"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, November 8, 2023

ஐப்பசி மாதம் - (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று ஐப்பசி 23 ஆம் நாள். இன்னும் நமக்கு ஐப்பசி மாத நிறைவிற்கு ஒரு வாரம் தான் உள்ளது. அடுத்த வாரம் வியாழன் அன்று இதே நாளில் ஐப்பசி மாதம் நிறைவு பெற்று கார்த்திகை மாதத்தில் அடியெடுத்து வைக்க உள்ளோம். குருவருளால் நம் தளம் சார்பில் தீபாவளி சேவைகள் ஆரம்பித்து விட்டோம். தேனியில் கடந்த ஐப்பசி பௌர்ணமி அன்று 14 மகளிர்க்கு சேலை வழங்கி தீபாவளி சேவை ஆரம்பித்து விட்டோம். இவ்வாண்டும் சின்னாளபட்டியில் உள்ள அன்பர்களுக்கு புதுத்துணி, இனிப்புகள், 13 குடும்பங்களுக்கு சிறிய அளவில் மளிகை பொருட்கள் என கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகின்றது. மீண்டும் மீண்டும் குருவின் அருளால் மட்டுமே இது போன்ற சேவைகள் நம்மால் செய்வதற்கு நாம் கருவியாக உள்ளோம் என்பதை உள்ளத்தில் இருத்துகின்றோம்.

நாம் ஏற்கனவே ஐப்பசி மாத குருநாதர் இட்ட உத்தரவு பற்றி சில பதிவுகளுக்கு முன்னர்  கூறி இருந்தோம். மீண்டும் இன்றைய பதிவிலும் காண இருக்கின்றோம். குருநாதர் அருளால் ஐப்பசி மாத வழிபாட்டில் / சேவையில் சிறப்பாக கடைபிடித்து வருகின்றோம். ஐப்பசி மாதம் என்றாலே துலா ஸ்நானம் பற்றி தான் நாம் அனைவரும் அறிவோம். இதனை நம் குருநாதர் மொழியில் இதற்கும் முந்தைய பதிவில் கண்டோம். இன்று மீண்டும் என்று தலைப்பில் அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் பற்றி காண இருக்கின்றோம். மீண்டும் என்ற சொல்லை ஆழமாக அசை போட்டுப் பாருங்கள். மீண்டும் மீண்டும் ஒரு செய்தியை யார் கூறுவார்கள்? நம் மீது அக்கறை உள்ளவர்கள் தான் கூறுவார்கள். அது போன்று தான் நம் கருணைக் கடல், அன்பின் ஊற்று, முத்தமிழ் இறைவன், முத்தன், முதல்வன், இளஞ்செழியன் ஈசன் என்று அனைத்தும் நீவீராக இருக்கும் குருநாதர் ஸ்ரீ அகத்தியப் பெருமான் மீண்டும் ஐப்பசி மாத உத்தரவாக கூறியுள்ளார். மீண்டும் மீண்டும் ஒரு செய்தியை கூற காரணம் என்ன? நாம் தற்போதுள்ள நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு ஆகும். நாமெல்லாம் துன்பக்கடலில் மீண்டு வர, (மீண்டும்)அகத்தியப் பெருமானின் உத்தரவு! கொடுத்துள்ளார் என்றால் அவரின் கருணைக்கு எல்லை ஏது? அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்? என்றெல்லாம் தோன்றுகின்றது.

இனி நம் குருநாதர் ஐப்பசி மாத அகத்தியப்பெருமானின் உத்தரவு! பற்றி இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். நேற்றைய தினம் திருப்பதியில் நம் குருநாதர் அருளிய வாக்கின் ஐப்பசி மாத உத்தரவை இன்று காண உள்ளோம்.


1. 31/10/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு:- வாக்குரைத்த ஸ்தலம் திருமலை திருப்பதி 

இதனால்தான் இப்பொழுது. """ ஐப்பசி !!! எதை என்று அறிய ஐம்புலன்களையும் கூட அடக்கி அப்பனே நிச்சயமாய் அப்பனே புண்ணிய நதிகளில் நீராட அப்பனே நிச்சயம் அதாவது ஆன்மாக்கள் அதாவது துகள்களாக இருக்கின்றதே அவையெல்லாம் அப்பனே அப்படியே அடித்துச் செல்லுமப்பா!!!!

அப்பனே இன்னும் மோட்சம் அப்பனே அறிந்தும் கூட அவ் ஆன்மாக்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் என் நதிகளான தாமிரபரணி அப்பனே காவேரி தன்னில் அப்பனே நிச்சயம் இன்னும் பல புண்ணிய நதிகள் இருக்கின்றன அப்பனே அதனால் அப்பனே ஆங்காங்கே நிச்சயம் இருப்பவர்கள் அப்பனே பின் நீராட அப்பனே உடம்பில் ஒட்டிக் கொள்ளும் எவை என்று அறிய அறிய துகள்கள் அப்பனே நிச்சயம் அடித்துச் செல்லும் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அழகாக """""""காவிரி !!!!! என்ற நதியை கூட அப்பனே எப்படி எல்லாம் மனிதர்கள் பயன்பட வேண்டும் என்றெல்லாம் யான் உருவாக்கினேன் அப்பனே

இதனால் அப்பனே இவ் ஐப்பசி திங்களில் (மாதத்தில்) அப்பனே நிச்சயமாய் அப்பனே ஐம்புலன்களையும் எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட அப்பனே

(ஐம்புலன்கள்

கண் - ஒளி
காது- ஒலி
மூக்கு- சுவாசம்
வாய் - சுவை, மொழிதல்
மெய் - உண்மை, உடல்)

பசியோடு பின் இருத்தல்.

அதாவது அப்பனே பசியோடு இருத்தல் என்றால் அப்பனே நலமாகவே பல புண்ணிய நதிகளில் நீராட நீராட அப்பனே ஏற்கனவே யான் சொல்லிட்டேன் அப்பனே அனைத்து துகள்களும் கூட அப்பனே உடம்பில் ஆனாலும் அப்பனே அவையெல்லாம் அடித்துச் செல்லும் என்பேன் அப்பனே.

அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் தான் அப்பனே பின் அதாவது நல்முறையாகவே அடக்கி எதை என்றும் அறிய அறிய அப்பனே இவ்வாறு அப்பனே நிச்சயம் பின் புண்ணிய நதிகளில் அப்பனே நீராடினால் அப்பனே நிச்சயம் அவைதன் அப்படியே அடித்துச் செல்லுமப்பா!!!!

அப்பனே மோட்சமும் கிடைக்கும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

2. சித்தன் அருள் - 1201 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் உத்தரவு! 

இவை என்று கூற அப்பனே ஐப்பசி மாதமான இம்மாதத்தில் அனைவரும் என் நதிகளான காவிரியிலும் தாமிரபரணியிலும் நீராடுதலை கட்டாயமாக செய்ய வேண்டும் அப்பனே

மனிதர்கள் அந்த தீய ஒளியில் இருந்து தப்பித்துக் கொள்ள நவகிரகங்களின் நன்மைகளைப் பெற நதிகளில் நீராடிவிட்டு நவகைலாயங்களையும் நவதிருப்பதிகளையும் நல்முறையாக பக்தியோடு தரிசனம் செய்தால் நன்மைகள் பெருகும் அப்பனே!!!!!

என்னுடைய நதிகள் ஆன காவிரியிலும் தாமிரபரணியிலும் இம்மாதத்தில் ஈசனும் பெருமாளும் இவையன்றி கூற பிரம்மாவும் நல்முறையாக வந்து நீராடிச்செல்வார்கள் அப்பனே!!!!

