"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, April 16, 2024

சித்தன் அருள் - 1116 - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு!

                                                    இறைவா..அனைத்தும் நீயே..

                                                  சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

திரு குரோதி வருடத்தில் சித்திரை மாதம் பிறந்து விட்டது. நம் குருநாதர் அருளால் இந்த எட்டாம் ஆண்டு துவக்கத்தை திருஅண்ணாமலையில் ஆரம்பித்துள்ளோம். நம் குழு அன்பர்கள் சந்திப்பு,கிரிவலம், பெருமான் தரிசனம், அன்னசேவை, மோர் சேவை என அனைத்தும் குருவருளால் நடைபெற்றது. சித்திரை மாதத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகள் பற்றி காகபுஜண்டர் ரிஷி அருளிய வாக்கினை இங்கே பகிர்கின்றோம். நன்கு படித்து காகபுஜண்டர் ரிஷி உரைத்த வழிபாட்டு முறைகளை செய்தி விதியை இறையருளால் மாற்றிக் கொள்ள குருவிடம் வேண்டுமாக!

16/4/2022 சித்ரா பவுர்ணமி அன்று காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் திரயம்பகேஷ்வரர் ஜோதிர்லிங்கம். நாசிக் மாவட்டம். மகாராஷ்டிரா. 



ஆதி மகேஸ்வரனையும்!! மகேஷ்வரியையும் மனதில் எண்ணி வாக்குகளாக பரப்புகின்றேன் புஜண்டன். 

இவ்வாறு அகத்தியன் ஆசிகள் நலம்!! நலம் !!.கடைநாளும் குறைகள் ஏது?? 

இதையன்றியும் கூற ஆனாலும் ஈசனிடத்தில் வேண்டிக் கொண்டன...  ஐந்தறிவுள்ள ஜீவராசிகள்.

எதனையும் என்றுள்ள!! என்றுள்ள!! ஆறறிவு படைத்த மனிதனுக்கு புத்திகள் இல்லை.

ஆனாலும் எவற்றிற்கு எதையென்று கூற யாங்கள் என்ன தவறு செய்தோம்???

ஆனாலும் எங்களை இப்படி வாட்டுகின்றாயே!! நீ என்று ஈசனிடம்... உரைத்தன எதை என்று கூற ஐந்தறிவு உள்ள ஜீவராசிகள்.

ஆனாலும் இதற்கு ஈசனோ!! யான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்க!! கேட்க... யாங்கள் எப்போதெல்லாம் தாழ்ந்து விடுகின்றோமோ!!! மனிதர்களும் தாழ்ந்து விட வேண்டும்.

ஏனென்றால் எதற்கும் யாங்கள் யாருக்கும் துரோகம் செய்வது இல்லை!!

நம்பிக்கை  எதையன்றி கூற பொய் சொல்லுவதும் இல்லை !!பொறாமை கொள்ளுவதும் இல்லை!! இதையன்றி  கூற ஆனால் மனிதனிடத்தில் அனைத்து புத்திகளும் தாழ்ந்து வருகின்றது.

இதனை ஒன்று எதனையென்று கூறும் கூறும் என்று கூற நீ நிச்சயம் பின் பின்பற்ற வழிவகுக்க வேண்டும். இதனையும் என்று கூற.

ஆனாலும் ஈசனோ!! சரி இதையன்றி கூற நல் எதை முறையாக ஆனாலும் நீங்கள் எப்போதெல்லாம் தாழ்ந்து பின் இதனையும் அறிவதற்கு பின் தாழ்ந்து தாழ்ந்து மனம் வருத்தங்கள் கொள்கின்றீர்களோ!!! அப்பொழுது மனிதர்களும் பல மடங்கு தாழ்ந்து விடுவார்கள்... இதுதான் உண்மையப்பா...!!

அதனால் என்னவென்று மனிதர்களுக்கு யான் செப்புவது???

செப்பிவிட்டேன் ஐந்தறிவுள்ள ஜீவராசிகளுக்கு...இவ் சித்திரை திங்களில்... எதை என்று கூற அனைத்தும் பின் நீர், மற்றும் பிற பிற வகைகளான உணவுகளையும் கொடுக்க கொடுக்க அவைதன் மகிழ !!மகிழ!! தான் மனிதன் இனிமேலும் நிச்சயமாய் வாழ்வான் என்பது நிச்சயமான வாக்கு.

அவைல்லாமல் பின் நேரங்கள் நல்லவை செய்யும் நல் நேரங்கள் இவையன்றி பின் இப்படி செய்தால் நல் நேரங்கள் கூடிக்கொண்டே வருமென்றால்... அவையெல்லாம் பொய்.!!  என்பது தான். 

இதனால் தான் நீ எதையன்றி கூற ஓர் உயிரினத்திற்கு என்ன? செய்தாய்??? 

என்ன செய்தாய்?? என்பதற்கிணங்க நீ செய்தால் பின் திரும்பவும் அது உந்தனுக்கே புண்ணியம் அப்படி செய்தால்தான்!! வரும் காலங்களில் பிழைத்துக் கொள்ளலாம்.

குறைத்துக்கொள்ளலாம் !!அப்படி இல்லை என்றால் நிச்சயம் பிழைக்கலாகாது!!

பின் கிரகங்கள் இதையன்றி கூற மனிதனப்பா பொய் சொல்லி திரிவான்!!

இவ் நேரங்கள் பின் மன்னனவன்(குரு) வந்துவிட்டான் மந்தனவன்(சனி) இங்கு வந்துவிட்டான் அவையன்றியும் கூற பின் ராகு கேதுக்கள் தடம்மாறி, தடம்மாறி, நின்று விட்டது என்றெல்லாம் பொய் கூறி!!  இவ் மாதத்தில் நன்றாகவே இருக்கும் என்றெல்லாம்.

ஆனால் அவையெல்லாம் யான் ஏற்கவும் மாட்டேன்!! ஏனென்றால் மனிதனின் லீலைகள் பார்த்தால் அனைத்தும் காசுக்காக!!!

எப்பொழுது ஒருவன் பின் அனைத்து மக்களும் நன்றாக இருக்கின்றான் என்று எண்ணுகின்றானோ!! அவந்தனுக்கு யாங்களே அனைத்தும் செய்வோம் வழிகளும் காட்டி இறைவனையும் பார்க்க வைப்போம்.

அவையன்றி பின் இதை, இவை, இதற்கு பின் பரிகாரங்களுக்கு பின் காசுகள் காசுகள் என்று காசு பின்னே ஓடினால் ஆனால் புரியாது மனிதன்.கடைசியில்  இவை என்று பின் மனிதன் பின்னாலே வரும் காசுகள் நோய்களுக்காக.

ஆனாலும் இதையன்றி மனிதனுக்கு ஆனாலும் சித்தர்கள் யாங்கள் நிச்சயமாய் வழிவகுப்போம் வழி வகுப்போம்.

ஆனாலும் ஈசனோ நினைத்துக் கொண்டிருக்கின்றான் .!!
எவ்வாறெல்லாம் மனிதர்களுக்கு புத்தி வருவது நோய்கள் மூலமா? எதையென்று பிற்பகுதியில் நலமாகும்.

இதனால் மனிதா!! காலத்தையும் கூட வென்று விடலாம் மனிதன் நினைத்தால்.

ஆனால் அற்ப சுகத்திற்காகவே வாழ்ந்து வருகின்றான் மனிதன்.

ஆனால் அச் சுகத்தை தேடி தேடி சென்றால் காலத்தை வெல்ல முடியாது உன்னை காலம் வென்றுவிடும் இதுதான் உண்மையான வாக்கு.

வாக்கு என்பதற்கிணங்க அதை அறியாத மூடர்கள் மனிதர்கள்.

யானும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்!! பலப்பல யுகங்களாக யுகங்களாக ஆனாலும் மனிதன் திருந்துவதாகவே இல்லை.

திருந்துவதாகவே இல்லை எதை எத்தனை பிறவிகள் எடுத்தாலும் மனிதனுக்கு புத்திகள் பிறப்பதில்லை.

கஷ்டங்கள் வருகின்றது என்றால் எதற்காக கஷ்டங்கள் வருகின்றது என்பதை கூட புரியாமல் வாழ்ந்து வருகின்றான்.

அதனை நீக்குவதற்கான தகுதிகளும் மனிதர்களிடத்தில் மனிதர்களிடத்தில் இருக்கின்றனஎன்று எண்ணி எண்ணி ஓய்ந்து அலைந்து திரிந்து அவை செய்தால் இப்படி எல்லாம் நடந்து விடும் பணம் வந்துவிடும் புகழ் சேர்ந்து விடும் என்றெல்லாம்!!!

ஆனாலும் அது சிறிய நேரத்திற்கே!! 

அதனால்தான் சொன்னேன் இவ் வாழ்க்கை பின் சுகத்திற்காகவே!!! சிறும் சுகத்திற்காகவே!!!

அதை ஆசைப்பட்டால் பின் பெரிய பெரிய பாதிப்புகள் வரும் ஆனாலும் அவையெல்லாம் விட்டுவிட்டு இறைவன் பால் வந்துவிட்டால் அனைத்தும் அனைத்தும் நல்கும்.

யான் ஒரு சூட்சுமத்தை சொல்கின்றேன்...இவ் மாதம் எதையென்று... சித்ரகுப்தாவின்(சித்திர குப்பன்) மாதம் என்றுதான் யான் சொல்வேன்.இவ் மாதத்தை!! 

எதனால்?? எப்படிப்பட்டது என்பதை கூட... ஓர் யுகத்தில் எதை என்று கூட  பின் நலமாக நலமாக இதனையும் என்று அறிவதற்கு இவைதன் உணர உணர .

எந்தனுக்கு ஒர் நாள் வேண்டும்...ஓர் நாள் வேண்டும்.. யான் உறங்க!!! 

உறங்க!!! அதுமட்டுமில்லாமல் பின்பற்றும் அளவிற்குக் கூட யான் பல ஓய்வுகள் எடுக்க வேண்டும்!!

அதனால் ஓர் அரை மணி நேரமாவது எந்தனுக்கு பின் இறைவா கொடுக்க வேண்டும் என்று ஈசனுடன் வாதாடினான் சித்திரகுப்தன்.

அதனால் சரி அரை மணி நேரங்கள் எடுத்துக் கொள் என்பதற்கிணங்க சொல்லிவிட்டான் ஈசனும். 

இதற்கு இணங்க சித்திரகுப்தனும் இவ் அரைமணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டான்.

ஆனால் அவ் அரை மணி நேரம் என்பது இவ் சித்திரையே!!!! 

ஆனாலும் அவ் அரை மணி நேரமும் எதனையும் என்று கூற கூற அவந்தன் ஓய்வு எடுக்கவில்லை....

ஆனால் சில மனிதர்கள் தெரிந்தவர்கள் அரசர்கள் பலர் அன்றே இவனை தொழுதால் நன்றாகும் என்பதை கூட முனிவன் வாக்கு சொல்லிவிட்டார்கள் ரிஷிகள் அதனால் அவ் அரைமணி நேரத்திலும்(சித்திரை மாதம் முழுவதும்) சித்ரகுப்தனின் ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றி இவையன்றி கூற...அவ் தீபத்தின் வழியே சித்திர குப்தனை பார்த்துப் பார்த்து மனதில் 
"""
சித்ரகுப்தாய நமஹ"""!!! என்று ஓதி, ஓதி , ஓதி, ஓதி ,பல அரசர்களும் மாற்றி அமைத்துக்கொண்டனர் தன் பாதையை.

இதனால் தான் இவ் மாதத்தில் சித்ரகுப்தனை பின் என்றாவது அவந்தனுக்கு சக்கரையை இட்டு அதுவும் சக்கரை எங்கு இட வேண்டும் என்றால் வெற்றிலையிலே இட்டு அவந்தனுக்கு நல் விதமாக பின் தீபமும் ஏற்றி ஏற்றி...  இவை யான்  சொன்னேன் மந்திரத்தை பின் அவ் தீபத்தின் வழியே அவனையும் பார்த்து... 

ஆனாலும் யான் முக்கியத்துவம் தருவேன்... காஞ்சியிலும்!!! அண்ணாமலையிலும்!!! 

காஞ்சியிலும் இதையன்றி கூற...அங்கே அமர்ந்து பின் தீபமேற்றி. ... தீபத்தின் வழியே உற்று நோக்கினால் நிச்சயம் மனமார ஆசீர்வதிப்பான்... 

ஆசீர்வதித்து பின் ""ஏகனையும் "" (ஏகாம்பரநாதர் காஞ்சிபுரம்) தரிசித்து....ஏகனையும் தரிசித்தல்!!!

பின்பு அண்ணாமலை அண்ணாமலையும் சென்று எதனையென்று அறிவதற்கு பின் அங்கு அனைத்து லிங்கங்களையும் (கிரிவல அஷ்டலிங்கங்கள் தரிசனம்) பின் பார்த்து உற்று நோக்கிப் பின் கடைசியில் பின் திருத்தலத்திற்குச் சென்று அங்கேயும் "நமச்சிவாயா!! "நமச்சிவாயா!!! என்று அழைத்தால் பின் சித்திரகுப்தனே!!! அவன் எதிரில் நின்று கூட யான் சொல்லி விட்டேன்....

அங்கேயும் அவனை அழைத்து கொண்டே இருந்தால்..... ஓ!!!!  இவந்தன் பின் ஈசனுடைய பக்தன் என்று மனம் இரங்கி சில உதவிகளையும் செய்வான்.

நிச்சயமாய் மனிதர்களே இதை பின்பற்றி கொள்ளுங்கள்!!!

சொல்வோம் யாங்கள் சில சில ரூபங்களில் கூட. 

அதனால்தான் பிழைத்துக் கொள்ளலாமே தவிர.... மற்றவையெல்லாம்....!??

ஆனாலும் சிறிது காலம் தேய்பிறை வளர்பிறை இவையென்று கூற.... ஆனாலும் பல மனிதர்கள் இப்படி செய்தால் இப்படி எல்லாம் நடக்கும் நிறைவேறும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் அது சிறிய நேரமே ஆனால் எங்கள் போன்று சித்தர்கள் வாக்கினை பயன்படுத்தினால் அவை பேரின்பம்!!!!

யானும் மனிதர்களுக்கு இவையெல்லாம் செப்புவது இல்லை ஆனாலும் அகத்தியனோ!!! பின் கருணையுடன் !! """புசுண்ட முனியே!!! இவையன்றி  கூற உந்தனக்கு.... இவையென்றும் பல மனிதர்களுக்கும்.... இனிமேலும் எதை பின்பற்ற வேண்டும்??? என்று கூடச் சொல்லி....

ஆனாலும் யான் சொன்னேன்.... அகத்தியனுக்கு!!  மனிதர்கள் பின்பற்றப் போவதில்லை !!! எதை இனிமேலும் நன்றாக உரைப்பதற்கு.

ஏனென்றால் வழிகள் காட்டினாலும் பின்பற்றுவதில்லை !!
யான் கூறிவிட்டேன்.

ஆனால் அகத்தியனோ இல்லை... சிறிது முயற்சிகள் கூட யாம் எடுப்போம்....

எதையென்று கூற இவ்வாறு நடந்தால் நலம் என்று கூற பின் அப்படியும் பின் எதையன்றி கூற.... எடுக்காவிட்டால் நிச்சயம் ஈசன் முடிவே... இறுதி தீர்ப்பானது.... என்று கூட சொல்லிவிட்டேன்.

அதனால் யான் நன்றாகவே இப்பொழுது கூறிவிட்டேன்!!
ஈசன் அருளாலும்!!! 

ஆனாலும் மனிதனுக்கு இப்படியெல்லாம் வாழத் தெரியாமல் வாழ்ந்து வருகின்றானே!!! 

இதனால்தான் ஆனாலும் யாங்கள் இனி எதையென்று கூற....ஓர் ஓர் முறை வழி காட்டுவோம்... அதை பயன்படுத்துவதற்கு அகத்தியன் சொன்னான் பல புண்ணியங்கள் வேண்டுமென்று!!

ஆனாலும் இதனையுமென்று அறிவதற்கு அதற்கு மூலனின்(திருமூலரின் திருமந்திரம்) வாக்கியத்தை படித்தாலே போதுமானது!!!

அனுதினமும் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு மூலத்தையும் குறிப்பிடுகின்றான் மூலன்!! மூலன் இதையன்றி கூற!!! அதனாலே!! அவந்தன் மூலன்!!! 

ஆனாலும் வாழ்க்கையில் அனைத்தும் அனுபவித்து அனுபவித்து பின் ஒவ்வொரு பாடலையும் எழுதியருளிள்ளான்!! மூலன்!!

இதனால் அது சாதாரண விஷயம் இல்லை!!!

அனுபவித்தால்தான் அவ் பாடல்களும் கூட வரும்..

அதனால் ஈசனிடமே முறையிட்டு யான் எழுதுவது சரியாக இல்லை..

ஆனாலும் என் வாழ்க்கையில் ஒவ்வொரு படியும் யான் அனுபவித்தே தீரவேண்டும் என்று கூட அதனால் பல வருடங்களாக பல கஷ்டங்களை அனுபவித்து அனுபவித்து ஒவ்வொரு பாடல்களையும் எழுதினான். 

இது நிச்சயமான உண்மை!!!

இதனால் அதிலே திறமைகள் ஒளிந்துள்ளது இன்னும் மூலன் பல வாக்குகளிலும் செப்புவான்!!

இன்னும் பல எதையென்று கூற நூல்களையும் சொல்லாமல் சொல்லிவிட்டான்!!  சொல்லாமலும் சென்றுவிட்டான்!!

இனிமேலும் அவனுடைய வாக்குகளும் நன்றாகவே வரும்!!!

ஆனாலும் மக்களே எதையன்றி கூற நிச்சயமாய் சொல்லிவிட்டேன்... 

இவ் மாதத்தில் அதாவது சித்ரகுப்தனின் மாதமானது இம்மாதத்தில் யான் சொல்வதை சரியாக கவனித்துக் கொண்டு செய்தாலே!! போதுமானது.

ஆனால் யோசித்துக் கொள்ளுங்கள்!!! ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளுக்கும் தன் குழந்தைகளும் உள்ளது இவையன்றி கூற

அவைதன் இறைவனிடத்திலே வேண்டுவதில்லை தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று!!!

ஆனாலும் இவையன்றி கூற..... மனிதனே நீ வேண்டுகின்றாய்!!!! 

அவ் வேண்டுவதற்கு நீ என்ன செய்தாய்?? புண்ணியங்கள்!!!

அதனால்தான் அவ் ஜீவராசிகளுக்கு கொடுத்தால் நிச்சயம் ஈசன் மனம் மகிழ்ந்து பின் ஜீவராசிகளும் மகிழ்வித்து வாழ்க என்று மனதார வாழ்த்தும் என்பதையும் மெய்யப்பா!!!!!

இதனால் செய்க!!  

இதுதான் உண்மை அதை விட்டுவிட்டு இவ் மாதத்தில்  அது நடக்கும்!!! இவ் கிரக பெயர்ச்சிக்கள் ராகுகாலம் இவையெல்லாம் சொல்லி கொண்டே வந்தால்... நிச்சயம் அறிவிழந்து அறிவிழந்து தவித்து விடுவீர்கள்!!!!

ஆனாலும் மாறிக் கொண்டே தான் போகின்றது காலங்கள்!!!
கிரகங்கள்!!!  இவையன்றி கூற... (ஜாதகங்களில்) மன்னனவன் (குரு) அங்கு செல்கின்றான் இங்கு சென்றான் சனியவன் அங்குச் சென்றான்!! இங்கு சென்றான்!! ராகு கேதுக்கள் இவ் வீட்டிற்குச் சென்றார்கள்!!! அவ் வீட்டிற்குச் சென்றார்கள்!!!

ஆனால் மனிதனே நீ அப்படியே இருக்கின்றாயே எதற்காக??? என்று யோசித்தாயா???

கிரகங்கள் காலங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றது ஆனால் மனிதா!!! நீ மாறவில்லையே!!!

ஆனாலும் நீ மாற்றிக் கொண்டால் போதுமானது கிரகங்களும் மாறிக்கொள்ளும்!!!

நீ எப்படி மாறிக்கொள்ள வேண்டும் என்றால் தர்மத்தை நிலை நாட்ட வேண்டும்!!!

வேண்டும்!! அப்பனே!!! மற்றவர்களையும் நன்றாக அதாவது ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளையும் நிச்சயமாய் நன்றாகவே பார்க்க கற்றுக்கொள்ளவேண்டும். 

அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்!!

இப்படி செய்தால் இறைவன் மனமிரங்கி யாங்களும் மனமிரங்கி வந்து உங்களுக்கு செய்வோம்!!!

அப்படி எதை என்று கூட இல்லை, இல்லையானால் நிச்சயம் யாங்கள் உதவிட மாட்டோம்!!

பின் நீங்களே எதையன்றி கூற ஓர் பாதையை வகுத்து அனைத்தையும் ஏற்படுத்தி கடைசியில் பைத்தியமாக திரிந்து மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து தரித்திர பிறவியிலே அதாவது கடலிலே (பிறவி பெருங்கடல்) கடலிலே நீந்தி நீந்தி வருவார்கள். இதுதான் உண்மையப்பா!!!

இவ்வுலகில் வரும் காலங்களில் உண்மை இருக்காது அழிவுகள் மேம்படும் என்பதுதான் உண்மை.

ஆனால் மனிதா!! பின் திருந்திட்டு வாழக் கற்றுக்கொள்!!காலத்தை வென்று விடலாம் நிச்சயம் சித்தர்களை வந்து தொழுபவர்கள். தொழுபவர்களை காலத்தை வெல்லச் செய்வோம்!!! இது உறுதியான!! இது உறுதியானது என்போம்.

எதையென்று கூற ஆனாலும் இவை இவை என்று கூற நிச்சயமாய் இயற்கையை மீறி மனிதன் நடந்தால் பின் இயற்கையும் மனிதனை அழித்து விடும் இது தான் உண்மையப்பா!!

உண்மையப்பா!! சொல்லிவிட்டேன்.. திருந்தி விடுங்கள் பல வழிகளிலும் சொல்லிவிட்டேன்.

நல்லோர்களாவது சிறிதளவு இருந்தாலும் அவ் நல்லோர்கள் தீயோர்களுக்கு  சொல்லி மனதை மாற்றுவார்கள்... அதனால் தான் யாங்களும் இறங்கி வந்து சொல்கின்றோம்...

மனிதர்களுக்கு யாங்கள் உரைக்க வேண்டிய அவசியமில்லை!!!

ஏனென்றால் பல புண்ணியங்களில் பலப்பல செய்த காரணத்தினாலே எங்களையும் பல ஜென்மத்தில் நாடி வந்து உள்ளீர்கள்.

ஆனாலும் அவ் ஜென்மங்களும் இப்பிறப்பிலும் பிறந்துள்ளது அதற்காகவும் யாங்கள் நிச்சயம் சொல்ல வேண்டும்!!

என் பக்தனாகவும் பல ரூபங்களில் இருந்து இருந்து பலப்பல ஆன்மாக்களும் இப்புவியுலகத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

அதனால் சொல்லி விடுகின்றேன் இனிமேலும் எதையன்றி  கூற....

""இவ் மாதத்தில் நிச்சயம் செய்ய வேண்டும்!  

செய்ய வேண்டும் அவை மட்டுமில்லாமல் இன்னும் சொல்கின்றேன் இவ் மாதத்தில் சிறிதளவு துளசியும் துளசியுமின்றி முறையாக அதில் மஞ்சளும் இட்டு சிறிதாக எலுமிச்சை சாற்றையும் இட்டு... அதனுடன் சிறிது நெல்லிக்கனியும் இட்டு... இட்டு இட்டு அதனையும் அருந்தி வர அருந்திவர சில நோய்களும் தீரும்.

(நீரில் துளசி மஞ்சள் பொடி எலுமிச்சை சாறு நெல்லிக்காய் சாறு சேர்த்து) நோய்களைத் தீர்ப்பதற்கும் வழிகள் உண்டு வழிகள் உண்டு.

இதனையும் பின் """சித்ரகுப்தா நமஹ"" என்று சொல்லி அதிலும் அவ் நீரிலும் கையில் விட்டு பின் இவற்றின் வழியாக நீயாவது இரங்கு என்று கூறிவிட்டால் நிச்சயம் மனமகிழ்ந்து சித்திரகுப்தன் செய்வான்.(பாத்திரத்தில் இவற்றை கலந்து சித்ரகுப்தனை வேண்டி கையில் இட்டு வணங்கி அருந்த வேண்டும் இம் மாதம் முழுவதும்) 

அதனால் இவையன்றி கூற அவ் மணி நேரத்தைப்(சித்திரை மாதம் முழுவதும்) பயன்படுத்திக் கொள்ளுங்கள். மானிட ஜென்மங்களே!!!  அவ் அரைமணி நேரம் தான் இச் சித்திரை திங்கள்!!!

இதையன்றி கூற இதனை பயன்படுத்தி  கொண்டு பின் அடுத்த திங்கள் காசி!!! வரும் அவ் காசியில் எதையன்றி கூற யான் சொல்கின்றேன் மனித ஜென்மங்களுக்கு!!!

வைகாசி என்று சொல்கின்றீர்களே!!! அதுவே காசி!!! 

அவ் காசிக்கு அவைதன் முறையாகவே பயணம் மேற்கொள்ள வேண்டும் ...

மேற்கொண்டால் நலன்களே உறுதியானது அதனால்தான் வைகாசி!!!

இதிலும் அடங்கியுள்ளது இவையன்றி கூற ஆனாலும் பலப்பல மாதங்களும் பின் சூட்சுமங்கள் ஆக காணப்படுகின்றது.

ஆனால் மனிதனோ இவ் மாதத்தில் இதைச் செய்ய வேண்டும்!! அதை செய்ய வேண்டும் இம்மாதத்தில் இவை நடக்கும் அவை நடக்கும் என்றெல்லாம் கூறிக் கொண்டே பொய் சொல்கின்றான்.

அதனால் என்ன லாபம் என்றால் காசுதான் லாபமே தவிர மற்றவை எல்லாம் வீண்.

இன்னும் காசுக்காக அனைத்தும் பொய் கூறுவார்கள். இவையன்றி கூற இறைவன் எங்களிடத்தில் பேசுகின்றான் இறைவனே வந்துவிட்டான் எங்களிடம் இறைவனே தங்கிவிட்டான் என்றுகூட.....

"" நம்பி விடாதீர்கள்!!! ஆனால் சிறிது காலமே அவ் ஆட்டம் சுகம்!!!

ஆனால் இறைவன் அடித்தால் அதிகளவு தாங்க இயலாது என்பேன்.

யான் ஒன்றை சொல்கின்றேன்.... இப்படியெல்லாம் சொல்பவர்களுக்கு நோய் எளிதில் பற்றிவிடும்!! பற்றிவிடும்!!! என்று தெரிவிக்கின்றேன்.

உதாரணமாகவே இருக்கின்ற மனிதனுக்கு எவை தெரியும்?? எவை தெரியும் ?? என்று புத்தி இல்லாமல்....

சொல்கின்றேன் ஒரு வார்த்தை ஒரு வார்த்தை!! ஒருமனிதன் போய்க்கொண்டே இருந்தான் !!திரிந்து கொண்டே இருந்தான்!!

ஆனால் உணவு இல்லையே கஷ்டங்களே!!   நம் பிள்ளைகளே நம்தனை கைவிட்டுவிட்டனர். நம்தன்  இனி என்னதான் செய்வது??? சரி திருடித்தான் பார்க்கலாம்  திருடித்தான் உண்ணலாமே என்று கூட திருடி விட்டான்.

ஆனால் திருடியவனை இறைவன் பார்த்துவிட்டான். ஆனால் பார்த்ததை மனிதனுக்கு தெரியாது.

ஆனால் இவந்தன் எவ்வாறு நின்று நின்று இதனையும் என்று அளவிற்கு கூட எங்கேயாவது சரி என்று ஒரு புத்தியுள்ள மனிதனும் பின் இவனை இவந்தன் திருடியதை பார்த்துவிட்டான்.

அவந்தனே!! ஓடி ஓடி ஓடி ஓடி ஒளிந்து கொண்டான் ஒரு திருத்தலத்தில்.

திருத்தலத்தில் பின் அவந்தனுக்கு யோசனைகள் பலமாக வந்தது எப்படி இப்படி எல்லாம் திருடிவிட்டு மனிதன் கண்ணுக்கு பட்டு விட்டோமே என்று எண்ணி!!! 

ஆனால் இதை மறப்பதற்காக ஒரு உடையை அணிந்து கொண்டான்.

அணிந்து கொண்டான்! அவ் உடை காவியே!!! என்று சொல்கின்றான் எவை என்று ஆனாலும் இதைத்தான் உடையாக அணிந்து கொண்டான்.

ஆனாலும் இவையன்றி ஆனால் பார்த்த மனிதனே ஓடிவந்து சரி இவந்தன் இவையன்றி கூற பின் கடவுளின் பக்தனாக... ஆனால் கடவுளே பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று விட்டு விட்டான்.

இதுதானப்பா காவி!!!

ஆனாலும் நல்லோர்களை கூட இவைதன் செய்தால் தீயவர்கள் ஆகி விடுகிறார்கள் அப்பனே!!!

அதனால் அப்பனே நல்லோர்களும் இருக்கின்றார்கள்.. அவர் பெயரையும் சொல்லி இப்படி எல்லாம் ஏமாற்றாதீர்கள்.!!! உண்மையப்பா!! 

நிச்சயம் அப்பனே ஒவ்வொருவருக்கும் சொல்கின்றேன் நீ பக்தியை கடைபிடித்தாலும் நோய்கள் நிச்சயம் வரும் ஏனென்றால் மனிதன் சொல்வதை நீ கேட்டால் அப்பனே மனிதனுக்கு என்னென்ன வினைகள் வருகின்றதோ அவையெல்லாம் உங்களுக்கு வந்து விடும் என்பேன். 

அதனால் உன் புத்தியை கூர்மையாக்கி முதலில் அறிவைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள் அவ் அறிவை பயன்படுத்தினால் மட்டுமே இறைவனை காண முடியுமே தவிர மற்றவை எல்லாம் மனிதன் மனிதனை பின் சொல்லிக் கொடுத்தாலும் ஒன்றும் லாபம் இல்லை.

