அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் நம் தளத்தின் சேவைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் நீர் மோர் சேவையில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டி பணிக்கப்பட்டுள்ளோம். இதன் பொருட்டு சின்னாளபட்டியில் நீர் மோர் சேவை தினமும் 50 நபர்களுக்கு நடைபெற்று வருகின்றது. மேலும் சென்ற பங்குனி பௌர்ணமி முந்தைய நாளில் சுமார் 200 அன்பர்களுக்கு திருஅண்ணாமலையில் நம் குழு சார்பில் மோர் சேவை நடைபெற்றது. இன்னும் இந்த மோர் சேவை சிறப்பாக செய்வதற்கு குருவிடம் வேண்டி பணிகின்றோம்.
இது ஒரு புறமிருக்க, வழக்கம் போல் தினசரி இரவு 7 மணி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டுப் பிரார்த்தனையில் நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக குருவருள், திருவருள் பெற்று வருகின்றோம். தற்போது வள்ளலார் பெருமான் அருளிய திருஅருட்பா ஐந்தாம் திருமுறை படித்து வருகின்றோம். திருஅருட்பா படிக்க, படிக்க திருஒற்றியூர் தரிசனம் எப்போது நமக்கு கிடைக்கும் என்று ஏங்கினோம். தற்போது தணிகைமலை தணிகைமலை என்று எப்போது முருகப்பெருமான் தரிசனம் என்று ஏங்கி வருகின்றோம். இந்த நிலையில் நமக்கு ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இது போன்ற நூல்கள் நமக்கு கிடைக்க, படிக்க நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. ஏனென்றால் குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதியில் ஒரு பாடலை 27 முறை படிக்க வேண்டும் என்று நமக்கு கிடைத்த செய்தியை கொண்டு நாம் குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி நூலை தேட, குருவருளால் நமக்கு மிக சரியாக கிடைத்தது. இது அந்த கந்தக கடவுளின் கருணையால் தான் என்று நமக்கு நன்கு உணர்த்தப்பட்டது. அந்தப்பாடல் செய்தியை மற்றொரு நாள் பதிவு செய்கின்றோம். இது போன்று தான் பித்ருக்கள் சாபம் விலக - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய திருவிராமேச்சுரம்!, ஸ்ரீமத் குமார சுவாமியம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய பதிவில் நாம் அனைவரும் பாராயணம் செய்வதற்கேற்ப குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி தொகுப்பை இங்கே பகிர்கின்றோம்.
நன்றி: http://mscherweroyar.blogspot.com/2014/05/blog-post.html
PDF வடிவில் தரவிறக்க - https://drive.google.com/file/d/1O2dHUtv1jIP4uw9lDTUB9uSY1r6Oyn5N/view?usp=sharing
எழும் போது வேலும் மயிலும் என்பேன் எழுந்தே மகிழ்ந்து
தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம் விழும் போதும் வேலும் மயிலும் என்பேன், செந்தில் வேலவனே!
ஓம் சரவணபவஓம்
சிவ சிவ ஓம்
ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம்!
No comments:
Post a Comment