அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் இந்த ஆண்டில் புதிய சேவையாக நீர் மோர் சேவை கடந்த மார்ச் மாதம்
ஆரம்பித்தோம். சுமார் ரூ.300/- அளவில் தினமும் நாள் தவறாது 50 இறை
அன்பர்கள் பயன் பெற்று வருகின்றார்கள். ஆரம்பத்தில் சுமார் 10
பாக்கெட்டுக்களில் மோர் விநியோகம் செய்தோம். பின்னர் நம் வீட்டிலிருந்து
பாத்திரம் எடுத்துக் கொண்டு ரூ.150 என்ற அளவில் வாங்கி, அதற்கென பேப்பர்
டம்ளரில் சின்னாளபட்டி சந்தையில் , பூஞ்சோலை சாலையில் என கொடுத்து வந்தோம்.
மீண்டும் குருவருளால் ஒரு தேநீர்கடையில் பேசி, மண்பானையில் வைத்து தினமும்
மோர் சேவை செய்ய கேட்டு, அவர்களும் சரி என்று கூறியதால், உடனே அதற்கென மண்
பானை, இரண்டு டம்ளர் என வாங்கி, அன்றே மோர் சேவை ஆரம்பித்தோம்.
குருவருளால் நேற்று வரை 100 நாட்களை கடந்து உள்ளோம். 100 என்றாலே ஒரு
மகிழ்ச்சி தானே. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அன்பர்களிடம் இந்த சேவையை
தொடரலாமா? என்று கேட்டதற்கு, அனைவரும் தொடரலாம் என்று கூறியதால்,
குருவருளால் மீண்டும் தொடந்து வருகின்றோம். இந்த சேவையில் பல்வேறு
அன்பர்கள் பொருளுதவி செய்து வருகின்றார்கள். இதோ. நம் TUT தளத்தின் மோர்
சேவை படங்களை இன்றைய பதிவில் பகிர்கின்றோம்.
பொதுவாக நம் சேவைகளின் படங்களை நாம் அதிகம் வலைப்பதிவில் பகிர்வதிலலை. ஆனால் பொருளுதவி செய்யும் அன்பர்களுக்கு இவற்றை பற்றி தெரிய வேண்டும் என்பதற்காகவும், இது போன்ற சேவைகளை மற்ற அன்பர்கள் செய்வதற்கு நாம் தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இங்கே பகிர்கின்றோம்.
முதன்முதலாக வீட்டில் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு மோர் சேவை செய்த காட்சிகள்.
இடையில் ஒரு நாள் பழனி செல்ல நேரிட்டபோது , பழனியில் மோர் வாங்கி கொடுத்த போது
ஒரு நாள் கடையில் நாம் மோர் வாங்கிய காட்சி தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.
ஒரு நாள் ரஸ்னா ஜூஸ் போன்று செய்து கொடுத்தோம். அன்பர்கள் விரும்பி வாங்கி பருகினார்கள்.
மற்றொரு முறை நன்னாரி சர்பத் தயார் செய்து கொடுத்தோம்.
100 நாள் மோர் சேவைக்காக மண்பானை தயார் செய்த பொழுது
குருநாதர் அருளிய வழியில் மூலிகை குடிநீர் தயார் செய்து கொடுத்தோம்.
மூலிகை குடிநீர் சேவை திண்டுக்கல் ஓத சுவாமிகள் கோயிலில் கொடுக்கப் பணிக்கப்பட்டோம்.
மண்பானையில் நீர் மோர் சேவை செய்த காட்சிகள்
குருவருளால் இந்த மோர் சேவை தொடர்ந்து நடைபெற்று வர, மோர் கடைக்காரரும் ஒரு காரணம் ஆவார். ஆரம்ப நாட்களில் நாம் வாங்கி மண்பானையில் ஊற்றி வந்தோம். பின்னர் நம் வெளியூர் செல்ல நேரிட்ட போது, குருவிடம் மன்றாடி வேண்டினோம். நம்முடைய வேண்டுதல் சிறப்பாக கேட்கப்பட்டு, மோர் கடைக்காரர் திரு.கோபி அவர்கள் தினமும் ஒரு குடம் மோர் ஊற்றி வருகின்றார். இது நமக்கே ஆச்சர்யம் தந்த நிகழ்வு ஆகும்.
ஒரு நாள் கரும்புச் சாறு கொடுக்கப் பணிக்கப்பட்டோம்.
100 நாட்கள் தொடர்ந்து இது போன்ற சேவை நடைபெற்று வருகின்றது என்றால் இது முழுதும் குருவருளால் மட்டும் தானே! மேலும் இந்த சேவைகளில் பொருளுதவி, அருளுதவி செய்து வரும் அனைவருக்கும் நன்றி கூறி இப்பதிவை முழுமை செய்கின்றோம். அப்படியே தினமும் மோர் சேவையில்தன் நேரத்தை ஒதுக்கி, உடல் உழைப்பாக ஒரு குடம் மோரை எடுத்துக் கொண்டு, வண்டியில் கொண்டு செல்ல பெட்ரோல் செலவு செய்து, ஊற்றி வரும் திரு.கோபி ஐயா அவர்களுக்கு நம் தளம் சார்பில் அனைவரின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.
இறைவா அனைத்தும் நீயே..அனைத்தும் உன் செயலே..அனைத்திற்கும் நன்றி
அவன் அருளாலே அவன் தாள் பணிந்து
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment