"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, October 16, 2023

தினம் ஒரு முருகன் ஆலயம் - 13- தேனி கணேச கந்த பெருமாள் கோவில்

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகன் அருள் முன்னிற்க,  பசுமலை புரட்டாசி சனிக்கிழமை  பெருமாள் வழிபாடு  மிக மிக சிறப்பாக நடைபெற்றது. சென்ற சனிக்கிழமை - கடைசி புரட்டாசி சனிக்கிழமை ஆலய வழிபாடு, அன்னசேவை , குருநாதர் தரிசனம் என அனைத்தும் ஒருங்கே கிடைத்தது. அன்றைய தினம் 108 தீப வழிபாடு குருவருளால் சிறப்பாக நடைபெற்றது. மனித முயற்சியால் இது நடைபெறவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும். நம்மால் என்ன செய்ய முடியும். ஒன்றுமே செய்ய இயலாது. நாம் வெறும் கருவிகளே. கருவியாய் இருந்து கொண்டே இங்கே நாம் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். இறைவா! அனைத்தும் நீயே என்று சரணாகதி அடைவதை தவிர நம்மால் செய்வது ஒன்றும் அறியோம் பராபரமே!என்ற நிலையில் தான் என்றும் நாம் இருந்து வருகின்றோம். பசுமலை வழிபாட்டு நிகழ்வின் துளிகளை சமர்ப்பிக்கின்றோம். 

- புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசனம்

- மகாளய பட்ச அமாவாசை அன்று குருநாதர் தரிசனம்

- நிறைவாக தரமாக பூஜை பொருட்கள்

- அனைத்து இறை மூர்த்தங்களுக்கும் பூ மாலை சாற்றினோம்

- பரமசிவன் ஐயாவோடு இணைந்த அன்னசேவையில் பங்கேற்பு

- மூலவர், குருநாதர், பெருமாளுக்கு வஸ்திரம்

- கந்தர் அனுபூதி, திருப்புகழ் படித்த வழிபாட்டில் - தீப மங்கள ஜோதி நமோ நம என்று கூறிய போது - குருநாதரிடம் பெற்ற தீப ஆராதனை

- பெருமாள் முன்பு 108 தீப வழிபாட்டில் லோக ஷேமத்திற்கு பிரார்த்தனை

என ஒவ்வொரு நிகழ்விலும் குருவின் அருளை உணர்ந்தோம். வழக்கம் போல் பொருளுதவி, அருளுதவி செய்கின்ற அனைவருக்கும் நன்றி கூறி, அன்று படித்த திருப்புகழை என்றும் படிக்க வேண்டி நிற்கின்றோம்.


திருப்புகழ் 170 நாத விந்து  (பழநி)


தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான

......... பாடல் .........

நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

அன்றைய தினத்தில்  ஈர முங்குரு சீர்பா தசேவையு மறவாத என்ற வரிகள் நம்மை ஈர்த்தது. அதாவது கருணை, குருவின் திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும் என்று வேண்டி பணிந்தோம்.

தினம் ஒரு முருகன் ஆலயம் தொடர்பதிவில் தினம் ஒரு முருகன் ஆலய தரிசனம் கண்டு, திருப்புகழ் படித்து வருகின்றோம். தற்போது வரை அருணகிரிநாதரின் வழியில் 5 திருப்புகழ் திருக்கோயில்  தரிசனம் கண்டு வந்துள்ளோம்.  குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று நித்தமும் முருகப் பெருமானிடம் வேண்டி வருகின்றோம்.


முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!

என்று வேண்டி இன்றைய பதிவில் மீண்டும் முருகப் பெருமான் தரிசனம் காண உள்ளோம்.

 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  

2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - 3 திருப்புகழ் 

3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - 4 திருப்புகழ் 

4. திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - 1 திருப்புகழ்

5. சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் 

6. விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் 

7. சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 

8.  திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் 

9. வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் 

10. சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

11. கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்

12. தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில் 

இன்றைய பதிவில் வேண்டியது அனைத்தும் அருளும் தேனி கணேச கந்த பெருமாள் கோவில் தரிசனம் பெற உள்ளோம்.

அருள்மிகு கணேச கந்த பெருமாள் திருக்கோவில்

NRT Nagar [என்.ஆர்.டி. நகர்]

தேனி-625531

தேனி மாவட்டம்

இருப்பிடம்: தேனி பேருந்து நிலையம் 2 கிமீ

மூலவர்: வடிவழகர்

தேவியர்: வள்ளி, குஞ்சரி (தெய்வானை)

தலமகிமை:

தேனி மாவட்டம் தேனி மாநர பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவில் இருக்கும் என்.ஆர்.டி. நகரில் கருணை பொங்க அனைத்தும் அருளும் கணேச கந்த பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் வடிவழகர் வள்ளி, குஞ்சரி (தெய்வானை) சமேதராக திருக்காட்சி அருள்கின்றார். இங்கு கணபதியும் முக்கிய கடவுளாக உள்ளதால், இத்திருக்கோவில் கணேச கந்த பெருமாள் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் கந்த பெருமாளை வழிபடுவோருக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து நற்பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோவிலில் கந்த சஷ்டி ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் அபிஷேகம், ராஜ அலங்காரம் உட்பட சிறப்பு அலங்காரங்கள், தீபாராதனை நடைபெறுகின்றது. ஏராளமான பக்தர்கள் முதல் நாள் காப்பு கட்டி சஷ்டி விரதம் கடைபிடிக்கின்றனர். பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம் உட்பட வேலவனின் திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடக்கின்றன. ஆற்றல் மிக்க அனைத்து தெய்வங்களும் இங்கு வீற்றிருப்பதால் விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி உட்பட அனைத்து திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

தல வரலாறு:

தேனி மாநகர பக்தர்கள் மற்றும் புரவலர்கள் பேருதவியுடன் கணேச கந்த பெருமாள் கோவில் கட்டப்பட்டது. சமீபத்தில் புதிய சாய்பாபா கோவில் அருகில் நிறுவப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பம்சம்.

தல அமைப்பு:

அழகிய இறைவன் சிற்பங்களுடன் கூடிய இக்கோவில் கருவறையில் முருகப்பெருமான் வடிவழகர் என்ற திருப்பெயருடன் வள்ளி, குஞ்சரி (தெய்வானை) உடன் கருணை பொங்க வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் கன்னி மூல கணபதி, சித்தி விநாயகர், சிவபெருமான், சண்டிகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சௌந்தரராஜ பெருமாள், லட்சுமி ஹயக்ரீவர், யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், மங்கள் வராஹி, ராகவேந்திர்,ர தட்சிணாமூர்த்தி, அஷ்ட புஜ துர்க்கை, நாக தெய்வங்கள், நவக்கிரகங்கள் மற்றும் கால பைரவர் முதலான தெய்வங்கள் தனித் தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். சக்தி மிக்க சாய்பாபா அருகில் தனிக் கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

திருவிழா:

கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, ஏகாதசி, விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி

பிரார்த்தனை:

வேண்டியது அனைத்தும் கிட்ட, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, ஐஸ்வர்யம் பெருக, நோய்கள் தீர, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உண்டாக

நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்

ஐஸ்வர்யம் பெருக அருளும் தேனி கணேச கந்த பெருமாள் கோவில் வடிவழகரை மனமுருக வேண்டுவோம்!


              ஐஸ்வர்யம் பெருக அருளும் தேனி கணேச கந்த பெருமாள் கோவில் வடிவழகர்


         வேண்டியது அனைத்தும் அருளும் தேனி கணேச கந்த பெருமாள் கோவில் வடிவழகர்

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 12 - தேனி பழனிசெட்டிபட்டி முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/10/12.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 11 - கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில்! - https://tut-temples.blogspot.com/2023/09/11.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 10 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/10.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 9 - வேலூர் மாவட்டம், மேல்மாயில் - மயிலாடும் மலை - சக்திவேல் முருகன் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/9.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 8 - திருப்புகழ் தலம் முத்துகுமாரருடன் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/8.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 7 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/7.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - https://muthukumaranbami.blogspot.com/2022/04/316.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

No comments:

Post a Comment