அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று எங்கு பார்த்தாலும் பல குருமார்களின் உபதேசங்கள் காணக் கிடைக்கின்றது. மந்திரம் சொல்லி, யந்திரம் போட்டு காசு வாங்கி, ரெண்டு கோவிலுக்கு போக சொல்லி என பல பரிகாரங்கள் கிடைக்கின்றது. ஆனால் இவற்றை முறையாக பின்பற்றினால் தான் பலன் கிடைக்கும். கோவிலுக்கு செல்வது எப்படி என்று நாம் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் சொன்னார்கள் கோயிலுக்கு சென்றோம் ஆனால் பலனில்லை என்றால் கோயிலுக்கு செல்வதற்கென ஒரு முறை உள்ளது. சுமார் குறைந்தது 3 மணி நேரமாவது கோயிலில் இருந்து அந்த ஆற்றலை உள்வாங்கினால் தான் நாம் வேண்டியது கிடைக்கும்.
சகல பிரச்சினைக்கும் சகலவிதமான ருண ரோகத்துக்கும் சகல விதமான தோஷ நிவாரணத்துக்கும் சகலவிதமான காரியனுகூலத்துக்கும் உள்ள ஒரே உபதேசம் ...
" சத்யம் வத; தர்மம் சர ;"
சத்தியத்தை பேசு , தர்மத்தை கடைபிடி. அவ்வளவுதான்...
இதுக்கு மேலே ஒரு உபதேசமோ பீஜ மந்திரமோ இல்லவே இல்லை...இந்த இரண்டையும் கடைப்பிடித்து வாழ்பவனுக்குள் பகவானே அடக்கம்...இதில் நமக்கு எள்ளளவும் சந்தேகம்.இல்லை..
சத்தியத்தை பேசுன்னா ...பொய் பேசாதேன்னு அர்த்தம்.... தர்மத்தை கடைபிடின்னா அதர்மத்தின் பாதையில் நடக்காதேன்னு அர்த்தம்...
இதனைத்தான் நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானும் அடிக்கடி கூறி வருகின்றார். இதனையொட்டி இன்றைய பதிவில் அறத்தைப் போற்றும் பல படங்களை இணைத்துள்ளோம்.ஒவ்வொன்றையும் மெதுவாக படித்துப் பார்த்து பயன்பெற வேண்டுகின்றோம்.
இந்த நிலையில் காணும் போது , குருவருளால் இந்த ஆண்டில் புதிய சேவையாக நீர் மோர் சேவை கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்தோம். சுமார் ரூ.300/- அளவில் தினமும் நாள் தவறாது 50 இறை அன்பர்கள் பயன் பெற்று வருகின்றார்கள். ஆரம்பத்தில் சுமார் 10 பாக்கெட்டுக்களில் மோர் விநியோகம் செய்தோம். பின்னர் நம் வீட்டிலிருந்து பாத்திரம் எடுத்துக் கொண்டு ரூ.150 என்ற அளவில் வாங்கி, அதற்கென பேப்பர் டம்ளரில் சின்னாளபட்டி சந்தையில் , பூஞ்சோலை சாலையில் என கொடுத்து வந்தோம். மீண்டும் குருவருளால் ஒரு தேநீர்கடையில் பேசி, மண்பானையில் வைத்து தினமும் மோர் சேவை செய்ய கேட்டு, அவர்களும் சரி என்று கூறியதால், உடனே அதற்கென மண் பானை, இரண்டு டம்ளர் என வாங்கி, அன்றே மோர் சேவை ஆரம்பித்தோம். குருவருளால் நேற்று வரை 100 நாட்களை கடந்து உள்ளோம். 100 என்றாலே ஒரு மகிழ்ச்சி தானே. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அன்பர்களிடம் இந்த சேவையை தொடரலாமா? என்று கேட்டதற்கு, அனைவரும் தொடரலாம் என்று கூறியதால், குருவருளால் மீண்டும் தொடந்து வருகின்றோம். இந்த சேவையில் பல்வேறு அன்பர்கள் பொருளுதவி செய்து வருகின்றார்கள். இதோ. நம் TUT தளத்தின் மோர் சேவை படங்களை அடுத்த பதிவில் பகிர்கின்றோம்.
No comments:
Post a Comment