அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் இந்த ஆண்டில் அந்த நாள் இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர் தரிசனம் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. நாமும் அன்றைய தினம் மதியம் வரை கோடகநல்லூர் யாத்திரை பற்றி முடிவு செய்யவில்லை. ஆனால் இதற்கு முந்தைய கோடகநல்லூர் பதிவை நாம் பகிர்ந்த போது ஐப்பசி உத்திரட்டாதி பற்றி படிக்க படிக்க அன்றைய நாளின் முக்கியத்துவம், குருநாதர் வழிகாட்டல் இவை அனைத்தும் நம்மை கோடகநல்லூர் பற்றியே சிந்திக்க வைத்தது. பின்னர் மதுரையில் இருந்து நேற்று காலை கோடகநல்லூர் யாத்திரை செல்ல குருவருளால் பணிக்கப்பட்டோம். இத்துடன் சில அன்பர்களும் பூஜைக்கு பொருளுதவி செய்தார்கள். அவற்றையும் நேற்று சமர்ப்பித்தோம். நேற்றைய கோடகநல்லூர் வழிபாட்டில் சில துளிகளை இங்கே பகிர்கின்றோம்.
1. முதலில் மணிமூர்த்திஸ்வரம் விநாயகப் பெருமான் தரிசனம்.( திருநெல்வேலிக்கு சென்றதும் தீடீரென குருவருளால் தரிசிக்க சென்றோம்)
2. விநாயகப் பெருமான் சன்னிதியில் அகவல் பாட விரும்பி செல்ல, ஏற்கனவே அடியார் பாடிக் கொண்டிருக்க நாமும் இணைந்தோம்
3. கோடகநல்லூரில் தாமிரபரணி தீர்த்த நீராடல்
4. தாமிரபரணி அன்னைக்கு மங்கலப் பொருட்கள் வைத்து, அன்னையைப் போற்றி, நன்றி கூறினோம்
5. அவிமுக்தீஸ்வரர் ஆலய நந்தவனத்தில் வில்வம்,அரசு, செம்பருத்தி மரக்கன்றுகள் நட்டோம்
6. கோடகநல்லூர் பெருமாள் திருமஞ்சனம் கண்டு, அபிஷேகம் பார்த்தோம்
7. நம் குழு அன்பர்கள், சில அடியார்களை நேரில் காணும் வாய்ப்பு
8. பல அகத்திய அடியார்களை நேற்று ஒரே நாளில் சந்தித்தோம்( சுமார் 20 அடியார்கள்)
9. அகத்திய வழிபாட்டில் நம்மை வழிநடத்தி வரும் அன்பர்கள் திரு.அக்னிலிங்கம் ஐயா, திரு. சுவாமி நாதன் ஐயா, திரு. முருகானந்தம் ஐயா, திரு ஆதவா ஐயா என நேரில் சந்தித்தோம்
10. பெருமாள் தரிசனத்தில் கோயிலில் தான் இருக்கின்றோமா? என வியப்பில் பல சுகந்த நறுமணத்தில் பெருமாள் தரிசனம்
11. அண்மையில் அம்மையப்பர் வாக்கு பெற்ற அடியாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றோம். ( குருவருளுக்கு நன்றி)
12. நிறைவாக மஞ்சள் பிரசாதம், அன்ன பிரசாதம் பெற்றோம்
13. திரு. அக்னிலிங்கம் வழங்கிய புது பணம், திரு.சுவாமிநாதன் ஐயா வழங்கிய பெருமாள்,அகத்தியர் தரிசன போட்டோ என பெற்றோம்
14. பற்பல பிரசாதங்களாக மஞ்சள் கிழங்கு, பால்கட்டி பிரசாதம், அபிசேக மஞ்சள், பெருமாள் & அகத்தியர் போட்டோ என மனதிற்கு நிறைவாக பல பல பல பிரசாதங்கள்
15. வழிபாட்டிற்கு தயாரான போது 5 கருடன்கள் கோயிலை வட்டமிட்ட காட்சி
16. வழிபாடு நிறைவில் அனைவரும் எதிர்பார்த்த வருண பகவான் ஆசி
17. மதுரை பசுமலையில் ஶ்ரீ அகஸ்தியர் பெருமான் தரிசனம் கண்டு, நேற்றைய அருள்நிலைகளுக்கு நன்றி கூறி, மதுரை பரமசிவன் ஐயா சந்திப்போடு இந்த வழிபாடு முழுமை செய்தோம். ஒரே ஒரு மனக்குறையாக திரு.ஜானகி ராமன் ஐயா அவர்களை நேற்று நேரில் பார்க்க இயலவில்லை. ஐயா அவர்கள் நேரில் வந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இன்னும் ..இன்னும்…குருவருள் வழிநடத்தட்டும்
அந்த நாள் இந்த வருடம் 2023 - கோடகநல்லூர் வழிபாட்டிற்கு அருளுதவியும், பொருளுதவியும் செய்த அனைத்து அடியார்களின் பாதம் வணங்கி, நன்றிகளைக் கூறி குருவருள் நம்மை இன்னும் பணிக்க வேண்டி பணிகின்றோம்
இன்றைய பதிவில் கோடகநல்லூர் ஆலயத்தில் இருந்து நம் குருநாதர் தரிசனம் பெற உள்ளோம். இதுவும் நமக்கு இருந்த கேள்வி தான். அனால் கோடகநல்லூர் ஆலயத்தில் நுழைந்து திரு.அக்னிலிங்கம் ஐயா அவர்களை பார்த்ததும், அவர் இந்த நிகழ்வைக் கூறி, நம்மை நேரில் சென்று தரிசனம் செய்யும்படி பணித்தார். ஆம்.இந்த ஆண்டில் கோடகநல்லூர் ஆலயத்தில் முதல் முதலாக நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் தரிசனம் பெற்றோம். நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள். இனி சித்தன் அருள் வலைத்தளத்திலிருந்து பதிவை தொடர உள்ளோம்.
அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html
அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html
No comments:
Post a Comment