அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் சென்ற ஜூலை மாத ஆலய தரிசனத்தில் வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் சென்று வந்தோம். அப்பொழுது ஆலயத் திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தற்போது திருப்பணி முழு வீச்சில் நடைபெற்று, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து வளர்கின்றார்கள். இந்த ஆலய கும்பாபிஷேகத்திற்கு பொருளுதவி வேண்டி இன்றைய பதிவை தொடர்கின்றோம்.
இன்றைய பதிவில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயம் கொண்டான் வட்டத்தில் உள்ள வாணத்திரையன் பட்டினம் கிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு
ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் தரிசனம் கண்டு,
அனைத்து அடியார் பெருமக்களிடம் ஆலய திருப்பணிக்கு உதவி வேண்டி பணிகின்றோம்.
பதிவின்
உள்ளே செல்லும் முன்னர் அனைவரும் இந்த செய்தியை நன்கு உள்வாங்கிக் கொள்ள
வேண்டுகின்றோம். ஆதி காலம் முதல் கோவில் என்றால் சிவாலயம் மட்டுமே
குறிக்கப்படும். பராகிரம பாண்டியன் என்ற மாமன்னன் சொன்னது:பழுதுபட்ட
புராதன சிவாலயங்களை புதுப்பிக்கும் பணியில் எப்படி ஒருவர் ஈடுபட்டாலும்,
அவர்களது திருவடிகளை இப்போதே வீழ்ந்து வணங்குகின்றேன் என்று
"ஆராரயினும் இந்த தென்காசி மேவு பொன்னாலயத்து
வாராததோர் குற்றம் வந்தால் அப்போது அங்கு வந்ததனை
நேராகவே ஒழித்துப் புறப்பார்களை நீதியுடன்
பாரார் ஆரியப் பணிந்தேன் பிரகிரம பாண்டியனே"
சிவாலய பணிகளில் ஈடுபட்டால் நம தீவினைகள் முற்றிலுமாய் நீங்கப்பெறும்
கூடவே
நல்வினைகள் சேரும் ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடல், உடலுழைப்பு தரல், இடம்
அல்லது மனை தரல்,குளம் தூர்வாரல்,கல்,மண் அளித்தல் ஆகிய எல்லாம் மிகமிக
சிவபுண்ணிய செயல்களாம்.
நம்பழம் பாடல் பகரும் இப்படி:
"புல்லினால் கோடியாண்டு,புதுமண்ணால் பத்துகோடி
செல்லுமா ஞாலந்தன்னில் செங்கல்லால் நூறு கோடி
அல்லியங்கோதைமின்னே ஆலயம் மடங்கள் தம்மை
கல்லினால் புதுக்கினோர்கள் கயிலை விட்டு அகலாரன்றே"
"சிவன்
கோவிலுக்கு ஒரு செங்கல் வழங்குதல், அந்த செங்கல் எத்தனை நாட்கள் கோவிலில்
இருக்குமோ அத்தனை நாட்கள் நீங்கள் கைலாயத்திலோ அல்லது வைகுண்டத்திலோ வாசம்
செய்யும் புண்ணியம்"!
-காஞ்சி மஹா பெரியவர்
சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் அடையும் புண்ணியங்கள் :
எவனொருவன்
சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்புகிறானோ அவன் தினந்தோறும் அப்பெருமானைப்
பூஜித்தால் உண்டாகும் பலனை அடைகிறான். அது மட்டுமல்ல அவன் குலத்தில் சிறந்த
முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வார்கள்.
பெரிதாக
இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, ஒருவன் மனத்தால் ஆலயம் எழுப்ப
வேண்டும் என நினைத்தாலே அவன் ஏழு ஜன்மங்களில் செய்த பாபங்களினின்று
விடுபடுவான். அவன் ஆலயம் கட்டி முடித்தானாகில் சகலமான போகங்களையும்
அடைவான்.
கருங்கற்களைக்
கொண்டு ஆலயம் எழுப்புவானாகில், அக்கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் ஆயிரம்
வருஷம் சிவலோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவான்.
சிவலிங்கத்தைச்
செய்விப்பவன் சிவலோகத்தில் அறுபதினாயிரம் வருஷம் இருப்பான். அவன்
வமிசத்தவரும் சிவலோகத்தை அடையும் பலனைப் பெறுவார்கள்.
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய எண்ணியவன் எட்டுத் தலைமுறைக்கு இறந்த தன் முன்னோர்களைத் தன்னுடன் சிவலோகத்தை அடையச் செய்வான்.
ஒருவனால்
செய்ய முடியவில்லையென்றாலும், பிறர் செய்ததைக் கண்டு, நாமும்
செய்திருந்தால் நற்கதி அடையலாமே என்று நினைத்தாலே போதும், அவன் முக்தி
அடைவானாம்.
பிரம்மதேவன்,
யமதர்மனுக்குப் பாசமும் தண்டமும் கொடுத்துப் பாபம் செய்பவர்களைத்
தண்டிக்கும் அதிகாரம் அளித்தபோது சிவபக்தர்களை அண்டக் கூடாது என
எச்சரித்திருக்கிறார்.
