அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக சேவை மிக சிறப்பாக நடைபெற்றது. அன்னாபிஷேக சேவையாக வழக்கம் போல் பெருகமணி என்னும் தொன்மை வாய்ந்த திருத்தலத்தில்
உள்ளதே பழையூர் ஆலய அன்னாபிஷேகத்திற்கு நம் தளம் சார்பில் சிறு தொகை
கொடுக்க குருவருளால் பணிக்கப்பட்டோம். மேலும் அன்றைய தினம் தேனியில் 10
அன்பர்களுக்கு 4 இட்லி, சாம்பார் கொண்ட உணவுப் பொட்டலங்கள் காலை உணவாக
குருவருளால் பணிக்கப்பட்டோம். மேலும் ஐப்பசி பௌர்ணமி அன்று 14 மகளிருக்கு ரூ.3500 க்கு ( ரூ.250 க்கு ஒரு
சேலை) என குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டு, நம் தளத்தின் சார்பில்
தீபாவளி சேவை ஆரம்பித்துள்ளோம். இவை அனைத்தும் குருவருளால் தான் தான் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இனி சோற்றுக்குள் சொக்கன் தரிசனம் காண இருக்கின்றோம். நமக்கு கிடைத்த தரிசன பதிவை இங்கே பகிர விரும்புகின்றோம்.
1. கூடுவாஞ்சேரி மாமரத்து ஈஸ்வரர் அன்னாபிஷேக தரிசனம்
2. தஞ்சாவூர் பெரிய கோயில் அன்னாபிஷேக அலங்காரம்.
3. பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் தரிசனம்
4. திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் அன்னாபிஷேகம்
5. எழுசெம்பொன் கிராமத்தில் தென் திருகாளத்தீஸ்வரர் தரிசனம்
6.சர்வேஸ்வரர் ஆலயத்தில் இருந்து அன்னாபிஷேக தரிசனம்
7. திருஅண்ணாமலை தலத்தில் இருந்து தரிசனம் காண உள்ளோம்.
8. மத்தள மலையில் ( மேலச்சேரி ) மதலேஸ்வரர் தரிசனம்
9. திருச்சி திருவானைக்காவல் குபேர லிங்கம் அன்னாபிஷேகம்
10. திருப்பூர், தாராபுரம் ஸ்ரீ அண்ணாமலை ஈஸ்வரர் தரிசனம்
11. மதுரையில் இருந்து சொக்கநாதர் தரிசனம்
12. தேவதானப்பட்டியில் இருந்து அருள்மிகு மீனாட்சி அம்மன் உடனுறை சிவபெருமான் ஆலயம்
13. அகிலாண்டேஸ்வரர் அன்னாபிஷேக தரிசனம்
14. திருப்பூர் மாவட்டம் ஸ்ரீ ஆதி கைலாசநாதர் அருள்காட்சி
15. அருள்மிகு ஆனந்த வள்ளி உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம்.நும்பல்.சென்னை
16. திருவள்ளூர், பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம்
17. பழையூர் சிவன் திருத்தல அன்னாபிஷேகம் தரிசனம் காண இருக்கின்றோம்.
திருச்சி கரூர் இடையே பெருகமணி ரயில் நிலையத்திலிருந்து நங்கவரம்
செல்லும் பாதையில் இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளதே பழையூர் சிவாலயம்.
பெருகமணி என்னும் தொன்மை வாய்ந்த திருத்தலத்தில் உள்ளதே பழையூர். இறைவன்
ஸ்ரீஅகத்தீஸ்வரர். இறைவி ஸ்ரீஆனந்தவல்லி அம்மன்.
இதயத்தைக் காக்கும் துதியான
இருதய ஆகாசம் ஈரெட்டு நாளப் புடைக் கழிய மாதவத்து
வருதல் சிவபோதம் வந்துரைக்கப் பணித் தலையர் வார்த்த மாவரம்
மருதல மாமரத்துறை மந்தார மாமறையர் செருத்த வளித் துறையாம்
சுருதல மாமுனியும் இருதய ஈசத்தில் எழுந்த பதங் கண்டேன்
என்னும் பாடலை இத்தலத்தில் 16 முறை ஓதி 16 முறை இறைவனை வலம் வந்து வணங்குவதால் இதய நோயகள் அகலும்.
பழையூர் சிவத்தலத்தில் அமைந்துள்ள அகத்திய பூர்வம் என்னும் இடப்
பெயர்ச்சியால் இத்தல ஈசனின் வலது புறத்தில் ஆவுடையும் மாற்றத்தைக்
கொள்கிறது அல்லவா ? இது மிகவும் அபூர்வமான ஆவுடை புனிதமாகும்.
குருவருளால் 10 ஆண்டுகளாக இத்திருக்கோயிலில் அன்னாபிஷேகத்திற்கு நம்
தளம் சார்பில் சிறிய அளவில் பொருளுதவி செய்து வருகின்றோம்.
பௌர்ணமி அன்னாபிஷேகம் தரிசனம் இங்கே பார்க்கும் போது,
என்ன தவம் செய்தாயோ! அன்னமே (அரிசி)!
எத்தனை யுகம் காத்திருந்தாயோ
அன்னமே என் தலைவனை தழுவ
அடுத்த ஜென்மம் (வேண்டாம்)
இருந்தால் என் தந்தையை தழுவிய அரிசியாக பிறக்க வேண்டும்.
இன்று அன்னபிஷேகத்தில் ஒட்டி இருந்த ஒவ்வொரு பருக்கையும் லிங்கம் தான்
என்று உணர்த்தப்பட்டோம்.
ஒரே
பதிவில் எத்தனை தரிசனங்கள். மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகின்றது
அல்லவா? வான் கலந்த மாணிக்கவாசகர் கூறியது இங்கே நினைவில் தோன்றுகின்றது. இதில் சில ஆலயங்களில் நம் குருநாதர் ஜீவ ஓலையில் வாக்கு கூறியுள்ளார். இது போன்ற ஆலயங்களை நேரில் தரிசிக்க குருவருள் வேண்டி பணிகின்றோம்.
ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம்
திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
No comments:
Post a Comment