"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, October 10, 2023

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் குருவின் தாள் பணிந்து நம் குழுவின் சார்பில் வழக்கமான சேவைகளுடன் மஹாளய பட்ச சேவையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இவை அனைத்தும் குருவின் அருளாலே தான் நடைபெற்று வருகின்றது என்பது கண்கூடாக தெரிகின்றது. மனித முயற்சியால் இது நடைபெறவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். நம்மால் என்ன செய்ய முடியும். ஒன்றுமே செய்ய இயலாது. நாம் வெறும் கருவிகளே. கருவியாய் இருந்து கொண்டே இங்கே நாம் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். இறைவா! அனைத்தும் நீயே என்று சரணாகதி அடைவதை தவிர நம்மால் செய்வது ஒன்றும் அறியோம் பராபரமே! இந்த நிலையில் ஆவணி ஆயில்ய வழிபாட்டை இன்றைய பதிவில் தொட்டுக் காட்ட விழைகின்றோம்.

அன்றைய தினம் மாலை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலுக்கு சென்றோம். ஆனால் அன்று காலை ஆவணி ஆயில்ய அழைப்பிதழை சிவத்திரு வேதகிரி ஐயாவிற்கு பகிர்ந்தோம். அன்று அவர் நம்மை அழைத்து கோயில் இருப்பிடம் பற்றி விசாரிக்க, நாம் அதற்கு பதில் கூறிவிட்டு, வேதகிரி ஐயா அன்று மாலை வந்தால் சிறப்பாக இருக்கும் என்று மனதுள் எண்ணினோம். அவரும் அன்று மாலை பிரதோஷ தரிசனம் பெறவும் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் வந்து சேர்ந்தார். நாமும் ஐயாவை மரியாதை செய்ய வேண்டும் என்றெண்ணி துண்டு,பழங்கள் என வாங்கி விட்டு மிக மிக தாமதமாகே சென்றோம். இரண்டு ஆண்டுகள் கழித்து , கூடுவாஞ்சேரியில் குருநாதர் தரிசனம் நேரில் பெற உள்ளோம் என்று உள்ளம் மகிழ்ந்து அனைவரும் ஆயில்ய வழிபாட்டிற்கு தயாரானோம்.



அன்றைய தினம் பிரதோஷம் என்பதால் சிறப்பு அலங்காரத்தில் பெருமானார் தரிசனம் பெற்றோம்.






அடுத்து குருக்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு , ஆயில்ய வழிபாட்டிற்கு தயாரானோம். வழக்கம் போல் அபிஷேகங்கள் நடைபெற்றது. நிறைவாக தீப ஆராதனை நடைபெற்றது. நீங்களும் கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள்.





தீப ஆராதனை பெற்ற பிறகு, சிவத்திரு.வேதகிரி ஐயா அவர்கள் சிறிய சொற்பொழிவு ஆற்றினார்கள். மேலும் அகத்தியர் வழிபாடு மூன்றாம் தொகுதி குருநாதரின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்தோம்.பின்னர் வேதகிரி ஐயா அவர்களை நம் தளம் சார்பில் மரியாதை செய்து, அவரிடம்அகத்தியர் வழிபாடு புத்தகம் கொடுத்தோம். 








அகத்தியர் வழிபாடு நூலுடன் 











பின்னர் மீண்டும் மீண்டும் வந்து, குருநாதரின் தரிசனத்தை பெற்றுக் கொண்டே இருந்தோம். மீண்டும் மீண்டும் எதற்காக வந்தோம்? மீண்டும் ஒரு பிறவி வேண்டாம் அப்பா! என்று மனதுள் உரைக்க தானே! அகத்தியர் ஞானமும் இதைத் தானே கூறுகின்றது. தற்போது பதிவின் தலைப்பையும் உற்று நோக்குங்கள். இதனை அப்படியே அருணகிரிநாதரின் திருப்புகழில் கீழே படித்து மகிழ்வோம்.


ஞானம் பெற திருப்புகழ் 598 காலனிடத்து  (திருச்செங்கோடு)


தான தனத் ...... தனதான

......... பாடல் .........

காலனிடத் ...... தணுகாதே

காசினியிற் ...... பிறவாதே

சீலஅகத் ...... தியஞான

தேனமுதைத் ...... தருவாயே

மாலயனுக் ...... கரியானே

மாதவரைப் ...... பிரியானே

நாலுமறைப் ...... பொருளானே

நாககிரிப் ...... பெருமாளே. 

நற்குணம் வாய்ந்த அகத்திய முநிவருக்கு நீ அருளிய ஞானோபதேசம் செய்த தேன் போன்று இனிக்கும் நல்லமிர்தத்தை எனக்கும் தந்தருள்க!  என்று குருவிடம் வேண்டி பணிகின்றோம். இன்னும் சிந்தித்துப் பார்க்கும் போது கீழே குறிப்புகளாக தருகின்றோம்.

1. அகத்தியர் ஞானம் வேண்டி திருப்புகழ் பாடல் 

2. சிவத்திரு வேதகிரி ஐயா அவர்களின் சொற்பொழிவு 

3. அகத்தியர் வழிபாடு மூன்றாம் தொகுத்து - நூல் வழிபாடு 

4. குருநாதர் முன்பு, TUT கூட்டுப் பிரார்த்தனையில் சிவபுராணம் படித்தோம்.

இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது மீண்டும் மீண்டும் குருவருள் வேண்டி பணிவதை நம் மனம் விரும்புகின்றது.ஆவணி மாத ஆயில்ய தரிசன பதிவாக ஆரம்பித்து, குருவின் ஞானம் வேண்டி முழுமை செய்கின்றோம்.

திருச்சிற்றம்பலம்!

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தினம் ஒரு முருகன் ஆலயம் - 12 - தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/10/12.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 11 - கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்! - https://tut-temples.blogspot.com/2023/09/11.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 10 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/10.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 9 - வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/9.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

No comments:

Post a Comment