"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, September 20, 2019

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! - சோலைமலை தரிசனம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் மீண்டும் முருகனருள் பெற உள்ளோம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில். மற்ற படைவீடுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது. இங்கு திருமாலும், திருமுருகனும் குடிகொண்டு அருள்புரிகின்றனர். சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இத்திருத்தலம் விளங்குகிறது. திருமாலிருஞ்சோலையில் ஆரம்பித்த நம் யாத்திரை தற்போது சோலைமலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

பழம் உதிர்கின்ற சோலை என்பதால் பழமுதிர்ச்சோலை ஆயிற்று. இதனை உணர்த்தும் பதாகை கண்டோம்.







நம்மை வரவேற்கும் ராஜ கோபுர தரிசனம் எப்படி உள்ளது?

 மலைக்குரிய கடவுளாகிய முருகவேலுக்குரிய இம்மலை இயற்கை வளத்தால் பசுங்காடும், சோலையும் நிறைந்து காண்பவர் கண்களுக்குப் பசுந்தழைகளால் போர்த்தப்பட்டு இனிய தோற்றத்துடன் காணப்பட்டதால், சோலை மலையாயிற்று. பழமுதிர்ச்சோலை எனும் இத்தலப் பெயருக்கு பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை எனவும் பொருள் கொள்ளலாம்.

இவ்விடத்திற்கு மாலிருங்குன்றம், இருங்குன்றம், திருமாலிருஞ் சோலை, அழகர் மலை என்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.















கோயில் முழுதும் வண்ண வண்ண நிறங்களாக நம் மனதையும், கருத்தையும் கவர்ந்தார்கள்.

 திருமுருகாற்றுப் படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை கூறியருள்கின்றார்.

புராண வரலாறுகளிலும், இலக்கியங்களிலும், பழமுதிர்ச்சோலை தலம், முருகஸ்தலம் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

கந்தபுராணத் துதிப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரியார், வள்ளியம்மையைத் திருமணம் புரிய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார்கள். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அடுத்து அப்படியே நூபுர கங்கை நோக்கி நடந்தோம்.
















நூபுர கங்கையில் தீர்த்தமாடி விட்டு, மீண்டும் மலை இறங்கினோம்.




பேருந்திற்காக காத்திருந்தோம். இருப்பினும் மீண்டும் நடந்து மலை இறங்க மனம் சொன்னது. கால்கள் தானாக பெருமாளைத் தேடி நடக்க ஆரம்பித்தது.






நேரம் ஆக ஆக வெயில் கொஞ்சம் தலை காட்டியது.





இதோ..முழுதும் மலை இறங்கி விட்டோம். கீழே அந்த எம் பெருமாளின் கோபுர தரிசனம் கண்டோம். அப்பாடா என்று மனம் கொஞ்சம் அமைதியானது. நண்பகல் நேரத்தில் சரியாக மீண்டும் அடிவாரம் வந்தோம்.







மொத்தத்தில் திருமாலிருஞ்சோலை சைவ , வைணவ தலமாக விளங்குகின்றது.

 அழகர்கோயில் அடிவாரத்தில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். அழகர் கோயிலில் உள்ள மூலவருக்கு கள்ளழகர் என்பது திருநாமம். மலையலங்காரன் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.

இங்கே கோயில் கொண்டுள்ள பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விசேஷ நாளல்ல. ஸ்ரீ முருகப் பெருமானுக்கு உகந்த வெள்ளிக்கிழமையே விசேஷ நாளாகும். அன்று பூவங்கி சாத்தப்படுகிறது. அன்று தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. தவிர பெரும்பாலும் அர்ச்சனைக்கு அரளி புஷ்பமே சாற்றப்படுகிறது. மற்ற விஷ்ணு ஆலயங்களைப் போல் பக்தர்களுக்குத் துளசி வினியோகிப்பது கிடையாது.


கோயில் மூலஸ்தானத்திலேயே சோலை மலைக்குமரன் எனும் வெள்ளி விக்ரகம் இருந்து வருவதுடன் பஞ்சலோகத்தில் சக்கரத்தாழ்வார் மூலவரைப் போன்று உற்சவ விக்ரகமும் இருந்து வருகிறது.

இத்திருத்தலம் வைணவத் தலமாகவும், குமார தலமாகவும் விளங்கி சிவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. 


எப்படி செல்வது?

மதுரை மாநகரில் இருந்து வடக்கே 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்குச் செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்குப் பயணமாகலாம். சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.

மீண்டும் ஒருமுறை முருகனை பாடி பரவசப்படுவோம். வேறென்னே கேட்க முடியும்?

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

இந்தப் பாடலையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். சிறப்பம்சம் ஒன்று இப்பாடலில் உண்டு.

-  மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்

மீள்பதிவாக:-

 சோலைமலை வந்து கந்த பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_20.html

  ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 14.09.2019 முதல் 28.09.2019 வரை - https://tut-temples.blogspot.com/2019/09/14092019-28092019.html

திரும்பிப் பார்க்கின்றோம் - ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22.07.2017 - https://tut-temples.blogspot.com/2019/09/22072017.html

 பெரியபுராணம் கூறும் பூரண தானம் அறிவோமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_14.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

 ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

 தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

No comments:

Post a Comment