"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, September 2, 2019

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் - ஆவணி மூலத்திருவிழா அழைப்பிதழ் - 2019


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் தான் நம் நினைவிற்கு வருகின்றார். அவரையும் தாண்டி சற்று ஆழ்ந்து பார்த்தால் மதுரை மாநகர் பல விதங்களில் சிறப்பு பெற்று விளங்குகின்றது. மதுரை மாநகரின் கொண்டாட்டங்கள் என்று பார்த்தால் சித்திரைத் திருவிழா, அழகர் ஆற்றில் இறங்குதல்,மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணம் பிரசித்தம். கூடுவாஞ்சேரியில் பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாணம் கண்டோம். இன்னும் அந்த அருள் நிலை மனதுள் ஊஞ்சலாடுகிறது. மக்கள் கூட்டத்தில் சொல்லவே முடியவில்லை. இங்கேயே இப்படி கூட்டம் என்றால் மதுரை அரசாளும் மீனட்சி அம்மனின் திருக்கல்யாணம் என்றால் கூட்டம் எப்படி இருக்கும்? திருக்கல்யாணம் எப்படி இருக்கும் ? என்று நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இது ஒருபுறமிருக்க, ஆவணி மூலத்திருவிழா அழைப்பிதழ் நமக்கு கிடைத்தது. அட..இன்னும் 9 நாட்கள் திருவிழா நிகழ்வுகள் இருப்பதால் இன்று பதிவை சமர்ப்பிக்கின்றோம்.




செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை லீலைகள் நடைபெறும்.  கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு மோட்சம் அளித்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி அருளுதல், உலவாக்கோட்டை அருளியது. பாணனுக்கு அங்கம் வெட்டியது, வளையல் விற்ற லீலை என நடைபெறுகிறது முக்கிய லீலைகளான நரியை பரியாக்கியது. பிட்டுக்கு மண் சுமந்த லீலை, விறகு விற்ற லீலை நடைபெறுகிறது.











செப்டம்பர் 7ம் தேதி சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் முதல் மீனாட்சி அம்மனின் ஆட்சி முடிவுக்கு வந்து சிவபெருமானின் ஆட்சி தொடங்குகிறது. சித்திரை மாதம் வரை மதுரையை சுந்தரேஸ்வரர் ஆட்சி செய்வார்.



செப்டம்பர் 9ம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மீனாட்சி, சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி புட்டுத்தோப்புக்கு சென்று அங்கு பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடைபெறும். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும். வெளியூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் மட்டும் வடக்கு கோபுரம் வழியாக உள்ளே சென்று, ஆயிரங்கால் மண்டபத்தினை காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பார்வையிட்டு தரிசிக்கலாம்.







அழைப்பிதழ் கண்டதும் நாம் திக்குமுக்காடிபோனோம். அப்படியொரு நேர்த்தி. "திரு"விளையாடல்  புராணம் பற்றியும் சொல்லி இருந்தார்கள்.


 திருவிளையாடல் புராணம் மூன்று காண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன,.

மதுரைக்காண்டம் - 18 படலங்கள்
 கூடற்காண்டம் - 30 படலங்கள்
திருஆலவாய்க்  காண்டம் - 16 படலங்கள்

 மேலே சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு படலமும் படித்து, நாம் உணர வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். குருவருளும்,திருவருளும் நம்மை கூட்டுவிக்கட்டும். இந்த திருவிளையாடல் புராணம் மதுரை மாநகரின் தல புராணமாகவும் விளங்கி வருகின்றது.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா 2019
(25.08.19-12.09.19) 

26.08.19 - காலை 09.30to 09.54 ஆவணி மூல திருவிழா கொடியேற்றம்

26.08.19 முதல் 31.08.19 வரை தினமும் இரவு - சந்திரசேகரர் உற்சவம் 

01.09.19 - காலை - கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை 
மாலை - சுவாமி - கற்பகவிருட்சம் ,
அம்பாள் - வெள்ளி சிம்ம வாகனம் 

02.09.19 - காலை - நாரைக்கு முக்தி கொடுத்த லீலை
மாலை -சுவாமி பூத வாகனம்,
அன்ன வாகனம் 

03.09.19 - காலை - மாணிக்கம் விற்ற லீலை 
மாலை - கயிலாய பர்வதம் , காமதேனு வாகனம் .

04.09.19-காலை - தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை
மாலை - சுவாமி தங்க சப்பரம், யானை வாகனம் 

05.09.19 - காலை - உலவாக் கோட்டை அருளிய லீலை
மாலை -சுவாமி அதிகாரநந்தி , அம்பாள் யாளி வாகனம் 

06.09.19 - காலை - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை 
மாலை - சுவாமி தங்க ரிஷப வாகனம் ,
அம்பாள் வெள்ளி ரிஷப வாகனம்

07.09.19 - காலை - வளையல் விற்ற லீலை 
இரவு  - 7.35-7.59 அருள்மிகு சுந்தரேஸ்வர சுவாமி பட்டாபிஷேகம் 

08.09.19 - காலை - தங்க சப்பரம் 
மாலை - நரியை பரியாக்கிய லீலை சுவாமி,
அம்பாள் தங்க குதிரை வாகனம் , திருப்பரங்குன்றம் முருகப்பெருமான், திருவாதவூர் மாணிவாசகப் பெருமான் எழுந்தருளல் 

09.09.19 -திங்கள் கிழமை காலை 6 மணிக்கு எம்பெருமான் சொக்கநாதப்பெருமான் பிட்டுத்தோப்புக்கு எழுந்தருளி பிட்டுக்கு மண் சுமந்தலீலை  மதியம் 01.30- 01.54 மணிக்குள் மண் சாத்துதல்
இரவு 6 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருக்கோயிலுக்கு எழுந்தருளல். 

10.09.19 - மாலை 4.30 மணிக்கு விறகு விற்றலீலை

11.09.19 - காலை 09.25-09.59 சட்டத்தேர் 
மாலை 7 மணிக்கு சப்தாவர்ணசப்பரம் 

12.09.19 - மாலை பொற்றாமரை குளத்தில்  தீர்த்தவாரி.
இரவு வெள்ளி ரிஷபவாகனம்

உற்சவ தினங்களில் ஆவணி மூல வீதிகளில் புறப்பாடு நடைபெறும் .

ஆடக மதுரை அரசே போற்றி!
கூடல் இலங்கு குருமணி போற்றி !!

அம்மையப்பரை தரிசிக்க மதுரைக்கு வாங்க! என்று அன்போடு அழைக்கின்றோம்.

- மீண்டும் சந்திப்போம்.


No comments:

Post a Comment