113-19062023-21062023.html

 திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023  - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

 அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_16.html

 ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

 ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

நேர்மறை விமர்சனத்தோடு வாழ்வோம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_29.html


கண்களுக்கு விருந்தாக! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_39.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html

தினசரிப் பிரார்த்தனை - எண்ணிய முடிதல் வேண்டும்.  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_75.html


 அன்னதானப் பெருஞானம் அத்தனையும் தந்திடுமே என்றுரைத்த ஏகாந்த என்றுமொளிர் குருஜோதி! - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post.html

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர்  - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

வேண்டத் தக்க தறிவோய்நீ - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_13.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

கற்போம். கடைப்பிடிப்போம்.. காப்போம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_26.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சிந்தனைக்கு சில - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_8.html

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_4.html

No comments:

Post a Comment