"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, April 11, 2024

அக்னிதீர்த்தக்கரை - மாசி மகம் 10,008 தீப பூஜை வழிபாடு!

 இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஒவ்வோராண்டும் மாசி மக வழிபாடு நம்மை குருவின் வழியில் நடத்திவருகின்றது. ஒவ்வோராண்டும் மாசி மகம் அன்று நாம் எப்படியாவது நம் குருவின் அருளில் திளைக்க பாபநாசம் சென்று வருவது வழக்கம். அன்றைய தினம் பாபநாசம் தீர்த்தத்தில் நீராடி, சில தலங்களை தரிசித்து வருகின்றோம். அதில் நமக்கு வருடம்தோறும்  அக்னிதீர்த்தக்கரை - மாசி மகம் 10,008 தீப பூஜை அழைப்பு வரும். ஆனால் நம்மால் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்படும். ஆனால் குருவருளால் சென்ற ஆண்டில் 10008 தீப பூஜையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அருள்நிலை காட்சிகளை இங்கே பகிர்கின்றோம். அன்றைய வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் நமக்கு இறைவனும்,தீபமும் என்று மனதில் தோண்றியது.

மாசி மகத்தில் அக்னிதீர்த்தக்கரையில் 10,008 தீப பூஜையில்  இறைவனை தீப வடிவில் கண்டோம்.


நம்மைப் பொருத்த வரை , இது போன்ற வழிபாடுகளை நமக்கு குருவருளால் எப்போதாவது தான் கிடைக்கும். அப்படி தான் சென்ற ஆண்டில் நமக்கு கிடைத்தது. அன்றைய மாசி மகத்தன்று மாலை சுமார் 5 மணி அளவில் குடும்பத்தோடு அக்னிதீர்த்தக்கரை சென்றோம்.








அக்னிதீர்த்தக்கரை கோயிலை முழுதும் ஒரு முறை சுற்றி வந்தோம்.



நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் தரிசனம் பெற்றோம். 


அடுத்து 10008 தீபமேற்ற ஆயத்தம் ஆனோம். நீங்களே பாருங்கள்.





இதோ.. தீப விளக்குகள் எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தயாராக ஒவ்வொரு இடத்திலும் தயார் செய்து கொண்டிருந்தோம்.





அக்னிதீர்த்தக்கரை முழுதும் பார்க்கும் இடமெல்லாம் தீபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.




நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தீப வழிபாடு ஆரம்பமானது. 




சிவ பெருமான் முன்னர் தீபமேற்ற ஆரம்பித்தோம்.




மாசற்ற ஜோதி...
மலர்ந்த மலர்ச்சுடரே...

என்று மனதுள் நினைத்து கொண்டே விளக்கேற்றினோம்.









பார்க்க கண்கொள்ளா காட்சியாக அன்றைய 10,008 தீப பூஜை வழிபாடு அமைந்தது. 




இனி அக்னிதீர்த்தக்கரை கோயில் உள்ளே சென்று அகத்தியர் பெருமான் தரிசனம் , தீப தரிசனம் பெற உள்ளோம்.












இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

என்று ஓதிக்கொண்டே குருநாதர் தரிசனம் பெற்றோம்.



கண்களில் ஒளியாகி
 கருத்தினில் பொருளாகி
எண்ணமதில் நினைவாகி
 இதயமதில் அன்பாகி
என் உடலுக்குத் துணையாகி
  என் உள்ளத்தில் நிறைவாகி
என் செயல்யாவும் உனதாகி
  என்னை நடத்தும் வழியாகி
என்னுள்ளே நீயாகி
 உன்னாலே  நானாகி 
என்னை ஆள்கின்ற தேவனாகி
   என் குருநாதனின் தாளே போற்றி
   என் குருநாதனின் தாளே போற்றி
   என் குருநாதனின் தாளே போற்றி! போற்றி


 நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
       நீங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

என்று வேண்டினோம்.


ஐந்திலக்கணம் தந்த அகஸ்தியரே
சித்த வேட்கை கொண்ட சிவயோகியே
கடலுண்ட காருண்யரே கும்ப முனியே
குருவே சரணம்... சரணம்.. சரணம்


அகத்தினுள் இருந்து அழகாய் ஆர்பரித்து
எழுந்து நின்ற என்னிலா ஈஷருக்கு பட்டம்
சூட்டி எண்ணத்தில் கலந்து
எண்ணத்தை சுத்தமாக்கி
அத்தனை சுத்தமும் அற்புதமாய்
தேர்ந்தெடுத்த என் சற்குருவே அகஸ்தியா வா... வா....








இத்தனை தீபத்தை பார்க்கும் போது , வள்ளல் பெருமான் அருளிய ஜோதி பாடல் இங்கே சமர்ப்பிக்கின்றோம்.

வள்ளலார் அருளிய திருஅருட்பா ஆறாம் திருமுறையில் இருந்து , ஜோதி தரிசனம் காண இருக்கின்றோம்.

திருச்சிற்றம்பலம்

1. ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.

2. வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.

3. ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே. 

தினசரி தீபமேற்றி, இறைவனை தரிசிப்போமாக!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 3 - https://tut-temples.blogspot.com/2024/04/3.html

 தினம் ஒரு திருமுறை! - தினமும் சிந்திப்போம்!!  - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_10.html

வேண்டும் எல்லாம் தரும் மந்திரம் - குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி - https://tut-temples.blogspot.com/2024/04/blog-post_3.html

ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_30.html

 அகத்தியர் உத்தரவு - கோடை கால சேவை! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post_18.html

 இறைவனும்! தீபமும்!! - https://tut-temples.blogspot.com/2024/03/blog-post.html

 சித்தர்கள் உணர்வோம்! - https://tut-temples.blogspot.com/2024/02/blog-post.html

 அகத்தியப்பெருமான் உத்தரவு!! - அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா - 22.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/22012024.html

பச்சைமலை அருள்மிகு அனுசுயா ஈஸ்வரி உடனுறை அருள்மிகு அத்திரி ஈஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 21.01.2024 - https://tut-temples.blogspot.com/2024/01/21022024.html

 உள்ளந்தோறும் ராம பக்தி! இல்லந்தோறும் இராம நாமம் !! - ஸ்ரீ ராம நவமி பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post.html

ஸ்ரீ ராம நவமி சிறப்பு தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_76.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்! - https://tut-temples.blogspot.com/2023/12/blog-post.html

குருமுனியின் தாளிணையெப் போதும் போற்றி! - https://tut-temples.blogspot.com/2022/02/blog-post_16.html

 அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2021/05/92.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2020/06/91.html


 அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_29.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-6.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி -  https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

அக்னிதீர்த்தக்கரை - மாசி மகம் 10,008 தீப பூஜை - 16.02.2022  - https://tut-temples.blogspot.com/2022/02/10008-16022022.html

பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/23062022.html

 மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 17.02.2022  - https://tut-temples.blogspot.com/2022/02/17022022.html


கல்யாண தீர்த்தம் அகத்தியர் தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_7.html

 ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - மாதாந்திர பௌர்ணமி பூசை - 38 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/09/38.html

 அக்னிதீர்த்தக்கரை - மாசி மகம் 10,008 தீப பூஜை - 06.03.2023 - https://tut-temples.blogspot.com/2023/03/10008-06032023.html

 அக்னிதீர்த்தக்கரை - மாசி மகம் 10,008 தீப பூஜை - 16.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/02/10008-16022022.html

No comments:

Post a Comment