அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் 23.11.2023 அன்று மதுரை -
கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் காண வாய்ப்பு கிடைத்தது.
கும்பாபிஷேகம் காண்பது மிக மிக சிறப்பான தரிசனம் ஆகும். இன்றைய அருளில் இறை
தரிசனம் கண்டு, நம் அகத்திய அடியார்கள் தரிசனம் பெற்றோம். நம் தளம்
சார்பில் சிறு தொகை சமர்ப்பித்து இருந்தோம். மேலும் 500 சிவபுராண சிறு
நூல்கள் கொடுக்க பணிக்கப்பட்டோம். மேலும் இறை பிரசாதமாக அன்னப்பிரசாதம்
பெற்றுக் கொண்டோம். இவை அனைத்தும் இன்றைய நாளில் குருநாதர் அருளால்
நடைபெற்றது கண்டு மகிழ்வுற்றோம். உணவு உண்ணும் போது சிவபுராணம் கேட்டால்
நன்றாக இருக்குமே என்று நினைத்தோம். சற்று நேரத்தில் கோயிலில் திருவாசக
முற்றோதுதல் நடைபெற துவங்கியது கண்டு குருநாதர் பதம் பற்றினோம்.
இன்றைய பதிவில் அன்றைய நாளில் நமக்கு கிடைத்த அருள்நிலைகளை இங்கே பகிர்கின்றோம்.
மதுரை அருகே கொடிமங்கலம் கிராமத்தில் பெரியபுன மங்கை என்ற பாலாதிரிபுர சுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாளில் திருவிளக்குபூஜை, மூத்த பிள்ளையார் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடும், 2-ம் நாள் கோ பூஜை, மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிதல், களை ஈர்ப்பு வழிபாடும், 3-ம் நாள் இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜை, மருந்து சாத்துதல் நடந்தது. 4-ம் நாளில் நான்காம் கால யாகபூஜை நடந்து நிர்வாகிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் மேளதாளத்துடன் திருக்குடங்கள் எடுத்துக் கோவிலை வலம் வந்தனர். பின்னர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர், பரிவார தெய்வங்க ளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
அன்று காலை சுமார் 9:30 மணி அளவில் கோயிலை அடைந்தோம். அங்கு கோயிலின் வாயிலில் கண்ட வாலைத்தாய் தரிசனம் கண்டு பின்னர் கோயிலின் உள்ளே சென்றோம்.
அருகிலே அன்னதான கூடம் தாயாராக இருந்தது. அடுத்து கோயிலை முழுதும் வலம் வந்து கொண்டு, நமது அன்பர்களை தேடி கொண்டு இருந்தோம்.
அப்படியே சற்று நேரத்தில் கும்பாபிஷேகம் கண்டோம். அனைவரும் வாழைத்தாயை போற்றி ! போற்றிவழிபட்டோம்.
கும்பாபிஷேகம் கண்டு, பின்னர் அன்னையின் அருளில் தீர்த்தம் பெற்று ,மூலவராக அன்னையின் தரிசனம் பெற்ற காட்சிகளை கண்டோம்.
வானில் கருடன் வட்டமிட்ட காட்சி
நமது அகத்திய அடியார்கள் திரு.ராஜ்மோகன் ஐயா மற்றும் செந்தில் ஐயா அவர்களுக்கு அகஸ்தியர் வழிபாடு நூல் கொடுத்தோம். இவர்கள் அங்கே உள்ள அன்பர்களுக்கு 500 சிவபுராண சிறு நூல்கள் கொடுத்தார்கள். இது போன்ற வழிபாடு நிகழ்வுகளில் மட்டும் தான் நம் அகத்தியர் குடும்ப உறவுகளை நேரில் கண்டு உறவாட முடிகின்றது. எனவே இது போன்ற வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
அன்னக்கூடத்தில் இருந்து சில பதிவுகள்
நமது அகத்திய அடியார் செஞ்சி பிரபு அவர்களை சந்தித்து மகிழ்ந்தோம். அருமையான அமிர்தமாக உணவு உண்டோம். பிரபு ஐயா அவர்கள் நமக்கு மரியாதை செய்தார்கள். அனைத்தும் குருவிற்கு சமர்ப்பணம் என்று மனதில் இருத்தினோம்.
அன்று மேலும் ஒரு அடியாரை சந்தித்த நிகழ்வையும் இங்கே அறிய தருகின்றோம்.
நேற்றைய அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேக நிகழ்வில் நாம் அகத்திய
அடியார் ஒருவரை சந்தித்தோம். அவராகவே வந்து, நம்மிடம் அறிமுகம் செய்து
கொண்டு, தாம் திருச்சி எனவும், நம்மை பார்த்துள்ளதாகவும் கூறினார். அவர்
திருவையாறு அகத்தியர் தரிசனம் பெற்றுள்ளதாக கூறினார். நாம் இன்னும்
திருவையாறு குருநாதர் தரிசனம் பெறவில்லையே என்று மனதுள் நினைத்து விட்டு
அப்படியே மறந்துவிட்டோம். மீண்டும் மீண்டும் அந்த அகத்திய அடியார் நம்மிடம்
பேச முற்பட்டார். நமக்கும் அவரிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. நம் கையில்
இருந்த அகஸ்தியர் வழிபாடு - தொகுதி 3 புத்தகம் ஒன்றை கொடுத்துவிட்டு
வீட்டிற்கு வந்து விட்டோம்.
பின்னர் தான் நமக்கு திருவையாறு
அகத்தியர் என்றதும் சித்தன் அருள் தலத்தில் உள்ள எண்ணத்தில் என்னை வை! என்ற
பதிவு நினைவிற்கு வந்தது. இந்தப் பதிவது ஏற்கனவே படித்தாலும் கடந்த ஒரு
வாரமாக நம்மை உலுக்கி எடுத்து விட்டது. குரு பக்தி என்றால் என்ன? எப்படி
இருக்க வேண்டும் என்று பல செய்திகளை நமக்கு உணர்த்திய பதிவு ஆகும்.
உடனே
நமக்கு அந்த அகத்தியர் அடியார் நினைவிற்கு வர, வீட்டிற்கு வந்ததும் ,
நம்மிடம் பேச விரும்பிய அடியாரிடம் அலைபேசியில் பேசி, தாங்கள் தான்
இளையராஜா ஐயா வா? என்று கேட்டதும், ஆம் என்று கூற, குருநாதா! குருநாதா!!
என்று கூறி மகிழ்ந்தோம். இன்னும் சிறப்பாக இன்று அவர் மீண்டும் புதிதாக
தேநீர் கடை துவங்கியுள்ளார். அட..இன்றைய பதிவில் நம் குழு சார்பில் அவரை
வாழ்த்தி, அவரது தொண்டு சிறக்க மேலும் மேலும் வாழ்த்தி மகிழ்கின்றோம். இதோ.
இன்றைய பூஜையாக, திரு.இளையராஜா ஐயாவிடம் இருந்து கீழே பகிர்கின்றோம்.
இனி நம் குருநாதர் அருளிய """"""""எண்ணத்தில் என்னை வை!!!!!!!! கண்டு, மனதுள் இருத்தி, உள்ளத்தை கோயிலாக்க குருவிடம் வேண்டி பணிவோம்.
""""""""எண்ணத்தில் என்னை வை!!!!!!!!
நம் குருநாதர் அகத்தியப் பெருமானின் முத்தான வாக்கு இது!!!!
23.11.2023 அன்று மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகத்திற்கு அருளுதவியும், பொருளுதவியும் செய்த அனைத்து அடியார்களின் பொற்பாதம் பணிந்து வணங்குகின்றோம்.
ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!
ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!
ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!
என்று அனுதினமும் ஓதி வாலைத்தாயின் அருள் பெற குருவிடம் வேண்டி பணிகின்றோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment