அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் திருஅண்ணாமலை தீப தரிசனம் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. நம்மால் என்ன செய்து விட முடியும்? அனைத்தும் குருவருளால் தான் நடைபெற்று வருகின்றது என்று ஒவ்வொரு நிகழ்விலும் உணர்த்தப்பட்டு வருகின்றோம். திருஅண்ணாமலை தீப தரிசனம் காண ஏற்பாடானதும், எங்கிருந்து?எப்படி? காண உள்ளோம்? 30 லட்சம் பக்தர்கள் கூட்டத்தில் நமக்கு வாய்ப்பு கிடைக்குமா? அந்த ஞான ஜோதியை இந்த ஊனக்கண் கொண்டு காண நமக்கு தகுதி உள்ளதா? என்று நினைத்து, குருவிடம்..நீரே துணை.. தீப ஜோதி காண அருளுங்கள் அப்பனே! என்று மனதுள் வேண்டி சென்றோம்.
குருவிற்க குறைவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படியொரு ஆனந்த தரிசனம் கொடுத்தார். அங்குமிங்கும் ஓடி, இங்கு இருந்து பார்த்தால் தெரியுமா? என்று அலைந்த போது, ஒரு தங்கும் விடுதியின் மேலே செல்ல வாய்ப்பு கிடைக்க, ஒரு 10 முறை மாடி படி ஏறி, மேலே சென்று பார்த்தால், அடியார்கள் படை சூழ, பஞ்சாட்சரம் ஓதிக் கொண்டே நேரில் கார்த்திகை தீப தரிசனம் கண்டோம்.
எதுவும் என்னுடையது அல்ல,அனைத்தும் உன்னுடையதே, அருளாளா அருணாசலா!
என்று வேண்டுவதையே வாழ்வில் கை கொள்ள வேண்டும்.
அகத்தியம்
வழிபாட்டிற்கு வந்த பின்னர் அந்த நாள் இந்த வருடம் என்ற தொகுப்பில் ஆலய
தரிசனம் கண்டு வருகின்றோம். அந்த வகையில் குருநாதர் அருளால் நமக்கு பொது
வாக்கில் பல ஆலய தரிசனங்களை அருளி உள்ளார்கள். அவற்றை கடந்த ஐப்பசி மாதம்
முதல் அகத்தியப் பெருமானின் உத்தரவு! என்ற தலைப்பில் பார்த்து
வருகின்றோம். கருணைக்கடலாம் ஸ்ரீ அகத்தியர் பெருமான் நமக்கெல்லாம் அருளை
வாரி வழங்கிக் கொண்டு வருகின்றார். அதனால் தான் நமக்கு பரிகாரங்கள் என்று
கூறுவதை விட, எப்படி வாழ வேண்டும் என்று வாழ்வியல் விழுமியங்களை ஆலய
தரிசனம் , தர்மம், தீப வழிபாடு மூலமாக கூறி வருகின்றார். ஏற்கனவே அகத்தியப்
பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் என்று முருகன் வழிபாடு &
அறுபடை வீடுகள் தரிசனம்! பற்றி பார்த்தோம்.
இன்றைய
பதிவில் கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம் பற்றி குருவின்
மொழியில் அறிந்து கொள்ள உள்ளோம்.
கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய இரண்டாவது சஷ்டியில் வேளை
மாலைப்பாெழுதில், ஓதிமலை உச்சியில் முருகன், பிள்ளையாேன், ஐயப்பன் என
மூவரும் விளையாடுவார்கள். அவ்வேளையில் அவர்களின் பார்வைகள் நம்மீது பட்டால்
பல கர்மாக்கள் நீங்கும்
என நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் உரைத்துள்ளார்.

(ஓதிமலையப்பன் சூட்சுமத்தை பற்றி அகத்தியர் 7/9/2021 அன்று உரைத்த ஜீவநாடி பாெதுவாக்கு)
ஓதிமலையின் சூட்சுமத்தை இப்போது உரைக்கின்றேன். நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் நீங்கள் செல்லலாம் என்பேன். கார்த்திகை மாதத்தில் செல்லலாம் என்பேன். அங்கு பிள்ளையோனும் (பிள்ளையார்) முருகன் பின் ஐயப்பனும் சந்தோசமாக விளையாடுவார்கள். அப்பனே! அவ் சூட்சுமத்தை சொல்கின்றேன் அவர்கள் விளையாடும் இடத்தை கூட.
அப்பனே! இவ்வாறு எவ்வாறு இறைவன் எப்பொழுது வருவான் என்பது சீராக கவனித்து அங்கு சென்றால், பின் அவர்களும் பார்த்துவிட கர்மாக்கள் நீங்கும் என்பேன். ஆனால் மனிதனுக்கு இது புரியாமல் போய்விட்டது என்பேன். ஆனாலும் புண்ணிய செயல்கள் செய்யும் காரணத்தால் தானாகவே அதுபோன்று அமைவதும் உண்டு என்பேன்.
மூவரும் விளையாடும்பொழுது அப்பனே ஒரு மாதத்திற்கு முன்பு உரைக்கின்றேன் அப்பனே சென்று வாருங்கள் இன்னும் சிறப்பு.
முருகர், விநாயகர், ஐயப்பன் இணைந்து சந்தாேசமாக விளையாடக்கூடிய இடம் ஓதிமலை உச்சியில்.
ஓதிமலை உச்சியில் ஆலய சுற்றுபிரகாரத்தில். கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சஷ்டி நாள்.
என்று குருநாதர் திரும்பவும் வாக்குரைத்திருந்தார்.
இவ்வருடத்தில் கார்த்திகை மாதத்தில் கடைசி சஷ்டி நாள் (03.12.2023 - ஞாயிறு அன்று)
சொல்கின்றேன் அப்பனே
நல் விதமாக இவை என்று கூற
அன்று கந்தன் அப்பனே ஐயப்பன் அப்பனே நல் விதமாகவே பின் இதனையும் அறிந்து பிள்ளையோனும்(பிள்ளையார்) நல்விளையாட்டாக விளையாடி பின் அனைவருக்கும் ஆசிகள் தந்துவிட்டார்கள். அன்றைய தினத்தில் அனைவருக்கும் ஆசிகளே.
இன்னும் மென்மேலும் சில சில வினைகளால் சில கஷ்டங்கள் ஏற்பட்டபின் இவர்களுக்கும் நல் விதமாகவே சிலசில கர்மங்களில் இருந்து நீக்கி விட்டான் பின் ஓதிமலையப்பன்.
இதனை அறிந்து கூட அவரவர் ஒருவர் ஒருவர் தம் நினைப்பிலும் இவ்வாறு ஆக வேண்டும் அவ்வாறு ஆக வேண்டும் என்று நினைத்ததற்கு எல்லாம் பின் நல்வழிகள் தந்துவிட்டான்.
ஆனாலும் விதியில் இல்லாததையும் சிலபேர் கேட்டனர் ஆனாலும் அதையும் கூட முருகன் தயங்கினான் என்பேன்.
ஆனாலும் இதையும் பின் இவையன்றி கூற சிறிது சிறிதாக கொடுப்போம் என்று எண்ணி பின் நல் விதமாகவே பின் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும்.பின் தன் குழந்தைக்கும் திருமணம் பாக்கியம் இல்லாதவர்களுக்கும் தொழில் இல்லாதவர்களுக்கு தொழில் பாக்கியமும் நிச்சயம் உண்டு என்பேன்.
என்று கூற நிச்சயமாய் ஐயன்(ஐயப்பன்) கூட அருளி விட்டான் என்பேன் என்பேன்.
என்பதற்கிணங்க பிள்ளையோனும் விளையாட்டாக பின் எதனையும் என்றும் கூட இவர்களும் இங்கு வந்து விட்டார்களா?!
யாம் எதனை என்று கூற பின் எதனையும் என்று கூற பொய்யான பக்தர்கள் இனிமேலும் எதனை என்று கூறாமலே பின் எதனை என்றும் தெரியாமலே வணங்கு கின்றனர் என்று கூட பிள்ளையோன் சிறிது நேரம் பின் அமர்ந்திட்டான்.
ஆனாலும்
பின் இதனையும் என்று கந்தனிடம் இவையன்றி கூற பின் பிள்ளையோனும் கூறி கூறினான் இவ்வாறு.
கந்தனே இவ்வாறு என்று உந்தன் இடத்தில் எவ்வாறு வணங்குகின்றார்கள் என்பதற்கிணங்க அனைவரும் மாயையையே கேட்கின்றார்களே
ஆனாலும் நீயும் கொடுத்து அனுப்புகின்றாய் அதனையும்
ஆனாலும் கடைசியில் அம் மாயை அழிந்து விட்டு பின் திரும்பவும் திரும்பவும் கேட்கிறார்களே அப்போதெல்லாம் நீ என்ன செய்வாய்? என்று கேட்க.
கந்தனும் இவை என்றெல்லாம் பின் இவந்தன் தெரிந்து கொள்ளத்தான் யான் கொடுக்கின்றேன்.
ஆனாலும் இவந்தனே பின் அழித்துவிட்டு பின் கடைசியிலே பின் கந்தா என்று வருகின்றார்கள் அதனால்தான் மனச்சஞ்சலம் அவந்தனுக்கே.
அதனால் தான் மனிதன் போனால் பிழைத்து கொள்ளட்டும் என்றெல்லாம் கூட என் ஆசீர்வாதங்கள் தந்து கொண்டேதான் இருக்கிறேன்.
அவ் ஆசீர்வாதங்களை மனிதன் சரியாக முறையாக பயன்படுத்துவதே இல்லை என்பேன்.
சரியாக முறையாக பயன்படுத்தினால் அவனை யாரும் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.
என்னுடைய அருள் பெறுகின்றவர்களும் இனிமேலும் நலன்களே ஏற்படுவது உறுதி என்பேன்.
உறுதி என்பேன் இன்னும் பல போராட்டங்களும் வாழ்க்கையில் வந்து கொண்டே இருக்கும் இக்கலியுகத்தில்.
நிச்சயமாய் கந்தன் நல் விதமாகவே அவனுடைய அருள் பெற்று விட்டால் இவ்வுலகத்தில் ஏதும் எவராலும் செய்ய இயலாது என்பேன்.
இவ்வுலகத்தில் நிச்சயமாய் இவ் கலியுகத்தின் தெய்வமாக கந்தனே விளங்குவான் என்பதைக்கூட உறுதியாகச் சொல்கின்றேன்.
அதனால் அப்பனே இவையன்றி கூற இனிமேலும் மனிதர்கள் நிச்சயம் பின் பணத்திற்காக இவையன்றி கூற சில போராட்டங்களுக்காகவே இவைதன் தீர்க்க தீர்க்க இறைவனிடத்தில் ஓடி வந்தால் நிச்சயம் செய்ய மாட்டான்.
அமைதியாக இறைவா இறைவா உன் அருளே போதும் என்று நினைத்திருந்தாலே போதுமானது.
போதுமானதற்கிணங்க பின் பின் மேலும் முயற்சிகள் மேற் கொண்டால் அப்பனே அனைத்தும் நிறைவேறும் அனைத்தும் நடக்கும் அப்பனே.
ஓதியப்பனின் அருள் அப்பனே பன் மடங்கு என்பேன்.
அங்கு சக்திகள் அப்பனே பல பல என்பேன்.
ஆனாலும் யாரும் உணர்வதில்லை அப்பனே.
இன்று கூட அங்கு போராட்டங்கள் அப்பனே சிலசில வினைகளால் அப்பனே எதிரிகள் கூட தங்கி நின்று அப்பனே எவை எவை என்று கூட நிற்கின்றார்கள்.
ஆனாலும் முருகனோ அப்பனே அன்று இரவும் எவ்வாறும் அன்றிலிருந்து இன்று வரையும் கூட அப்பனே சிறிது ஓய்வெடுத்து பின் உறங்கி தான் செல்கின்றான் அப்பனே.
இவையன்றி கூற இன்னும் பெரிய பெரிய மாற்றங்கள் இவ்வுலகத்தில் வந்து கொண்டே இருக்கும் அப்பனே.
அப்பனே இவைதன் நல் விதமாக ஓதிமலையப்பனை தரிசனம் கண்டே வந்தால் அப்பனே வாழ்க்கையில் உயர்வுகள் பெற பெற இருப்பது நிச்சயமே என்பேன் அப்பனே.
இன்னும் 05 நாட்களே (03/12/2023 - ஞாயிறு) உள்ளன ஓதிமலை உச்சியில் தெய்வங்களான முருகன், விநாயகர், ஐயப்பன் மூவரும் விளையாடும் நிகழ்வு :
அகத்திய மாமுனிவர் உத்தரவு வாக்கு :
"கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய இரண்டாவது சஷ்டியில் (03/12/2023 - ஞாயிறு) மாலைப்பாெழுது வேளையில், ஓதிமலை உச்சியில் முருகன், பிள்ளையார், ஐயப்பன் என மூவரும் விளையாடுவார்கள். அவ்வேளையில் நீங்கள் அங்கு செல்ல மூவரின் பார்வை மனிதர்கள் மீது பட்டால் பல கர்மாக்கள் நீங்கும்" என அகத்தியர் உரைத்துள்ளார்.
