இறைவா.! அனைத்தும் நீயே..!!
சர்வம் சிவார்ப்பணம்...!!!
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால்
ஆடி மாத சேவைகளை வழக்கம் போல் நடைபெற்று வருகின்றது. குருநாதர் அருளிய
வாக்கினில் சித்திரை மாத வழிபாடு பற்றி கூறி இருந்தோம். இதில் சித்திரை
மாத பல புண்ணியங்களை சேர்த்தால் தான் அது வருடம் முழுமைக்கும் இருக்கும்
என்றும் அந்த புண்ணியத்தோடு காக்கும் சிவன் என்று போற்றப்படும் காசியில்
கால் வைத்தலே வை காசி என்று வைகாசி மாத காசி யாத்திரை பற்றி கூறி
உள்ளார்கள். இதனை கொண்டு பார்க்கும் போது பொதுவாக ஆனி மாதத்தில் பௌர்ணமி
வழிபாட்டை செய்ய வேண்டும். இவை அனைத்தும் சிறப்பு வழிபாடு என்று
இருந்தாலும், நித்திய வழிபாடு எனபது நமக்கு கடமையாக கொள்ள வேண்டும். இந்த
நிலையில் நேற்று நம் குருநாதர் ஆடி மாத வழிபாடு என்று கொடுத்த வாக்கினை
இன்று குருவருளால் அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம்.
இது 24/7/2024 அன்று திருவண்ணாமலையில் வைத்து குருநாதர் கூறிய உத்தரவு.
"என்
பக்தர்கள் அனைவரும் இவ் ஆடி மாதத்தில் வெள்ளிக்கிழமையில் ஏதேனும் அம்பாள்
ஆலயத்திற்கு சென்று தேவிக்கு வஸ்திரங்களை வழங்கி அன்னதானம் செய்யச் சொல்
அப்பனே " என்றார்!
தேவியின் ஆசிர்வாதம் அனைவருக்கும் கிடைத்து மாற்றங்கள் ஏற்படும் அப்பனே! என்று வாக்குகளில் குறிப்பிட்டுள்ளார்
நிறைய
அடியவர்கள் திரு ஜானகிராமன் ஐயாவை தொடர்பு கொண்டு வாக்குகள் கேட்பதற்கு
முயற்சிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கும் சேர்த்து இதை
அனைவருக்கும் தெரிவித்து விடு அப்பனே என்று குருநாதர் வாக்குகள்
தந்துள்ளார்
அதாவது
வாக்குகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் குருநாதருடைய பக்தர்கள்
குருநாதருடைய வாக்குகளை வாங்கி அதன் தொடர்ச்சியாக குருநாதர் கூறியவற்றை
செய்து வருபவர்களும் அனைவரும் இதை செய்ய வேண்டும். முதலில் இதை செய்து
வரச்சொல் அதன் பின் எந்தன் வாக்குகள் அனைவருக்கும் கிட்டும் என குருநாதர்
வாக்குகளில் கூறி இருக்கின்றார். எனவே அனைவரும் இதை செய்து வர வேண்டும் ஓம்
அகத்தீசாய நமக!
ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையான நாளை முதல் குருநாதர் கூறிய வழிபாட்டையும்,சேவையும் செய்ய அன்னையிடம் வேண்டுவோமாக !
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment