இறைவா.! அனைத்தும் நீயே..!!
சர்வம் சிவார்ப்பணம்...!!!
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால்
கடந்த 2023 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் விடுமுறை நாட்களில் ஆலய தரிசனம் மிக அருமையாக
நமக்கு கிடைத்தது. அனைத்து ஆலயங்களும் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான்
வாக்குரைத்த ஆலயங்கள். சோழர் காலத்தில் சம்பந்தப்பட்ட ஆலயங்கள். மேலும்
தற்போது திருப்பணி நடைபெற்று வரும் ஆலயங்களாக அமைந்தது. இதனையொட்டியே
இன்றைய பதிவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மானாங்கோரை வட்டத்தில் உள்ள நெடார் கிராமத்தில் அருள்பாலித்து வரும்
அருள்மிகு
ஸ்ரீ நித்யகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
தரிசனம் கண்டு,
அனைத்து அடியார் பெருமக்களிடம் ஆலய திருப்பணிக்கு உதவி வேண்டி பணிகின்றோம்.
ஒவ்வொரு ஆலய தரிசனமும் நமக்கு நம் குருநாதர் அருளால் மட்டுமே கிடைத்து வருகின்றது. இந்த ஆலயத்தில் நாம் பெற்ற அருள்நிலைகளை பதிவின் இறுதியில் கொடுத்துள்ளோம். மேலும் 06.08.2023 ஆம் நாள் நடைபெற்ற திருவாசக முற்றோதுதல் வழிபாட்டை அடுத்த பதிவில் காண்போம்.
குருநாதர் அருளிய பிரம்மபுரீஸ்வரர் ஆலய வாக்கு இன்றைய குருநாள் பதிவாக கண்டு ,ஈசனை பிடிக்க வேண்டி பணிவோமாக!
7/4/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் :
அருள்மிகு
பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
நித்யகல்யாணி அம்பாள்.
ஆலங்குடி நெடார்.கிராமம் மானாங்கோரை அஞ்சல் தஞ்சாவூர் மாவட்டம்.
அண்ட பிண்டங்களெல்லாம் ஆள்கின்ற!! இறைவா!! போற்றி!!! போற்றியே மனதில் நிறுத்தி செப்புகின்றேன் அகத்தியன்.
நலமாக நலமாக இவ் ஆலயம் பல பல யுகங்களையும் கடந்து வந்தது ,ஆனாலும் அழிவுற்றது. ஓர், ஓர் யுகத்திலும் அழிவுற்று, அழிவுற்று பின் கலியுகத்திலும் இதனையுமெதற்காக?? இதையன்றி கூற... ""ராசராசனால்... கட்டப்பட்டதே இதனையும் கூட ...( ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட சிவாலயம்)
நன்று!!! இதை உணர்வதற்கு!!!
ஆனாலும் விளக்கங்கள் ஓர் முறை என்னை (அகத்தியரை) நாடினான் ராச ராச சோழன்.
இதையென்று அறிவதற்கு ""இவ்வுலகத்தை ஆள வேண்டும்,ஆள வேண்டும் பக்திகளை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டறிந்தான் சோழன்.
இதை அறிந்த யான்....
அப்பனே!!... இவையெல்லாம் திருந்தாது மனித ஜென்மங்கள்!! அதனால் எதையன்றி கூற... இருப்பினும் யான் பிரம்மாவிடம் தெரிவித்து உன் விதியை மாற்றி அமைத்து விடுகின்றேன்.
ஆனாலும் ஒன்றை நீ செய்ய வேண்டும்!! செய்ய வேண்டும்!! ஆனாலும் ஓர் இடத்திற்குச் சென்று அங்கே யாரும் மனிதர்கள் வர இயலாத அளவிற்கு நீ தவங்களை மேற்கொள்ள வேண்டும்... ஈசனை நினைத்து!!!!
ஈசனை!! நினைத்து!! நினைத்து!! உருகி உருகி தியானத்தை மேற்கொண்டால் வரங்கள்.
இதையன்றி பின் பிரம்மனே உன் விதியை மாற்றம் அடையச் செய்வான்... நீ!! உன் விருப்பத்தை எளிதில் நிறைவேற்றி விடலாம் என்று கூட.
ஆனாலும் இதையன்றி கூற ஆனாலும் யான் சொன்னேன்.!!..யான் சொன்னேன்...!! ஓர் இடத்திற்குச் செல் என்று!!!
ஆனால் இங்கே அவ்விடம் என்பேன்.
என்பதற்கிணங்க இங்கே வந்தான், வந்தான் இதையன்றி கூற.. ஆனாலும் தன் சொந்த பந்தங்கள் எல்லாம் விட்டுவிட்டு!!!
எதையன்றி கூற ஆனாலும் தவம் மேற்கொண்டான்!!!
மேற்கொண்டான் மேற்கொண்டான் தன் மனதில் உள்ளவற்றை தன் நினைப்பாக தோன்றித் தோன்றி தோன்றித் தோன்றி ""ஈசனே ""!!!என்று கதியாக இருந்து நமசிவாயா!!!! என்று இரவும் பகலுமாக...
உறங்கவில்லை!! இதையென்று உண்ணவில்லை!!! பின் நமச்சிவாயனே என்று.
பல விஷ ஜந்துக்கள் இவனை தீண்டினஆனாலும் இதையன்றி கூற இவந்தனுக்கு ஒன்றும் ஆகவில்லை.
ஏனென்றால் "நமச்சிவாய" மந்திரம் பலம்!மிக்கது! என்பதை கூட... யாருக்கும் தெரியாமல் போய்விட்டது இப்பொழுதும் கூட....
அவ் மந்திரத்தின் பலன் நிச்சயம் செப்புவர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படலாமே தவிர... ஆனால் விடிவெள்ளி ஒரு இனிப்பே!!!!
இனிப்பே!! என்பதற்கிணங்க தவங்கள்!! மேற்கொண்டு, மேற்கொண்டு... ஆனாலும் ஈசன் இன்னும் சோதித்தான்......
சோதித்து, சோதித்து, பல பல இளவரசிகளும் இவன் கண் முன்னே தோன்றி..!!! எவையன்றி கூற ஆனாலும் இவன் எதற்கும் மயங்கவில்லை.
மயங்கவில்லை !!ஆனால் இதையன்றி கூற...... """" எதற்கும் மயங்காதவன் ராஜராஜ சோழன்""" அதனால் தான் இப்பொழுதும் கூட இவன் பெயர்!! பெயர்!! பெயரைச் சொல்லிச், சொல்லி.....
அதனால் தான் சொல்கின்றேன் மனிதர்களுக்கும் .....
"""எதையும் விரும்பாதவர்களே!!!! பின் இவ்வுலகத்தில் பேசுவார்கள்!!! பல காலம்!! இறைவனே பேசுவான். ஆனாலும் மனிதர்களும் பேசுவார்கள் சில மனிதர்களைப் பற்றி.
ஆனாலும் எளிதில் மறந்து விடலாம் ஏனென்றால் இதற்கும் அறிவதற்கும் இன்னும் விளக்கங்கள் யான் வருகின்ற வாக்குகளில் செப்புகின்றேன்.
செப்புகின்றேன் என்பதற்கிணங்க ஆனாலும் கடைசியில் பின் அனைத்தும் எதையன்றி கூற பின் பல ஆண்டுகள் தவம் செய்து பின் ஈசன் கண் முன் தோன்றினான்!!!
தோன்றினான்!!! ராஜ ராஜ சோழனுக்கு!!
இதையென்று கூற நிறுவாமல் பின்...எதனையென்று பின்
""""""அப்பனே!!!!!!! என்று ஈசனும் அன்பாக அழைத்திட்டு .....
பின்!!! வந்துவிட்டாயா!!! வந்துவிட்டாயா!!!! என் அப்பனே!!!!உலகத்தைக் காத்தாளும் அப்பனே!!!
இதையென்றும் கூற அப்பனே!!
உன் நிழல்கள்
போதும் அப்பனே!!!
கர்மவினையை
நீக்கும்!! அப்பனே!!
கர்மத்தை அழிக்க வல்லானும் நீயே!!!
அழிக்க கூடியது!!
அழிக்க நிரூபிப்பது!!
எதனையென்று கூற இதனையும் பாடலாக பின்பற்றுவது.... ""நமச்சிவாயா"""!!! .... எனும் மந்திரத்தை தவிர வேறொன்றுமில்லை.
வேறொன்றுமில்லை!! சாலச் சிறந்தது!!!!!
என் அப்பனே!!!
என் முதல்வனே!!!
என் தவப்புதல்வனே!!!
அப்பனே!! அன்பானவனே!!
அன்பானவனே!!!!
இதையன்றி கூற மயக்கத்தில் ஆடிவிட்டான் சிறிது நேரம். ராஜராஜசோழன் இதையன்றி கூற.
(ஈசன்)
சொல் மகனே......... உந்தனுக்கு என்ன வேண்டும் என்று கூற..
(சோழன்)
யான் பல வருடங்கள் தவம் செய்து விட்டேன்!!! ஆனால் இங்கே அகத்தியன் சொன்ன வேளை!.
ஆனாலும் நீயும் வந்து விட்டாய் இதையென்று கூற.
ஆனாலும் முதலில் சொல்லியது ஈசன்!!!
அகத்தியன் போல் இவ்வுலகத்தில் கருணை உள்ளவர் யாரும் இல்லை!!!
ஒருவரை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் அளவிற்கு தகுதிகள் படைத்தவன் அகத்தியன்.
ஆனால் அவன் மீது பற்றாத பற்று!! நம்பிக்கை வைத்து விட்டால் கைவிடமாட்டான் இவ்வுலகத்தில். அது எவரேனும் சரி!!!!
திருடனாக இருந்தாலும் சரி!!
நல்லோர் ஆக இருந்தாலும் சரி!!!
மாற்றிவிடுவான் எளிதில் அகத்தியன்.
ஆனால் நம்பிக்கை வேண்டும் !!!நம்பிக்கை வேண்டும் அன்பு வேண்டும்!! அவ் அன்பிற்கு பன்மடங்கு செய்வான் என்பது குறிக்கோளாக.!!!
அதனைத்தான் ஆனாலும் ராஜராஜசோழன் அங்கிருந்தே முதலில் குருவை ""அகத்தியா""!!!! என்று அழைத்து விட்டான்.
ஆனாலும் இதையன்றி அறிவதற்கு வந்துவிட்டேன்.
குருவே!!! உன்னால்தான் ஈசன்.. எந்தனுக்கு இவையன்றி கூற... சொன்னாய் என்பதைகூட குருவின் பெருமையை அழகாகவே அழகாகவே எடுத்துரைத்தான் ராஜராஜ சோழன். இதையன்றி கூற.
ஆனாலும் நன்று!! விளக்கங்கள் தெரிவதற்கு ஒன்றுமில்லை!!
ஒன்றுமில்லை !! இதனால் இவையன்றி கூற உன் விருப்பம் என்னவென்று??கேள்!!! என்று ஈசனும் வினாவினான்!!!
இதையன்றி கூற,கூற, பின் இதையன்றி கூற....
""எந்தனுக்கு இவ்வுலகத்தில் ஏதும் ஆசைகள் இல்லை!!!
உன்னை பார்த்தவுடனே..
ஆனாலும் இவ்வுலகத்தில் செய்யாததை!! யான் செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள்.
அதனால் நீ!! அதைத் தான்(வரம்) கொடுக்க வேண்டும் என்று ஈசனிடம். எதனை என்று அழகாக கேட்டு விட்டான்.
ஆனால் ஈசன் சொன்னான் ""நிச்சயம் உன் புகழ் இவ்வுலகத்தில் யாராலும் எதையன்றி கூற... கூறமுடியாது! ஈடில்லாத அளவிற்கு.!!
பின் நீ எதனை? விரும்பினாயோ!! இவ்வுலகத்தில் அதுவும் நிச்சயமாய் யாராலும் ஜெயிக்க முடியாது!!! பின் இதனையும் பின்பற்றி வரவும் முடியாது....!!
அதுபோல் வரத்தை பெற்றுக்கொள்!! என்று இணங்க பின்
அழகாகவே !!அழகாகவே.!!
ஆனாலும் பின் விதியில் (ராஜ ராஜ சோழன்) கூட இல்லை ஆனாலும் மாற்றி விடுகின்றேன்!! இதனால் தான் இதையன்றி கூற விதியையே மாற்றி அமைத்து யாரும் செய்ய முடியாத அளவிற்கு பின் செய்வித்தான்!!! ( தஞ்சை பெரிய கோயில்) ராஜராஜசோழன்.
இனிமேலும் அவந்தனையும், புகழையும் யாரும் ஒன்றும் செய்ய இயலாது!!! இதையன்றி கூற....
கூற இதையன்றி அதனால் தான் இங்கு பலமாக அவந்தனுக்கு பின் யோசனைகள் வந்தது.
எவ்வாறு இங்குதான் எவை என்று பல காலம் தங்கினான்... எப்படியெல்லாம்??? மனிதர்களை ஏற்படுத்த வேண்டும்!!
இதற்கு பன் மடங்கு உயர்வு பெற வேண்டும் என்றெல்லாம் வினாவினான்!!
ஆனாலும் இதனால் தான் இதையென்று கூற
""விதியையே மாற்றவல்லது இவ்வாலயம்"!!!!!
இதனால்தான் இப்பெயர்(பிரம்மபுரீஸ்வரர்) பெற்றது என்பேன்.
அதனால் தான் சொல்கின்றேன்!! மனிதர்களே!!! இவையன்றி கூற பல ஆலயங்கள் இவ்வாறு பின் எதையன்றி ன்று கூற அழிந்து கிடக்கின்றது!!!!!
எதையன்றி கூற ஆனால் அங்கங்கு சென்றால் மனிதர்கள் பக்திமான்கள் பிழைத்துக் கொள்வார்கள் பெரிய பெரிய அளவில் வருவார்கள்.
ஆனால் மனிதனோ? முட்டாளே!!! திருடனே!!
இதையன்றி கூற அனைத்தும் அழித்துவிட்டார்கள் பின் பொய் சொல்லி அதை செய்தால் இவை நடக்கும் இவையெல்லாம் வீணே!!!
வீணே !!... என்பேன்.
அதனால் மக்களை ஏமாற்றி ஏமாற்றிவரும் வரும் வரும் காலங்களில் மனிதனை மனிதன் பிழைத்துக் கொண்டான்.
அதனால் அன்பானவர்களே!!!
இவையன்றி கூற எத்தலத்திற்குச் சென்றால் நல்லவை...நடக்கும்.. என்று கூட இனிமேலும் வாக்குகள் செப்புவேன்.
நல்லோர்கள் பயன்படுத்திக் கொண்டால் நல்லது!!!
ஆனாலும் யார்? யாருக்கு? எதை? எதனைச் செய்ய? வேண்டும்? என்பதை கூட என்பால் இழுத்து விடுவேன்.!!
நல்லோர்கள் !! என்னை நம்பியோர்கள் இனிமேலும் நிச்சயம் வாழ்வார்கள் என்பதை திண்ணமாக கூறுகின்றேன்.
"""" பயன்படுத்தி கொள்க"!!!!
இன்னும் பல ஆலயங்கள் இருக்கின்றது சூட்சுமமான ஆலயங்கள் கூட...!!!!
அதனால் சொல்லிவிட்டேன் விதியைக் கூட மாற்ற வல்லது!!!
ஆனால் ஈசனோ!!! மனிதன் இப்படி இருக்கின்றானே என்று!!! இப்படி இருக்கன்றதே மனிதர்களின் இயல்பு ..ஆனால் இதையன்றி கூற கூற ஆனாலும் விதியில் கூட இங்கு (ஒருவர் விதியில் இவ் ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என்று விதியில் இருந்தால் மட்டுமே இவ் ஆலயத்திற்கு வர முடியும்) வந்தால்தான்.. என்று இருந்தால் தான் வர இயலும்... இவையன்றி கூட.
ராசராசசோழனின் விதியையே மாற்றி அமைத்தது இவ்வாலயம்.
அதனால் மக்களே!!! இதையென்று கூட தெரிந்து கொள்ளுங்கள்.
இதனால் இங்கே அமர்ந்து பல வேலைகளை செய்ய ஆரம்பித்தான் ராஜராஜ சோழன். இவையன்றி கூற.
ஆனாலும் இதற்கு தகுந்தாற்போல் இவையன்றி ஆனாலும்
திரும்பவும், ""ஈசன் வந்து உந்தனுக்கு யான் கொடுத்து விட்டேன் வரங்கள்!!!!
வரங்கள் எவ்வாறு என்று கூட.
நீ கேட்டாய் இவ்வுலகத்தில் அழிவில்லாததையே!! யான் செய்ய வேண்டும்
என் புகழை யாரும் இதையன்றி கூற பின் உயர்த்தி தொடவும் கூடாது என்று கூட!!!
(ஈசன்) அதுபோலவே செய்துவிட்டேன் திரும்பவும் ஏது ??வரங்கள் வேண்டும் கேள்!!! என்று கூற
ஆனாலும் பின் சோழனே!!!
கேட்டான்!! எதையன்றி கூற பின்....
ஆனாலும், யாரும் செய்யாத அளவிற்கு யான் செய்வேன்!! ஆனால் ""ஈசா!!!! வரத்தை கொடுத்து விட்டாய்!!!
ஆனால் இதற்கு எப்படி??? யான் புத்திகள் இல்லாமல் செய்வது என்று கூட...
ஆனாலும் ஈசன் சொன்னான்!!! இவையன்றி கூற உந்தனுக்கு உதவிகரமாக கருவூரான்(கருவூர்தேவர் சித்தர்) இருப்பான் என்பதை கூட சொல்லிவிட்டேன்.
இதனால் இவையன்றி கூற அனைத்து சாதகங்களிலும் இப்படி தான் செய்ய வேண்டும் இப்படித்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதைக் கூட கூட கருவூரான் ஒவ்வொரு நொடியிலும் நொடித்து!! கணித்து !!கொடுத்து அனுப்பினான்.
இதனால் நிச்சயம் இவ்வாறு என்பதைக்கூட பெரிய கோயில் என்கிறார்களே!!!! (தஞ்சை பெருவுடையார் பிரகதீஸ்வரர் கோயில்) அதனை சிறிது சிறிதாக பின் கருவூரான் பின் கொடுக்க யானும் (அகத்தியர்) எதையன்றி கூற இவ்வாறு செய்ய!!! செய்ய...!!!என்று கூற பல சித்தர்களும் பின் இவ்வாறு செய்க !!! என்று கூற பின் மன்னனுக்கு பின் இவற்றையெல்லாம் கூட கற்றுக்கொடுத்தார்கள்.
ஆனாலும் அதிலும் கூட பின் இவை என்று கூற அரசு சார்ந்த சம்பந்தப்பட்ட ஆட்கள் இவ்வாறெல்லாம் எப்படி?? எங்கள் (சோழ அரசு அதிகாரிகள் உதவி) அருள் இல்லாமல் கட்ட முடியும்?? முடியாது என்று கூட பலர் தடுத்தார்கள்.
அப்பொழுது கருவூரான் கோபத்தில் சொன்னான்!!!
இவையன்றி கூற அரசு சார்ந்த தொழில்களே இவையும் கூட!!!
இவ் ஆலயத்திற்கு அரசு சார்ந்து வருபவர்களுக்கு அவர்கள் நிலை(பதவி) பறிபோய்விடும்.
அதனால் எச்சரிக்கின்றேன் எவை என்று கூற ""தஞ்சை இதையன்றி கூற" பெரிய கோயில்"" செல்பவர்களுக்கு அரசு பெரும் இவையன்றி கூற ஆனாலும்... நிச்சயமாய் நேர்மையாக நடப்பவர்களுக்கே அவ் ஆலயத்தில் நிச்சயம் சிறப்புக்கள்.
அது தவறி சென்றுவிட்டால் ஆனால் நீ கீழே விழுந்து விடுவாய் அரசு பதவியும் சென்றுவிடும் உன் பிள்ளைகளும் கஷ்டங்கள் ஆகிவிடுவார்கள்.
ஏனென்றால் இதை செப்புகின்றேனென்றால் கோயிலை எதையன்றி கூற எவை என்று கூற பிற்படுத்தும் அளவிற்கு கூட தஞ்சைக் கோயிலை புதுப்பித்து புதுப்பித்து ஆனால் அரசு சார்ந்த மனிதர்களோ அதை தடுத்தார்கள் கரூவூரானுக்கும் கோபம் வந்துவிட்டது...
""" இனிமேல் இத்தலத்திற்கு அரசு சார்ந்த எவையன்றி கூற உண்மையானவர்களே வரவேண்டும்!!
இவையன்றி கூற பின் பலவிதமான பொய்களை சொல்லி ஏமாற்றி பிழைத்துக் கொண்டு வந்தால் நிச்சயம் அவ் அரசு சார்ந்த தொழில் அழியும். இதையன்றி கூற...
அதனால் தான் இப்பொழுதும் கூட சில மனிதர்களுக்கே அது தெரியவரும்... என்பேன்.
இவையன்றி கூற ஆனாலும் இவையன்றி கூற மனிதனுக்கு முட்டாள் மனிதனுக்கு இவையெல்லாம் தெரிவதில்லை.
தெரிவதில்லை ஆனாலும் அத் திருத்தலத்திற்கும் எப்படி சென்றாக வேண்டும் என்பதெல்லாம் தெரிவதில்லை
ஆனால் மனிதனோ!! இப்பொழுது அதை சுற்றுலாத்தலமாக ஆக்கிவிட்டான்!!
"""எவனொருவன் சுற்றுலாத்தலமாக நினைத்துக் கொண்டு வருகின்றானோ அவந்தனுக்கு கேடுகள்... நிச்சயம் உண்டு.
இப்பொழுது புரிந்து கொண்டீர்களா?!! எவையன்றி கூற.....
யாரிடம்????
யாரிடம்?? விளையாடுகிறீர்கள்??? மனிதர்களே!!!!
இறைவனிடமா??????
ஆனாலும் இதையன்றி கூற அதனால் பயபக்தியோடு அத்தலத்திற்கு வந்தாலே கருவூரான் அதற்கு பாதுகாப்பாக சுற்றிக்கொண்டே இருக்கின்றான்.
கருவூரான் எதையன்றி கூற அவந்தனும்... அவந்தன் விளக்கமும் இன்னும் சற்று தூரத்தில் இல்லை.
அவந்தனே வாக்குகள் உரைப்பான் வந்து!.
இதனால் எவை என்று கூற இதையன்றி கூற... ராஜராஜ சோழனும் பெரிய கோயிலை அடைந்தான். பின்... இதையன்றி கூற புதுப்பித்தான்.
பல சித்தர்கள் பல தேவர்கள் வந்து ஆசீர்வதித்து விட்டனர்.
ஆனாலும் மறக்கவில்லை இத்திருத்தலத்தை....(பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்)
எவையன்றி கூற இங்கேயும் எவையன்றி கூற இத்தலத்தையும் எவை என்று என்று கூற கூற உடனே அதை புதுப்பித்தவுடன் இதையும் புதுப்பித்தான்.
ஆனால் அவந்தனுக்கு எவையன்றி கூற அனைத்தும் கொடுத்துவிட்டான் இறைவன்.
இனி!! நம்தனக்கு என்ன வேண்டும்??? என்று கூட இங்கே பல ஆண்டுகள் தங்கி விட்டான்.
ஆனாலும் இவையன்றி கூற அதனால் எவை என்று கூட தவங்கள் செய்து செய்து செய்து செய்து பல வருடங்கள் இங்கேயே தங்கி தங்கி ஆனாலும் இவையன்றி கூற....
""திரும்பவும் ஈசன் வந்தான்!!!!
ஈசன் வந்து அப்பனே உன் நிலைமையை யான் சரியாக புரிந்து கொண்டேன் உந்தனக்கு எது ??தேவையோ அதை யான் கொடுத்தும் விட்டேன்.
""இனிமேல் உன் புகழை யாரும் சரி செய்ய இயலாது!!!!
"""" உந்தனக்கு ஈடு யாரும் இல்லை!!!!
இதுதான் பெரிய கோயிலின் அதிசயம்!!!!!
இதையன்றி கூற அதனால் இனிமேலும் என்ன வரம் வேண்டும் என்று கூறு!!!
கூறு!!! எதனையென்று கூற அப்பனே !!!
இதையென்று கூற யான் அனைத்தும் சாதித்து விட்டேன்.!!!
அனைத்தும் கொடுத்தாய் எனக்கு!!!
எந்தனுக்கு என்ன?? வேண்டும் என்று?? யான் கூறுவது??
ஆனாலும் இவையன்றி கூற யான் மறக்கலாகாது!!!
யான் உன்னிடத்திலே இருக்க வேண்டும் என்று கூட ராஜராஜ சோழனும் இதையன்றி கூற....
ஆனால் ஈசனும் !!
மகனே!! பொறுத்திரு!!!
இவையன்றி கூற இதையென்று கூற....
முதலில் அகத்தியனுக்கு நன்றி சொல்!!! என்று கூற.
ஆனாலும் இதையன்றி கூற ஆனாலும் இவையன்றி கூறும் அளவிற்கு கூட பக்திகள் சிறந்தவையால்..
""" யானே இங்கு வந்தேன் அவனை பார்க்க இதுதானப்பா அன்பு!!!
இதனால் இறைவனிடத்தில் அன்பு செலுத்தினால் சரியாக சரியாக மனதில் இவ்வாறு தான் வாழவேண்டும் பல மனிதர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டுமென்று எண்ணினால் நிச்சயம் யான் தேடி வருவேன் அவந்தனை.
இதற்கு சான்றாக ராஜராஜ சோழனே!!!!
அவந்தனையே யான் குறிக்கோள் ஆக காட்டுகின்றேன்!!
அப்பனே!! இதையன்றி கூற அதனால் இத்தலமும் விசித்திரமானது!!!
இங்கு வந்து செல்பவர்கள் விதிகள் மாறும் !!மாறும்!! என்பேன்.
இதையன்றி கூற பின் அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை கூட பின் ஈசனே கொடுப்பான்!!! ஆராய்ந்து!!!
ஆனாலும் இவையன்றி கூற... ஆனாலும் அதற்கு தகுதிகளாக நீங்கள் இருக்க வேண்டும்.!!!
இருக்க வேண்டும்!!! ராஜராஜ சோழன் எப்படி தவம் செய்தான்!!!! என்பதைக்கூட....
ஏதும்?? நினைக்காமல் ஈசனுடைய மனமிரங்கி செய்தால்... பின் விதியும் மாற்ற வல்லான்...
இப்பொழுது கூட பின் பிரம்மனே விதியை மாற்றுவான் என்பதற்கிணங்க.....
"" ஈசனும் விதியை மாற்றுவான் இத்தலத்தில் !!!
ஈசனே!!! பிரம்மா, விஷ்ணுவாக இருந்து இதையன்றி கூட...விதியை மாற்றிவிடுவான் எளிதில்.
இவையன்றி கூற பின் காப்பான் என்பதையும் கூட சொல்லிவிட்டேன்.
அதனால் இங்கேயும் நிச்சயம் எதையன்றி கூற பல சித்தர்களும் வந்து தவம் செய்துள்ளார்கள்.
ஆனாலும் இவையன்றி கூற இன்னும் ஓர் ஓர் பிறப்பைப் பற்றியும் ரகசியம் சொல்கின்றேன்..
அதனால் பல பல சிவனடியார்கள் இத்தலத்திற்கு வந்தார்கள்.
இவையன்றி கூற ஈசனாரின் இடத்தை இப்படியும் வடியமைத்தானே!!! ஓர் அரசன்(ராஜ ராஜ சோழன்) என்று எண்ணி பலபல ஞானியர்களும் தேடி வர நிச்சயம் இவையன்றி கூற இங்கேயே ஜீவ சமாதி அடைந்தார்கள் என்பது மெய்!!!!!
அதனால் பல மிகுந்த சக்தி மிகுந்த திருத்தலம் ஆனது இப்பொழுது இப்படி இருக்கின்றதே என்பதைக்கூட....
ஆனாலும் யானும் சரி செய்து விடுவேன் இதனை... என்னாலும் முடியும்!!!
ஆனாலும் மக்கள் பொய் சொல்லி ஏமாற்றி பின் பணத்தையும் பறிப்பார்கள்.
அதனால்தான் மெய்சிலிர்த்து தவிக்கின்றேன் யானும் கூட....
ஆனால் நல்லோர்களை வரவைத்து இதனையும் யான் ஏற்படுத்தி விடுவேன்!!
நலமாக நலமாக இவையன்றி கூற ஆனாலும் சொல்கின்றேன் மக்களே!!!
இவையன்றி கூற இறைவனிடத்தில் பக்தி செலுத்துங்கள்!!!
செலுத்துங்கள் இன்னும் பல பல வழிகளிலும்!!
நிச்சயம் இத் திருத்தலமும் மேன்மை பெறும்!!. மேன்மை பெறும் !! இன்னும் பல ஆலயங்களும் மேன்மை பெற்று அங்கங்கு சென்று வந்தால் நலமே மிஞ்சும் இனி வரும் சந்ததிகளுக்கு.
யான் எதையன்றி கூற வலம் வந்து கொண்டேதான் இருக்கின்றேன்....
எவையென்று கூற அன்பானவர்களுக்கே... பல மனிதர்களை ஏற்படுத்தி நல் விதமாகவே இவர்களுக்கு எதையன்றி கூற.... மற்றவர்களால் எதையென்று கூற இன்னும் சிறப்புகள் மிகும்!!!
மிகும்!!!! ஓர் மனிதனை யாங்கள் பக்குவப்படுத்தி இதையன்றி கூற ஆனால் மற்ற மனிதர்களுக்கும் உபயோகம் இருக்கின்றதா?? என்று எண்ணி நிச்சயம் அழைப்போம்.
அதனால் தகுதி உடையவர்களாக இருங்கள் நீங்கள்.
சித்தனை தேடினாலும் இறைவனை தேடினாலும் ஆனாலும் கடமையை எதையன்றி கூற....
பொய் சொல்லாமை!! நேர்மை!! பிற உயிர் கொல்லாமை !!!
இவையெல்லாம் கடைபிடித்தாலே யாங்கள் வருவோம்!!!!
எதையன்றி கூற.... மீட்டெடுத்து!!!!
ஆனாலும் மனதில் பொய் பொறாமை இவையெல்லாம் கூடிக் கொண்டே இருந்தால்...
நீ இறைவனை வணங்குவதே, வீண்!!! என்று சொல்லிவிட்டேன்.
அப்பனே ஆனாலும் இதையன்றி கூற எதை என்றும் கூறும் அளவிற்க்கும் கூட வித்தியாசங்கள்.
அனைத்தும் இறைவன் செயல் என்று யாரொருவன் விரும்புகிறானோ அவன்தான் மனிதன்!!!!
அவனுக்கே!! யாங்கள் அனைத்தும் கொடுப்போம் அப்படியில்லாமல் தன் பிள்ளை, தன் குடும்பம், இவையென்று எண்ணினால்??? அவையெல்லாம் சுகபோகங்கள்.
சுகபோகங்கள் எப்பொழுதுமே அழிந்துவிடும் என்பேன்.
அவ் அழிவிற்கு அடிமையாகி விட்டான் அவன். அவந்தனுக்கு யாங்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை செப்பிவிட்டேன்...
இதையன்றி கூற மனிதர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள் பணத்திற்காகவே!!
பணம்!! என்ன?? ஆனாலும்
"""ஈசனை பிடித்தால் சரித்திரம் பேசும்!!!!!
இதையன்றி கூற பல வழிகளிலும் ஞானத்தை.... உண்டு!! உண்டு!!
இவையன்றி கூற ஆனாலும் நிச்சயமாய் ஓர் வேளை கடைசியில் யான் சொல்ல வந்தது வந்தது எதையன்றி கூற.... ஆனாலும் கடைசியில் மீண்டும் பின் இதையன்றி கூற..கூற வழி வகைகள் உண்டு என்பதற்கிணங்க
மீண்டும் ஈசனே!! வந்தான் ராஜராஜ சோழனை.. சந்திக்க...
கடைசி உன் விருப்பம் என்ன என்றுகூட....
ஆனாலும் இதையன்றி கூற அநியாயம் எப்போதெல்லாம் பின் பெரிய வாகனமாக இருக்கின்றதோ அப்பொழுது என் பிறப்பு வேண்டும்.
பிறப்பு வேண்டும் மக்களைத் யான் திருத்த வேண்டும்... என்றுகூட.
ஆனால் ஈசனும் அதுபோலவே நடக்கட்டும் கூறிவிட்டான்!!!
ஆனாலும் இதற்கும் இதற்கெல்லாம் விதி வலைகள் இன்னும் உண்டு
விவரமாக விவரிகின்றேன் அப்பனே.
அதனால் நல்லோர்கள் எதையன்றி கூற....
ஆனாலும் யான் இறைவனையே வணங்குகின்றேனே!!!
ஏன் இந்த கஷ்டம் என்று நினைப்பதுண்டு மனிதர்கள்.!!!
எண்ணிப் பாருங்கள்!!! சிறிதளவு அப்பொழுது தெரியும் எதற்காக வருத்தப்படுகின்றாய் என்றுகூட....
சொத்துக்களுக்கு ஆசைப்படுவது பணத்திற்கு ஆசைப்படுவது இவையெல்லாம் மற்றவர்களை எதையன்றி கூற கூற எவை என்று கூற மனதை காயப்படுத்துவது பெரும் துன்பமப்பா!!! வேண்டாமப்பா!!! அமைதியாக மவுனத்தை கடைபிடித்தாலே போதுமானது!!! போதுமானது இவ்வுலகத்தை ஆள்ந்து விடலாம் என்பேன்.
ஆள்ந்து உயர்ந்து சென்ற பொழுது
இட்டா!! ஈச கட்டளைகள் உண்டா!!
உண்டா!! மாண்டா!!!
மாண்டதற்கும் பிறப்புக்கள் இல்லையா!!
இல்லையப்பா இதற்கும் சம்பந்தமான விதிகள்!!!
விதிகள் உண்டடா!!!
ஏதடா?? ஏது? பிறர் அறியாமை!!!
பிறர் அறியாமை தாம் தன் நிலைமையில் அறிய வைத்துவிட்டால் இது பெரும் புண்ணியமப்பா!!!
இப்புண்ணியத்திற்கு ஈடு!! இணை!! இல்லையப்பா!!
இவையன்றி கூற ஆனாலும் இத் தலம் இன்னும் சிறப்பு பெறும்.
யாங்கள் சித்தர்கள் எதையன்றி கூற யார் ?யார்? மூலம் எதனை செய்ய வேண்டுமோ?? அதனை உட்படுத்தி செய்வோம்.
ஆனால் விதியில் உள்ளவனுக்கே!! கதி!!!
கதியுள்ளவனுக்கே!! பெரும்புகழ்!!!
இவையன்றி கூற இதனால்தான் இவை என்று கூற அப்பொழுதே சொல்லிவிட்டான் ராஜராஜசோழன் இவை என்று கூற....
ஆனாலும் இவைதன் இத் திருத்தலத்தையும் கூட சில பொய்யான மனிதர்கள் உருவாக்கக் கூடாது.
உன் அருளைப் பெற்றவர்கள் எவரெவரோ!! அவரைத்தான் பின் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றுகூட ராஜராஜ சோழன் சொல்லிவிட்டான்.
அதனால் இப்பொழுது புரிந்து கொண்டீர்களா!!!
மனிதர்கள் அனைவரும் பொய்யே என்றுகூட!!!
அதனால் இவையன்றி கூற உண்மையான இவையன்றி கூற பின் ஆணவம் எதையன்றி கூற கெடுத்துவிடும்.
ராஜராஜ சோழனும் இப்படித்தான் வரம் வாங்கினான்.
ஈசா!!! உன் அருளைப் பெற்றவர்களே இவ்வாலயத்தை சரிசெய்ய வேண்டும் என்பதைகூட.
ஆனாலும் இவ்வுலகத்தில் இருக்கின்றார்கள் .
நிச்சயம் சரி செய்யும் அளவிற்கு நல்விதமாக வளரும் இன்னும் சூட்சுமங்கள் மாற்றி அமைக்கப்படும்.
விதியையே!! மாற்றி அமைக்க வல்லது இத்திருத்தலம் என்பேன்.
அப்பனே இதையன்றி கூற அதனால் இவையன்றி கூற ஞானியர்கள் இவ்வாறு தவம்செய்து பழைய பழைய எவ்வாறு என்பதையும் கூட திருத்தலங்களை ஈட்டினார்கள்.
ஆனால் இப்பொழுதோ பணத்தின் மீதே!!! யான் இதை செய்கின்றேன் அதை செய்கின்றேன் என்றெல்லாம் பொய் சொல்லி ....
பின் எவையன்றி கூற ஓர் திருத்தலத்தை எழுப்பி அதன் மூலம் பணத்தை சம்பாதித்தால் ஒன்றும் ஆகாது!!!""" நடுத்தெருவில் தான் நிற்கவேண்டும்!! சொல்லிவிட்டேன்!!!
அப்பனே இவையன்றி கூற வரும் சித்திரை திங்களிலும் இங்கே வருவார்களப்பா!! ஒவ்வொருவரும்!!!
எதையன்றி கூற நல் விதமாகவே ஆக்குவார்கள் அதனால் மனிதனுக்கு நல்வாழ்க்கை வேண்டுமென்றால் விதியைத்தான் எவ்வாறு என்பதை கூட பின் பிரம்மன் எழுதி வைத்து விட்டான்.
ஆனால் ஈசனால் அதை நிச்சயம் மாற்ற முடியுமென்றால் இவ் ஆலயமே!!! என்பேன்.
அப்பனே!! இவையன்றி கூற கூற அப்பனே இவ்வாலயம் இன்னும் சிறப்பு பெறும்.. எதையன்றி கூற.
அப்பனே!!! யாங்கள் இருக்கின்றோம்...
இன்னும் பழைய பழைய திருத்தலங்களை எல்லாம் திருத்தி அமைப்போம் என்பதுதான் உண்மை.
""ஏனென்றால் மக்கள் வாழட்டும்!!!
எதையன்றி கூற ஆனாலும் இவைதன் இதைவிட இன்னும் பல சிறப்பு மிக்க திருத்தலங்கள் நின்று கொண்டிருக்கின்றது.
அங்கெல்லாம் சென்று மனிதர்களே!!! வாருங்கள் மாறுங்கள் திருத்திக் கொள்ளுங்கள்!!!
அப்பனே!!! எதற்காக இதுவும் சொல்கின்றேன் என்றால் பல சிவனடியார்கள் இங்கே ஜீவசமாதிகள் அடைந்துள்ளார்கள் என்பேன்.
ஆனால் உடம்பு தான் இல்லை அப்பனே எதையன்றி கூற... ஆனாலும் உயிருண்டு எதையன்றி கூற....
எவையன்றி கூற அவர்கள் கண்ணில் பட்டாலே போதும் மனிதா!!! உன் பாவங்கள் போகும்!!! பல திருத்தலங்கள் அது போல இருக்கின்றன அங்கு தான் சித்தர்கள் வாசம் செய்வார்கள் என்பேன்!!
யாருமில்லாத இடத்திலே!! அங்கு சென்று வாருங்கள் இன்னும் ஒவ்வொரு சித்தனையும் யான் எழுப்புவேன்!! எழுப்புவேன்!! என்பேன்.
அனைத்தும் எவையன்றி கூற... கீழே!! எதையன்றி கூற மனிதர்களே திருந்தி கொள்ளுங்கள்.
வாழ்வது சில நொடிகளே!! என்பேன்!!
நன்றாக வாழ்ந்திட்டுச் செல்லுங்கள்!!! என்பேன் எதையன்றி கூற...
எந்தனுக்கும்(அகத்தியருக்கும்) பல முறை உரைத்துவிட்டான் ஈசன்!!! எதையன்றி கூற...
அகத்தியனே!!!!!
மனிதனை திருத்துவது சுலபமில்லை எவையன்றி கூற... நீயும் திருத்துவேன் திருத்துவேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றாய்.
ஆனாலும் நிச்சயமாய் யான்(அகத்தியர்) திருத்துவேன்.... எந்தனுக்கு அவ்வளவு எதையன்றி கூற ஆனால்... முடியட்டும் சென்று வா !!!என்று கூட எதை என்று கூற பின் சேவைகள்!! சேவைகள்!! என்றே கூட என் நிலைமைகள் மாறிவிட்டது மாறிவிட்டது ஈசன் எவையன்றி கூற....
முதலில் எவையன்றி கூற எவையென்று எடுத்தாலும் என்னைத்தான் ஈசன்...
அகத்தியா!!! அங்குச் செல்!!! அகத்தியா!! அங்குச் செல்!! என்றெல்லாம் சொல்வான்.
ஆனால் கடைசியில் கேட்டேன் ஒர் வார்த்தை!!! ஈசனிடம்!!! எதையன்றி கூற...
ஈசா!!!! எத்தனையோ தேவர்கள் எத்தனையோ முனிவர்கள் சபதம் செய்து தவம் செய்து கொண்டிருக்கின்றார்களே!!!
என்னை மட்டும் ஏன்?? நீ சென்றால் அங்கு நலமாகிவிடும், இங்கு சென்றால் நலமாகும் என்றெல்லாம் அனுப்புகின்றாயே!!! வேதனைக்குரியது ஈசா!!! எனறு யானும் கேட்டுவிட்டேன்!!!
அதனால் ஈசன்!! ஒரு வார்த்தை சொன்னான்!!!
"""அகத்தியனே!!! எந்தனுக்கு இவ்வுலகத்தில் சமமானவன் நீயே!!! என்று சொல்லிவிட்டான்..
கண்ணீர் மல்கியது!! எந்தனுக்கு!!!!
அதனால் தான் என்னால் அனைத்தும் முடியும் என்று சொல்லிவிட்டேன் மக்களே!!
யான் எதையன்றி கூற அனைத்தும் விதியை கூட ஒரு நொடியில் மாற்றி விடுவேன் ஆனால் யான் மாற்றி விட்டால்... அகத்தியனா!!?? என்று கூட நீயே கேள்வி கேட்பாய் என்பது எந்தனுக்கு தெரியும் !!!
அதனால் தான் என்னை வணங்குபவர்களுக்கும் யான் சிறிது யோசித்து தான் செய்வேன்!!!
ஏனென்றால் நாராயணனும் இது போலத்தான் மாட்டிக்கொண்டான்.... வரங்கள் கொடுத்து கொடுத்து ஈசனும் வரங்கள் கொடுத்து கொடுத்து!!!!
ஆனால் ""அகத்தியன்"" அப்படி இல்லை சொல்லிவிட்டேன்!!!
நலமாக நலமாக உண்டு உண்டு இன்னும் சித்தர்கள் செப்புவார்கள்...
உலகத்தை எதையன்றி கூற மீட்டுக்கொள்வார்கள் எதையன்றி கூற சித்தர்கள் எவையென்று கூற நிச்சயமாய் இவையென்று கூற மனிதனின் எவ்வாறு என்பதை கூட...ஆள வைப்பார்கள் மனிதனை. மனிதன் எவ்வாறு என்பதை கூட சித்தன் பிள்ளையாக இருந்து நிச்சயம் ஆள்வான் இவ்வுலகத்தை. அப்பொழுது தெரியும் இறைவன் பற்றிய சிந்தனைகள்.
அப்பனே இவையன்றி கூற அப்போதெல்லலாம் இறையருள் பெற்று தான் எவையன்றி கூற இவ்வுலகத்தை பின் இறைவனே வந்து ஆள்ந்தான் என்பேன். ரூபம் எடுத்து எடுத்து!!!
ஆனால் மனிதனே ஆட்சி செய்கின்றான் மனிதன் மனிதன் ஆட்சி செய்வது இப்படித்தான் இருக்கும் என்பேன்.!!
ஆனாலும் யாங்கள் திருத்துவோம்!! நல்வழி படுத்துவோம் அப்பனே!!
நலன்களே!! மிஞ்சும்!! நலன்களே மிஞ்சும் இன்னும் ஈசன் எதையன்றி கூற சொல்லிவிட்டேன் அப்பனே!!!
இவ் அம்மைக்கும் (நித்ய கல்யாணி அம்மாள்) எதையன்றி கூற பல நோய்களை தீர்க்கும் சக்தி உடையவள்.!!! இவள் பெயரிலேயே உள்ளது எதையென்று கூற மூலிகை.(நித்யகல்யாணி) அவ்மூலிகையை உண்டால் போதுமானது அனைத்து எவையன்றி கூற பின் அழிந்து விடும் என்பேன்... ஓர் நோயும் கூட...
பின் இன்னும் இன்னும் பல வாக்குகள் செப்புகின்றேன்... இன்னும் மறுபடியும் செப்புவான் ஒரு சித்தன் வந்து...இவ்வாலயத்திற்கு..மறு வாக்கும்!!!!
அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்!!!
அன்றைய தினம் நாம் பெற்ற தரிசனத்தை இங்கே காண உள்ளோம்.
ஆலய முகவரி மற்றும் விபரங்கள்
பிரம்மபுரீஸ்வரர் கோயில்
நெடார் ஆலங்குடி.
தஞ்சாவூர் மாவட்டம்.
நெடார் பிரம்மபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், நெடார் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.இக்கோயிலில் பிரம்மபுரீஸ்வரர், நித்ய கல்யாணி அம்மன் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிர்வாகியால் நிர்வகிக்கப்படுகிறது. இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
ஆலயம் மிகவும் சிதிலமடைந்து மேற்கூரைகோபுரங்கள் எல்லாம் பழுதடைந்த நிலையில் உள்ளது.
ஆலயத்தில் ஒரு நேரம் மட்டும் காலை வேளை பூசை நடக்கின்றது.
ஆலய விபரங்கள் குறித்து அறிய தொடர்பு கொள்ள :
திருமதி ராஜலக்ஷ்மி மொபைல் எண்:9790427107
ஆலய அர்ச்சகர்:
திரு. சின்னதம்பி
மொபைல் எண் :8940362042.
ஓம் ஸ்ரீலோபாமுத்திர சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீள்பதிவாக:-
காகபுஜண்டர் பெருமானின் உத்தரவு! - சித்திரை மாத விதி மாற்றும் ரகசியம்!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_16.html
சித்தன் அருள் - 1116 - காகபுசுண்டர் - திரையம்பகேஷ்வரர் வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/04/1116.html
குருவருளால் எட்டாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2024/04/tut.html
அகத்தியப்பெருமானின் உத்தரவு! - சூரியனும்..!.சந்திரனும்..!! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_17.html
அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post.html
அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html
இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html
சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html
அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html
பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html
உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html
ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html
நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html
நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html
இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html
ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html
அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html
மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html
ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html
வாணத்திரையன்
பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர்
திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html
அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html
அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html
அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html
குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html
குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html
கர்ம வட்டமா? தர்ம வட்டமா? - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html
வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html
நெடார் கிராமம் , அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/08/blog-post_4.html
No comments:
Post a Comment