"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, August 17, 2024

ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம்

                                                               இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தமிழ் வருடத்தில் திரு குரோதி ஆண்டில் ஆவணி மாதத்தில் உள்ளோம்  நம் குருநாதர் அகத்திய பெருமான் அருளாலும், சித்தர் பெருமக்களின் ஆசியாலும் தொடர்ந்து நம் தளம் சார்பில் சேவைகள் நடைபெற்று வருகின்றது.ஆவணி மாத உத்தரவாக அகத்தியர் பெருமான் அருளிய வாக்கினை இன்று சமர்பிக்கின்றோம். இதன் பொருட்டு, ஆவணி மாதம் நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும் என்று இன்றைய பதிவினை தொடர்கின்றோம். ஆவணி மாதம் பேசுமா? என்பது கற்பனை அல்ல..உண்மையே..! நாம் பரிபூரண சரணாகதியில் இருந்தால் மாதம் என்ன? கல்லும் பேசும்! நாமும் இயற்கையுடன் தினமும் பேசலாம், இறையுடன் ஒன்றி வாழலாம் என்பதே குருநாதர் அகத்திய பெருமான் நமக்கு காட்டி வருகின்ற வழி ஆகும்.

குருநாதர் அகத்திய பெருமான் காட்டி வருகின்ற வழியில் நாம் பயணிக்க வேண்டும் என்றால் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த பதிவு உங்கள் கண்ணில் படும். கண்ணில் பட்டால் மட்டும் போதுமா? கருத்தில் நுழைய வேண்டாமா? அடுத்து கருத்தில் நுழைந்தால் போதுமா? கருத்தை கைக்கொண்டு செயலாக்கம் செய்ய வேண்டும். அப்படியென்றால் இதற்கு அடிப்படையாக இருப்பதே புண்ணியம் தான். ஏதோ நாம் செஞ்ச புண்ணியம். நம் பெற்றோர் செய்த புண்ணியம். இவற்றால் நமக்கு குருநாதர் அகத்திய பெருமான் ஆசி கிடைத்து வருகின்றது.








விநாயகர் அகவலை ஓத அடியார்கள் அனைவரும் ஒன்றிணைவோம்!

விநாயகர் அகவல் பற்றி சில செய்திகளை சிந்திப்போம்.

விநாயகர் என்றாலே வினைகளை வேரோடு அழிப்பவர். எனவே தான் வினை தீர்க்கும் விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார். அதிலும் விநாயகர் வினை தீர்ப்பவர் என்றால் இன்னும் அவரை துதித்து பாடி வேண்டுவது இன்னும் நம் வினைகளை நீக்கும் என்பது கண்கூடு. சரி..அகவல் என்றால் என்ன ? அழைத்தல் என்று பொருள் கொள்ளலாம். அகவல் என்று நாம் ஒளவைப் பாட்டி நமக்கு அருளிய விநாயகர் அகவல் மற்றும் வள்ளலார் அருளிய அருட்பெருஞ்சோதி அகவல் என இரண்டு நூற்கள் மட்டுமே அகவல் என்ற பெயர் தாங்கி உள்ளது. இங்கே நாம் விநாயகரை அழைக்க இருக்கின்றோம். எனவே இது விநாயகர் அகவல் என்று பொருள் பெறுகின்றது.



விநாயகர் அகவல் தமிழ் மூதாட்டியான அவ்வைப் பாட்டியால் விநாயகரைக் குறித்து பாடப் பெற்றது. எல்லா இடத்திலும் இருக்கும் பிள்ளையாரின் தோற்றப் பெருமைகள், யோகாசன மூச்சுப் பயிற்சி ஆகியவை பற்றி இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.வழிபாடு மற்றும் யோகாசன பயிற்சியின் மூலம் தன்னையும், இறைவனையும் அறியும் நிலை பற்றி விநாயகர் அகவல் விளக்குகிறது.

விநாயகர் அகவல் தோன்றிய விதத்தை இனி காண இருக்கின்றோம்.

ஒரு முறை சுந்தரரும், அவரது நண்பரான சேரமான் பெருமானும் திருகயிலாயத்தில் சிவபெருமானின் தரிசனம் வேண்டி கையிலையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

வழியில் விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவ்வை மூதாட்டியைக் கண்டனர்.

அப்போது அவ்வை அவர்களிடம் “நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்று கேட்டார். அவ்வையிடம் அவர்கள் இருவரும் “நாங்கள் கையிலாயத்தில் சிவபெருமானின் தரிசனம் பெற போய் கொண்டிருக்கிறோம்.” என்றனர். 

அதனைக் கேட்ட அவ்வைப் பாட்டிக்கும் சிவபெருமானின் கையிலாய தரிசனத்தைக் காணும் எண்ணம் ஏற்பட்டது. அதனால் வழிபாட்டினை அவசரமாக முடிக்கத் தயாரானார் அவ்வையார்.

அவ்வையின் எண்ணத்தை அறிந்த விநாயகப் பெருமான் “அவ்வையே என்னைப் பற்றி ஒரு பாடல் பாடேன். நானே உன்னை கையிலைக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார்.

அவ்வையாரும் ஞானத்தின் வடிவமான விநாயகப் பெருமானைப் பற்றி சீதக்களப எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். பாடல் பாடி முடித்ததும் விநாயகப் பெருமான் தனது துதிக்கையில் அவ்வையை இறுத்தி கையிலாயத்தில் சேர்த்தார்.

அவ்வையாரும் சுந்தரர் மற்றும் சேரமானுக்கு முன்னால் சிவபெருமானின் தரிசனம் பெற்றார்.

விநாயகப்பெருமானைப் பற்றி அவ்வை பாடிய சீதக்களப எனத் தொடங்கும் பாடலே விநாயகர் அகவல் என்று அழைக்கப்படுகிறது.

விநாயகர் வழிபாட்டில் இப்பாடலைப் பாடி மனமுருகி நல்லவற்றை வேண்டினால் நமக்கு அவற்றை விநாயகப்பெருமான் விரைந்து வழங்குவார்.

அவ்வைப் பாட்டியை கையிலாயத்துக்கு விரைந்து கொண்டு சென்ற பிள்ளையார் திருக்கோவிலூர் என்னும் திருத்தலத்தில் அருள்புரிகிறார்.

இவரது திருநாமம் பெரிய யானை கணபதி என்பதாகும். இத்தல இறைவன் வீரட்டேஸ்வரர் என்பவராவார். அம்மை சிவானந்தவல்லி என்று அழைக்கப்படுகிறார். இத்தலம் சிவனின் வீரத்திருவிளையாடல்கள் நிகழ்ந்த அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகும்.

இனி அனைவரும் விநாயகர் அகவல்  பாராயணம் செய்ய இருக்கின்றோம்.


விநாயகர் அகவல் பாடல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

 

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

 

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!

 

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

 

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

 

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

 

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றும் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

 

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

 

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

 

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்

 

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

 

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

 

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

 

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!




திருச்சிற்றம்பலம்

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

 TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

 திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2019 அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/10/2019.html

 சஷ்(ட்)டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு (1) - https://tut-temples.blogspot.com/2019/10/1.html

 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... குரு பெயர்ச்சி சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_24.html

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4) - https://tut-temples.blogspot.com/2019/10/4.html

கந்த சஷ்டி வழிபாடு & ஆதி நடராசர் திருச்சபையின் முற்றோதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_31.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 13- தேனி கணேச கந்த பெருமாள் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/10/13.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 12 - தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/10/12.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 11 - கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்! - https://tut-temples.blogspot.com/2023/09/11.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 10 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/10.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 9 - வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/9.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html


முன்னவனே யானை முகத்தவனே - விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_16.html

மூத்தோனை வணங்கு - விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2021/09/blog-post_9.html

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_59.html

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி, விநாயகர் சதுர்த்தி - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் பாதம் போற்றுவோம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_22.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் சதுர்த்தி பெருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_35.html

 விநாயகர் சதுர்த்தி தின விழா ...தொடர்ச்சி (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1_30.html

 TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temples.blogspot.com/2019/08/tut_29.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

No comments:

Post a Comment