அன்பிற்கினியர்களே....
இன்றையபதிவில் பூலோக வைகுண்டம் தரிசனம் பெற இருக்கின்றோம். நம்மைப் பொறுத்த வரையில் சைவம், வைணவம் என்ற பேதம் இல்லை. எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ...அங்கு நாம் தரிசனம் பெற்று வருகின்றோம். சைவர்களுக்கு கோயில் என்றாலே சிதம்பரம் தான்..அது போல வைணவர்களுக்கு கோயில் என்றாலே திருவரங்கம் தான். அட..ஸ்ரீரங்கம் தாங்க..திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் "பூலோக வைகுண்டம்" என்று அழைக்கப்படுகின்றது. 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம் இது ஆகும்.
தரிசனம் பெறுவதற்கு முன்னர், இத்திருக்கோயிலின் சிறப்புகளை முதலில் தெரிந்து கொள்வோம்.
பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், 'மங்களாசாசனம்' பெற்று பாடிய திருத்தலமாகும். 108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு திருத்தலங்கள், பூமியில் இல்லை. ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல்.நாலாயிய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான்.
இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.
கோயில், 'நாழிக்கேட்டான் வாயில்' வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர்.
கோயிலின் உட்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி, மகாவிஷ்ணுவுக்கு உரியவராக முறையே சங்கு, தாமரை வடிவங்களில், 'சங்க நிதி', 'பதும நிதி' உருவங்களுடன் இருக்கின்றனர்.
விஜயரங்க சொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை முறையில், வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளன.
மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை. அதற்குப் பதில் கோயில் பணியாளரைக் கொண்டு இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்டதைலக்காப்புடன் மெருகூட்டப்படுகிறது.
கோயில் கருவறையின்மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.
இந்தத் திருத்தலத்துக்கு வந்து ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்க நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.
வருடத்துகொருமுறை,பங்குனி உத்திர நாளில் பெருமாளும், தாயாரும். தாயார் சன்னதியில் இருக்கும் சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.
கோயிலில் உள்ள நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரால் கட்டமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள 1,000 தூண்களும் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் போய்விட்டது. 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 49 தூண்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் காலத்தில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களுடன் விழா நடைபெறுகிறது.
கோயில் தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார். இங்கு நவதீர்த்தங்களாக உள்ளன.
ராமானுஜரது திருமேனி 5-வது 'திருச்சுற்று' எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சந்நிதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.
ஓம் நமோ நாராயணாய
சென்ற வாரம் சனிக்கிழமை அன்று நாம் ஆலய தரிசனமாக பல ஆண்டுகள் காத்திருந்து இதோ நம் குருநாதர் அகத்தியர் பெருமான் மீண்டும் மீண்டும் கூறும் ஆப்பூர் மலை சென்றோம். நம் அடுத்த உழவாரப் பணி செய்ய நம்மை பெருமாள் அழைக்கின்றார் போலும்.விரைவில் ஆப்பூர் தரிசன யாத்திரை பற்றி தனிப்பதிவும், நம் உழவாரப் பணி பற்றியும் அறிவிக்க குருவிடம் விண்ணப்பம் வைக்கின்றோம்.
அடுத்தபதிவில் மீண்டும் இணைவோம்.
மீள்பதிவாக:-
அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

- திருமங்கை ஆழ்வார் 73
- தொண்டரடிப்பொடி ஆழ்வார் 55
- பெரியாழ்வார் 35
- குலசேகராழ்வார் 31
- திருமழிசையாழ்வார் 14
- நம்மாழ்வார் 12
- திருப்பாணாழ்வார் 10
- ஆண்டாள் 10
- பூதத்தாழ்வார் 4
- பேயாழ்வார் 2
- பொய்கையாழ்வார் 1

- சந்திர புஷ்கரணி
- வில்வ தீர்த்தம்
- சம்பு தீர்த்தம்
- பகுள தீர்த்தம்
- பலாச தீர்த்தம்
- அசுவ தீர்த்தம்
- ஆம்ர தீர்த்தம்
- கதம்ப தீர்த்தம்
- புன்னாக தீர்த்தம்
ராமானுஜரது திருமேனி 5-வது 'திருச்சுற்று' எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சந்நிதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.
ஓம் நமோ நாராயணாய
சென்ற வாரம் சனிக்கிழமை அன்று நாம் ஆலய தரிசனமாக பல ஆண்டுகள் காத்திருந்து இதோ நம் குருநாதர் அகத்தியர் பெருமான் மீண்டும் மீண்டும் கூறும் ஆப்பூர் மலை சென்றோம். நம் அடுத்த உழவாரப் பணி செய்ய நம்மை பெருமாள் அழைக்கின்றார் போலும்.விரைவில் ஆப்பூர் தரிசன யாத்திரை பற்றி தனிப்பதிவும், நம் உழவாரப் பணி பற்றியும் அறிவிக்க குருவிடம் விண்ணப்பம் வைக்கின்றோம்.
அடுத்தபதிவில் மீண்டும் இணைவோம்.
மீள்பதிவாக:-
அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html
No comments:
Post a Comment