3. சித்தன் அருள் - 1188 - அன்புடன் அகத்தியர் - அகத்தியபெருமான் (திருவண்ணாமலை) 

ஆனாலும் இவற்றின் தன்மைகள் கூட நேர் எதை என்று எவற்றினின்று கூற அப்பனே ஆனால் இவ் மாதம் பின் எதை என்று சிறிதாக பின் வளிமண்டலத்திலிருந்து ஒரு ஒளி பின் தென்படும் அப்பனே!!!!

அது அண்ணாமலையிலே உதிக்கின்றது பின் இதை என்று கூட எவை என்று கூட ஐப்பசி பின் வரும் அதாவது எதை என்று கூட சிறிதளவு விரிவடையும் என்பேன் அப்பனே!!!

அது எங்கே விழுகின்றது என்றால் அப்பனே என் நதியான காவேரி நதியின் மீதே வந்து ஊர்ந்து செல்கின்றது என்பேன் அப்பனே!!!

இதையென்று அறிய அறிய அதனால் அங்கே குளிக்கச் சொன்னேன் யான்!!!!

ஆனால் இதையன்றி அறிய ஆனாலும் இவற்றின் தன்மைகளும் ஆனாலும் எப்படி பின் எதை என்று கூட நீராட வேண்டும் என்பதைக் கூட தெரியாமல்!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகள் கூட அதிகாலையிலே பின் தியானங்கள் செய்து அப்பொழுது கூட எதையும் நினைக்க கூடாது அப்பனே!!!

எவை என்று கூட இவ்வாறு அவ் மாதத்தில்(ஐப்பசி) என்னுடைய நதி அதாவது காவேரி ஆற்றில் பின் குதித்து நீராடி வந்து கொண்டிருந்தாலே (ஐப்பசி துலா ஸ்நானம்) அப்பனே நிச்சயம் எதை எவற்றினின்று கூற.. 

4. ஓதிமலையப்பன் தரிசனம் - குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு, மதுரை. 

ஆனாலும் இதில் ஒரு சூட்சுமம் உண்டு என்பேன் அப்பனே ஐப்பசி மாதத்தில் நல் முறைகளாக யான் நான் உருவாக்கிய நீரில்(காவிரிநதி நீராடல் ) நவ நாட்கள்(9) நல் முறைகள் ஆகவே பின் நீரில் பணிந்து வணங்கி நல் முறைகள் ஆகவே பின் எந்தனை(அகத்தியரை) நினைத்து பின் நீராட அப்பனே பல பாவங்கள் போகும் என்பேன் இதனை நல் முறைகள் ஆகவே அப்பனே அம்மாவாசை திதியில் இருந்து இப்படியே செய்ய வேண்டும் என்பேன்.

எனவே வாய்ப்புள்ள அன்பர்கள் குருநாதர் அருளிய ஐப்பசி மாத உத்தரவை சிரமேற்கொண்டு செய்யும்படி வேண்டுகின்றோம். நதி நீராடலின் போது நதியை அன்னையாக கண்டு, காவிரி,தாமிரபரணி போன்ற ஆறுகளை மங்கல பொருட்களை ( ரவிக்கை துணி, மஞ்சள்,குங்குமம், தேன் , தீபம்,பால் ) சமர்ப்பித்து நதி வழிபாட்டையும் மேற்கொண்டு தங்களால் இயன்ற சேவைகளை செய்யும் படி வேண்டுகின்றோம்.


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அகத்தியர் பதிகமும், கூடுவாஞ்சேரி அகத்தியர் ஐப்பசி ஆயில்ய ஆராதனை அழைப்பும்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_5.html

கர்ம வட்டமா? தர்ம வட்டமா? - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

 ஓம் ஸ்ரீ தாமிரபரணி தாயே போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_38.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருக! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_3.html

நவ கைலாய திருத்தலங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_18.html

மார்கழி சிறப்பு பதிவு - நவ கைலாய திருத்தலங்கள் தரிசிக்கலாமே - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_22.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html


நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

No comments:

Post a Comment