"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, May 30, 2021

அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 92 ம் ஆண்டு குரு பூஜை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

வைகாசி மாதம் என்றாலே திருவிழாக்கோலம் தான் என்று தோன்றுகின்றது. வைகாசி விசாகம் முருகப் பெருமானின் அவதாரத் திருநாளாக கொண்டாடப்படுகின்றது. அடுத்து வைகாசி ரோஹிணி ஸ்ரீலஸ்ரீ வாத்தியார் சுவாமிகள் குரு பூஜை , வைகாசி அனுஷம் மகா பெரியவா குரு பூஜை, வைகாசி மூலம் திருஞான சம்பந்தர், திருநீலநக்க நாயனார் குரு பூஜை என சொல்லிக் கொண்டே போகலாம். இந்த வரிசையில் வைகாசி திருவோணத்தில் திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை பதிவு இனி பார்க்க உள்ளோம். இன்றைய வைகாசி தேய்பிறை ஷஷ்டியில் அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு  பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் குரு பூஜை கொண்டாடப்பட்டு வருகின்றது. பாம்பன் சுவாமிகளை பற்றி இந்த நன்னாளில் உணர்வோம். பதிவின் இறுதியில் சில தரிசனக்காட்சிகளை இணைத்துள்ளோம். வீட்டிலே இருந்து நீங்கள் பாம்பன் சுவாமிகள் தரிசனம் பெற அன்போடு அழைக்கின்றோம்.

20 ம் நூற்றாண்டில் முருகனை கண்ணால் கண்ட மகான் பாம்பன் சுவாமிகள் அவர்கள்.இவரின் வாழ்க்கை வரலாறும். இவர் செய்த அதிசயங்களும், அற்புதங்களும் பல ராமாயணம், மகாபாரதம் போன்ற சொற்பொழிவுகளை அடிக்கடி கேட்கும் பலருக்கு அவற்றை பற்றி சீன் பை சீன் தெரிந்து இருந்தாலும் எதனால்? அதை திரும்ப, திரும்ப கேட்கிறார்கள்.அவற்றை திரும்ப, திரும்ப கேட்பதால் புண்ணியம் என்பதால் தான்.
பாம்பன் சுவாமிகளின் வரலாறும் அதேபோல் ஒரு புண்ணிய சரித்திரம் தான்.

உண்மையில் சொல்லப்போனால் புராண, இதிகாசங்களை காட்டிலும் அதிக புண்ணியம் தர வல்லது பக்த விஜயம் போன்ற மகான்களின் திவ்ய சரிதங்கள் தான். பகவத் கைங்கரியத்தை காட்டிலும் பாகவத கைங்கர்யம் அதிக புண்ணியம் தர வல்லது. பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறை படிப்பவர், கேட்பவர் கேடுகள் யாவும் மாயும்.








 பாம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவியாவார். முருகன் பால் அன்பு பூண்டு கவிகள் பல பாடி கனவிலும, நனவிலும் ஆறுமுகப்பெருமானை தரிசித்தவர். சுவாமிகளின் தமிழ் ஞானம் அளவிடற்கரியது. சுவாமிகள் உலகம் உய்ய பல அருள் நூல்களை அருளிச் செய்துள்ளார்.

 பாம்பன் என்னும் ஊரில் பாம்பன் சுவாமிகள் பிறந்தார். அடிகளாரது தந்தையார் சாத்தப்ப பிள்ளை, தாயார் செங்கமல அம்மையார். அடிகளாரது பிள்ளை திருநாமம் அப்பாவு. சுவாமிகள் பிறந்த ஆண்டு உறுதியாக அறியப்படவில்லை. 1850 முதல் 1852 ஆண்டுக்குள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. அடிகளார் சிறு வயதிலேயே தமிழ் மொழியில் மிகுந்த ஞானத்துடன் விளங்கினார். திருமுருகன்பால் மிகுந்த பக்தி கொண்டார். கந்த சஷ்டி கவசத்தை எழுதிய தேவராய சுவாமிகள் போல் தாமும் முருகன் பால் தமிழில் கவி பாட வேண்டும் என வேட்கை கொண்டார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அருணகிரிநாதரின் பெயரை வைத்தே முடிக்க வேண்டும் என முடிவு செய்தார். முதன் முதலாக முருகனை போற்றி "கங்கையை சடையிற் பரித்து" என தொடங்கும் பாடலை இயற்றினார். தினமும் உண்பதற்கு முன் ஒரு பாடல் வீதமாக நூறு பாடல்கள் இயற்ற வேண்டும் என்ற நியதியை மேற்கொண்டார். அவ்வாறே நூறு பாடல்களை இயற்றினார். பின்னர் சேது மாதவ ஐயர் என்பவரிடம் சடக்ஷர மந்திர உபதேசம் பெற்றார்.



சுவாமிகள் திருமண பருவம் அடைந்தும் சேது மாதவ ஐயரின் வற்புறுத்தலின் பேரில் 1872ஆம் ஆண்டு காளிமுத்தம்மையார் என்பவரை மணம் புரிந்தார். மூன்று ஆண்டுகள் கழிந்தன. முருகாண்டியாபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என்று மூன்று குழந்தைகள் பிறந்தனர். சிவஞானாம்பாளுக்கு ஒராண்டு நிரம்பிய போது ஒரு நாள் நள்ளிரவில் ஓயாது அழுது கொண்டே இருந்தது.அம்மையார் சுவாமிகளிடம் குழந்தை அழுவதை கூறி திருநீறளிக்குமாறு வேண்டினார். சுவாமிகள் இப்பொழுது எவருக்கும் திருநீறு அளிப்பதில்லை என்றும், முருகனிடம் வேண்டுமாறும் கூறினார். அவ்வாறே அம்மையார் முருகனிடம் வேண்டி குழந்தையின் அருகில் படுத்தார். அப்போது, காவி உடை உடுத்திய ஒருவர் அங்கு வந்து குழந்தையை அம்மையாரிடம் வாங்கி திருநீறு பூசி குழந்தை இனி அழாது என கூறி தாயிடம் தந்து விட்டு மறைந்தருளினார். அம்மையார் நடந்தவற்றை சுவாமிகளிடம் கூறினார். சுவாமிகள் முருகனின் திருவருளை நினைத்து வியந்தார்.

 சுவாமிகளின் பெருமையை உணர்ந்து பல அடியார்கள் சீடர்கள் ஆயினர். இந்நிலையில், சுவாமிகளின் தந்தையார் சிவபதம் அடைந்தார். சுவாமிகள் துறவறம் மேற்கொள்ளும் எண்ணத்தில் இருந்தார். ஒரு சமயம் அங்கமுத்துப்பிள்ளை என்பவரிடம் தாம் பழனி செல்ல இருப்பதாக சுவாமிகள் கூறினார். அங்கமுத்துப்பிள்ளை தற்போது செல்ல வேண்டாம் என சுவாமிகளிடம் கூறினார். அதற்கு சுவாமிகள், இது முருகப்பெருமான் ஆணை என பொய் பகன்றார். அன்று மாலை, சுவாமிகள் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது, சுவாமிகள் கண்களுக்கு தென் திசையில் இறை உருவம் தென்பட்டது. அந்த உருவம் அச்சுறுத்தும் வகையில் பயங்கரமாக இருந்தது. "எனது கட்டளை என பொய் கூறினாயே, இது முறையாகுமா?" எனக்கூறி அச்சுறுத்தியது. சுவாமிகள், இறைவனது சினத்தை கண்டு அஞ்சி, "தம் தவறுக்கு மன்னித்தருளுமாறு" வேண்டினார். அதற்கு, இறைவன், "இனி பழனிக்கு வரக்கூடாது" என உறுதி அளிக்குமாறு கூறினார். சுவாமிகளும் அவ்வாறே உறுதி அளித்ததும் அந்த உருவம் மறைந்து போனது. ஒரு பொய் கூறிய காரணத்தினால் சுவாமிகள் இறுதி வரை பழனி செல்ல முடியாமல் போனது.

 அடிகளார் முருகப்பெருமானை நேரில் கண்டு உபதேசம் பெற வேண்டும் என பேராவல் கொண்டார். 1894ம் ஆண்டு பிரப்பன்வலசை எனும் ஊரை அடைந்தார். அங்கு உள்ள மயான பூமியில் தமது சீடர்களின் உதவியால் ஒரு சதுரக் குழி வெட்ட செய்தார். அதை சுற்றி முள் வேலி, கொட்டகை அமைக்கச் செய்தார். அக்கொட்டகையின் உள் ஒரு கை செல்லுமாறு சிறிய சந்து அமைக்க செய்து, நாள் தோறும் ஒரு வேளை உப்பிலாத அன்னம் வைக்குமாறு சீடர்களுக்கு கூறினார். வைத்த உணவை தாம் எடுக்கவில்லையானால் அது முதல் வைக்க வேண்டாம் என கட்டளையிட்டார். பின்னர் அக்குழியில் அமர்ந்து தியான யோகத்தில் ஈடுபட்டார்.

