"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, July 28, 2024

ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு - முருகா! எம்மைப் பழனிப் பித்தனாக்கு..!!

                                                              இறைவா.! அனைத்தும் நீயே..!!

                                                               சர்வம் சிவார்ப்பணம்...!!!

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

இன்று ஆடி கிருத்திகை.அனைத்து முருகப் பெருமான் ஆலயங்களும் இன்று திருவிழாக்கோலம் தான். பொதுவாக கிருத்திகை என்றாலே நமக்கு சிறப்பு தான். இருந்தாலும் ஆடிக் கிருத்திகை என்றால் சிறப்பிலும் சிறப்பு. நமக்கு ஆடி கிருத்திகை என்றாலே வேல் மாறல் பாராயணம் தான் நினைவிற்கு வரும். இரண்டு முறை பொங்கி மடாலயத்தில் நடைபெற்று வரும் வேல்மாறல் அகண்ட பாராயணத்தில் நாம் கலந்து கொள்ளும் வாய்ப்பு முருகனருளால் நமக்கு கிடைத்தது. இன்றைய வேல்மாறல் பாராயணத்திற்கு காத்துக்கொண்டிருக்கின்றோம். முருகனருள் முன்னிற்க நேற்றைய கந்த ஷஷ்டி வழிபாடு மாலை 4:30 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவு பெற்றது. அருணகிரிநாதர், பாம்பன் ஸ்வாமிகள், தேவராயன் சுவாமிகள், வள்ளல்  என்ற வரிசையில் திருப்புகழ்,கந்தர் அநுபூதி, ஸ்ரீமத் குமாரசுவாமியம் , கந்த ஷஷ்டி கவசம், தெய்வ மணிமாலை என படித்தோம். இதையெல்லாம் பார்க்கும் போது  

முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!




என்று வேண்டுவதை தவிர நாமொன்றும் அறியோம் முருகப் பெருமானே!  இன்றைய பதிவில் பழனிப்பித்தன் அருளிய பாடல்களை இங்கே தொகுத்து தருகின்றோம். முருகா! எம்மையும் பழனிப் பித்தனாக்கு..!! பழனிப் பித்தனாக்கு..!! பழனிப் பித்தனாக்கு..!!! என்று வேண்டுவோம். 

விட்டு விட்டு ஓடிய எனையும்

விட்டு விடா தருளப் பிடித்த

மட்டு இல்லாக் கருணை உடையோய்!

எட்டும் படி உன்னடி அருளே!

 -பழனிப் பித்தன், 23.07.2024


கட்டு இளங்காளை நீயே! பத்து 

எட்டுக் கண்ணுடைய தேவே! எந்த 

மட்டும் அற்றப்பெரும் அருள் தந்தோய்!

விட்டு விடாதெனைக் காத்தல் கடனே!

 -பழனிப் பித்தன், 24.07.2024


முருகப்பா! கோல வள்ளி எழிலுக்கு 

மறுகப்பா! எனப் பாடும் எனக்குநீ 

அருகப்பா! சீல மிகும் உன்னருளைப்  

பருகப்பா! என நிதம் அருள்வாயே!

-பழனிப் பித்தன், 25.07.2024


குடி எலாம் தொழும் பழனிக்

குடி சேர்ந்த வேளே! உமைப்பால் 

குடி மாறா இளம் பாலனே!

குடி காத்து அருள் தெய்வமே!

 -பழனிப் பித்தன், 26.07.2024


அழுது நாளும் உனை வழுத்தித் 

தொழுது பாடும் எனை அன்பொடெப் 

பொழுதும் அத்தன் அன்னை எனவே 

பழுது எல்லாம் நீக்கி அருளே!

 -பழனிப் பித்தன், 28.07.2024


பார்வதி பாலா! அகிலம் வணங்கப் 

பார்புகழ் திருப் பழனி வாழ்பவ!