அதனால் இவையன்றி யாங்கள் ஒவ்வொன்றாக இவையன்றி கூற நல்லோருக்கே உரைக்கின்றோம்... இதைப் பயன்படுத்திக்கொண்டு பிறவி என்னும் பெருங்கடலை பின் நீந்தி வருவதற்காக தயாராகிக் கொள்ளுங்கள்.!!!

மற்றவை எல்லாம் ஆகாது!!

மந்திரத்தால்!! தந்திரத்தால்!! இவையெல்லாம் கூட சிறிது காலமே தவிர ஆனாலும் அவையெல்லாம் திரும்பவும் அடித்து விட்டால் நீ எழுந்துகொள்ளவும் முடியாது.... சொல்லிவிட்டேன்!!!

அப்பனே ஒன்றைமட்டும் சொல்கின்றேன் குழந்தையாக பிறக்கும் பொழுது ஒன்றும் தெரியாமலே பிறந்து விட்டாய்!!!

ஆனாலும் போகும்பொழுதும்  கூட ஒன்றும் தெரியாமலே போய் கொண்டிருக்கிறாய்.

ஆனால் நடுவில் வருகின்றதே!! அது யார் மூலம் கற்பிக்கப்படுகின்றதென்றால்?? மனிதன் மூலம் கற்பிக்கப்படுகின்றது.

அவ் மனிதன் கற்பித்தால் அனைத்தும் வீணே!!! அதனால் பின் வயதுகள் ஆக ,ஆக, இறைவன் விதவிதமாக நல் விதமாக பக்தியை செலுத்தினால் இறைவன் எப்படி நடத்தலாம்?? இறைவன் நேரடியாகவே வருவான் கலியுகத்தில் இது தான் உண்மையப்பா!!!!

அவ் விஷயத்திற்காக நீங்கள் மனிதனாக எப்படி எதை என்றும் கூற அதற்காக வாழ்ந்திட்டு இப்படித்தான் வாழவேண்டும் என்று நினைத்து வாழ்ந்தால் உண்மையே வெல்லும்!!!

உண்மையே வெல்லும்!!!

வெல்லும் சக்தி தர்மம்!!!

ஆனாலும் மற்றவை எல்லாம் தோல்வியில் முடிந்துவிடும் என்பதுதான் எனது வாக்கு!!!

எவை?? ஆனாலும் சொல்கின்றேன் நீங்கள் சரியாக இருந்தால் கிரகங்களும் விட்டுவிட்டுச் செல்லும்.

நீங்கள் தவறு செய்து கொண்டே இருந்தால் கிரகங்களும் உன்னை விட்டு விடாது. பின் கஷ்டத்தில் நுழையச் செய்யும்.

ஆனால் பின் இவையன்றி கூற அப்பொழுது நல் நேரம் நம்தனக்கு நடந்துகொண்டே இருக்கின்றதே!!! 

என்னதான் லாபம் என்று மனிதா நினைக்காதே!! நினைத்து நினைத்து தான்
தற்பொழுதும் கூட இறை பலங்களே இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது.

அதனால் உண்மையை செய்!! நல்லதையே நினை!! நல்லதே நடக்கும்.

இவையன்றி கூற வள்ளலான் வழிகளை பின்பற்றுங்கள் மக்களே!! திருந்திக் கொள்ளுங்கள்!! திருந்திக் கொள்ளுங்கள்!! 

எதையன்றி கூற வரும் காலங்களும் சரி இல்லை தான் என்று சொல்வேன் அதனால் நீங்கள் திருந்திக் கொண்டால் நல் விதமாக ஈசன் அருளைப் பெற்று பின் வாழ்ந்துவிடலாம் அப்படி இல்லை என்றாலும் நிச்சயம் அழிவின் பாதையிலே... மனிதா!!! மனிதா!!! 

இன்னும் சித்தர்கள் செப்புவார்கள்..இதையன்றி கூற... நல் வழிகளையே காட்டுவார்கள் மீண்டும் செப்புகின்றேன் வாக்குகளாக!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீள்பதிவாக:-

குருவருளால் எட்டாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2024/04/tut.html

அகத்தியப்பெருமானின் உத்தரவு! - சூரியனும்..!.சந்திரனும்..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_17.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post.html

அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html

 இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html

 சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

நெடார் கிராமம் , அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/08/blog-post_4.html


No comments:

Post a Comment