அனைவருக்குன் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்யம் பூஜை தொடர்ந்து செய்து வருகின்றோம். 2017 ஆம் ஆண்டில் தான் ஆயில்ய பூசை நமக்கு குருவருளால் கிடைத்தது. 2016 முதல் நமக்கு ஜீவ நாடி அறிமுகம் கிடைத்தது. ஜீவ நாடி உத்தரவுப்படி சில வழிபாட்டு முறைகளை நாம் தொடங்கினோம். அதுவரையில் கூடுவாஞ்சேரியில் உள்ள ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயில் பற்றி யாம் அறியவில்லை. ஆனால் கூடுவாஞ்சேரி வந்து சுமார் 2 ஆண்டுகள் அப்போது ஆகி விட்டது. பின்னர் ஒரு நாள் நமக்கு ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயில் தரிசனம் கிடைத்து. அன்று தான் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் தரிசனமும் கண்டோம். அப்போது தான் ...அடடா..குருநாதரை நம் வீட்டு அருகிலே இருப்பது அறியாது இத்தனை நாட்களை வீணாக்கி விட்டோமோ என்று தோன்றியது. இது தான் கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் கதை என்றும் தோன்றியது.
உடனே நாம் குருநாதரிடம் விண்ணப்பம் வைத்து விட்டு வந்தோம். அடுத்து நமக்கு கிடைத்த ஜீவநாடி உத்தரவில் ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை செய்ய அருள வேண்டும் என்று வினவினோம். நம் குருநாதர் சரி என்று நாடியில் வாக்குரைத்தார். இது பற்றி நம் குழு அன்பர்களிடம் பேசி, முதல் வழிபாடாக ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள ஸ்ரீ அகத்தியர் பெருமானுக்கு 2017 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 8 ம் நாள் (21.08.2017) திங்கட்கிழமை நடைபெற்றது.
வாழ்வதற்கு அகத்திய நாமம் பெருமருந்தாகும்
விளக்கமுடன் கூறினார் ஔவையார் தானும்
பாம்பாட்டி சித்தர்
தரணியிலே மரணமில்லா வாழ்வார் என்று
என்றுமே கூறி நின்றார் பாம்பாட்டி சித்தர்
நான்கு யுகங்களாய் அகத்தியர் மகிமை
நல்லதை கூறியே யுகம் போற்ற வாழ்ந்தார்
புனிதமுள்ள சித்தர்களும் ரிஷிகளெல்லாம்
குற்றமில்லா கணபதியும் முருகனோடு
கண்டதொரு தேவதைகள் கணங்களோடு
கணங்களுடன் பூதங்கள் நவக்கோள்கள்
குவலயத்தில் காண்பதொரு நிறங்களெல்லாம்
மணம் வீசும் நறுமணங்கள் திசைகள் பத்தும்
முழுமையும் இவ்வுலகம் அகத்தியம் என்று
என்றுமே கூறிட்டார் மச்சமுனி நூலும்
என்றென்றும் நாமத்தை செபித்து விட்டால்
செபித்தோர் முதல் இலட்ச மக்கள் பலனடைவார்
அடைந்திடும் நாமத்தை உலகோர்கெழுதி
அறிய செய்வோர் அகத்தியருக்கும் சேயுமாவார்
எடுத்துரைக்க இதுகாலம் போராதப்பா
இதுக்கொரு விதியுண்டு சித்தர் கேட்க
சித்தர்கட்கு எடுத்துரைப்போம் அறிவீர்கள் நீங்கள்
சிவபெருமான் பார்வதியும் மகிழ்ந்துமிப்போ
ஒதிடவே புலிபாணி ஓடிவந்தேன்
உலகில் நீங்கள் உயர் செல்வ நிதிகளோடு
நிதிகளுடன் அதிர்ஷ்டங்கள் பெற்று வாழ
நிதி தெய்வம் இலக்குமியை வணங்கியாசி
ஒதிடவே உயர் ஞானம் கல்வி காண
உலகிலே சரஸ்வதியை வணங்கி ஆசி
ஆசியதுவுடன் பார்வதியை போற்றுகிறேன்
அருள் பொருள் இன்பமதும் நிறைவு காண
பாசமுடன் தினங்காத்து நல்வழி காட்ட
பரமசிவன் அருள் முனிவர் அகத்தியர் போற்றி
போற்றியே வணங்குகின்றேன் புலிப்பாணியிப்போ
புவிதனிலே அகத்தியத்தை வணங்கிவிட்டால்
நிறைவுபெற்ற மரணமில்லா வாழ்வடைவீர்
நினைத்தவண்ணம் நிதி செல்வம் குன்றா வாழ்வு
வாழ்வதனில் உலகமுள்ள காலம்மட்டும்
வாழ்ந்திடும் உங்கள் குடி செழித்து நன்றாய்
அழகுபட ஆனந்தமாய் வாழ்வீர் என்றும்
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
இறைவா...அனைத்தும் உன் செயலே! - அனைவருக்கும் நன்றி - https://tut-temples.blogspot.com/2022/04/blog-post_14.html
No comments:
Post a Comment