பாரெலாம் மயில் ஏறியே பார்ப்பவ!

பாரெனைப் பன்னிரு கண்ணாலே நித்தமே!

 -பழனிப் பித்தன், 08.07.2024


சந்து பொந்தில் நின்றாலும் உடனே 

முந்தி வந்து அருளும் தெய்வமே!

தொந்தி வந்த கணேசன் சோதர!

புந்தி நொந்து விடாது அருளே!

 -பழனிப் பித்தன், 09.07.2024



சந்தை எங்கும் விலை போகாத 

மந்தை மாடு எனை எடுத்துத் 

தந்தை எனக் காத்து அருளும் 

விந்தை என்னே கந்த சாமியே?

 -பழனிப் பித்தன், 10.07.2024


அடித்தலம் நிற்கும் கீழ்மகன் என்னை 

அடிமையாய் ஏற்றுக் கருணை பூத்து 

அடிமலர் தந்து ஆள்வது என்றோ?

அடிபணி வரம் தந்தெனை ஆளே!

 -பழனிப் பித்தன், 11.07.2024


மலை எலாம் அமரினும் எனது 

தலை மீதும் பதமருள் ஐயனே!

கலை வாணி தொழுமய்ய! உன்னன்பு 

வலை ஒன்றில் சிக்கமட்டும் அருளே!

 -பழனிப் பித்தன், 12.07.2024


ஆரும் அற்ற அற்பன் எனினுமே 

ஆறு முகம் துணை இருக்கவே 

ஆரும் எனைச் சீண்ட முடியுமோ?

ஆறு முக அண்ணல் நீயருளே!

 -பழனிப் பித்தன், 13.07.2024


ஆரும் அற்ற அற்பன் எனினுமே 

ஆறு முகம் துணை இருக்கவே 

ஆரும் எனைச் சீண்ட முடியுமோ?

ஆறு முக அண்ணல் நீயருளே!

 -பழனிப் பித்தன், 13.07.2024


வீரவாகுத் தேவர்க்கு அருளிய பழனியின் 

வீரம்நிறை மன்னவ! இவ்வேழையின் மனமென்ன 

தூரந்தொலை வோவய்ய! கருணையே மிகக்கொண்டு 

ஈரம்வைப்பாய் என்மீதும்! தண்டாயுத! தேவதேவே!

 -பழனிப் பித்தன், 14.07.2024


வீரவாகுத் தேவர்க்கு அருளிய பழனியின் 

வீரம்நிறை மன்னவ! இவ்வேழையின் மனமென்ன 

தூரந்தொலை வோவய்ய! கருணையே மிகக்கொண்டு 

ஈரம்வைப்பாய் என்மீதும்! தண்டாயுத! தேவதேவே!

 -பழனிப் பித்தன், 14.07.2024


வரநதி சூடிய ஈசனின் கண்ணீன்ற 

வரதனே! கருணை பெருகும் உன்னிலே 

வரமொன்று  உருகிக் கோருமிப் பித்தனின் 

வரமென நீயேவா பழனி ஐயனே!

 -பழனிப் பித்தன், 15.07.2024


பழ வினை வேரோடு அறுக்கும்  

பழம் பெரும் பழனி மன்னவ!

பழம் பெறா சினத்தில் ஞானத்தின் 

பழம் என வந்தவுன் தஞ்சமே!

 -பழனிப் பித்தன், 17.07.2024


பழ வினை வேரோடு அறுக்கும்  

பழம் பெரும் பழனி மன்னவ!

பழம் பெறா சினத்தில் ஞானத்தின் 

பழம் என வந்தவுன் தஞ்சமே!

 -பழனிப் பித்தன், 17.07.2024


சங்கும் தரித்த ஈசன் மகவே!

எங்கும் நின்றருள் நீயென் நினைவே!

தங்கும் இடமே அன்பின் எல்லையே!

எங்கும் உனைப்போல் தெய்வம் இல்லையே!

 -பழனிப் பித்தன், 18.07.2024


இடும்பன் கொணர் பழனியில் நின்ற 

கடம்பா!உணர்ந் துனையோத எங்கள் 

நெடுநாள் பிணி அழித்தருள் வேலா!

மடநெஞ் சனின் வினைதீர்ப்பாய் வேளே! 

 -பழனிப் பித்தன், 19.07.2024


அசம் அறுக்கும் அநீதி  அறுப்பாய் 

அசம்  அடக்கி அருளும் அண்ணலே!

நிசம் நீதியும் நீங்காது நின்றருள் 

நிசம் நீயொன்றே! நன்மைசெய் நண்பனே!

 -பழனிப் பித்தன், 20.07.2024


கற்பனை எல்லைக்கு முற்றும் தாண்டிய  

விற்பனம் உடைய ஞான தண்டனே!

சொற்பனம் ஒன்றிலே வெற்றி வேலிட்ட 

மற்புயன் ஒன்றவே காட்சி அருளே!

 -பழனிப் பித்தன், 21.07.2024


உப்புக் காத்து வீசும் செந்தூரில் 

தப்புச் செய்த சூரை அழித்த 

ஒப்பு இல்லாப் புகழ் கொண்டவ!

செப்பு ஓர்சொல் பித்தன் காதிலே!

 -பழனிப் பித்தன், 22.07.2024


யான் என்பது அற்றவர்க்குத் துணையாய்  

நான் எனவே நின்றுகாக்கும் தெய்வமே!

வான் மீறிய பழனியில் நின்றருள் 

மான் மகளின் கேள்வநின் சரணே!

-பழனிப் பித்தன், 09.06.2024


கவர்ந்து இழுக்கும் அழகு மயிலில் 

இவர்ந்து உலகு அனைத்தும் ஆள்பவ!

கவர்ந்து செல்லவே யமனார் வந்தாவி 

துவர்ந்து போமுன்னே வந்துநீ நிற்பாயே! 

-பழனிப் பித்தன், 10.06.2024


ஆண்டு ஆண்டாய் அன்பன் எனை 

ஆண்டு, தூண்டும் வினை எனைச்  

சீண்டா வண்ணம் அன்பில் எனைத்  

தீண்டும் அண்ணல் உன்போல் யாரே?  

 -பழனிப் பித்தன், 15.06.2024


அம்பல வாழ்நனின் அன்புச் செல்வனே!

அம்புவில் உதித்த கந்த! கருணை 

அம்பரா! பழனி வாழ் எந்தையுன் 

அம்புய அடிகள் அருள் எனக்கே! 

 -பழனிப் பித்தன், 20.06.2024


அணைத்துக் காக்கும் அறக் கருணையும்  

அடித்துச் சேர்க்கும் மறக் கருணையும் 

அன்னைபோல் செயும் குற வள்ளிகேள்வ!

அன்பனென் துயர் அற நீயருளே! 

 -பழனிப் பித்தன், 21.06.2024


நிந்தையே செயினும் அருளும் பழனி 

எந்தையே! சொலொணா எண்ணங்கள் எனது 

சிந்தையில் சேரினும் கருணை பொழியும் 

தந்தையுன் சிற்றடி மறவா தருளே!

 -பழனிப் பித்தன், 24.06.2024


உனை என்றுமே இடை விடாது 

நினை நின்னன்பர் குழாம் மனதில் 

புனை தேன்சொரி மலர் அடிய 

தனை என்தலை சூட அருளே!

 -பழனிப் பித்தன், 25.06.2024


அடியர் முறை இடில் உடனே 

கடிதில் மயில் ஏறி  வருவாய்!

தடிகொள் தேவே! நிதம் எமது 

மிடிதீர் இறை உன்போல் யாருண்டே?

 -பழனிப் பித்தன், 26.06.2024


நாள் எலாம் உனைத் தொழுதுன் 

தாள் தொடும் அன்பன் உனது 

ஆள் அன்றோ? துயர் வருமுன்    

வாள் கொண்டு என்முன் வாவேளே!  

 -பழனிப் பித்தன், 29.06.2024


வலி நிறைப் பழனி இறையே!

வலி அற்ற மாகோழை எனது 

வலி மாற்றி உனையே நம்புமென் 

வலி ஏற்றி வலிய அருளே!

 -பழனிப் பித்தன், 01.07.2024


வளி அதிர எங்கும் பறக்கும் 

வலி செறிந்த சிகி வாகன!

வலி அற்றவெ னக்கு நல்லதோர் 

வழி என்றுமே காட்டி அருளே!

 -பழனிப் பித்தன், 02.07.2024


அடி போற்றித் தொழும் அடியர் 

மிடி அகற்றிக் காக்கும் அண்ணலே!

தடி பற்றிய ஞானப் பிழம்பே!

குடி முழுதும் காத்து அருளே!

 -பழனிப் பித்தன், 03.07.2024


கந்தை எனச் சிக்குறும் இவ்வினையேன்  

கந்து எனப் பற்றேனோ உன்னடியை

கந்த? மனக் குறைதீர் வள்ளிக்குக

கந்த வேளே! தருவாய் உன்னருளே!

 -பழனிப் பித்தன், 04.07.2024


நொந்து மனம் வாடிய பொழுது 

வந்தேன் என மயிலில் ஓடோடி 

வந்து அருள் பழனி அமரும்  

கந்த வேளே! மறவேன் உனையே!

 -பழனிப் பித்தன், 05.07.2024


கிறங்கி மயங்குமென் மனம் அறியாயோ?

குறவர் மகள்கேள்வ! அன்பன் எனைக்காக்க 

பறக்கும் மயிலேறி வெற்றி வேல்பிடித்து 

இறங்கி வாபழனி விட்டுக் கந்தவேளே!

 -பழனிப் பித்தன், 07.07.2024


கருணைக் கடலே! உனது அன்பனென  

அருணைக் கிளியை ஆட்கொண்ட விசாகனே!

தருணம் இதுவே அய்யனே! நாயேனையும் 

அருகு அணைக்க! இரங்கு உன்மனமே!

 -பழனிப் பித்தன், 06.07.2024


குன்று அனைத்தும் நின்று அருளும் 

குன்றா இளமை உடைக் குமர!

கன்று எனவே எனை அணைத்துக் 

கன்றா வளமை அருள் தெய்வமே!

-பழனிப் பித்தன், 09.05.2024


குன்று அனைத்தும் நின்று அருளும் 

குன்றா இளமை உடைக் குமர!

கன்று எனவே எனை அணைத்துக் 

கன்றா வளமை அருள் தெய்வமே!

-பழனிப் பித்தன், 09.05.2024


கங்கை சூடியின் அன்பிலே விளைந்தவ! 

கவின் மிகுந்த பழனி ஊர்வாழ்பவ!

கண்ணில் வைத்தெனை கணமும் புரப்பவ!

கன்றின் அன்னையர் தினத்து முத்தங்களே!

-பழனிப் பித்தன், 12.05.2024


ஆதி அந்தம் அற்ற அநாதியே!

ஆயி சக்தி ஈந்த ஞானநிறை  

ஆசான் உன்தாள் பணி அன்பரெமை 

ஆளே! அன்பில் அருள் அழகனே!

-பழனிப் பித்தன், 13.05.2024


பார் எலாம் மயில் எனும் 

தேர் மீது வலம் வரும் 

ஊர் மெச்சுக் கந்த வேளே!

நேர் வந்து  எனை ஆளே!

-பழனிப் பித்தன், 14.05.2024


வேதம் பணி ஞானப் பழனி 

நாதன் நீயே துணை எனவே 

போதம் தினம் தரும் உன்னிரு

பாதம் ஒன்றே பற்ற அருளே!

-பழனிப் பித்தன், 17.05.2024


அன்பே அகம் எனக் கொண்ட  

அன்பர் தமை கணம் எலாம் 

அன்பில் ஆளும் ஞானக் கந்த!

அன்பன் எனை என்றும் ஆளே!

-பழனிப் பித்தன், 19.05.2024


அன்பர் குழாம் சூழும் பழனிய!

அன்னை தந்த வேலும் உடன்வர   

அண்டம் சுற்றும் நீலச் சிகண்டியில்  

அன்பன் என்முன் என்றும் வருவாயே!

-பழனிப் பித்தன், 21.05.2024


ஆறு கொணர் கங்கை மைந்த! 

ஆறு மாதர் வளர் சேயே!

ஆறு மதம் பணி தேவே!

ஆறு முகா! துணை நீயே!

-பழனிப் பித்தன், 22.05.2024


ஆறுதலை அன்பர்க்கு அனுதினம் அளிக்க

ஆறுதலை கொண்டருள் பன்னிருகை வள்ளலே! 

ஆறுபல வற்றாது நிதமோடும் பழனி 

ஆறுமுக! நின்தாளே கதியென்றும் எமக்கே!

-பழனிப் பித்தன், 23.05.2024


அன்றோ என்றோ என்று இல்லாது 

அன்பே என்றும் நல்கும் பழனி 

அன்னை உனை மட்டும் அடியேன் 

அன்றில் எனத் தொழ அருளே!

-பழனிப் பித்தன், 26.05.2024


ஆள் யாரும் அற்ற எனையுமோர் 

ஆள் என்று  செய்த தேவேநீயே 

ஆள் நிதம் என்று வணங்குமுன் 

ஆள் எனைக் காக்கச் சித்தங்கொளே!

-பழனிப் பித்தன், 28.05.2024


அடி எடுத்துப்  பழனியின் பற்பல 

படி ஏறியே உன்சன்னிதி வருமென்  

மிடி தீர்த்தருள் தண்டாயுத! நித்தமும் 

மடி தந்தருள் பழனிவாழ் அன்னையே!

-பழனிப் பித்தன், 30.05.2024


அகவு மயிலில் அகிலம் ஆள்பவ! 

அகவை ஏறாத அநாதி ஆண்டவ!

அகந்தை வாராது அடிமை அன்பனை 

அகலா அன்பிலே அணைத்தாள் அப்பனே!

 -பழனிப் பித்தன், 31.05.2024


அளவற்ற பணிகள் இடையும் மாறாது 

அளவிலா அன்பருள் தண்டுடைத் தெய்வமே!

அளவுகோல் தோற்றோடு கருணை உச்சமே!

அளவெலாம் நினைக்கும் பித்தனுன் எச்சமே!

-பழனிப் பித்தன், 01.06.2024


அருள் கொழிக்கும் பழனி அமர்ந்து 

அருள் ஞானவான் உனது குறையா 

அருள் நிதமும் பெறவே எனக்கு 

அருள்! பழனித் தெய்வமே! சரணே!

-பழனிப் பித்தன், 03.06.2024


அனல் இடைத் தோன்றி, எம்வட 

அனல் நீக்கும் கந்த! துயர 

அனல் எனைத் தீண்டா தருளும் 

அனல் தோற்கும் செய்யோய்! சரணே!

-பழனிப் பித்தன், 04.06.2024


மாதா என்றே என்மீது காதலும் 

பிதா என்றே என்மீது அணைப்பும் 

நீதா என்றே  கேட்குமென் குரலுக்கு, 

நாதா! நீயே இரங்குன் சித்தமே!

-பழனிப் பித்தன், 05.06.2024


ஆழ் துயர் எமை அண்டி 

சூழ் துன்பு எம்பால் வந்து  

பாழ் பட்டு நிற்கச் செயும்  

ஊழ் மாற்றி அருள் தேவே!

-பழனிப் பித்தன், 07.06.2024


தன்னைப் பணி அன்பர் காக்கவே 

முன்னை வினை நீக்கும் கந்தனே! 

அன்னை என அன்பு அளித்தே   

என்னை என்றும் காக்கும் எந்தையே!

-பழனிப் பித்தன், 08.06.2024


என்று மெனைக் காத்து அருளே!

குன்று எலாம் நிற்கும் தெய்வமே!

கன்று எனைத் திருக் கண்ணோக்கி 

நன்று எலாம் தந்து ஆள்வையே!

 -பழனிப் பித்தன், 15.04.2024


ஆள் வையெனையே! உலகு எல்லாமும் 

ஆள் பழனிய! அடியார் பிரானே!

ஆள் யாருமிலான்  எனக்கு,  எனது  

ஆள் எனவருள் கருணைக் கடலே!

 -பழனிப் பித்தன், 16.04.2024


கடல் எல்லை தாண்டிய உன்னன்புவசப்

படல் நிதம் எனக்கு நிகழவருள்!

உடல் தந்து பிறப்பு ஈந்தவெனைக்கை

விடல் குற்றம் இலையோ? கொள்வாயென்கையே!

-பழனிப் பித்தன், 17.04.2024


கையே கூப்பி நிதமுனைத் தொழு

கையே அருள்! உன்னடியில் விழு

கையே வரம்! அவ்வரமீ என்றும்

கையே விடா தருள்கந்த வேளே!

-பழனிப் பித்தன், 18.04.2024


கந்த வேளே! நமர் குலத்துச் 

சொந்த வேளே! வளம் எல்லாமும் 

தந்த வேளே! மூவர் பணியா 

நந்த வேளே! தாவுன் பதமே!

-பழனிப் பித்தன், 19.04.2024


பதம் நாடிப் பணியும் எனை

நிதம் காத்து இரட்சி  ஐய!

இதம் மிகும் மொழியைப் பல 

விதம் பேசும் குறத்தி வேந்தே!

-பழனிப் பித்தன், 20.04.2024


வேந்தே! அடியர் மனம் நாளுமாள்   

வேந்தே! வேதனை போக்கிப் புரக்கும்   

வேந்தே! வேண்டிய எல்லாம் அளிக்கும்  

வேந்தே! நின்னடி ஒன்றே போதுமே!

-பழனிப் பித்தன், 21.04.2024


போதும் பழனிய! நித்தம் என்தலை 

கோதும் மாறாவன்பு பூண்ட நீமட்டும் 

போதும்! வேறேதுமே வேண்டாம் ஐயனே! 

கோதும் பொறுத்தருள் உன்போல் யாரிங்கே?

-பழனிப் பித்தன், 22.04.2024


நிதம் உனது நினைவே ஓங்கவும்  

நிதம் உனது நாமமே செப்பவும் 

நிதம் உனது அன்பையே வேண்டவும் 

நிதம் எனக்கு அருளே! முருகே!

-பழனிப் பித்தன், 24.04.2024


என் அருகே வருக எந்தேவே!

நின் சிகண்டி மீதேறி வேலேந்தி 

என் மாதாக்கள் இருவர் சகிதம் 

நின் அடியர் குழாமும் சூழவே!

-பழனிப் பித்தன், 26.04.2024


சூழ வரும் என்னிடர் அறியுமோ 

சூழ இவன் உள்ளது  உன்னோடென்று?

சூழ எண்ணில் ஞானியர் இருப்பவ!

சூழ என்றும் நிற்பாயே என்னுடனே!

-பழனிப் பித்தன், 27.04.2024


சொல் ஒன்று ஈசனுக்குச் செப்பியவ!

தொல் திருப் பழனியை  ஆளுமய்ய!

