அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருநாதர் அருளால் ஐப்பசி மாத வழிபாட்டில் / சேவையில் சிறப்பாக கடைபிடித்து வருகின்றோம். ஐப்பசி உத்திரட்டாதி கோடகநல்லூர் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. ஐப்பசி மாத பௌர்ணமி முற்றோதுதல் டெலிக்ராம் செயலியில் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் இரவு 10:45 மணிக்கு தொடங்கிய திருவாசகம் முற்றோதுதல் நள்ளிரவு 02:45 மணிக்கு நிறைவு பெற்றது. சுமார் 4 மணி நேரம் ஆனது. கடந்த ஜூன் மாதத்தில் திருவாசகம் முற்றோதுதல் குருவருளால் ஆரம்பித்தோம்.இடையில் ஒரு மாதம் விட்டுவிட்டோம். நேற்றைய முற்றோதுதல் 4 ஆம் முறை நடைபெற்றது. தற்போது வரை அப்படியே படித்து வருகின்றோம். ஆனால் இன்னும் சிந்தை கலங்காது தியானிக்க வேண்டி வான் கலந்த மாணிக்கவாசகரிடம் வேண்டிப் பணிகின்றோம். உண்மையான பக்தி செய்வதற்கும் வேண்டுகின்றோம்.
இனி நம் குருநாதர் ஐப்பசி மாத அகத்தியப்பெருமானின் உத்தரவு! பற்றி இன்றைய பதிவில் காண இருக்கின்றோம்.
1. சித்தன் அருள் - 1201 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் உத்தரவு!
19/10/2022 நவமி திதி ஆயில்ய நட்சத்திரம் அன்று குருநாதர் அகத்திய பெருமான் இட்ட உத்தரவு!!!!
இவை என்று கூற அப்பனே ஐப்பசி மாதமான இம்மாதத்தில் அனைவரும் என் நதிகளான காவிரியிலும் தாமிரபரணியிலும் நீராடுதலை கட்டாயமாக செய்ய வேண்டும் அப்பனே
மனிதர்கள் அந்த தீய ஒளியில் இருந்து தப்பித்துக் கொள்ள நவகிரகங்களின் நன்மைகளைப் பெற நதிகளில் நீராடிவிட்டு நவகைலாயங்களையும் நவதிருப்பதிகளையும் நல்முறையாக பக்தியோடு தரிசனம் செய்தால் நன்மைகள் பெருகும் அப்பனே!!!!!
என்னுடைய நதிகள் ஆன காவிரியிலும் தாமிரபரணியிலும் இம்மாதத்தில் ஈசனும் பெருமாளும் இவையன்றி கூற பிரம்மாவும் நல்முறையாக வந்து நீராடிச்செல்வார்கள் அப்பனே!!!!
2. சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை)
ஆனாலும் இவற்றின் தன்மைகள் கூட நேர் எதை என்று எவற்றினின்று கூற அப்பனே ஆனால் இவ் மாதம் பின் எதை என்று சிறிதாக பின் வளிமண்டலத்திலிருந்து ஒரு ஒளி பின் தென்படும் அப்பனே!!!!
அது அண்ணாமலையிலே உதிக்கின்றது பின் இதை என்று கூட எவை என்று கூட ஐப்பசி பின் வரும் அதாவது எதை என்று கூட சிறிதளவு விரிவடையும் என்பேன் அப்பனே!!!
அது எங்கே விழுகின்றது என்றால் அப்பனே என் நதியான காவேரி நதியின் மீதே வந்து ஊர்ந்து செல்கின்றது என்பேன் அப்பனே!!!
இதையென்று அறிய அறிய அதனால் அங்கே குளிக்கச் சொன்னேன் யான்!!!!
ஆனால் இதையன்றி அறிய ஆனாலும் இவற்றின் தன்மைகளும் ஆனாலும் எப்படி பின் எதை என்று கூட நீராட வேண்டும் என்பதைக் கூட தெரியாமல்!!!
ஆனாலும் இவற்றின் தன்மைகள் கூட அதிகாலையிலே பின் தியானங்கள் செய்து அப்பொழுது கூட எதையும் நினைக்க கூடாது அப்பனே!!!
எவை என்று கூட இவ்வாறு அவ் மாதத்தில்(ஐப்பசி) என்னுடைய நதி அதாவது காவேரி ஆற்றில் பின் குதித்து நீராடி வந்து கொண்டிருந்தாலே (ஐப்பசி துலா ஸ்நானம்) அப்பனே நிச்சயம் எதை எவற்றினின்று கூற..
3. ஓதிமலையப்பன் தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு, மதுரை.
ஆனாலும் இதில் ஒரு சூட்சுமம் உண்டு என்பேன் அப்பனே ஐப்பசி மாதத்தில் நல் முறைகளாக யான் நான் உருவாக்கிய நீரில்(காவிரிநதி நீராடல் ) நவ நாட்கள்(9) நல் முறைகள் ஆகவே பின் நீரில் பணிந்து வணங்கி நல் முறைகள் ஆகவே பின் எந்தனை(அகத்தியரை) நினைத்து பின் நீராட அப்பனே பல பாவங்கள் போகும் என்பேன் இதனை நல் முறைகள் ஆகவே அப்பனே அம்மாவாசை திதியில் இருந்து இப்படியே செய்ய வேண்டும் என்பேன்.
ஓம் முருகா சரணம்!
எனவே வாய்ப்புள்ள அன்பர்கள் குருநாதர் அருளிய ஐப்பசி மாத உத்தரவை சிரமேற்கொண்டு செய்யும்படி வேண்டுகின்றோம். நதி நீராடலின் போது நதியை அன்னையாக கண்டு, காவிரி,தாமிரபரணி போன்ற ஆறுகளை மங்கல பொருட்களை ( ரவிக்கை துணி, மஞ்சள்,குங்குமம், தேன் , தீபம்,பால் ) சமர்ப்பித்து நதி வழிபாட்டையும் மேற்கொண்டு தங்களால் இயன்ற சேவைகளை செய்யும் படி வேண்டுகின்றோம்.
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
- மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
ஓம் ஸ்ரீ தாமிரபரணி தாயே போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_38.html
ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருக! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_3.html
நவ கைலாய திருத்தலங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_18.html
மார்கழி சிறப்பு பதிவு - நவ கைலாய திருத்தலங்கள் தரிசிக்கலாமே - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_22.html
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html
திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html
No comments:
Post a Comment