எழாவது நாள் இரவில் இரு முனிவர்களுடன், முருகப்பெருமான் இளைய அடிகளார் உருவில் காட்சி அளித்தார். அவரிடம் ஒரு ரகசியமான சொல்லை உபதேசித்து விட்டு, அம்முனிவர்களுடன் மேற்கு திசை நோக்கி சென்று மறைந்து போனார். அச்சொல்லை சிந்தித்த வண்ணம் முப்பது நாள் தவ யோகத்தில் இருந்தார். முப்பத்தைந்தாம் நாள், "தவத்திலிருந்து எழுக" என்ற ஒலி கேட்டது. "முருகன் கூறினால் மட்டுமே எழுவேன்" என சுவாமிகள் கூறினார். "முருகன் கட்டளை! எழுக" என்று பதில் வந்தது. சுவாமிகள், அவ்விடத்தை வணங்கி விட்டு அங்கிருந்து நீங்கினார். பின் பாம்பன் வந்து சேர்ந்தார்.

                                                                





 
 1918ம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட வெப்பு நோய் விலகும் பொருட்டு குமாரஸ்தவம் எனும் அர்ச்சனை நூலை சுவாமிகள் இயற்றினார். அந்நோயும் நீங்கியது. சுவாமிகள் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் சுவாமிகட்கு குரு பூஜை நடத்தப்படாமை குறித்து வருந்தினார். தியான யோகத்தில் அமர்ந்து, அருணகிரிநாதர் முக்தி பெற்ற தினம் உத்தராயணம் கழிந்த ஆறாவது பௌர்ணமி என்று உணர்ந்தார். தமது சீடர்களுக்கு இது குறித்து அறிவித்து குரு பூஜை நடைபெறுமாறு செய்தார்.

 1923ம் ஆண்டு டிசம்பர் 27ம் நாள், சுவாமிகள் சென்னை தம்பு செட்டி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு குதிரை வண்டியின் சக்கரம் அடிகளாரது இடது கணை காலின் மீது ஏற, கால் முறிவடைந்தது. அங்கிருந்த அன்பர்கள் சுவாமிகளை சென்னை பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர். தலைமை மருத்துவரான ஆங்கிலேயர், சுவாமிகளின் கால் குணப்படாது என்று கூறினார். அது கேட்ட அன்பர்கள் மிகவும் வருந்தினர்.

 பதினோராவது நாள் இரவு அடிகளார், படுக்கையில் படுத்த வண்ணம் முருகனை வேண்டினார். அப்போது முருகனின் வாகனமாகிய மயில்கள் வானத்தில் நடனம் புரிந்து வருவதை கண்டார். அப்பொழுது, முருகன் மயில்கள் மீது அமர்ந்து வரும் அரிய மயூரவாகன சேவனக்காட்சியை சுவாமிகள் கண்டு களித்தார். மறுநாள் இரவு அடிகளார் அருகில் முருகன் குழந்தை உருவில் படுத்திருப்பதை கண்டார். "முருகா" என்று அழைத்தவுடன் இறைவன் மறைந்து போனார். முருகனின் திருநாமத்தை பன்னிரு முறை கூறி வணங்கினார். உடனே கால் கூடி விட்டது. பெரிய மருத்துவரான ஆங்கிலேயர், இவரை சோதித்து இது தெய்வச் செயல் என்று அறிந்து அடிகளாரை வணங்கினார். இரு வாரங்களில் சுவாமிகள் முழுமையாக குணமடைந்து புதுப்பாக்கத்தில் உள்ள அன்பர் ஒருவர் வீட்டில் தங்கினார். பின் சுவாமிகளின் வேண்டுகோளின்படி, அடியார்கள் ஒவ்வொரு ஆண்டும் மயூர வாகன சேவன விழாவை நடத்தி வருகின்றார்கள்.






தாம் முக்தி அடையும் காலம் வந்துவிட்டதை உணர்ந்த சுவாமிகள், தமது சீடர்களிடம் திருவான்மியூரில் நிலம் வாங்குமாறு கூறினார். அவ்வாறே நிலம் வாங்கப்பட்டது. 1929ம் ஆண்டு, ஒரு நாள் சுவாமிகள் தமது சீடர்களை அழைத்து, "மயூர வாகன சேவன விழாவை தொடர்ந்து நடத்தி வாருங்கள். நான் சமாதி அடைந்ததும் என்னுடைய உடலை திருவான்மியூரில் சேர்த்து விடுங்கள்" என்று கட்டளையிட்டார். 30-5-1929 வியாழக்கிழமை காலை 7.15 மணிக்கு, சுவாமிகள் பிராண வாயுவை உள்ளிழுத்து மகாசமாதியில் ஆழ்ந்தனர். இதை அறிந்த அனபர்கள் பலர் சுவாமிகளை வந்து தரிசித்து சென்றனர். 
மறுநாள் (31-5-1929), சுவாமிகளின் திருமேனியை திருவான்மியூரில் சேர்த்து சமாதிக்கோவில் அமைத்தனர். சுவாமிகளின் சமாதிக்கோவில் மிகவும் மகிமை வாய்ந்தது. அங்கு சென்று வாழ்வில் வளம் பெற்றோர் பலராவர் .

இத்திருக்கோவில்  திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அனைவரும் தரிசித்து திருவருளும், குருவருளும் பெறுவோம். சுவாமிகளின் 90 ம் ஆண்டு குருபூசை அழைப்பிதழை இணைத்துள்ளோம்.வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறும்படி வேண்டுகின்றோம்.

இனி நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தரிசனக்காட்சிகளை கீழே இணைத்துள்ளோம்.

சித்திரை பெளர்ணமி பூஜை, திருவான்மியூர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ஜீவசமாதி.









அடுத்து பிரப்பன்வலசை செல்ல உள்ளோம். பிரப்பன்வலசையில் சித்ரா பெளர்ணமி பூஜை காட்சிகள் உங்களுக்காக தருகின்றோம்.






இன்றைய குருபூஜை நாளில் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் மற்றும் சித்திரக் கவிகளை இங்கேயே தருகின்றோம். அனைவரும் ஒரு முறையேனும் படித்து பயன்பெறுங்கள்.

                                             

 
1. சதுரங்க பந்தம் 

எதிரிகளின் சூழ்ச்சிகளைவெல்ல,மனக்கவலைகள் நீங்க,இழந்த செல்வத்தை மீட்க,இடர் நீங்கி இன்பம் பெறவும் ஏற்றது.




வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா                        
வேளா மயிலோய் விமலர்கண் வந்தச மாதி ய ர் கோ                      
வாளா யெனுநாவுள் ளார்நா ரருந் தெங்க ளாரியற்கே            
யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே

2.சஸ்திர பந்தம்

 வியாபாரம்,தொழில்,பதவி சிறக்கவும்,எதிர்மறை எண்ணங்கள் மறையவும் கவசமாக திகழ்வது.



3. கமல பந்தம்

தியான யோகமும்,சிந்தை வலுவும் பெறுவதோடு,இதய சம்பந்தமான நோயும்,பதற்றமும் நீங்கப் பெறலாம்.



4. இரத பந்தம்

வாகன விபத்துக்கள் ,விபத்துக்கள் பற்றிய பயம் தவிர்க்கவும்,பயணத்தின்போது பாராயணம் செய்யவும் ஏற்றது



5. மயூர பந்தம்

பகை விலக,மந்திர,தந்திர,பில்லி,சூனிய ஏவல் பிணி நீக்க வல்லது.




5. துவிதநாக பந்தம் 

சர்ப்பதோஷம், காலசர்ப்பதோஷம்,அடிக்கடி பாம்புகளின் தொல்லை, மாலை சுற்றிப் பிறந்த தோஷம் மகப்பேறுகால துன்பம், இராகு, கேது கிரக தோஷம் நீங்கப் பெறலாம்



சுவாமிகளின் சித்திரக்கவியை தினமும் ஓதி, நம் வாழ்வையும் சித்திரமாக்குவோம்.

எழும் போது வேலும் மயிலும் என்பேன் எழுந்தே மகிழ்ந்து 
தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
தொழுது உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன்
அடியேன் உடலம் விழும் போதும் வேலும் மயிலும் என்பேன், செந்தில் வேலவனே!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் 184 ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/05/184.html

 ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய சித்திரக்கவி - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_34.html

 இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 91 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2020/06/91.html

குருவை நினைக்க குணமது செம்மையாம் - ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் 7 ஆம் ஆண்டு குருபூஜை - 24.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/7-24022021.html


நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 22.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/22022021.html

பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை 13 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ் - 28.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/13-28022021.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

திருமாலிருஞ்சோலை தரிசனம் பெறலாமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_19.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! - சோலைமலை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_88.html

சோலைமலை வந்து கந்த பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_20.html


களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_23.html

இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 90 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2019/05/90.html 

முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html

ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html

 பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html

No comments:

Post a Comment