கொல் வேடர் குலவள்ளி மணவாள!

சொல் வேளே! வருவாயோ என்னெதிரே?

-பழனிப் பித்தன், 30.04.2024


எதிர் ஒருவரும் அற்ற பழனிய!

புதிர் நித்தமுமே போடும் என்வாழ்விலே 

சதிர்  பொருந்திய வள்ளி மயிலுடன் 

கதிர் வேல்பிடித்து நிதம் காத்தருளே!

-பழனிப் பித்தன், 01.05.2024


காத்து அருள் எனையே பழனியனே!

கூத்து ஆடும் சிவனார் விழியீன்றவ!  

பூத்து அலர் கடப்பம்  அணிதோழனே!

சாத்து கவி தனிலே மகிழ்ந்தருளே!

-பழனிப் பித்தன், 02.05.2024


அருள் வேளே! பழனித் தலம்வர!

அருள்  ஐய! வேலையே வணங்கவே!

அருள் தேவே! உனையே நித்தமெண்ண!

அருள் தாயே! கதிநீ என்றாகவே!

-பழனிப் பித்தன், 03.05.2024


கதி நீயென்று ஆகவருள் பழனிப் 

பதி உறையும் தண்டபாணித் தேசிக!

மதி யற்றவன் எந்தனையும் அணைத்தென் 

விதி அழித்துக் கண்போற்காக்கும் தெய்வமே!

-பழனிப் பித்தன், 04.05.2024


தெய்வம் ஒன்றே என்று உனையே 

தெண்டன் இடும் வரம் அருளே!

தெள்ளு தமிழ் மொழிக் காவல!

தெய்வச் சிவ கிரிக் கந்தனே!

-பழனிப் பித்தன், 05.05.20


அன்பாய் வந்து அருட் பழனியிலுன்  

அன்பன் எனைத்  திருத் தாள்பணியவே 

அன்பே செய்த சிவ கிரிவேலவுன் 

அன்பு ஒன்றே போதும் எனக்கென்றுமே!

-பழனிப் பித்தன், 07.05.2024


மன்றலம் மலர்மாலை புனையும் தோளனே!

கன்றென நித்தமெனைப் புரக்கும்  பழனிக் 

குன்றிலே நாளுமுறைக் கருணை வள்ளலே!

நன்றியை நானெவ்விதம் செலுத்த உனக்கே?

-பழனிப் பித்தன், 08.05.2024



மீண்டும் ஒரு முறை முருகா! முருகா!! முருகா!!! என்று மனதுள் இருத்துவோம் .

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அகிலமே பழமலைநாதர்..! பேரூரா..!! பட்டீசா..!!! - திருவாசகம் முற்றோதுதல் - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024_26.html

 கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

 சரணம் சரணம் சண்முகா சரணம் - ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2022/07/blog-post_23.html


எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ - ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post.html

ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு - தேனி சண்முகநாத மலை தரிசனம் (3) - https://tut-temples.blogspot.com/2019/07/3_23.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_61.html

குரவு விரவு முருகா வருக! - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_26.html

திருக்குராவடி நிழல்தனில் உலவிய பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_17.html

மருத மலையோனே!...மருதமலை மாமணியே...!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_21.html

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

 நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html

நமச்சிவாய வாஅழ்க! - இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post.html

குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

வளங்களை அள்ளித் தருகின்றாள் வனபத்ர காளி - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_31.html
 
காவிரித் தாயே போற்றி! போற்றி!! - ஆடிப் பெருக்கு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_5.html

வரம் பல அருளும் வரலட்சுமி நோன்பு இருக்கலாமே - 31.07.2020 - https://tut-temples.blogspot.com/2020/07/31072020.html

நீள நினைந்து அடியேன் - ஸ்ரீ சுந்தரர் குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/07/blog-

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

  வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

 TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html



No comments:

Post a Comment