அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் நேற்றைய பச்சைமலை ஸ்ரீ அத்திரி ஈஸ்வரர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. நம் தளம் சார்பில் சிறு தொகை சேர்ப்பித்து இருந்தோம். அதன் பொருட்டு, 1 லி தீர்த்த கலசம், சிவபுராணம் சிறிய நூல், திருநீற்று செல்வம் என இறை பிரசாதம் பெற்று வந்தோம். இந்த ஆண்டில் முதல் மலைக்கோவில் தரிசனமாக இது அமைந்தது. மேலும் வள்ளல் பெருமான் தரிசனமாக ஜோதி தரிசனம், நம் குருநாதர் அகத்தியப்பெருமான் தரிசனம் என அங்கு பெற்றோம். இவை அனைத்தும் நேற்றைய நாளை மிக சிறப்பாக மாற்றியது என்று கூறலாம்.
இன்றைய நன்னாள் வாழ்வில் அனைவருக்கும் ஒரு சிறப்பு மிக்க நாள் ஆகும்.இந்த கலியுகத்தில் இன்றைய தினம் வரலாற்றில் சிறப்பு மிக்க நாளாக அமைந்துள்ளது. அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்றைய தினம் நடைபெற்று வருகின்றது. அதன் பொருட்டு, கும்பாபிஷேக அழைப்பித்தாலும், நம் குருநாதர் அருளிய உத்தரவையும் இங்கே சமர்ப்பிக்கின்றோம்.
ஒரு இல்,ஒரு சொல், ஒரு வில் என்பதற்கு உதாரணம் ஸ்ரீ
ராமர். தமிழகத்தில் இருக்கும் பல கோயில்களின் தல புராணங்களில் ராமர்
வழிபட்ட
இடம், லிங்கத்தை பிரதிஷ்டை செய்த இடம் என்றெல்லாம் குறிப்புகள்
இருக்கின்றன. ஏகபத்தினி விரதன் என்பதற்கு பல தாரங்களை மணக்கும் ராஜ
வம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும், ஒரே தாரத்தை போற்றும் அவதாரமாக
இருப்பதால், ராமர் ஓர் இல்லுக்குச் சொந்தக்காரர் ஆனார். அதனால் ராமரின்
கால் படாத இடமே தமிழ்நாட்டில் இல்லை என்னும் அளவுக்குத் தல புராணங்கள்
பலவற்றில் அவரின் பெருமை வெளிப்படுகின்றது. துஷ்டர்களுக்கு ஒரே பாணம் ஒரு
வில்!
சரணம் என்று வந்தோர்க்கு அபயம் என்ற வாக்கு ஒரு சொல்! ஜென்மம் முழுவதும்
இணைந்து வாழ ஒரு மனைவி ஒரு இல்! இதுதான் ராமனின் அறநெறி ஆகும்.
ஸ்ரீராம நாமத்திற்கு இணையான ஒரு வேதம் கிடையாது... மகாவிஷ்ணு மனிதனாக
அவதரித்து மானிடர்கள் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களையும் அனுபவித்தவர்.
அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து
கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக
அவதாரம் செய்தார். ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும்.
- ராமர் மிகுந்த விருப்பத்தின் பேரில், அங்கு சென்று அமர்கிறார்.
- சித்தர்களின் விருப்பமும் அது தான்.
- நவகிரகங்களின் ஆட்டத்தை அடக்க அவர் தீர்மானித்துள்ளார். உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள், மற்றவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்பது அவர் எண்ணம்.
- ராமரின் இந்த எண்ணத்தால் ஆஞ்சநேயருக்கு மிகுந்த சந்தோஷமாம்.
- முகூர்த்த வேளைக்கு முன் ஒவ்வொரு அடியவர் வீட்டினுள்ளும் பஞ்ச தீபம்/பஞ்ச முக தீபம் ஏற்றவும். நாம் ஏற்றுகிற அக்னியானது, அயோத்தியில் எழுப்பப்படும், அக்னிஹோத்திரத்தில்/ஹோமத்தில் கலந்து பாரத தேசாத்திற்கு மிகுந்த சக்தியை உருவாக்கி பாதுகாக்கும்.
- அந்த முகூர்த்த நேரத்தில், குறைந்தது 108 முறையேனும் ராம நாமத்தை ஜெபிக்கவும்.
- அன்று மாலை அஸ்தமனத்துக்கு முன் வீட்டின் வெளியே, அதே போல் ஐந்து முக/ஐந்து தீபம் ஏற்றி வைக்க வேண்டும். (கார்த்திகைக்கு விளக்கேற்றுவது போல்).
- அன்றைய தினம் முடிந்த வரை இயலாதவர்களுக்கு அன்னம் அளித்து, குழந்தைகளுக்கு, இனிப்பு கொடுக்க வேண்டும்.
- தொடர்ந்து ஐந்து தினங்களுக்கு அன்னம் அளிக்க வேண்டும்.
- அடியவர்கள் செய்கிற அனைத்து நல்ல விஷயங்களையும் (விளக்கேற்றுவது, அன்னம் பாலிப்பது போன்றவை) ராமர் அயோத்தியில் அமர்ந்து கொண்டு கவனித்து, அனைவரையும் ஆசீர்வதிப்பார்.
- தாங்கள் யார் என்று உணர்ந்தும், ராமரும் சீதையும், தங்கள் வாழ்வில் நடந்த விஷயங்களை அதன் படியே ஏற்றுக் கொண்டு வாழ்ந்து சென்றது, மனித குலத்துக்கே பல உயர்ந்த விஷயங்களை உணர்த்தினார்கள்.
- பாரத கண்டத்தில் 500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட காயத்தை, வருத்தத்தை யாங்கள் இறையிடம் வேண்டி மாற்றச் சொல்லி, அதன் படியே அவரும் அருள, அந்த புதிய வரலாற்றில், எம் சேய்களுக்கு, இருக்கும் இடத்திலிருந்து பங்கு பெறும் வாய்ப்பை யாங்களே உருவாக்கியுள்ளோம். வாய்ப்பை கை பற்றி கொள்க.
- சுந்தர காண்டத்தை தினமும் ஓதி வருக!
- ஆசிகள்!, ஆசிகள்!, ஆசிகள்!
No comments:
Post a Comment