ஆலயம் : அருள்மிகு ஓதிமலை முருகன் காேவில்.
ஊர் : ஓதிமலை (இரும்பறையில் இருந்து 04 கி.மீ தாெலைவு)
வட்டம் : அன்னூர்
மாவட்டம் : காேயம்புத்தூர்
மலைப் படிக்கட்டுகள் : 1850 படிகள்
ஓதிமலை பற்றி அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :
1. சங்கரனுக்கு, சரவணகுகன் ஓதிய கிரி
2. சங்கடப்பட்ட பல்மாந்தர்கள் தலைவிதி மாறிய கிரி
3. சபலங்கள்,சலனங்கள் விட்டு ஓடிடும் கிரி
4. சிறப்பில்லா முன்வினை ஊழ்பயன் சிறப்பாக மாற்றித் தரும் கிரி
5. சிந்தனையில் அணுவளவும் கட்டமில்லா தன்மையை நல்கிடும் கிரி
6. சிறப்போ,சிறப்பில்லையோ,பேதம் பார்க்கா வாழ்க்கையை ஏற்க வைக்கும் கிரி
7. சப்த கன்னியர்கள்,அன்னையோடு,அன்னை அருளால் அருளும் கிரி செப்புங்கால்,
8. பஞ்சமும் அடங்க, பஞ்சவதனத்தோன் அருளும் கிரி
9. சிறப்பாக எத்தனை குன்றுகள் இளையவன் அருளால் இருந்திட்டாலும்,குன்றுக்கெல்லாம் உயர் குன்றாய் இன்றும் சான்றாய் அருளும் கிரி
10. அன்னையோடு,ஐயன் அமர்ந்து அன்றும்,இன்றும்,என்றும் அருளும் கிரி
11..நீறு வேறு, நாமம் வேறு என்று அறியாமையால் எண்ணும் மாந்தனுக்கு,
நீறு பூத்த அக்னிபோல் நீரோடு நாமமும் கலந்து வேங்கடகிரியாய் அருளும் கிரி
12.கட்டிய கணவன் காதில் ரகசியமாய் மனையாள் ஓதினாலும்,
கட்டிய மனைவி ஒதுகிறாளே என்று தாய் ஓதினாலும்,
உபயத்தையும் தாண்டி பிள்ளைகளுக்கு எதை ஓதினாலும்
மாந்த குரு சிஷ்யனுக்கு ஓதினாலும்
அனைத்திலும் பேதமுண்டு.சுயநல நோக்குண்டு
பேதமில்லா தாண்டிய நிலையில் வேதமெல்லாம் ஓர் உருவாக
ஓம்கார நாத வெள்ளம் ரூபமாக,
நேத்திரத்தில் கருணை வெள்ளம் பிரவாகமெடுக்க,
அறுவதனமும் ஐவதனமாகி,
எழு பிறப்பும் எட்டென விரட்டி,
உபயவினையும் இல்லாது ஒழித்து,
சூல நேத்திரத்தோன் திரு மைந்தன் சதுரத்தை நவரசமாய் பிழிந்தெடுத்து,
அதனையும் தாண்டி பல்வேறு நுட்பத்தை பேதமில்லா ஓதி
ஒருமுகமாய், திருமுகமாய், ஒரு நினைவாய் மாந்தன் வாழ அருளும் கிரி.
13.ஞானத்தை நல்கும் கிரி
14.அஞ்ஞானத்தை அடியோடு அழிக்கும் கிரி
15.பேதத்தை நீக்கும் கிரி
16.வேதத்தை உணர்த்தும் கிரி
17.சீரற்ற குணங்களை சீராக்கும் கிரி
18.நிலைத்த செல்வத்தை நல்கும் கிரி
19.வாழ்வின் தடைகளை நீக்கும் கிரி
20.எதிர்பார்த்த விடைகளை நல்கும் கிரி
21.கர்ம நிலைகளை மாற்றும் கிரி
22.அக உளைச்சல் ஒழிக்கும் கிரி
253.பேதம் காட்டா வேத கிரி
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
- மீண்டும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment