"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, June 29, 2023

மயிலேறி விளையாடு குகனே...புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் ஒவ்வொரு நாளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாள் கூட்டு வழிபாடும் நம்மை தமிழ் மொழியின் மீது இன்புற வைக்கின்றது. இதுவரை கீழ்க்கண்ட நூல்களை படித்து பாராயணம் செய்ய குருவருள் நம்மை கூடுவித்துள்ளது. விநாயகர் வழிபாடு, முருகப் பெருமான் வழிபாடு, சிவ வழிபாடு, அம்பாள் வழிபாடு என அனுதினமும் நம்மை இறையருள் பெற இந்த கூட்டு வழிபாடு உதவி வருகின்றது. இருந்தாலும் மனதில் அழுக்குகள் வந்து சேர்ந்து கொண்டே உள்ளது. நித்தமும் உடைகளை அடித்து துவைத்தால் தான் அன்றாடம் நாம் நம் உடைகளை பயன்படுத்த முடியும். அது போல் நித்தமும் மனதை அடித்து துவைக்க வேண்டும். இல்லையென்றால் அது ஐம்புலனோடு சேர்ந்து கொண்டு கூத்தாடத் தான் செய்யும்.அவ்வாறு மனதை அடித்து துவைத்தால் தான் அன்றாடம் நாம் நம் மனதை நல்ல முறையில் பயன்படுத்த முடியும்.

அப்படி அடித்து துவைக்கும் வேலையை நித்திய கூட்டு வழிபாடு செய்து வருகின்றது. 

தினசரி கூட்டுப் பிரார்தனையில் சில நூட்களை இங்கே தொட்டுக் காட்ட விரும்புகின்றோம்.

1. விநாயகர் அகவல் - ஒளவையார் & நக்கீரர் 

2. கணபதி கவசம் 

3. விநாயகர் அட்டகம் 

4. திருவாசகம் 

5. கரு முதல் திரு வரை 

6. ஸ்ரீ அகத்தியர் தேவாரத் திரட்டு 

7. கந்த ஷஷ்டிகவசங்கள் - 6

8. கந்தர் அனுபூதி 

9.கந்தர் அலங்காரம் 

10. கந்தர் அந்தாதி 

11. அபிராமி அந்தாதி 

12. முருகவேள் பன்னிரு திருமுறை - 1

13. முருகவேள் பன்னிரு திருமுறை - 2

14. முருகவேள் பன்னிரு திருமுறை - 3

15. முருகவேள் பன்னிரு திருமுறை - 4

16. சித்தர் வழிபாடு தொகுப்பு 

17. ஸ்ரீ ரமண கீதம் 

என பட்டியல் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. இந்த தினசரி கூட்டுப் பிரார்த்தனைகளுக்கு சில அன்பர்கள் கோரிக்கை அனுப்புவது உண்டு. இவற்றையும் குருவின் பாதத்தில் சிரத்தையோடு சமர்ப்பித்து வருகின்றோம். குருநாதர் அருளால் நிறைவேறிய  கோரிக்கைகளுக்கு நன்றி சொல்லியும் வருகின்றோம். மிக விரைவில் மேலே நாம் படித்த நூற்களை தனி தனி பதிவாக தர விரும்புகின்றோம். இந்த வரிசையில் முருகன் அருள் முன்னிற்க, குமரேச சதகம் பற்றி சில வார்த்தைகள் இங்கே பகிர விரும்புகின்றோம்.

குமரேச சதகம் என்ற நூல் புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் என்ற கிராமத்தை அடுத்துள்ள குமரமலையில் வீற்றிருக்கும் குமரேசக் கடவுளை முன்வைத்துப் பாடப் பெற்ற சதக நூலாகும். இச்சதக நூலை இயற்றியவர் குருபாததாசர் ஆவார். இந்நுல் இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முந்தைய பழமையை உடையது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.. குருபாததாசர் முருகப் பெருமானை முன்வைத்து உலகியல் சார்ந்த நூறு பாடல்களை இந்நூலுள் பாடியுள்ளார். இந்நூல் பொதுமைத் தன்மை வாய்ந்ததாகும். இதனுள் குறிக்கப்படும் நெறிகள் அனைவருக்கும் பொதுவான நெறிகளாக விளங்குகின்றன.

 அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் முதலானவர்களின் குலஇயல்புகளை எடுத்துரைப்பதாகத் தொடங்கும் இந்நூல், இலக்குமி வாழும் இடங்கள், மூதேவி வாழுமிடங்கள், நற்புலவர் இயல்பு, தீப்புலவர் இயல்பு போன்ற பல கருத்துகளைத் தொகுத்தளிப்பதாக  உள்ளது. பொதுக்கருத்துகளை உள்ளடக்கிப் பாடும் இந்நூல் ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் "மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே '' என்ற மகுடத்தை கொண்டு அமைவதாகப் பாடப் பெற்றுள்ளது.

 திருமகள் வந்தமர்ந்தால் ஒரு மனிதனுக்கு ஏற்படும் உயர்வுகளை இந்நூல் மிக அழகாக எடுத்துரைக்கின்றது. ஒருவருக்கு திருமகள் பார்வை ஏற்பட்டால் சிறப்பு உண்டாகும். செல்லும் பாதை எல்லாம் அவர் வழி போகும் பெரும்பாதையாகும். செல்லாத வார்த்தை எல்லாம் செல்லுபடியாகும். செல்வம் ஆறுபோல வந்து சேரும். மதியாதவர்கள் கூட மதிப்பர். சாதிதனில் உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டம் உண்டாகும். பகையாளி உறவாவான். பேச்சினில் பிழைவராது. வரும் என்று நினைத்த பொருள் வந்து சேரும். வல்லமைகள் மிக உண்டாகும் என்று திருமகள் வரவால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியல் இடுகிறது இந்நூல். இப்பாடலில் இடம்பெற்றுள்ள அத்தனைக் கருத்துக்களும் அனைவருக்கும் பொருந்தும்படியான பொதுமைத்தன்மை வாய்ந்தனவாகும்.

இக்கருத்துகள் அன்றும் இன்றும் என்றும் பொருந்தக் கூடியவை. இத்தகைய நிலையில் சொற்சிறப்பும், பொருள் சிறப்பும், கவிதைச் சிறப்பும் வாய்ந்த சதக நூலாக இந்நூல் விளங்குகின்றது.

நூலில் இருந்து சில பகுதிகள் பார்க்கும் முன்னர் குமரமலை முருகப்பெருமான் தரிசனம் பெற்று வருவோம்.



முதலில் வேல் உருவிலும் அதைத் தொடர்ந்து அவன் திருவுருவிலும் அவனே வழிகாட்டிய வித்தியாசமான- சக்திமிக்க திருத்தலம் குமரமலை.

சிறு வயது முதலே பழநிக்கு பாதயாத்திரை மேற்கொண்ட தீவிர முருக பக்தர் சேதுபதி. 80 வயதைக் கடந்த நிலையில், ஒருமுறை கார்த்திகையன்று பழனிக்கு காவடி எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு அவர் உடல் நோயுற்றது. “பழனிக்குச் சென்று வழிபட முடியவில்லையே? இனி நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்?” என்ற வேதனைப்பட்ட அவர் கனவில் தோன்றிய முருகன், இத்தனை ஆண்டுகள் நீ என்னைத் தேடி வந்தாய். இந்த ஆண்டு உன்னைத் தேடி நான் வருகிறேன். உன் ஊருக்கு அருகிலுள்ள குன்றில் சங்குச் செடிகள் வளர்ந்து கிடக்கும் இடத்திற்கு காலையில் நான் வருவேன். அங்கு வந்து என்னைத் தரிசனம் செய்து வழிபடு. நான் அங்கு குடிகொண்டதற்கு அடையாளமாக அந்த இடத்தில் ஒரு விபூதிப் பை, உத்திராட்ச மாலை, பிரம்பு, எலுமிச்சம் பழம் ஆகியவை இருக்கும்.

அந்த இடத்தில் மேற்கு நோக்கி ஒரு வேலை வைத்து நீயும் இப்பகுதி மக்களும் வழிபடுங்கள். இனி இந்தக் குன்று “குமரமலை” என்ற பெயருடன் விளங்கும். இப்பகுதி மக்கள் அனைவரும் அனைத்து நன்மைகளும் பெறுவார்கள்! என்று சொல்லி மறைந்தார். கனவில் முருகன் சொல்லியபடி சங்குச் செடிகளின் இடையில் இருந்த விபூதிப் பை, பிரம்பு, உத்திராட்ச மாலை, எலுமிச்சம் பழம் அனைத்தையும் கண்டு, பழனி முருகன் வந்தமர்ந்த இடத்தில் அருளாணைப்படி ஆள் உயர வேலை பிரதிஷ்டை செய்து, அப்பகுதி மக்களும் வழிபட்டனர்.

வேலை எடுத்து விட்டு, அந்த இடத்தில் பழனி தண்டாயுதபாணியின் திருவுருவத்தை எழுந்தருளச் செய்யலாம் என்று திட்டமிட்ட போதும் முருகன் தோன்றி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் இருக்கும் சிற்பியின் பெயரைச் சொல்லி, “அவர் ஒரு முருகன் சிலையை வடிவமைத்து வைத்திருக்கிறார். அதை நான் சொன்னதாகச் சொல்லி கேள், தருவார். வாங்கி வந்து நான் வந்து நின்ற சங்குச் செடி மண்டிக் கிடக்கும் இடத்தில் மேற்கு நோக்கி வைத்து வழிபடுங்கள்” என்று சொல்லி மறைந்தார்.

அந்த இடத்தில் கோவில் கட்டி பாலமுருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார். சுவாமிக்கு பாலதண்டாயுதபாணி என்ற திருநாமம் சூட்டினார். 1898ல், பல்லவராயர்கள் கோவிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்தனர்.

kumaramalai murugan temple entrance arch


வாதநோய்க்கு பிரார்த்தனை

வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குமரமலை அடிவாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதுடன், அர்ச்சனை செய்து வழிபட்டு செல்வதால் வாதம் நோய் நீங்குகிறது. நோய் நீங்கியவுடன் மலைப்படிகளில், தங்கள் பாதங்களை பதித்து முருகனுக்கு காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர். வாழ்க்கையில் சகல செல்வவளமும் பெற மூலிகைச்சாறு, நெய், பால், விபூதி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

வேலுக்கு வளையல்

இப்பகுதி பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியன்று அர்த்தமண்டபத்திலுள்ள வேலில் வளையல்களை கட்டி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்தால் பிரசவம் எளிமையாகும் என்பது நம்பிக்கை. இவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு வயதானவுடன் காது குத்தும் நேர்த்திக்கடனையும் இங்கு செய்கின்றனர். குமரமலைக்கு சஷ்டி திதிகளில் வந்து விரதம் இருப்பதன் மூலம் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் செய்வதாக நம்பிக்கையுள்ளது.

சங்கு சுனைத்தீர்த்தம்

குமரமலைக்கு மேல் சங்கு வடிவிலான சுனைத்தீர்த்தம் உள்ளது. இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ளது. இங்கிருந்தே சுவாமிஅபிஷேகத்துக்கு தேவையான புனித நீர் எடுக்கப்படுகிறது. கோவிலில் வழங்கப்படும் இந்த தீர்த்தத்தை பக்தர்கள் பருகுவதன் மூலம் நோய் நொடிகள் நீங்குவதாகவும் நம்பிக்கையுள்ளது. பங்குனி உத்திரத்தன்று, பத்தாம் திருநாளில் அருகிலுள்ள குன்னக்குடிப்பட்டியிலுள்ள வெள்ளாற்றில் சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.

kumaramalai murugan temple theertham

நேர்த்திக்கடன்: முருகனுக்கு அபிஷேகம் செய்தும், பால்குடம் எடுத்தும், காதுகுத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

 திருச்செந்தூரில் மூலவருக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் அமைக்கப்பட்ட இடைவெளியில் காதை வைத்துக் கேட்டால் ஓம் என்று ஒலிப்பதைக் கேட்கலாம்.

அதேபோல் இங்கு இடும்பன் சந்நிதிக்கு முன்னால் 24 மணி நேரமும் கடற்கரை காற்றுபோல் இதமான காற்று வீசுவதை அனுபவிக்கலாம். எதிரில் மரங்களோ குளமோ எதுவுமில்லை. இது ஆச்சரியம்!

குமரமலை முருகனின் பக்தர் முத்துமீனாட்சி கவிராயர் தினசரி மலை அடிவாரத்தில் உள்ள சங்குக் குளத்தில் தண்ணீர் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து நாள்தோறும் வழிபட்டு முருகன் சந்நிதிமுன் அமர்ந்து தவம் செய்து தினமும் ஒரு பாடல் வீதம் 100 பாடல்களைப் பாடி முடித்தார்.அவர் எழுதிய 100 பாடல்களையும் நூலாகத் தொகுத்து “குமரேச சதகம்’ என்று பெயரிட்டு, தன் பெய ரையும் “குருபாத தாசர்’ என்று மாற்றிக் கொண்டார். அந்த நூல் பக்திப் பாடல் மட்டுமல்ல; ஒவ்வொருவரும் படித்து, உணர்ந்து, நடைமுறைப்படுத்த வேண்டிய அறநூல்.

இந்தக் குமரமலை குமரேசனை வழிபடும் பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி அடைகிறார்கள். நீண்ட ஆயுளும் நிறை செல்வமும் நோயற்ற வாழ்வும் மணமாலையும் மக்கட் பேறும் கிடைக்கும்.

திருவிழா: சித்திரை வருடப் பிறப்பு விழா, வைகாசி விசாகம், ஆடி வெள்ளியில் பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர். ஐப்பசியில் கந்தசஷ்டி, மாதந்தோறும் கார்த்திகை, திருக்கார்த்திகை, சோமவார விழா, தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆங்கில வருடப் பிறப்பன்று படிபூஜை விழா என சிறப்பாக திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.



குமரமலை முருகப் பெருமான் தரிசனம் பெறுவோம். குறைவின்றி வாழ்வோம். கீழே உள்ள திருநீற்று படத்தை கண்டு இப்பதிவை முழுமை செய்கின்றோம். 


குமரேச சதகம் கூறும் திருநீறு பற்றி , அடுத்த பதிவில் சிந்திப்போம். 

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீள்பதிவாக:-

 பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_27.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023  -  https://tut-temples.blogspot.com/2023/06/22062023.html

 அருள்மிகு ஸ்ரீ சற்குரு சுவாமிகள் - 113 ஆம் ஆண்டு குருபூஜை விழா (19.06.2023 முதல் 21.06.2023 வரை) - https://tut-temples.blogspot.com/2023/06/113-19062023-21062023.html

 திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023  - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

 அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_16.html

 ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

 ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

 அன்னதானப் பெருஞானம் அத்தனையும் தந்திடுமே என்றுரைத்த ஏகாந்த என்றுமொளிர் குருஜோதி!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! அரோகரா!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_27.html

தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html

குருவருளால் ஏழாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2023/04/tut.html

ஆறாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2022/04/tut.html

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

 பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் 104 வது ஜெயந்தி விழா - 01.12.2022 - https://tut-temples.blogspot.com/2022/11/104-01122022.html

 கோஅருணை சலத்தில் நின்ற "குகை நவசிவாயலிங்கம்" - ஸ்ரீலஸ்ரீ குகைநமசிவாயர் 522 ஆம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2022/11/522.html

பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் ஜெயந்தி விழா - 01.12.2021 - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

 யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 116 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2021/09/116.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

No comments:

Post a Comment