எந்த
நேரமும் சிவபெருமானையே மனத்தால் தியானித்து வருபவர்கள், பகவானை மலர்களால்
அர்ச்சிப்பவர்கள், நித்திய வழிபாடுகளைச் செய்விப்பவர்கள்,
காலையும்
மாலையும் ஆலயத்தைப் பெருக்கிக் சுத்தம் செய்பவர்கள், சிவாலயத்தை
நிர்மாணிப்பவர்கள், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவர்கள் ஆகியோரிடம் நெருங்கக்
கூடாது என எச்சரித்துள்ளார். அவர்கள் வமிசத்தவர்கள் கூட யமதூதர்களால்
நெருங்கப் படாதவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
முக்கியமான
விஷயம் சிதிலமாகிக்கிடக்கும் சிவாலயத்தைப் புதுப்பித்து திருப்பணிகள்
செய்வது, செய்பவர்களுக்கு உதவுவதும் 21 தலைமுறைகள் செய்த பாவம் தீரும்.
எந்த
ஒரு சிவாலயம் சிதிலமாகி இருக்கிறதோ, அங்கு ஈசன் தியானத்தில் இருப்பார்
என்றும் அங்கு அவ்வளவு எளிதில் சித்தர்கள் கூட நெருங்க முடியாது
என்கிறார்கள்....
அப்படிப்பட்ட
சிதிலமாகி இருக்கும் கோயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்பவருக்கு
அந்த ஈசன் தியானம் செய்த பலன்கள் அவர்களுக்கு கிடைக்குமாம்.... அவர்கள்
இருக்கும் இடத்தில் ஏதேனும் ஒரு தெய்வம் அவர்கள் அருகில் இருந்து அவர்களை
பாதுகாக்கும் என்கிறார்கள்... இவர்களுக்கு உதவி செய்வது அந்த ஈசனுக்கே
செய்கின்ற உதவி என்றும் கூறப்படுகிறது.
இனி நாம் ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய தரிசனம் காண உள்ளோம்.
அபிஷேகம் நிறைவு பெற்று , பெருமான் தரிசனம் பெற்று மகிழ்ந்தோம்.
சுமார்
2 மணி நேரம் அங்கே அமர்ந்து, திருவாசகத்தில் சிவபுராணம் படித்து, வழிபாடு
செய்து மகிழ்ந்து, பின்னர் அம்மையின் தரிசனம் பெற்றோம். பெரியநாயகி
..பெரிய நாயகியே தான். அன்பில், அருளில் என பெரிய நாயகி தரிசனம் பெற்று
மகிழ்ந்து, பின்னர் குருக்களுக்கு சிறு மரியாதை செய்து. பின்னர் கோயிலை
வலம் வந்தோம்.
இந்த பதிவை காணும் அன்பர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்யுமாறு வேண்டுகின்றோம்.இப்போது புதிதுபுதிதாகக் கோயில் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அதைக்காட்டிலும், பழைய கோயிலின் புனர் நிர்மாணப் பணிகளுக்கு உதவுங்கள்.
உங்களுக்கும் புண்ணியம்; உங்கள் மூதாதையர்களுக்கும் புண்ணியம்’’ என காஞ்சி
மகான் என்று போற்றப்படும் மகா பெரியவா அருளியுள்ளார்.
நாம்
எத்தனை பிறவியில் என்ன என்ன புண்ணியம் செய்தோமோ, இறைவனுக்கு ஆலயம்
கட்டக்கூடிய ஓர் அரிய வாய்ப்பை சிவபெருமான் நமக்கு தந்து அருளியுள்ளார்.
ஒரு சிவாலயத் திருப்பணி நடக்கும் பொழுது அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு
யார் ஒருவர் இறை தொண்டு செய்கின்றாரோ அவர் பல பிறவிகளில் செய்த பாவங்கள்
நீங்கும் என்ற சான்றோர்களின் வாக்கு சத்தியமே. ஆகையால் அனைவரும்
திருப்பணியில் பங்கு கொண்டு சிவபெருமானுடைய பரிபூரண அருளைப் பெறுமாறு
அன்புடன் அழைக்கின்றோம்.
ஆலய முகவரி மற்றும் விபரங்கள்
ஸ்ரீ பெரியநாயகி உடனுறை சென்னீஸ்வரர் ஆலயம். வாணதிரையன்பட்டணம் கிராமம் உடையார்பாளையம் வட்டம் ,ஜெயம் கொண்டான்.
அரியலூர் மாவட்டம் .
ஆலயம் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. கோவில் புனரமைக்கும் பணி தொடங்க உள்ளது.
ஆலயம் தொடர்பாக விபரங்களை அறிய அணுக வேண்டிய எண்.
திருமதி :ஆனந்தி 8056116062
ஸ்ரீ சென்னீஸ்வரர் பக்தர்கள் அறக்கட்டளை
Contact no:8524844709 வாணதிரையன்பட்டணம்
அறக்கட்டளையின் பதிவு எண் - 6/2019
Acc.Name – SRI CHENNESWARAR PAKTHARGAL TRUST
Bank Name - State Bank of India.
Acc.No – 38992242280.
IFSC – SBIN0000998.
Branch – Jayankondacholapuram.
Branch Code – 998.
வலைத்தள இருப்பிடம் :-
அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில்,
இந்த கோயிலில் குருநாதர் அருளிய வாக்கினை இனிவரும் பதிவுகளில் அறிய, சித்தன் அருளிடம் விண்ணப்பம் வைக்கின்றோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html
நெடார் கிராமம் , அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/08/blog-post_4.html
இன்றைய கும்பாபிஷேக அறிவிப்புகள் - 13.07.2022 - https://tut-temples.blogspot.com/2022/07/13072022_12.html
பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/23062022.html
அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்யநாயகி உடனுறை நந்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/blog-post_9.html
பாக்கம் பாளையம், அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_29.html
அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html
அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html
அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html
அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html
No comments:
Post a Comment