"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, November 19, 2023

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் குருநாதர் அருளிய அருள் வாக்கில் பிரார்த்தனை பற்றி அறிய உள்ளோம். இந்த வாக்கினை நாம் நன்கு உள்வாங்கிக் கொண்டு நம் எண்ணத்தில் நிறுத்த வேண்டும். பிறர் பொருட்டு நாம் ஏன் பிரார்த்தனை  செய்ய வேண்டும்? என்பது தெள்ள தெளிவாக புரிகின்றது. இவ்வாறு பார்க்கும் போது நாம் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது. தன்னலம் மறந்து பொதுநலம் வேண்டுவது ஒன்றே நம் பிரார்த்தனையாக இருக்க வேண்டும். அப்படியாயின் நாம் அறம் செய்ய வேண்டும். அறம் செய்ய வேண்டும் என்றால் பொருளாதாரம் வேண்டும் என்று நாம் நினைப்போம். இது மிக மிக பெரிய தவறு ஆகும். யார் சொன்னது? அறம் செய்ய பணம் வேண்டும் என்று? அறம் செய்ய மனம் வேண்டும். ஆம். மனத்தால் அறம் செய்ய விரும்ப வேண்டும். அறத்தை செயலால் நாம் செய்ய இயலவில்லை என்றாலும் மனதால் விருப்பத்தை தெரிவித்தால் போதும். இதைத் தான் ஒளவைப் பாட்டியும் அறம் செய்ய விரும்பு என்று கூறி உள்ளார்கள்.

அறம் செய்ய விரும்புவது ஒன்றே நம் பிரார்த்தனையாக இருக்கட்டும்.

இதைத் தான் நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானும் தினமும் ஒரு உயிருக்காவது உணவிடு அன்னதானம் தொடர்ந்து செய் என்று தினமும் நம் வாழ்வில் நாளொன்றுக்கு நம் வாழ்வை உபயோகமாக அமைக்க வேண்டும் என்றெல்லாம் கூறி நம்மை வழி நடத்தி வருகின்றார். எனவே நாமும் இறையிடம் தினசரி பிரார்த்தனையில் இவற்றை வைத்து வருவோம். இப்பதிவை நாம் பகிரஇன்றைய ஞாந மலரே காரணம். அதனையும் பதிவில் இணைக்கின்றோம். தினசரி பிரார்தனையில் இணைத்து மேலும் குருவிடம் விண்ணப்பம் வைப்போம்.



பிறர்பொருட்டு ஒவ்வொரு மனிதனும் பிரார்த்தனை செய்ய வேண்டும், பிறர் நலம் குறித்து எண்ண வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் ஜீவ அருள் ஒலையிலே வாக்கு என்று வரும்பொழுது ஒவ்வொரு மனிதனும் அந்தந்த குறிப்பிட்ட ஆத்மாவும் அதற்கேற்ற கிரகநிலையைப்பெற்று முழு சரணாகதியோடு இன்னும் சரியாகக் கூறப்போனால் ஒரு கிரக நிலை இருக்கும்பொழுது இந்த ஜீவ அருள் ஒலையை ஒரு மனிதன் ஏற்பான், நம்புவான். ‘ இதுதான் எனது வாழ்க்கையின் லட்சியம், உயிர்மூச்சு ‘ என்று கூட கருதுவான். சில சமயம் அவனது ஊழ்வினையால், பாவ வினையால் கிரக நிலைகள் மாறும்பொழுது இந்த வாக்குகளையே புறக்கணிப்பான், நம்ப மறுப்பான். பிறகு மீண்டும் நம்புவான், பிறகு புறக்கணிப்பான். சராசரி மனிதனின் நிலை இவ்வாறு இருக்க பிறர் பொருட்டு நீ பிரார்த்தனை செய்யலாம். ஆலயம் செல்லுமாறு அறிவுரை கூறலாம். ஆனால் ‘ சித்தர்கள் ஒரு ஒலையிலே வந்து வாக்கைக் கூறுகிறார்கள். அங்கே சென்று உனக்காக வாக்கினைக் கேட்டேன். இவ்வாறு பரிகாரம் வந்திருக்கிறது ‘ என்று சொன்னால் அதனை 100 – க்கு 99 விழுக்காடு மனிதர்கள் ஏற்க மாட்டார்கள், நம்ப மாட்டார்கள். உன்னையும் ஏளனம் செய்வார்கள். பொதுவாக உனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இது பொருந்தும். எனவே பிறர் பொருட்டு பிரார்த்தனை செய்வது ஏற்புடையது. 

இனி ஞாந மலர் கூறும் பிரார்த்தனையாக!



முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!


குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்று நித்தமும் முருகப் பெருமானிடம் வேண்டிப் பணிவோம்.

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

 பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

No comments:

Post a Comment