"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, October 8, 2023

தினம் ஒரு முருகன் ஆலயம் - 12 - தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகன் அருள் முன்னிற்க, இன்றைய ஆயில்ய வழிபாடு கூடுவாஞ்சேரியில் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. சென்ற மாத ஆவணி ஆயில்ய வழிபாட்டில் நீண்ட நாட்களுக்கு பின்னர் குருநாதரை நேரில் தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. அனைத்தும் அவனருளால் தான் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டிற்கான 108 தீப வழிபாட்டிற்கு குருவிடம் விண்ணப்பம் வைத்துள்ளோம். தினம் ஒரு முருகன் ஆலயம் தொடர்பதிவில் தினம் ஒரு முருகன் ஆலய தரிசனம் கண்டு, திருப்புகழ் படித்து வருகின்றோம். தற்போது வரை அருணகிரிநாதரின் வழியில் 5 திருப்புகழ் திருக்கோயில்  தரிசனம் கண்டு வந்துள்ளோம்.  குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று நித்தமும் முருகப் பெருமானிடம் வேண்டி வருகின்றோம்.

முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!

என்று வேண்டி இன்றைய பதிவில் மீண்டும் முருகப் பெருமான் தரிசனம் காண உள்ளோம்.

 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  

2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - 3 திருப்புகழ் 

3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - 4 திருப்புகழ் 

4. திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - 1 திருப்புகழ்

5. சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் 

6. விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் 

7. சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 

8.  திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் 

9. வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் 

10. சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

11. கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்

தெய்வீக உணர்வை ஏற்படுத்தி அருளுகின்ற  தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில் தரிசனம் காண இருக்கின்றோம்.

ஆனந்தம் தரும் தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில்

அருள்மிகு முருகன் திருக்கோவில்

பழனிசெட்டிபட்டி

தேனி-625531

தேனி மாவட்டம்

இருப்பிடம்: தேனி பேருந்து நிலையம் 3 கிமீ, கம்பம் 37 கிமீ

மூலவர்: முருகன்

உற்சவர்: முருகப்பெருமான்

தலமகிமை:

தேனி மாவட்டம் தேனி நகரம் பேருந்து நிலையத்திலிருந்து தேனி-கம்பம் சாலையில் 30 கிமீ தூரத்தில் உள்ள பழனிசெட்டிபட்டியில் ஆனந்தம் தரும் முருகன் கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் இக்கோவிலில் மூலவராக அருளாட்சி செய்கின்றார். இக்கோவில் கம்பம் நகரிலிருந்து 37 கிமீ தொலைவில் உள்ளது.

இக்கோவிலில் முருகப்பெருமானுக்குரிய பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன, கிருத்திகை, சஷ்டி திங்கங்களில் விசேஷ பூஜைகள் உண்டு.

தல வரலாறு:

பழனிசெட்டிபட்டி முருகன் கோவில் ஊர் பக்தர்கள் உதவியுடன் நிறுவப்பட்டது.

தல அமைப்பு:

இக்கோவிலின் கருவறையில் மூலவராக முருகன் வடிவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், ஐயப்பன், சிவன், அம்பாள், பெருமாள், தட்சிணாமூர்த்தி. துர்க்கை, நவக்கிரகங்கள் முதலான தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி

பிரார்த்தனை:

ஆனந்தம் கிடைக்க, நினைத்தது நடந்தேற, குடும்ப வாழ்வு சிறக்க, வியாபார சிறக்க, விவசாயம் செழிக்க

நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், அன்னதானம்

திறக்கும் நேரம்:

காலை 7-9 மாலை 5-8


                                             ஆனந்தம் தரும் தேனி பழனிசெட்டிபட்டி முருகன்


                                      நினைத்தது நடந்தேற அருளும் தேனி பழனிசெட்டிபட்டி முருகன்


நினைத்தது நடந்தேற அருளும் தேனி பழனிசெட்டிபட்டி முருகன் திருத்தாள் பணிந்து வணங்குவோம்!

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தினம் ஒரு முருகன் ஆலயம் - 11 - கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்! - https://tut-temples.blogspot.com/2023/09/11.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 10 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/10.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 9 - வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/9.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

No comments:

Post a Comment